Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalam
Kalam
Kalam
Ebook102 pages34 minutes

Kalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஓர் ஆய்வகத்தில் தடைசெய்யப்பட்ட ஆய்வின் விளைவால் மக்களில் பெரும்பாலோர் இறந்து விட அவர்களைக் கண்டறிந்து அழிக்க வருகின்றனர் அசோக் மற்றும் விஷால்.

விறுவிறுப்பான களத்தைக் காண்போமா?

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580145507387
Kalam

Read more from Gavudham Karunanidhi

Related to Kalam

Related ebooks

Related categories

Reviews for Kalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalam - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    களம்

    Kalam

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    ஊட்டி.

    யூகலிப்டஸ் மரங்களின் நடுவில் எவரும் எளிதில் அணுகாதபடி இருந்தது அந்த ஆய்வகம். ஊட்டியின் காலநிலை எப்படி இருந்தாலும் ஆய்வகம் மட்டும் எப்பொழுதும் திறந்திருக்கும். திறந்திருக்கும் என்றால் கதவுகள் அல்ல. மூன்றடுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட ஆய்வகத்தில் பல்வேறு கண்ணாடியிலான தனி அறைகள் உள்ளன. ஒவ்வொரு கண்ணாடி அறையிலும் விஞ்ஞானிகள் எந்நேரமும் ஆய்வுகளில் ஈடுபட்டனர். ஆய்வில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை ஆய்வகத்தில் நுழையும் போதும் முழுமையான உடல் பரிசோதனைக்குப் பிறகு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    பெரும்பாலும் அங்கு ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள் வெளியிடங்களுக்கு அனுமதிக்கப்படாமல் வெளி இடங்களுக்கு செல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு தேவையான எல்லாமே அங்கு கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இப்படி ஒரு ஆய்வகம் அங்கிருக்கிறது என்பது அவ்வளவு எளிதில் எவருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொண்டனர்.

    அந்த ஆய்வகத்தின் வளாகம் மிகப்பெரியதாக இருந்தது. எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மிகவும் பலமாக இருந்தது.

    அறிவு கோபமாக இருந்தான். தனக்கு முன் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டரில் கவனம் செலுத்தாமல் காலையில் திட்டிய மேனேஜர் சோழன் மேல் பயங்கரக் கோபத்தில் இருந்தவனை புன்னகையோடு பார்த்த லிசா கேட்டாள்.

    என்னாச்சு மூஞ்சியில் கடுகு பொரியுது?

    சோழன் கடுப்பேத்திட்டான்.

    விடு. அவருக்கு என்ன டென்சனோ? யாருக்குத் தெரியும்?

    சொன்னவள் தன் கம்ப்யூட்டருக்குச் செல்ல

    அறிவுவால் சமாதானமாக முடியவில்லை. சோழன் மீது கவனமாக இருந்தவன் மானிட்டர் கேட்ட கேள்விகளை சரியாகப் பார்க்காமல் ரெஸ்பான்ஸ் கொடுத்தான்.

    சிஸ்டம் ஓபன்ஸ் யெஸ் ஆர் நோ?

    மானிட்டர் கேட்க

    நோக்குப் பதில் யெஸ் என்று கொடுத்தான்.

    மானிட்டர் முழுவதும் சிகப்பு கலராக மாறியது.

    டேஞ்சர். ரெட் அலெர்ட்

    சிஸ்டம் கன்ஃபர்ம்ஸ் யெஸ் ஆர் நோ?

    மீண்டும் யெஸ் என்று கொடுத்துவிட்டு அதன் பின் பார்த்து

    ஐயோ என்று பதறினான். அதற்குள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருந்த சிறிய கண்ணாடிப் பெட்டகம் திறந்து கொண்டது.

    மை காட் அறிவு கத்த லிசா பதறினாள்.

    என்னாச்சு? கேட்டவள் அறிவு மயக்கமாகி விழுந்ததைப் பார்த்தாள்.

    ஹெல்ப் லிசா கத்திக் கொண்டே கண்ணாடிக் கதவை தள்ளித் திறந்து அடுத்த அடுக்கிற்கு ஓடினாள்.

    'லிசா டோன்ட் கோ எனிவேர். ரிட்டர்ன். ரிட்டர்ன். '

    மிக சத்தமாக எச்சரிக்கைக் குரல் எழுப்பப்பட லிசா பயந்தாள்.

    இப்ப இவங்க கிட்ட மாட்டிட்டா தயவு தாட்சண்யம் பார்க்காம சுட்டுக் கொன்னுடுவாங்க. ஓடு லிசா ஓடு.

    லிசாவின் மூளையின் அனைத்து செல்களும் அலர்ட் பொசிசனுக்கு வந்துவிட தன்னால் முடிந்த மட்டும் ஓடியவள் பின்னால் அவர்கள் இருவரும் ரிவால்வருடன் துரத்தினர்.

    ஜான் அவ மெயின் டோர் திறக்கக் கூடாது.

    அவளுக்கும் நமக்கும் தூரம் அதிகம்

    பரவாயில்ல சுடு ஜான்.

    ஜான் சுட்டான். தோட்டா லிசாவின் தலைக்கு மேல் பறக்க லிசாவை மரண பயம் உந்தித் தள்ள மூன்றாவது அடுக்கின் கண்ணாடிக் கதவைத் தள்ளினாள்.

    ஜான் ஆபத்து. சுடு பீட்டர் குரல் கொடுக்க

    ஜான் மீண்டும் சுட்டான். இந்த முறை தோட்டா ஜானுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தது. லிசாவின் தலையைத் துளைக்க கதறிய லிசா கண்ணாடி கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து விழுந்தாள்.

    செக்யூரிட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இன்டர்காமில் தொடர்பு கொண்டனர்.

    லேப்ல இருந்த ஒரு பொண்ணு வெளியே வந்து விழுந்துருக்கு. என்ன பண்றது?

    அவ பக்கத்துல யாரும் போகாதீங்க. அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு யாரும் பக்கத்துல இருக்கக் கூடாது.

    அவ குண்டடிபட்டிருக்கா.

    மனிதநேயம் பார்க்க இது நேரமில்லை. ரோபோ மூலம் சோடியம் குளோரைடு சொல்யூஷன் அவ மேல ஃபுல்லாத் தெளிங்க.

    ஓகே சார்.

    பேசி முடித்து விட்டுத் திரும்பிய செக்யூரிட்டி லிசாவைக் காணாமல் திகைத்தார்.

    எங்கே போயிருப்பாள்?

    கொஞ்சம் தள்ளி உருண்ட நிலையில் சென்ற விசா இறந்திருந்தது தெரிந்தது.

    இன்டர்காம் கையிலெடுத்தார்.

    யூனிட் ஒன்?

    யெஸ்

    ஜென் ரோபோ அனுப்புங்க

    "ஸ்பாட்

    Enjoying the preview?
    Page 1 of 1