Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thotti Meengal
Thotti Meengal
Thotti Meengal
Ebook178 pages1 hour

Thotti Meengal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இயற்பெயர் முனைவர் க. அன்பழகன் பணிநிலை தமிழ்ப்பேராசிரியர் (பணிநிறைவு) – அண்ணாமலைப் பல்கலைக்கழகம். கல்வித்தகுதி - எம்.ஏ., எம்பில்., பி.எச்.டி., எம்.ஏ (மொழி) எம்.எஸ்.ஸி (உளவியல்) ஆய்வு நிலை,

1. நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்.

2. ஆய்வு நூல்கள் – 40

3. பாடநூல்கள் - 10

4. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாசித்த கட்டுரைகள் – 20

5. தேர்வுக்குழு, பாடத்திட்டக்குழு, முனைவர் பட்ட ஆய்வுக்குழு,வல்லு நர் குழு, புறநிலைத் தேர்வாளர், வினாத்தாள் மதிப்பீட்டுக் குழு எனப் பல பொறுப்புகள்.

6. என் வழிகாட்டலில் 30 எம்.பில் மாணவர்கள் 10 முனைவர் பட்ட மாணவர்கள்.

7. இலக்கணம், இலக்கியம், அறிவியல் தமிழ், உளவியல், அகராதியியல், மொழிபெயர்ப்பு எனப் பல்துறை என் ஆய்வு எல்லை.

8. இரண்டு அகராதிகள் உருவாக்கம் செய்துள்ளேன். தமிழ்ப்பணி பணிநிறைவுக்குப் பின்னரும் தொடர்கிறது. படைப்புநிலை.

1979 முதல் படைப்புலகில். கணையாழி, தீபம் என இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகள் பிரசுரம். 1000-க்கு மேற்பட்ட சிறுகதைகள் இதுவரை பிரசுரம். 200-க்கு மேற்பட்ட கவிதைகள் இலக்கிய, வெகுஜன இதழ்களில். 5 நாவல்கள், 10 குறுநாவல்கள், பொதுக் கட்டுரைகள், 25 சிறுகதைத் தொகுப்பு, நூல்கள் – 15 கட்டுரை, நூல்கள் – 3, கவிதைத் தொகுப்புகள் – 2, சுயவரலாறு நூல்கள் – 2, சிறுகதைப் போட்டிகளில் சிறுகதைகளுக்கு... சிறுகதைத் தொகுப்புகளுக்கு... கட்டுரை நூல்களுக்கு... கவிதை நூலுக்கு என இதுவரை 200-க்கு மேற்பட்ட பரிசுகள். பத்துக்கும் மேற்பட்ட விருதுகள். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் என் படைப்புநூல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

என் படைப்புகளில் இதுவரை 10 எம்.பில் பட்டங்களும், 2 பேர் முனைவர் பட்டங்களும் ஆய்ந்து பெற்றுள்ளார்கள். தேசிய மற்றும் பன்னாட்டுப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளேன். இறைவன் அருளால 1979 முதல் இன்றுவரை எழுத்துப்பணியும் வாசிப்பும் தொடர்கிறது.

நன்றி வணக்கம்.

அன்புடன்

ஹரணி.

Languageதமிழ்
Release dateDec 16, 2023
ISBN6580167910546
Thotti Meengal

Read more from Harani

Related to Thotti Meengal

Related ebooks

Reviews for Thotti Meengal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thotti Meengal - Harani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தொட்டி மீன்கள்

    Thotti Meengal

    Author:

    ஹரணி

    Harani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/harani

    பொருளடக்கம்

    வாழ நினைத்தவர்கள்

    அத்தியாயம் ஒன்று

    அத்தியாயம் இரண்டு

    அத்தியாயம் மூன்று

    அத்தியாயம் நான்கு...

    அத்தியாயம் ஐந்து

    அத்தியாயம் ஆறு

    அத்தியாயம் ஏழு

    அத்தியாயம் எட்டு

    அத்தியாயம் ஒன்பது

    அத்தியாயம் பத்து

    புத்தன் ஒரு கொலை செய்தான்

    அத்தியாயம் ஒன்று

    அத்தியாயம் இரண்டு

    அத்தியாயம் மூன்று

    அத்தியாயம் நான்கு

    அத்தியாயம் ஐந்து

    அத்தியாயம் ஆறு

    அத்தியாயம் ஏழு

    தொட்டி மீன்கள்

    அத்தியாயம் ஒன்று

    அத்தியாயம் இரண்டு

    அத்தியாயம் மூன்று

    அத்தியாயம் நான்கு

    அத்தியாயம் ஐந்து

    அத்தியாயம் ஆறு

    அத்தியாயம் ஏழு

    தொட்டி மீன்கள் (குறுநாவல்கள்) தொகுப்புக் குறித்து

    எழுதித்தான் தீரவேண்டும்

    ஒவ்வொரு நாளும் மனம் ஏதேனும் ஒன்றை சிந்தைக் கொள்ளத் தொடங்கிவிடுகிறது. அது ஒன்று கவிதையாக, சிறுகதையாக, நாவலாக, கட்டுரையாக ஒன்றை உருக்கொள்கிறது. எழுதிவிடவேண்டும் என்று எழுதவும் வைத்துவிடுகிறது. எழுதாமல் நாளும் கழிவதில்லை. அன்றாடச்செயல்பாடுகளில் ஒன்றாகவே எழுத்தும் ஆகிவிட்டது பணிநிறைவுற்ற காலத்தின் வரமாகவே படுகிறது. இது என்னுடைய குறுநாவல் தொகுப்பு. கிட்டத்தட்ட 20 குறுநாவல்கள் எழுதி அவற்றுள் சில பரிசும் பெற்றுள்ளன. குறுநாவல் தொகுப்பு வெளியிடவேண்டும் என்கிற எண்ணம் இச்சிறுநூலாக உருவாகியிருக்கிறது. வழங்கப்பட்ட வாழ்வின் எல்லாக் கணங்களையும் நமக்காக விதிக்கப்பட்டதை வாழ்ந்தேதான் முடிக்க வேண்டும் என்கிற ஒன்றுள் எழுத்தும் இருக்கிறது என நான் நம்புகிறேன். ஆகவே எழுதுகிறேன் என்றும் நினைக்கிறேன். எழுதக் கிடைத்த வரத்தையும் சரியாகப் பயன்கொள்கிறேன்.

    பேரன்புடன்

    ஹரணி

    நன்றிக்குரியவர்கள்

    புஸ்தகா டிஜிட்டல் மீடியா

    க.கோமதி, க.அ. குகன், க.அ.ஜனனி

    பெயரன்கள் சே.கவின், சே.கயிலன்

    சங்கப்பலகை

    வாழ நினைத்தவர்கள்

    அத்தியாயம் ஒன்று

    இரவு மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது. அப்படியே எழ முடியாமல் மல்லாந்து கிடந்தாள் மலர்ச்செல்வி. அழுகிக் கொண்டிருக்கும் பொருளின்மீது மொய்த்திருக்கும் ஈக்களைப்போல வலி அவளின் உடம்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. சிறு குழந்தையால் கூடத் தூக்கமுடியாத எடைக்கல்லைப்போல அவள் கட்டிலின்மேல் கிடந்தாள். புரண்டு படுக்க உடலிடம் கெஞ்சினாள். உடல் மறுத்துக்கிடந்தது. கைகளை அசைக்க யாரையேனும் உதவிக்குக் கூப்பிடவேண்டும் போலிருந்தது. அந்த வீட்டின் பெரிய கூடத்தில் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த கட்டிலின்மேல் அவள் கிடத்தப்பட்டிருந்தாள். அந்தக் கட்டிலைத் தவிர அந்தக் கூடத்தில் எந்தப் பொருளும் இல்லை. சுவரில் பதினான்கு அங்குலத் தொலைக்காட்சி கருப்புப்பூசி அமைதிக் காத்துக்கிடந்தது. கடைசியாக எப்போது தொலைக்காட்சியைப் பார்த்தோம் என்பது மலர்ச்செல்விக்கு நினைவில் இல்லை. தொலைக்காட்சிப் பார்ப்பதற்குக்கூட ஒரு மகிழ்ச்சியான தருணமும் சூழலும் வேண்டும் என்பது அவளின் வாழ்க்கையில் விதிக்கப்பட்டிருந்தது.

    பசி மரத்துப்போயிருந்தது. எதிர்வீட்டு தேவகி அக்கா எல்லாவற்றையும் சமைத்துக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறாள். பசிக்கும்போது கூப்பிடு என்று மலர்ச்செல்வியின் கைப்பேசியை அவளின் அருகில் வைத்துவிட்டும் போயிருக்கிறாள். இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்பு திருமணமாகி முதன்முதலாகத் தனிக்குடித்தனம் என்று தேவகியின் அக்கா வீட்டிற்குத்தான் மலர்ச்செல்வி வந்து குடியிருந்தாள். அது ஒரு காலம். வெகு முன்னேற்றமான காலம். வாழ்வில் வாழலாம் என்கிற பற்றுதலைப் பட்டாம்பூச்சி பறப்பதுபோல சொல்லிக்கொடுத்திருந்தாள் தேவகி அக்கா.

    தேவகி அக்கா வீட்டிற்குக் குடி வரும்போது கொஞ்சம் பாத்திரங்கள், சாமான்கள், ஒரு தையல் மிஷின், பாய், தலையணைகள், போர்வைகள் இவை மட்டிலுமே. குடிவந்த ஆறே மாதங்களில் புது வண்டி, கிரைண்டர், மிக்சி, எனப்பொருள்கள் சேர்ந்தன. காரணம் தேவகி அக்காவின் பேச்சும் பழக்கமும். வாழ்ந்தே தீரவேண்டும் என்றே எப்போதும் வலியுறுத்திக்கொண்டேயிருப்பாள். எந்தச் சூழ்நிலையையும் வாழ்வதற்கான சூழலாக மாற்றி வாழ்வதற்கான வழிகளைத் தேவகி அக்கா எளிமையாகச் சொல்லித்தருவாள். இப்படித்தான் மலர்ச்செல்வியின் கணவன் புது வண்டியும் வாங்கினான் புது கேமராவும் வாங்கினான் தொழில் செய்வதற்கு.

    இல்லையென்றால் இந்த வாழ்க்கை வாழ்ந்ததுபோதும் என்று என்றைக்கோ முடித்துக்கொண்டு எல்லார் மனங்களிலும் மறக்கடிக்கப்பட்டும் போயிருப்பாள் மலர்ச்செல்வி.

    வந்துவிட்டோம் வாழ்ந்து பார்ப்போம். எது வந்தால் என்ன? நமக்கான வாழ்க்கை என்று ஒன்றிருக்கிறது. அதனை நாம்தான் வாழவேண்டும். அதற்கான நேரத்தில் வாழவேண்டும். அதன் விளைவுகளை நல்லதாயினும் கெட்டதாயினும் எதிர்கொள்ளவேண்டும். அப்படி வாழ்ந்து சாகும்போது ஒரு நிறைவு வரும் என்று தேவகி சொல்லித்தான் மலர்ச்செல்வி இன்றுவரை உயிரை இழுத்துப் பிடித்து உடலில் அடக்கி உள்ளத்தால் காவல் காத்து நிற்கிறாள்.

    கோபாலனுடன் வாழ்வது ஒரு வாழ்க்கையா?

    மலர்ச்செல்வியின் கணவன். தாலி கட்டியவன் என்கிற ஒன்றைத் தவிர அவனிடத்தில் சொல்லிக்கொள்ள ஒன்றிருந்தது. அது இப்போது இல்லாமல்போய்விட்டது.

    மலர்ச்செல்வியின் இரண்டாவது அக்காவின் கணவன் தனபாலின் தம்பி இந்த கோபாலன். அக்காதான் சொன்னாள் கோபாலனைத் திருமணம் செய்துகொள் என்று. முகந்தெரியாத வயதில் தாயை இழந்தவள் மலர்ச்செல்வி. ஆறு பெண்களில் கடைசிப்பெண் இவள். மூத்தவள்தான் தாயாக நின்று மலர்ச்செல்வியை ஆளாக்கினாள். தங்கைகளைக் காப்பாற்றத் தன் வாழ்வைத் துறந்தாள். திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆகவே அக்காவின் சொல் அறமாயிற்று.

    திருமணமாகி வீட்டிற்குள் நுழைந்தபோது புதுப்பெண் விளக்கேற்றவேண்டும் என்று சொன்னபோது அந்த வீட்டில் (அது வீடா... ஒரு வீட்டின் சின்ன அறை) விளக்கு இல்லை. தேடிப்பிடித்தபோது ஒரு அழுக்கடைந்த அகல்விளக்கு இருந்தது. அதில் விளக்கேற்ற எண்ணெய் வாங்க ஒருவர் கடைக்குப்போனார். கூடவே திரியும் தீப்பெட்டியும் வாங்கிவர பின்னாலே ஒருவர் ஓடினார். வந்து விளக்கேற்றினாள். அந்த அறையைத் திரும்பி மூலையைப் பார்த்தவள் அதிர்ந்துபோனாள். அவளுள் ஏற்றப்பட்டிருந்த விளக்கு அணைந்துபோனது அன்றே.

    மூலை முழுக்க மது பாட்டில்கள்.

    அப்படியே திரும்பி அக்காவிடம் ஓடினாள்.

    எனக்குத் தெரியும் மலர். அவன் அண்ணன் இருக்கானே உங்க அத்தான் இப்படித்தான். ஆனா எப்பவாவதுதான் குடிப்பேன்னு சத்தியம் பண்ணான். இவனும் அப்படித்தான். வேற வழியில்ல. நல்ல மெக்கானிக்காம். தொழில் சுத்தம். நல்லா சம்பாதிப்பானாம். வேறென்ன பணம் நிறைய இருந்தா எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கலாம். உன் காது மூக்க மூடி வேற இல்லன்னப்பா இவன்தான் கிடைச்சான்... பெரிசா எதிர்பார்க்கலே... எத்தனை நாளக்கி காத்திருக்க முடியும்? உன்ன வச்சிருக்க முடியும்? உனக்குன்னு ஒரு வாழ்க்கை கொடுத்தாச்சு. பாத்துக்கோ. எப்பவும் போராடறதுதானே பெண்களோட நிலைமையே... எல்லாம் கிடைத்து வாழறது வாழ்க்கை இல்லை... எதுவுமே போராடித்தான் வாழணும்னு வாழறதுல ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அதுக்காக எப்பவும் போராட வேண்டியதில்ல... ஒரு கட்டம்தான் போராட்டம் துன்பம் எல்லாம். நானும் அப்படித்தான். என்னால இப்பத்தான் மூச்சு விடமுடியுது... பொறுத்துக்கோ... நான் எப்பவும் கூட இருப்பேன்... தைரியமா இரு... நம்ம மாதிரி ஒண்ணுமில்லாதவங்களுக்கு இதுவே அதிகந்தான். இல்லாட்டி கரையேறமுடியாம அப்படியே கிடந்துபோயிடுவோம்... யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க... கண்டபடி பேசிச் சிரிப்பாங்க... போ...

    முதலிரவில் அன்றைக்கு எதுவும் வேண்டாம் என்று சொன்னாள் மலர்ச்செல்வி. அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணே? என்றான்.

    எதுவும் பேசவில்லை மலர்ச்செல்வி.

    நான் நேரங்காலம் பாக்காம தொழில் செய்யறவன். சரியான சாப்பாடு கிடைக்காது. தூக்கம் இருக்காது. எப்பவும் டென்ஷனாத்தான் இருக்கும். எடுத்த வேலையைச் சரியா செய்யணும்னு நினைக்கிற தொழில் என்னோடது. உடம்பு வலிக்கும். கையெல்லாம் வண்டி மசியா இருக்கும். கழுவுனா போகாது. அப்படியேதான் சாப்பிடுவேன்... விஷங்கலந்து சாப்பிடறமாதிரி... வேற வழி... மனசும் வலிக்கும். வேற வழி கிடையாது. இப்படித்தான் குடிக்க ஆரம்பிச்சேன். குடிச்சேன். குடிக்காம என்னால தூங்க முடியாது. தொழில் பண்ண முடியாது.

    மெக்கானிக் வேலையில் வில்லாதி வில்லன். சூராதி சூரன். எந்த சிக்கல் இருந்தாலும் வண்டியில் கைவைத்தவுடன் சொல்வான். இதுதான் பிரச்சினை என்று. உடனே சரியும் செய்துவிடுவான். ஆனால் அவன் கேட்கிற காசை கொடுக்கவேண்டும். பிசுவக் கூடாது. சர்வீசுக்கு வரும் வண்டிகள் பலதரப்பட்டதாய் இருக்கும். டிவிஎஸ், ஸ்பிளெண்டர், ஆக்டிவா, பெப், ஜீபிடர், இப்படி எதுவாயிலும் வேலை பார்ப்பான். சொன்ன நாளில் சொன்ன நேரத்தில் வண்டி தயாராக இருக்கும். தந்துவிடுவான். அதில் குறையே கண்டுபிடிக்கமுடியாது. வண்டிகள் குவிந்தன. இரண்டு பையன்களை வேலைக்கு வைத்துக்கொண்டான். சரியான ஓட்டம். அக்கம் பக்கம் மற்ற மெக்கானிக்குகள் திணறினார்கள். தடுமாறினார்கள். அதனால் இவன் மேல் கோபப்பட்டார்கள். கோபாலனை வீழ்த்தினால்தான் தங்களால் தொழில் செய்யமுடியும் என்று முடிவெடுத்தார்கள்.நடக்கக்கூடாதே கோபாலனுக்கு என்று நினைத்தார்கள்.

    வலையை விரித்தார்கள். அது நுட்பமான வலை... மதுபாட்டில்களால் பின்னப்பட்ட வலை

    மிகச் சரியாகக் கோபாலன் வீழ்ந்தான்.

    முடிவெடுத்து இறங்கினார்கள். அதில் அவர்கள்தான் வெற்றி பெற்றார்கள்.

    கோபாலன் குடிக்கக் கற்றுக்கொண்டு அவர்களை விட அதிகமாகக் குடித்தான். காசு ஏற ஏறப் போதையும் ஏறித் தடுமாறியது.

    அத்தியாயம் இரண்டு

    பொறுத்தார் பூமி ஆள்வார் என்கிற பழமொழி எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என்பதைத் தன்னுடைய வாழ்வில் மலர்ச்செல்வி என்றைக்கோ உணர்ந்திருந்தாள்.

    குறிப்பாகச் சொல்லிப் பார்த்தாள்.

    கேட்கவில்லை கோபாலன்.

    அதிகாலையில் புறப்பட்டுப்போவான். என்னவென்றால். நிறைய வண்டிகள் வாங்கி வச்சிருக்கேன். சொன்ன நேரத்துல டெலிவரி கொடுக்கணும். நிறைய சாமானுங்க வாங்கணும். வெளியூர் போய் வாங்கிட்டு வரணும். வந்துதான் மதியத்துக்குள்ள கடையத் திறக்கமுடியும். இல்லாட்டி எல்லாமும் கெட்டுப்போயிடும் என்று சொல்லிவிட்டுப்

    Enjoying the preview?
    Page 1 of 1