Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Moondravathu Athirchi
Moondravathu Athirchi
Moondravathu Athirchi
Ebook68 pages22 minutes

Moondravathu Athirchi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிறித்தவப் பாதிரியாரால் வளர்க்கப்பட்ட வின்சென்ட் ஒரு அனாதை. படிப்பு முடிந்தவுடன் ஃபாதர் அவனை அங்கேயே ஆசிரியராகப் பணி புரியச் சொல்கிறார். நண்பன் ஒருவனைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று விடை பெறுகிறான். செலவுக்குப் பாதிரியார் கொடுத்த காசில் கத்தி வாங்குகிறான். அவனுடைய நோக்கம் இருவரைக் கொல்வது. அவன் கண்ணெதிரே எரிந்துபோன பெற்றோரின் மரணத்துக்காக அவன் பழி வாங்கப் புறப்படுகிறான். அவன் வாழ்வின் முதல் அதிர்ச்சி, பெற்றோரின் மரணம், பழிதீர்க்கச் செல்லும் பயணத்தில் அவன் இரண்டாவது, மூன்றாவது அதிர்ச்சிகளைச் சந்திக்கிறான். அவன் வாழ்க்கை திசை திரும்புகிறது.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580131007651
Moondravathu Athirchi

Read more from S. Kumar

Related authors

Related to Moondravathu Athirchi

Related ebooks

Related categories

Reviews for Moondravathu Athirchi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Moondravathu Athirchi - S. Kumar

    https://www.pustaka.co.in

    மூன்றாவது அதிர்ச்சி

    Moondravathu Athirchi

    Author:

    எஸ். குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    ஊரின் தெற்கு மூலையில் அந்த சர்ச் இருந்தது. குழந்தை ஏசுவை ஏந்திய மாதா முகப்பில் இருந்து அருட்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். உயரே ஆலயமணி.

    தேவாலயத்தை ஒட்டியபடி ஃபாதர் அற்புதராஜின் வீடு. அதற்குத் தள்ளி நடுநிலைப்பள்ளி. அப்பால் மாணவர் விடுதி.

    சர்ச் வாசலில் வந்து நின்ற வின்சென்ட்டின் கை அனிச்சையாக நெஞ்சில் சிலுவையிட்டது.

    படிக்கட்டுகளில் ஏறும் முன்பாக அந்த தேவாலயத்தை நிமிர்ந்து பார்த்தான்.

    மாதா ஏசுவை மட்டும் தானா சுமந்து வளர்த்தாள். அவனைப் போன்ற எண்ணற்ற அனாதைகளையும் கூட ஃபாதர் அற்புதராஜ் அவளின் பிரதிநிதியாக இருந்து அவர்களை வளர்த்தெடுத்தார்.

    தெய்வம் மனித உருவெடுத்து வருகிறபோது நிச்சயம் ஃபாதரின் சாயலில்தான் இருக்கும்.

    படிக்கட்டுகளைக் கடந்து உள்ளே போனான். ஃபாதர் இருந்தார். அவனைக் கண்டதும் வயோதிகத்தை மறந்துவிட்டு அவசரமாக எதிர்கொண்டார்.

    வின்சென்ட்.

    தோத்திரம், ஃபாதர்.

    வா, மகனே.

    அவன் தனது உடைகளடங்கிய பையைக் கீழே வைத்துவிட்டு -

    குனிந்து அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.

    என்ன இது?

    உங்கள் காலடியிலேயே கிடக்க மனம் விரும்புகிறது, ஃபாதர்.

    சிறு பிள்ளையைப் போல் நடந்துகொள்ளாதே, வின்சென்ட்.

    .....

    பரிட்சைகளை எப்படி எழுதியிருக்கிறாய்?

    சிறப்பாக, முதல் வகுப்பில் தேறி விடுவேன்.

    மகிழ்ச்சி. மேற்கொண்டு என்ன செய்வதாக உத்தேசம்?

    அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    அதுசரி... உனக்கென்று எந்த எதிர்காலக் கனவும் கிடையாதா?

    பி.எட் செய்து ஆசிரியராக விரும்புகிறேன்.

    நல்ல விருப்பம். கர்த்தர் இதனைக் கேட்பார்.

    .....

    நீ ஏன் சிறிது காலம் நம் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றக் கூடாது?

    உங்கள் உத்தரவு, ஃபாதர்.

    வரும் ஜூன் மாதத்திலிருந்து நீ நம் பள்ளியில் வேலை செய்கிறாய்.

    சரி, ஃபாதர்.

    இப்பொழுது உன் அறைக்குப் போய் ஓய்வெடுத்துக்கொள்.

    சரி... ஃபாதர்...

    என்ன?

    என்னுடன் படித்த நண்பன் ஒருவன் ஊட்டியில் இருக்கிறான். அவன் என்னைத் தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறான்.

    நீ போகப் போகிறாயா?

    ஜூன் மாதம் வந்து நம் பள்ளி திறக்கப்பட இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அதனால் போய் வர நினைக்கிறேன்.

    வின்சென்ட்... உன் மனம் உல்லாசங்களில் ஈடுபடுகிறதா?

    Enjoying the preview?
    Page 1 of 1