Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arugil
Arugil
Arugil
Ebook81 pages27 minutes

Arugil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்மணியை விடாமல் துரத்துகிறது ஓர் ஆவி ஏன்?

ஆவி வரும் தருணங்களில் அலற வைக்கும் அருகில்... வாசிப்போமா?

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580145507228
Arugil

Read more from Gavudham Karunanidhi

Related to Arugil

Related ebooks

Related categories

Reviews for Arugil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arugil - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    அருகில்

    Arugil

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    கண்மணி சீக்கிரமே எழுந்திருந்தாள். அருகில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் சூர்யாவை காதலுடன் பார்த்தாள்.

    ‘எழுப்பி விடுவோமா’ ஒரு நிமிடம் யோசித்தவள் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கட்டும். அவன் உறங்குவதையே பார்த்தவள் தனக்குள் புன்னகைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றாள்.

    இன்று அவர்களுக்கு முதல் திருமண நாள். முதன்முதலில். சூர்யாவை பெண் பார்க்க வரும்போது பார்த்த அவளுக்கு அவன் மேல் பெரிய ஈடுபாடு ஒன்றும் வரவில்லை. இத்தனைக்கும் சூர்யா பார்ப்பதற்கு நன்றாகவே இருப்பான். முதுகலை பொறியியல் படித்து முடித்து ஹூண்டாய் நிறுவனத்தில் வேலை செய்கிறான். காலையில் உடற்பயிற்சி செய்வதை எப்போதும் விடாமல் இருப்பதால் உடம்பில் தேவையற்ற சதை என்ற ஒன்று இல்லாமல் பார்க்கும் எந்தப் பெண்ணையும் மீண்டும் ஒரு முறை ரகசியமாக திரும்பிப் பார்க்க வைப்பவன் தான். ஆயினும் கண்மணிக்கு அவனைப் பிடிக்க ஆரம்பித்தது அவன் அவளுக்குத் தாலி கட்டியபின் தான். அதைவிட அதிகமாய் பிடித்தது அவன் அவளுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பான்.

    கண்மணி… நான் இதைச் செய்யலாம்னு நினைக்கிறேன்… நீ என்னம்மா சொல்றே? அருகில் வந்து அவன் கேட்டால் இவள் மனம் உருகிவிடும். அவன் முகத்தைப் பார்த்தவாறே சரிங்க… என்று தலையாட்டுவாள்.

    கொஞ்சுவதிலும் சூர்யா அவள் மனதை முழுமையாக. வென்றிருந்தான்.

    ஞாயிற்றுக்கிழமை என்றால் அவளை இழுத்து மடியில் போட்டுக்கொள்வான். தொலைக்காட்சியில் ஏதாவது நல்ல படம் போட்டு விட்டு அவளை மடியில் படுக்க வைத்து ஏதாவது பேசுவான்… முத்தமிடுவான். மனைவி என்ற நினைப்பு இல்லாது ஒரு குழந்தையாய் அவளை நடத்த அவள் நெகிழ்ந்திருப்பாள்.

    சில நேரங்களில் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அவளை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டு அறைக்குள் கொண்டு சென்று அன்பைப் பகிர்ந்த ஆவேச தருணங்களும் உண்டு.

    அவள் எது சமைத்தாலும் குறை சொல்ல மாட்டான். சில சமயங்களில் அவளே கேட்பாள்.

    எப்படிங்க சாப்பிட்டீங்க? கேவலமா இருந்துச்சு… என்று சொன்னால்…

    அதனால் என்னம்மா? சமைச்சது நீ… சிரிப்பான். அவளுக்குக் கட்டிக்கொள்ளத் தோன்றும்.

    ஒரு வருடம் எப்படி போனது என்றே தெரியவில்லை.

    கண்மணி பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஈரோட்டில்.

    திருமணத்திற்குப் பிறகு சென்னை தான் எல்லாமே என்றாகிவிட்டது.

    குளித்துவிட்டு வெளியே வந்த கண்மணி முந்தின நாள் இரவே என்ன கட்ட வேண்டும் என்று தேர்வு செய்த அந்த மயில் கழுத்து பட்டு சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டாள். கண்ணாடியில் பார்க்க அவள் நிறத்திற்கு பாந்தமாக அவள் எழிலை இன்னும் கூட்டியது சேலை. சூர்யாவிற்கு கண்மணியை சேலையில் பார்த்தால் மிகவும் பிடிக்கும்.

    அவன் கண்கள் விரிவதை ரசித்திருக்கிறாள்.

    மணி பார்த்தாள். ஏழு.

    என்னங்க… அருகில் சென்று அழைத்தாள்.

    அவன் அசைந்தான். எழவில்லை.

    என்னங்க…

    இன்னும் சத்ததைக் கூட்டினாள்.

    என்னம்மா… இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கறேனே… கண்கள் திறக்காமல் அவன் பேச அவளுக்கு சிரிப்பு வந்தது.

    இப்பயே கிளம்பினாத்தான் கோவிலுக்குப் போய்ட்டு சாப்பிட்டுட்டு பீச்சுக்குப் போக சரியாயிருக்கும்… கண்மணி சொல்ல கண்கள் திறந்தான். புன்னகைத்தான்.

    "ஹேப்பி வெட்டிங்

    Enjoying the preview?
    Page 1 of 1