Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vathai
Vathai
Vathai
Ebook75 pages24 minutes

Vathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராம் ஐடியில் வேலை பார்க்கும் ஓர் இளைஞன். அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த சில மோசமான அவனைப் பாதித்திருக்க பழிவாங்க அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அவன் என்ன செய்தான்?

"வதை" ஓர் எமோஷனல் க்ரைம் த்ரில்லர்

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580145507396
Vathai

Read more from Gavudham Karunanidhi

Related to Vathai

Related ebooks

Related categories

Reviews for Vathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vathai - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    வதை

    Vathai

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    பெங்களூர்

    ஜடிபிஎல்.

    ராம்பிரசாத் வெளியில் வந்தான். கழுத்தில் இருந்த டையைத் தளர்த்திக்கொண்டான்.

    மணி பார்க்க இரவு எட்டைக் காட்டியது. தன் பைக்கில் ஏறி அமர்ந்தான். ஸ்டார்ட் செய்ய முனைய

    ராம் ராம்

    ஒரு மைசூர்பாக் குரலில் திரும்பினான்.

    ஜெயா வந்து கொண்டிருந்தாள்.

    என்ன ஜெய் இன்னும் வீட்டுக்குப் போகலியா?

    ப்ராஜக்ட் மீட்டிங் பா

    ம்

    வீட்ல ட்ராப் பண்ணிடறியா?

    ஒரு ப்ளெஷர் ஓகேவா?

    (ப்ளெஷர் என்பது மக் பீர் என்று அனைவருக்கும் தெரியும் தானே? இல்லாவிட்டால் நீங்கள் அப்பாவிகள் என்று உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்)

    ஓகே ராம்

    அப்ப ஏறிக்கோ

    ஜெயாவின் வீடு மாரத்தஹள்ளியிலும் ராமின் வீடு ஒயிட் ஃபீல்டிலும் இருக்கின்றன. இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக ட்ரைடென்ட் சொல்யூஸன்ஸில் ஒன்றாகப் பணி புரிகின்றனர்.

    ராம்

    ம்

    புது சமையல்காரி வந்தாச்சா?

    ம் ஒரு வாரம் ஆகுது

    *சாப்பாடு எல்லாம் ஒத்துக்குதா?"

    ஏதோ பரவாயில்லை.

    கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே?

    நானும் எல்லோரையும் சைட் அடிச்சிப் பார்க்கறேன். நம்ம நேரம் நான் சைட் அடிக்கிற எல்லாப் பொண்ணுக்கும் கல்யாணம் ஆயிடுது.

    ராம்பிரசாத் வருத்தப்பட்டு சொல்ல ஜெயா சிரித்தாள்.

    நீ எப்பவும் இப்படித்தானா?

    எப்படி?

    காமெடி பண்ணிக்கிட்டு.

    நான் சொல்றது நூறு பர்சன்ட் நிஜம் ஜெய்

    நம்பிட்டேன்.

    நிஜமா.

    அப்படியா?

    ஆமா ஜெய். கம்பெனில ஜாயின் பண்ண புதுசுல உன்னைப் பார்த்து என்னா பொண்ணுடா இவ ன்னு அசந்து போய் பார்த்தேன். மறுநாளே கல்யாணப் பத்திரிகைய கொண்டு வந்து நீட்டினே. சொன்னா நம்ப மாட்டே.

    என்னது?

    அன்னிக்கு நைட் நான் ரெண்டு பிளெஷர் சாப்பிட்டும் தூக்கம் வர்ல தெரியுமா? ராம்பிரசாத் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு சொல்ல ஜெயா விழுந்து விழுந்து சிரித்தாள்.

    சிரி சிரி என் சோகம் உன்ன சிரிக்க வைக்கும்னா உனக்காக நான் எப்பவும் சோகமா இருக்கத் தயார்

    அடடா புல்லரிக்குது ராம்.

    பார்த்து ஜெயா. மாடு பக்கத்துல போயிடாதே.

    ஏன்?

    புல்லரிக்குதுன்னு சொன்னியே.

    ஷ்ஷ் முடியல ராம்

    ஹாஸ்பிடலுக்குப் போகணுமா?

    நான் ஒண்ணும் பேசல புன்னகையை அடக்கிக் கொண்டாள்.

    சரியாக ஜெயாவின் வீட்டை அடைந்தபோது அவள் கணவன் குரு வெளியில் வந்தான்.

    ஹாய் சார்

    ஹாய் ராம் வா காஃபி சாப்பிட்டுப் போலாம்.

    இல்ல சார் எப்பவுமே சாயங்காலம் நல்ல காஃபி சாப்பிட்டுத்தான் பழக்கம் ராம் சொல்ல குரு சிரித்தான்.

    நான் போட்டுத் தர்றேன் ராம்

    அப்பன்னா ஓகே சார்

    பைக்கை ஸ்டேண்ட்

    Enjoying the preview?
    Page 1 of 1