Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Adhu
Adhu
Adhu
Ebook70 pages23 minutes

Adhu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செளம்யா தன் நண்பர்களுடன் டூர் போன இடத்தில் வித்தியாசமாய் நடந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.அது மட்டுமல்ல அங்கே ஒரு கொலையும் நிகழ்ந்துவிட அதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? சௌம்யாக்கு என்னவாகிறது?

அசத்தலான ஹாரர் நாவல் "அது" விடை சொல்லும்.

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580145507227
Adhu

Read more from Gavudham Karunanidhi

Related to Adhu

Related ebooks

Related categories

Reviews for Adhu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Adhu - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    அது

    Adhu

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    சௌம்யா… எங்கிருக்கே? நாங்க காரில் இருக்கோம்…?

    நிஷா அலைபேசியில் கேட்க… ட்ரைவிங் சீட்டில் இருந்த வருண் பார்த்துக் கொண்டிருந்தான்.

    சௌம்யா மறுமுனையில் ஏதோச் சொல்ல,

    சீக்கிரம் வாடி… சொல்லிவிட்டு போனைக் கட் செய்தாள்.

    என்ன சொல்றாங்க மேடம்? பின்னால் இருந்த அஜய் கேட்க

    அஞ்சு நிமிஷம்னு சொன்னா… நிஷா சொல்ல அஜய்யும் வருணும் சிரித்தனர்.

    அப்போ அரை மணிநேரம் ஆகும்… ஏதாவது ஹோட்டல் போய் சாப்பிட்டே வந்திடலாம்… அஜய் சொல்ல… நிஷா புன்னகைத்தாள்.

    அவர்கள் நான்கு பேரும் கோவையில் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிகின்றனர். மூன்று நாள் விடுமுறையில் ஊட்டிக்குப் போகலாம் என்று சௌம்யா நச்சரிக்க சரியென்று கிளம்பி விட்டனர். வருண் தன் காரை எடுத்து சர்வீஸ் செய்து பெட்ரோல் டேங்கை நிரப்பி விட்டான். அஜய் அங்கே சென்று எங்கே தங்குவது… எங்கெங்கே சுற்றுவது என்று எல்லாம் திட்டமிட்டு விட்டான்.

    குறைந்த காலமே அவர்கள் பழகியிருந்தாலும் மிக நெருக்கமான நண்பர்கள் ஆகிவிட்டனர்.

    நேரம் ஆகிக்கொண்டே இருக்க அஜய் சிரித்தான். நிஷா பொறுமை இழந்தாள்.

    வரட்டும்… தலை மேலயே ரெண்டு போடறேன்… சொல்லவும் சௌம்யா வரவும் நேரம் சரியாக இருக்க…

    யார் தலை மேல நிஷா? புன்னகைத்தாள்.

    நிஷாவும் புன்னகைத்தாள்.

    சிரிச்சே கவுத்திடு… ஏண்டி லேட்?

    ஸாரிப்பா…

    இது ஒண்ணு சொல்லிடு… ஏறு சீக்கிரம்…

    சௌம்யா ஏறிக்கொண்டாள்.

    குட் மார்னிங் பிரண்ட்ஸ்… அவள் சொல்ல அவர்கள் புன்னகைத்தனர்.

    போலாமா? வருண் கேட்க

    யெஸ் என்றனர் கோரசாக.

    ***

    ஊட்டி.

    லேக் வ்யூ ரிசார்ட்ஸ்.

    அனைவரும் ரிசார்ட்ஸை அடையும்போது மாலை ஐந்து மணியாகியிருக்க…

    குளிர் நரம்புகளில் ஊடுருவியது.

    என்ன… குளிர்… வருண்… என்னால் முடியல… நிஷா சொல்ல வருண் புன்னகைத்தான்.

    இன்னிக்கு என்ன பண்றோம்? அஜய் கேட்டான்.

    இன்னிக்கு எங்கயும் போகல… சாப்பிடறோம்… நல்லா தூங்கப்போறோம்… நிஷா சொல்ல சௌம்யா சிரித்தாள்.

    இந்த மூணு நாளும் ஊட்டியை முழுக்க சுத்தறோம்… ஒரு முழுநாள் பொட்டானிக்கல் கார்டன் சௌம்யா சொல்ல வருண் சிரித்தான்.

    ஓகேப்பா… அப்படியே பண்ணுவோம்… இப்போ எப்படி? நாமளே சமைக்கலாமா? இல்ல போய் வெளியில இருந்து வாங்கிட்டு வரவா?

    இன்னிக்கு எதுவும் சமைக்க வேண்டாம்… ஒரு டீ மட்டும் உடனடியா எனக்கு வேணும்… இல்லேன்னா அப்படியே நான் உறைஞ்சுடுவேன்… நிஷா சொல்ல சௌம்யா புன்னகையுடன் கிச்சனுக்குள் சென்றாள்.

    அப்போ யார் யாருக்கு என்ன வேணும்னு சொல்லுங்க? அஜய் சொல்ல…

    "பட்டர்

    Enjoying the preview?
    Page 1 of 1