Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theengukkal
Theengukkal
Theengukkal
Ebook196 pages1 hour

Theengukkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என்னுடைய சிறுகதைகள் பெரும்பான்மையும் குடும்பம், உறவுகள் இவற்றுக்கிடையேயான சிக்கல்கள், முரண்கள், புரிதல் இன்மை இவற்றின் மீதான சிந்தைகளின் தொகுப்பே ஆகும். என்னுடைய சிறுகதைகளின் வழியாக இயல்பாகவும் எளிமையாகவும் மனித உணர்வுகளை வெளிப்படுத்தி மனிதர்களுக்கிடையேயான சிக்கல்களுக்கு அன்பும் நம்பிக்கையும் புரிதலுமே அடிப்படையானவை என்பதையும் என்னுடைய படைப்புச் சொற்களின் வழியே புலப்படுத்துகிறேன்.

மனித வாழ்க்கை என்பது ஒருமுறையே எல்லோருக்கும் விதிக்கப்பட்டது அவற்றை எவ்வித முரண்களுமின்றி வாழவேண்டும். அப்படியே விதிக்கப்பட்ட வாழ்வாக இருந்தாலும் அதற்குள்ளும் வாழ்வதற்கான வழிகளைக் காணலாம் அப்படியான மனத்தைப் பண்படுத்திக்கொள்ளலாம் அல்லது பழக்கப்படுத்திக்கொள்ளலாம் என்பதும்தான்.

சமூகத்தின் நிகழ்வுகளில் ஒத்துப்போகமுடியாத நேர்மையற்ற எவற்றிலும் நான் அவற்றை என் கதைகளில் சரிசெய்துகொண்டு நிறைவு கொள்கிறேன்.

Languageதமிழ்
Release dateAug 28, 2023
ISBN6580167910046
Theengukkal

Read more from Harani

Related to Theengukkal

Related ebooks

Reviews for Theengukkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theengukkal - Harani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தீங்கூக்கல்

    (சிறுகதைகள்)

    Theengukkal

    (Sirukathaigal)

    Author:

    ஹரணி

    Harani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/harani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    நன்றிமுகம்

    குறையொன்றுமில்லை

    அன்புக்கயிறு

    தீங்கூக்கல்

    வேதவள்ளி கொண்டாடிய விநாயகசதுர்த்தி

    இந்த ஞாயிற்றுக்கிழமைதான்...

    இழப்பும் ஈடும்...

    உலர் உறவுகள்

    காட்டு வேலை

    ஐசியு

    கடன் வாங்கிக் கழித்தல்...

    குரு காணிக்கை

    சருகல்ல... வேர்...

    நூறு ரூபாய்

    பேராசிரியர்

    குள்ளக் கத்தரிக்காய்

    காலக்கணக்குகள்...

    வாழ்வு பெரிது

    நினைத்துப் பார்க்கிறேன்

    என்னுரை

    வணக்கம். தொடர்ந்து எழுதுவதும் வாசிப்பதும் இறைவன் கொடுத்த வரங்களாக எண்ணுகிறேன். எழுதுவதைத் தீர்மானிக்கிற சமூகமே நான் என்ன வாசிக்கவேண்டும் என்பதையும் நிழலாக நின்று அறிவுறுத்துகிறது. மனதுக்கு உறுத்துவதை எழுதுகிறேன். வாசிக்கிற சில மனசை உறுத்தி ஏதோவொன்றை சொல்ல முயல்கிறது. என்னால் அவற்றைக் கடந்துபோக முடியவில்லை. ஆகவே எழுதும்போது கடப்பது என்பது எளிதாகிறது. தீர்வு கிடைத்ததுபோன்ற நிறைவு வருகிறது.

    அடிப்படையாக சில அறங்களை எப்போதும் கைக் கொள்கிறேன். அவற்றையே என் படைப்புகளிலும் பதிவு செய்கிறேன். அவற்றின் நேரெதிர் விளைவுகளை சமுகத்தின்வழி உணர்கிறேன். எனக்கு நேராகப் படுவதைத் தொடர்ந்து எழுதவும் எதிராகப்படுவதை விலக்கியும் சில நூல்களையும் நாற்பதாண்டுகால அனுபவத்தில் எழுதியும் தந்திருக்கிறேன். இப்போது இச்சிறுகதை நூலை புஸ்தகா வெளியிடுவது இன்னும் மகிழ்ச்சியானது. எழுத்துத் தூண்டலை அதிகப்படுத்துகிறது.

    என்னை ஆற்றுப்படுத்திய எழுத்தாளர் திருமிகு ரிஷபனை இந்த நேரத்தில் நினைத்துக்கொள்கிறேன். புஸ்தகா நிறுவனத்திற்கு அகங்கனிந்த நன்றிகளைப் புலப்படுத்திக்கொள்கிறேன்.

    பேரன்புடன்

    ஹரணி

    நன்றிமுகம்

    இத்தொகுப்பின் கதைகளை வெளியிட்ட இதழ்களுக்கு...

    திருமிகு எழுத்தாளர் ரிஷபன் அவர்களுக்கு...

    என் மனைவி க. கோமதி, மகன் டாக்டர் க.அ. குகன்,

    மருமகள் டாக்டர் சௌமியா,

    மகள் க.அ. ஜனனி, மருமகன் ப. சேரன்,

    பெயரன்கள் சே. கவின், சே. கயிலன்

    குறையொன்றுமில்லை

    சிவசங்கரி காலையிலேயே எழுந்துவிட்டாள். வழக்கமாக எழும் நேரத்தைவிட ஒரு மணிநேரம் முன்னதாகவே எழுந்துவிட்டாள். ராகவன் உயிருடனிருந்தவரை சிவசங்கரிக்குக் காலையில் எழுவதற்கு ஒரு நியாயம் இருந்தது. அவருக்குக் காபி வேண்டும். அதன்பின்தான் ராகவன் பேசவே ஆரம்பிப்பார். அப்படியொரு பழக்கம். எல்லோரும் காபி குடிப்பது வழக்கம் என்றாலும் ராகவனுக்குக் காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால்தான் பேச்சே வரும். பேசுவேன் என்பதுபோன்ற ஒரு பிடிவாதத்தைக் குணமாகவே வைத்திருந்தார். சிவசங்கரி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. எப்போதும் டிகாசன் ரெடி பண்ணி வைத்திருப்பாள். பாலை சூடு பண்ணிவிட்டு அப்புறம் டிகாசனையும் ஒருமுறை சூடேற்றி வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுத்துவிடுவாள். இன்னும் ஒருமுறை ஆற்றினால் ஆறிவிடும் என்கிற நிலைவரை ஆற்றி ராகவன் கையில் கொடுத்துவிடவேண்டும். உடனே குடித்துவிடுவார்.

    ஒருமுறை ராகவனே கேட்டார்... உனக்கு கோபமே வராதா?

    ஒருகாலத்தில் இருந்தது. எங்கப்பா இப்படித்தான் செய்வார். எங்கம்மா எதுவும் பேசமாட்டாள். எங்கப்பாவைப் போல உங்களையும் நினைத்துக்கொண்டால் கோபம் வராதுங்க... என்று இயல்பாகப் பேசிவிட்டுப் போய்விட்டாள்.

    மனிதர்கள் இறந்துவிட்டால்தான் நாள்கள் ஓடுவது அசுரவேகம் என்று புரியும். இரவு பன்னிரண்டு மணி வரை படித்துக்கொண்டிருந்தார். அப்புறம் கொஞ்சம் வெந்நீர் கேட்டார். சிவசங்கரி கொண்டு போய் கொடுத்தாள். ஏன் இன்னிக்கு இவ்வளவு நேரம் முழிச்சிருக்கீங்க?

    தூக்கம் வரலே... ஏன் சிவசங்கரி இப்படி கொஞ்சம் உட்காரேன்... உட்கார்ந்தாள். நாமளும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடிச்சிருக்கோம் இல்லே? என்றார்.

    என்ன சொல்றீங்க? என்றாள்.

    இல்லை. நாமளும் குழந்தையா பொறந்து நம்மளையும் எடுத்து வளர்த்து ஆளாக்கி உனக்கு நான் எனக்கு நீன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுத்து அதையும் நாம அதே மாதிரியே வாழ்ந்து முடிச்சிருக்கோம் இல்ல? என்றார்.

    ஏங்க... இப்பவும் வாழ்ந்திட்டுதாங்க இருக்கோம்.

    சரிதான்... இது கிரேஸ் பீரியட் சங்கரி... ஒவ்வொரு மனுஷனுக்கு ஐம்பது வயசு தாண்டிட்டா... அதிர்ஷ்டம்... அறுபது கல்யாணம் பண்ணிப் பார்த்தா... கொடுப்பினை. அதுக்குமேல வாழறதுங்கறது கிரேஸ் பீரியட்... அவன் ஏதோ கணக்கு வச்சி உலவவிட்டிருக்கான்னு பொருள்... இல்ல... ஏதோ பாக்கியிருக்கு முடிச்சிட்டுப் போன்னு அர்த்தம்.

    அததான் படிச்சிக்கிட்டிருக்கிங்களா இந்தப் புத்தகத்துலே... அப்படிப் போட்டிருக்கா... அடுத்த நாள் வந்துடிச்சி... தத்துவம் பேசறீங்க... படுங்க... அப்புறம் பசி எடுக்கும். இப்ப பசிக்குதா... ஏதாச்சும் செஞ்சு தரவா?

    வேண்டாம். படுத்துக்கறேன். நம்ப பையன் முரளியும் சுவேதாவும் தூங்கியிருப்பாங்கல்ல.

    ஆமாம்... ரெண்டு வேலைக்குப் போறதுங்க... சீக்கிரம் படுத்தாதானே காலையில எழுந்திருக்க முடியும்.

    விளக்கு அணைந்து படுத்துக்கொண்டார்கள்.

    காலையில் சிவசங்கரி எழுந்து வந்தாள். ராகவன் எழுந்துவரவில்லை. காபியுடன் போனவள் கத்திய கத்தலில் தெருவே விழித்தது.

    ராகவனுக்கு தூக்கத்திலேயே உயிர் போயிருந்தது.

    பன்னிரண்டு மணி வரை வாழ்ந்துவிட்டு போய்ட்டு வரேன்னு சொல்லாமப் போயிட்டார். காபி குடிச்சிருந்தா ஏதாச்சம் பேசியிருப்பார்.

    எல்லாக் காரியங்களும் முடிந்து பதினோராம் நாள் காரியமும் முடிந்து சிவசங்கரி மகன் முரளியிடம் இதைச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

    நினைவு கலைந்தாள். இப்போது காலையில் எழுந்திருப்பது என்பது ஒரு அனிச்சை செயலாக மாறிவிட்டது. சுவேதாதான் எல்லோருக்கும் காபி போடுவாள். அந்த வேலை சிவசங்கரியை விட்டுப் போய்விட்டது. எப்பவாது சுவேதா அவள் அம்மா ஊருக்குப் போனாள் தானே போட்டுக் குடித்துக்கொள்வாள்.

    முரளி எழுந்துவிட்டிருந்தான். சோபாவில் உட்கார்ந்திருந்தான். சுவேதா காபி போட்டுக்கொண்டிருந்தாள்.

    என்னம்மா இன்னிக்கு சீக்கிரமே எழுந்துட்ட போல?

    ஆமாம் முரளி. நேத்தே சொன்னேன்ல... அந்தப் பணம் வந்துடுடிச்சி...

    என்ன பணம்? என்று கேட்டபடியே காபி எடுத்து வந்தாள் சுவேதா. ஆளுக்கொரு டம்ளர் கொடுத்துவிட்டு தானும் உட்கார்ந்து குடித்தபடியே எல்லோரையும் பார்த்தாள்.

    அம்மா ஆக்சிடெண்ட் பணம். கோர்ட் ஆர்டர். இன்சூரன்ஸ் கம்பெனியிலேர்ந்து கிளைம் ஆகியிருக்கு.

    அப்படியா... வந்துடிச்சா? எவ்வளவு? என்று கேட்டாள் ஆர்வமாய்.

    அஞ்சு லட்சம்.

    அஞ்சு லட்சமா? என்று ஆர்வம்பொங்கக் கேட்டவள் சட்டென்று முரளியின் முகம் பார்த்து அடங்கினாள்.

    முரளி சொன்னான். அம்மா... இன்னிக்கு வெள்ளிக்கிழமை விட்டுடு. நாளைக்கு எனக்கு ஆபிஸ் லீவுதான். பாங்க் போய் பணத்தை எடுத்துட்டு வந்துடலாம்.

    சரிப்பா... என்றபடி எழுந்து ஒரு காலை தாங்கியபடியே உள்ளே போனாள் சிவசங்கரி.

    ஏங்க அந்தப் பணத்தை என்ன பண்ணப்போறீங்க? என்று கேட்டாள்.

    ஒருமுறை அவளைப் பார்த்தான். அவன் பார்வையின் வேகத்தைத் தாங்க முடியாமல் தலையைக் குனிந்தாள் சுவேதா.

    அது அம்மாவோட பணம். அவங்க என்ன வேணாலும் பண்ணட்டும். அதைப் போய் நான் கேட்கமாட்டேன்.

    யாருக்குக் கொடுப்பாங்க... நமக்குதானே?

    நமக்குத்தானேன்னு இவ்வளவு உரிமையா கேக்கறே... உனக்குக் கொஞ்சங்கூட கூசலியா?

    என்ன பேசறீங்க நீங்க? இப்பத்தான் வீடு கட்டி முடிச்சிருக்கோம். இன்னும் வீட்டுக்கடன் இருக்கு. அதுல கொஞ்சம் அடைக்கலாம். பாங்கல வச்ச நகையைக் கொஞ்சம் மீட்டுக் கொண்டு வரலாம்.

    திரும்பவும் கேட்கறேன். இந்த வீட்டுல என்னோட அப்பாவோட பணம் இருக்கு. அப்பா செத்தபிறகு அம்மாவுக்கு அரியர்சா வந்தது. கொடுத்தாங்க... எல்லாத்தையும் சட்டுன்னு மறந்துட்டியா? இல்ல காரியத்துக்கு மட்டும் ஆடுறியா? கோபமாகக் கேட்டான்.

    என்ன ரொம்பப் பேசறீங்க? யாரு காரியத்துக்கு ஆடுறா? நான் என்ன பண்ணேன். உங்கம்மா வாழ்ந்து முடிச்சிட்டாங்க. நாம வாழணுங்க... இன்னும் நமக்குன்னு ஒரு குழந்தை இல்ல. அதுக்கான டரீட்மெண்ட் வேற செலவு போய்ட்டிருக்கு. வயசானவங்க கொஞ்சம் வழிவிட்டுதான் நிக்கணும்.

    ஏண்டி என்ன பேசறே நீ? வயசானவங்கன்னா உடனே செத்துப்போயிடணுமா? என்னோட அம்மா... அவங்க... இந்த வீடு இருக்கிற பிளாட், வீடு கட்டப் பணம்... இப்ப பாத்துக்கிட்டிருக்கிற வேலை எல்லாமும் எங்கப்பாவோட முயற்சியால அமைஞ்சது. என்னமோ எல்லாமும் உங்க வீட்டுலேர்ந்து வந்து கொண்டுவந்த மாதிரி பேசறே? வயசனாவங்கன்னா அவங்க எதையும் அனுபவிக்கக்கூடாது... மருமக சொன்னப்பேச்சுக்கு ஆடணுமா? வெளியிலே சொன்னாக்கூட வெட்கக்கேடு. காரி என் மூஞ்சலதான் துப்புவாங்க... என்றான் கடுங்கோபத்துடன்.

    சட்டென்று அந்த வார்த்தை நெருப்பைக் கொட்டினாள். அப்ப உங்கம்மாவோடவே குடும்பம் நடத்தவேண்டியதுதானே? என்றாள்.

    துடித்துப்போனாள். எழுந்து அவள் கையைப்பிடித்து ஓங்கிக் கன்னங்களில் மாறி மாறி அறைந்தான்.

    அடிடா... நாயே அடிடா... செத்துப்போறேன்... உங்க அம்மாவும் நீயும் நல்லா இருங்க வயசான காலத்துலே எந்தாலிய அறுக்க வந்திருக்கு பாரு என்று கத்திக் கூப்பாடு போட்டாள் சுவேதா.

    உள்ளிருந்து சிவசங்கரி வந்தாள் வேகமாக. வந்தவள் ஓங்கி முரளியை அறைந்தாள். யேய்... என்ன பழக்கம் இது, பொம்பளய கைநீட்டி அடிக்கற பழக்கம்? யாருக்கும் இந்த குடும்பத்துலே இந்தப் பழக்கம் இல்ல.

    அம்மா... அவ என்ன பேச்ச பேசுனா தெரியுமா?

    என்ன வேணாலும் பேசட்டும். அதுக்காக கைய நீட்டுவியா? இது என்ன யாருக்கும் இல்லாத பழக்கம் உனக்கு மட்டும்?

    சுவேதா உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.

    ஏண்டா இப்படி பண்ணறே? நான் என்னடா உங்கிட்ட கேட்டேன். எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க அடிச்சுக்காம இருங்க. அய்யோ கடவுளே என்றபடி சோபாவில் உட்கார்ந்துகொண்டாள் சிவசங்கரி.

    ராகவன் இறந்துபோய்தான் இந்த மனையில் வீடு கட்டினார்கள். ராகவன் உயிரோடு இருந்தவரையிலும் எதிர்பார்த்த ஓய்வூதிய நிலுவை வரவேயில்லை. இறந்தபிறகுதான் வந்தது. அதுவும் கணிசமான தொகைதான். அப்படியே தூக்கி முரளியிடம் தந்தாள் சிவசங்கரி. நல்லபடியா வீட்டைக் கட்டு என்று. கட்டினார்கள். நன்றாக எல்லோருக்கும் சொல்லி வெகு விமரிசையாக கிரகப்பிரவேசமும் செய்தார்கள். திடீரென்று சிவசங்கரிக்கு மூட்டு வலி வந்து பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்தார்கள். அந்த வீட்டில் பெட்ரூமில் இணைப்பாக கட்டிய பாத்ருமில் வெஸ்டர்ன் டாய்லட் வைத்துக் கட்டினார்கள். இன்னொருபுறம் சாதாரண டாய்லட் கட்டினார்கள். அதுதான் பிரச்சினையாயிற்று. முழங்கால் வலி என்பதால் தரையில் உட்கார்ந்து போகமுடியவில்லை சிவசங்கரியால். அடிக்கடி இரவில் பாத்ரூம் போவதற்கு அவளுக்கு வெஸ்டர்ன் டாய்லட் வசதியாக இருந்தது. அது பெட்ரூமைக் கடந்துப் போக வேண்டியிருந்ததால் சிவசங்கரி கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருந்து ஒருமுறை படுத்த படுக்கையிலேயே எல்லாவற்றையும் கழித்தாள். அன்றைக்குப் பெரும் பிரச்சினையாயிற்று.

    Enjoying the preview?
    Page 1 of 1