Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kutram Puthu Vitham
Kutram Puthu Vitham
Kutram Puthu Vitham
Ebook73 pages55 minutes

Kutram Puthu Vitham

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

தன் இரு மகள்களை சாமியார் அபகரித்து விட்டார் என்று கலங்கித் தவிக்கும் தந்தை அசோக் & டீம் உதவியை நாடுகிறது. அந்த இரு பெண்களுக்கு ஆசிரமத்தில் என்ன ஆனது?

எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் இயல்பான நடையில் அசோக் & டீம் அசத்தும் க்ரைம் த்ரில்லர் வாசிப்போமா?

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580145507211
Kutram Puthu Vitham

Read more from Gavudham Karunanidhi

Related to Kutram Puthu Vitham

Related ebooks

Related categories

Reviews for Kutram Puthu Vitham

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kutram Puthu Vitham - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    குற்றம் புதுவிதம்

    Kutram Puthu Vitham

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அசோக் தன் எதிரில் கலங்கியபடி உட்கார்ந்திருந்தவரைப் பார்த்து சொன்னான்.

    சொல்லுங்க

    அவர் ஒன்றும் பேசாமல் இருக்க அவருடன் வந்த இளைஞன் அசோக்கை ஏறிட்டான்.

    சார் என் பேர் அஜய். மெடிக்கல் ரெப்.

    ம்

    என் அண்ணா உதய் புலன்விசாரணை பத்திரிகையில் ரிப்போர்ட்டர்.

    சொல்லுங்க

    அந்த நடுத்தர வயதில் இருந்தவர் பேச ஆரம்பித்தார்.

    என் பேர் ஆறுமுகம். ரிட்டையர்டு போஸ்ட் மாஸ்டர். எனக்கு இரண்டு பெண் குழந்தைங்க ரெண்டுபேரும் காலேஜ் படிக்கிறாங்க. ஆறு மாசம் முன்னாடி நாமக்கல்லில் இருக்கிற மனோசக்தி ஆசிரமத்திற்கு ஒரு கோர்ஸ் படிக்கப் போனாங்க.

    அவர் இடைவெளிவிட மேலே சொல்லுங்க என்பதாகப் பார்த்தான் அசோக்.

    ஃபர்ஸ்ட் இரண்டு வாரம் கோர்ஸ்ன்னு சொன்னாங்க. சரின்னு பர்மிஷன் கொடுத்தேன். அதுக்கப்புறம் ஒரு மாசம் அங்க இருந்து படிக்கணும்னு சொன்னாங்க. சரி எதுக்கு வேணான்னு சொல்லிட்டுன்னு சம்மதிச்சேன். கோர்ஸ் முடிச்சும் ரெண்டு பொண்ணுங்களும் வீட்டுக்கு வரவே இல்லை. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாப் போயிடுச்சு. அந்த ஆசிரமத்திற்கு நேராப் போனேன். அங்க இருந்தவங்க அவ்வளவு சீக்கிரம் என் பொண்ணுங்களைப் பார்க்கிறதுக்கு என்னை விடல. நான் விடாம போராடி அந்த ஆசிரமத்தோட நிர்வாகியைப் பார்த்தேன். அதுக்கப்புறம் என் ரெண்டு பொண்ணுங்களையும் அங்க இருக்கிறவங்க கூட்டிட்டு வந்தாங்க. வந்தவங்க வந்து சொன்னதுல எனக்கு உயிரே போயிடுச்சு சார். நாங்க இந்த ஆசிரமத்திலேயே எங்க வாழ்க்கையை வாழ்ந்திடறோம். உங்ககூட வர மாட்டோம். நீங்க கிளம்புங்கன்னு சொல்லிட்டாங்க.

    அவர் தன் கண்களில் இருந்த நீரை துடைத்துக் கொண்டார்.

    என்னால நம்ப முடியல. அதிர்ச்சியில் என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியல. ஒரு பைத்தியக்காரன் மாதிரி அந்த ஆசிரமத்தோட வாசலிலேயே காத்திருந்து சாமியாரைப் பார்த்தேன். உலக வாழ்க்கையில் ஒண்ணுமே இல்லைன்னு அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க அதை தடுப்பதற்கு நீ யார்? இல்ல நான் தான் யார்? அப்படின்னு கேட்டு சிரிச்சார். எனக்கு வயிறு பத்திக்கிச்சு. என் பொண்ணுங்கள திருப்பி கொடுத்திடுங்கன்னு அவர்கிட்ட போராடிப் பார்த்தேன். ஒண்ணும் நடக்கல. போலீஸ்கிட்ட புகார் கொடுத்தேன். அவங்க சொன்னாங்க. உங்க ரெண்டு பொண்ணுங்களும் மேஜர். அவங்க விருப்பப்பட்ட வாழ்க்கை அவங்க வாழறாங்க. பிரச்சனை பண்ணாம போங்கன்னு என்னை மிரட்டினாங்க. எனக்கு எங்கேயாவது நியாயம் கிடைக்காதான்னு தவிச்சேன். அப்பத்தான் புலன்விசாரணைங்கிற பத்திரிகை பத்திக் கேள்விப்பட்டேன். அங்க வேலை செய்ற உதயைப் போய் பார்த்தேன். எனக்கு உதவ முன்வந்தார் உதய். அந்த ஆசிரமத்துல ஏதோ ஒரு மர்மம் இருக்கு. அது என்னன்னு கண்டுபிடிக்கணும்னு ஒரு நாள் நைட்டு யாருக்கும் தெரியாம அந்த ஆசிரமத்துக்குள்ள போனார்.

    அவர் நிறுத்த அந்த இளைஞன் தொடர்ந்தான்.

    ஆசிரமத்துக்குள்ள போன அண்ணன் திரும்ப வரல சார். பாவிங்க கொன்னுட்டாங்க.

    அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1