Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Psycho
Psycho
Psycho
Ebook88 pages31 minutes

Psycho

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாநகரில் சில கொலைகள். கொன்றவர்களும் கொல்லப்படுகின்றனர். துப்பறிய வருகிறது அசோக் & டீம். வன்முறையை விரும்பாத ஒருவன் தொடர் கொலைகளில் ஈடுபடுகிறான். ஏன்? அவனை அப்படி மாற்றியது எது? இறுதியில் அவன் என்னவாகிறான்?

ஆரம்பம் முதல் இறுதிவரை வேறெங்கும் கவனத்தை செலுத்த முடியாமல் படிக்க வைத்து பரவசப்பட வைக்கும் க்ரைம் த்ரில்லர்தான் சைக்கோ.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580145507214
Psycho

Read more from Gavudham Karunanidhi

Related to Psycho

Related ebooks

Related categories

Reviews for Psycho

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Psycho - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    சைக்கோ

    Psycho

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    கோவை. காந்திபுரம் பேருந்து நிலையம். இரவு பதினோரு மணி.

    மழை தூறிக் கொண்டிருந்தது.

    ஈரோட்டில் இருந்து வந்த அந்த தனியார் பேருந்து பேருந்து நிலையத்திற்குள் சென்றது. நின்ற பேருந்திலிருந்து சொற்ப நபர்கள் மட்டும் வெளிப்பட்டனர்.

    அவன் இறங்கினான். தூறிய மழையை சிறிதும் லட்சியம் செய்யாமல் பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்தான்.

    ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்த ஆட்டோக்கள்மீது அவன் பார்வை பதிந்தது.

    ஆட்டோ வருமா?

    எங்கே சார் போகணும்?

    செல்வபுரம் எல்ஐசி காலனி

    இருநூறு ரூவா ஆகும் சார்

    வாங்கிக்க

    ஆட்டோவில் ஏறி அமர்ந்தான். ஆட்டோ மழைநீரை தெறிக்கவிட்டபடி சாலையில் பயணித்தது.

    அவன் சாலையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை வேடிக்கை பார்த்தான். விஜய் சேதுபதி நடித்த க.பெ. ரணசிங்கம் படத்திற்கான ஓடிடி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

    கொரோனா கோயம்புத்தூர்ல குறைஞ்சிடுச்சா? அவன் டிரைவரிடம் கேட்க,

    எங்கே சார் இப்பத்தான் ஜாஸ்தியா இருக்கு. கம்மியா இருக்கும்போது எல்லாத்தையும் பூட்டி வச்சிருந்தாங்க. இப்போ அதிகமா இருக்கும்போது எல்லாம் திறந்து விட்டுட்டாங்க

    டிரைவர் சலித்தபடி கூற அவனுக்கு சிரிப்பு வந்தது. மாஸ்க்கிற்குள் சிரித்துக்கொண்டான்.

    ஆட்டோ செல்வபுரத்தை அடைந்தது.

    அவன் தயாரானான். தன் பேக்கில் இருந்த கிளவுஸ்களை எடுத்து இரண்டு கைகளுக்கும் மாட்டிக்கொண்டான்.

    சாலை யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருக்க, ஆட்டோ மட்டும் இருட்டில் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சியபடி பயணித்தது.

    எல்ஐசி காலனி வந்திருக்க ஆட்டோ டிரைவர் அவனிடம் திரும்பிக் கேட்டார்.

    இங்கே எங்க சார் போகணும்?

    வலது பக்கம் திரும்பிக்குங்க ரெண்டாவது வீடு.

    ஓகே சார் சொன்ன டிரைவர் ஆட்டோவை வலது பக்கம் திருப்பினார். இரண்டாவதாக இருந்த அந்த பங்களாவின் முன் நிறுத்தினார்.

    அவன் இறங்கினான். பணத்தை கொடுத்து ஆட்டோவை அனுப்பினான்.

    சாலையில் இறங்கிய சில நாய்கள் அந்நேரம் அவனைப் பார்த்ததும் குறைக்கத் தொடங்கின. அவற்றை லட்சியம் செய்யாது பங்களாவைப் பார்த்தவனின் விழிகளில் வெறி. உள்ளே நுழைவதற்கு முன்பு தன் அலைபேசியை எடுத்தான்.

    ஹலோ ரெட் டாக்ஸி

    ஆமா சொல்லுங்க சார்

    நான் எல்ஐசி காலனில இருந்து பேசுறேன்.

    டிராப் எங்க சொல்லுங்க?

    ரயில்வே ஸ்டேஷன்

    வண்டி எப்ப வேணும்?

    அவன் மணி பார்த்தான். மணி பதினொன்று நாற்பது.

    பனிரெண்டு மணிக்கு அனுப்புங்க

    ஓகே சார்

    அலைபேசியை உள்ளே வைத்தான்.

    மழை வலுக்க ஆரம்பித்தது. பேக்கில் இருந்த ரெயின்கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டான்.

    பங்களாவின் காம்பவுண்ட் கேட் முகப்பில் அந்த போர்டு இருந்தது.

    நாய் ஜாக்கிரதை. லட்சியம் செய்யாது உள்ளே ஏறிக் குதித்தான்.

    நாய் எதுவும் வருமா? இருட்டில் ஒன்றும் தெரியாமல் அப்படியே நின்றான். நாய் ஒன்றும் வரவில்லை. வாசலில் நின்று காலிங் பெல்லை அழுத்தினான்.

    ஒரு நிமிட தாமதத்திற்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. ஒரு இளம்பெண் வந்து கதவைத் திறந்தாள். அவள் முகம் மலர்ந்தது.

    வாங்க

    அர்ஜுன் உள்ளே சென்றான்.

    என்ன ரொம்ப லேட் போல இருக்கு?

    அவள் கேட்க பதில் ஒன்றும் சொல்லாமல் அர்ஜூன் அவளையே பார்த்தான்.

    என்னாச்சு? அப்படி பார்க்கறீங்க? அவள் மீண்டும் புன்னகையுடன் கேட்டாள்.

    போட்டோல பார்த்தததுக்கும் நேரா பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் அர்ஜுன் சொல்ல அவள் சிரித்தாள்.

    என்ன சாப்பிடுறீங்க?

    அவன் புன்னகைத்தான்.

    உன்னை.

    அது அப்புறம். இப்ப என்ன சாப்பிடுறீங்க?

    என்ன இருக்கு?

    சப்பாத்தி சிக்கன் மசாலா

    சூப்பர் போட்டுக் கொண்டா.

    அவள் ஒரு தட்டில் சப்பாத்தியை கொண்டுவந்து கொடுக்க அர்ஜுன் சப்பாத்தியும் சிக்கனையும் வேகமாக அள்ளி விழுங்கினான்.

    அதேநேரம் அவள் போய் வேறு உடை மாற்றிக்கொண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1