Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thavarugal Kutrangalalla...!
Thavarugal Kutrangalalla...!
Thavarugal Kutrangalalla...!
Ebook143 pages58 minutes

Thavarugal Kutrangalalla...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நடைமுறை உலகில் மக்கள் எத்தனையோ விலகலான விஷயங்களுக்கு... தெரிந்தோ... தெரியாமலோ பழக்கப்பட்டு விட்டார்கள் அல்லது பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள். அரசியல் உலகில் இவை தவிர்க்க முடியாததாய், இயலாததாய் நிகழ்ந்து போனது.

தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. ஆனால் தவறே இங்கு தெரிந்து செய்யும் ஒன்றாக விரவி நிற்கிறது. பழகி விட்டதனால் தவறுகளின் மீதான லஜ்ஜை அற்றுப் போனது.

இதென்ன பெரிய குத்தமா? என்று அலட்சிய பாவமாய் நினைத்து ஒதுக்கும் விஷயமாகிப் போனது.

இதனை யதார்த்த உலகின் நிகழ்வுகளோடு பொருத்தி நடைபோடுகிறது இந்நாவல்.

Languageதமிழ்
Release dateDec 11, 2023
ISBN6580129910519
Thavarugal Kutrangalalla...!

Read more from Ushadeepan

Related authors

Related to Thavarugal Kutrangalalla...!

Related ebooks

Reviews for Thavarugal Kutrangalalla...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thavarugal Kutrangalalla...! - Ushadeepan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தவறுகள் குற்றங்களல்ல...!

    Thavarugal Kutrangalalla...!

    Author:

    உஷாதீபன்

    Ushadeepan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ushadeepan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    விருப்பமில்லாமல்தான் நடந்து கொண்டிருந்தார் சந்திரசேகரன். அதனாலேயே அவரது கால்கள் மெதுவாக அடியெடுத்து வைத்தன. திரும்பி விடு... திரும்பி விடு என்று சொல்வதுபோல் லேசாகக் கோணிக் கொண்டன. நரம்பு சொடுக்குவது போல் ஒரு உணர்வு. கொஞ்சம் பிசகினால் வலி பின்னியெடுக்கிறது. எண்ணி அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. நடப்பதில் மட்டும்தானா? பிற பலவற்றிலும்தான். சொல்ல நினைப்பது, பேசத் தோன்றுவது, விட்டு ஒதுக்குவது, இருப்பது, விலகுவது என்று பலவும்தான். எல்லாவற்றிலும்தான் எண்ணியெண்ணி அடியெடுத்து வைத்தார். வயசானாலேயே அனைத்தையும் கவனமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. நிற்பது, நடப்பது, திரும்புவது, உட்கார்வது, எழுவது ஏன் பலவற்றையும் பேசுவது என்றும் சொல்லலாம்தான்.

    இப்போது அந்தப் பேசுவதிலும் யோசித்துதான் வெளியே நடந்து கொண்டிருந்தார். யோசித்தென்ன, எதற்கு வெட்டியாய் வார்த்தைகளை விட்டுக் கொண்டு என்று அலுத்துத்தான் கிளம்பியிருந்தார். என்ன சொன்னாலும் கேட்கப் போவதில்லைதான். தான் பிடித்த பிடியைத் துளியும் நழுவ விடமாட்டாள் ராஜலெட்சுமி. செய்து முடித்தால்தான் ஆயிற்று. அப்படி ஒரு பிடிவாதம். ஓரளவுக்கு வசதி வாய்ப்புள்ள குடும்பத்திலிருந்து வந்தவளாயினும் ஒவ்வொருவர் குணம் எதில் எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லைதான். மலிவான விஷயங்களில் பரவலாக ஆர்வம் இருக்கும்போலத்தான் தெரிகிறது. காலம் அப்படித்தான் ஓடிவிட்டது. அல்லது சமரசம் செய்து கொண்டது.

    கையில் அந்தக் கட்டைப் பை. அதற்குள் இன்னும் ஓரிரண்டு துணிப் பைகள். அதை என்றோ எடுத்து வைத்து விட்டாள். பையனிடம் சொல்லிச் சொல்லிப் பார்த்தாள். அவன் கிளம்புவதாயில்லை. என்னால முடியாதும்மா... என்று இறுதியாய்ச் சொல்லி விட்டான். அதன் பின்தான் அவள் பார்வை இவர் பக்கம் திரும்பியது.

    காலார வெளியே நடந்து கொண்டிருந்தது என்றோ முடங்கிப் போனது. சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதும், அதனால் பின்னால் வரும் வாகனங்களுக்கு சட்டென்றோ அல்லது நிதானமாகவோ ஒதுங்குவதும் மிகுந்த கஷ்டமாய் உணரப் போக... தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் நடப்பது என்பது இனி சாத்தியப்படாது என்கிற முடிவுக்கு வந்தார். அதிலும் குறிப்பாக மாலை நடை கூடவே கூடாது என்று அவர் மனம் சொல்லியது. காலை நடையும் ஏழரை எட்டுக்குள் வீடு திரும்பி விட வேண்டும் என்கிற உறுதி பூண்டு செயல்படுத்திக் கொண்டிருந்தார்.

    இன்று இந்தப் பதினோரு மணி வெய்யிலில் நடந்து கொண்டிருக்கிறார். யாருக்காக... அவர் மனைவிக்காக. அவள் வார்த்தைகளுக்காக. அந்த வயதில், அந்தக் காரியத்திற்காக அவர்தான் போயாக வேண்டுமா என்கிற கேள்வி இருக்கிறதுதான். ஆனால் அந்தக் கேள்வி அவருக்கு மட்டும் மனதில் தோன்றி என்ன பயன்? அவனுக்கோ, அவளுக்கோ தோன்றவில்லையே?

    தான் மறுத்தால் அடுத்தது அப்பாதான் என்பது பையனுக்குத் தெரியும். அவன் மறுத்தாலும் அடுத்து இவரிறுக்கிறார் என்பது இவளுக்கும் தெரியும். தெரிந்துதான் இருவரும் நாடகமாடுகிறார்கள். இதை வாங்கலேன்னா இப்ப என்ன கெட்டுப் போகுது? என்று அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் சொல்லி விலகிக் கொண்டுவிட்டான் மோகன். முழுப்பெயர் சந்திரமோகன். சந்திர... விடக்கூடாது என்று சேர்த்தது. சந்திர மௌலீஸ்வரனிலிருந்து வருகிறது இது.

    ஒரே ஒரு முறை, முதல்முறை போய் வந்ததோடு சரி. அதன் பிறகு இப்போதுதான். இடையில் அதுபற்றிய நினைவே இல்லை. ஆனால் இன்று, இப்போது அதற்கான அவசியம் வந்திருக்கிறது. விட மனசில்லை. இருந்தா என்ன கேவலமா? யெலிஜிபிலிட்டி உள்ளதுதானே... வாங்கினா என்ன தப்பு? இதுதான் அவள் கேள்வியாயிருந்தது.

    சென்னை வந்து, முகவரி மாற்றி, அந்த ரேஷன் அட்டையைப் பையன் பெயரில் பெறுவதற்கு அவர்தான் அலைந்தார். இணைய தளம் மூலம் படிவங்களைப் பூர்த்தி செய்து உரிய இணைப்புகளைக் கொடுத்து, படிவம் ஏற்கப்பட்டதற்கான எண்ணைப் பெற்று அந்த அலுவலகத்தின் முகவரியைப் பெரு நகரில் தேடிப் பிடித்துச் சென்றடைந்து, நேரடியாய் அலுவலகத்திற்குள் போய் அமர்ந்து, தனது முன்னாளைய வருவாய்த்துறைப் பணியின் அந்தஸ்தை விவரித்து, தன் வயது காரணமாய் வரிசையில் நிற்க முடியாமையை உணர்த்தி, இரண்டு மூன்று தரம் அலைந்தபின் பையன் பெயருக்கான அந்தப் புதிய குடும்ப ரேஷன் அட்டையைப் பெற்றிருந்தார்.

    இந்த இடத்திலுள்ள கடைக்கு ஒதுக்கீடு செய்து கொடுங்கள் என்ற அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. பதிலாக சாலையைக் குறுக்கே கடந்து எதிர் வரிசை நகரிலுள்ள ஒரு ரேஷன் கடைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது கொஞ்சம் வருத்தம்தான். அதை அவரால் திருத்திப் பெற முடியவில்லை. முதல்முறையாக அந்தக் கடைக்குப் போய் அட்டையைப் பதிவு செய்து, அதிருக்கு... இதிருக்கு என்று அவன் சொன்ன எதையெதையோ பொக்கிஷம் கிடைத்தாற்போல் வாங்கி வந்து, இதெல்லாம் எதுக்கு? என்று ராஜலெட்சுமியிடம் திட்டு வாங்கினார். எல்லாம் பழைய சரக்கா இருக்கும். நாத்தமடிக்கும்... பூச்சி வரும்... ஜீனி மட்டும் வாங்கினாப் போதும்... என்று கடிந்து கொண்டாள். அதன் பிறகு பையன் ஒரு முறை போய் வந்ததாக நினைவு.

    இப்போது அந்தக் குடும்ப அட்டை மீண்டும் வெளியே வந்திருக்கிறது அதன் அவசியம் கருதி. அவசியம் என்றால் அவளுக்கு அது அவசியம். பையன் அதுபற்றிப் பேச்சே எடுக்கவில்லை. என்னவோ செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டான். என்னால முடியாது என்று இவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவள் கேட்பதாயில்லை. நம்ம கார்டுக்கும் கிடைக்கும்னா அதை வாங்கினா என்ன தப்பு? என்று பிடிவாதம் பிடித்தாள். கொடுக்க ஆரம்பித்த நாளிலிருந்து எண்ணிக் கொண்டிருந்தாள். முடிஞ்சிடப் போகுது... போயிட்டு வாங்க... என்று தினமும் ஒரு முறையேனும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள்.

    இலவசம்... இலவசம்னு எப்படிப் பழக்கப்படுத்திட்டாங்க பார்த்தியா? ஆசையில்லாதவங்களுக்கும் ஆசையை உண்டாக்கிட்டாங்க...! வாங்கினா என்ன தப்புங்கிற எண்ணத்தை உண்டாக்கிட்டாங்க... அதைத் தப்பாவோ அல்லது கேவலமாவோ நினைக்க யாரும் தயாராயில்லை... படிச்சவன், படிக்காதவன், ஏழைபாழை, இந்த ஜாதி அந்த ஜாதின்னு எந்த வித்தியாசமும் கிடையாது... இந்த விஷயத்துல...! எல்லாரும்தான் வரிசைல நிக்கிறான். கை நீட்டி வாங்குறான்... கையெழுத்தப் போடுறான்... அப்டி வாங்கின பெறகுதான் மனசு நிம்மதி ஆகுது. இல்லன்னா எதையோ பறிகொடுத்த மாதிரி ஆகிப் போகுது... வாங்கலேன்னா கேவலம்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க... என்னங்க... சுத்த ஏமாளியா இருக்கீங்க... என்கிறார்கள். உங்களுக்கு வேணாம்னா. வாங்கி எங்களுக்காச்சும் கொடுங்க... என்று கையேந்துகிறார்கள். எந்தக் கேவலத்திற்கும் மக்கள் தயார். கேவலம் என்று உணர்ந்தால்தானே? எது கேவலம்? யார் கேவலம்? கொள்ளை கொள்ளையா அடிக்கிறான்கள். அவுனுங்க கேவலம்னு நினைச்சா காரியம் ஆகுமா? என்று பதில் கேள்வி கேட்கிறார்கள். அப்படித்தானே? பெருத்த நஷ்டமா மனசு உணருது... இந்த நிலைமைக்கு மக்கள் ஆளாகிட்டாங்க... ஆளாக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும்... அது இப்போ பழகிப் போச்சு சனங்களுக்கு...!

    ஆமா... அதுல என்ன தப்பு? வாங்கலேன்னா நாம் வாங்கிட்டதா பதிவு பண்ணி கடைக்காரன் எடுத்துக்கப் போறான்...! கவர்ன்மென்டுக்கு அந்தக் காசு மிச்சமாகவா திரும்பப் போகுது... இதிலென்ன கேவலம்னு கேட்கிறேன்... நம்ம பெயருக்கு, நம்ம கார்டுக்கு உள்ளதத்தானே வாங்குறோம்... கொடுக்கட்டுமே... அரசாங்கத்துக்கு வரி கட்டுறோம்ல... அதிலேர்ந்துதானே இந்த இலவசத்தைத் தர்றாங்க... அது தப்பில்லேன்னா... அதை நாம வாங்குறதும் தப்பில்லை...! எல்லா மாநிலத்துலயும்தான் இதை அறிவிக்கிறாங்க... தப்புன்னு நினைச்சா எல்லாரும் அறிவிப்பாங்களா? இலவசத்துக்கு மக்கள் மயங்குறாங்கன்னுதானே அத விட்டுடக் கூடாதுன்னு உடும்புப் பிடியா வச்சிட்டிருக்காங்க...? யாரு அதிகம் இலவசம் கொடுக்கிறாங்கன்னு கூர்மையா மக்கள் கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்களே? ஆசையில்லாம கவனிப்பாங்களா? ஒரு ஆளுக்கா, ஒரு குடும்பத்துக்கான்னு வேறே கேட்குறாங்க?

    கேட்டது கேட்காதது என்று எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் பதில் சொன்னாள் ராஜலெட்சுமி. திரும்பத் திரும்பச் சொல்லி அவள் மனதுக்கு அவளாகவே சமாதானம் செய்து கொள்வதுபோல்தான் இருந்தது அது. வீட்டையே அடக்க முடியவில்லையே... அப்புறம் எங்கிருந்து நாட்டை அடக்க? அடக்குவதாவது, அதென்ன நம் கையடக்கமாகவா இருக்கிறது? அதிகாரமா கையில் இருக்கிறது? வெறும் பயல்களாய், வெற்று ஜனங்களாய் இருந்து என்ன செய்ய முடியம்? கண்களை மூடிக்கொண்டுதான் இருக்க முடியும்...!

    மக்களுக்கு குறைந்த செலவில் பொருட்கள் கிடைக்க வேண்டும்... வசதியற்றவர்கள் பயனடைய வேண்டும் என்று தோன்றிய நியாயவிலைக் கடைகளில் வேறு ஏதேதோ புகுந்து விட்டது. அவ்வப்போது அறிவிக்கப்படும் இலவசங்கள் மக்களை ஆட்டிப் படைக்கிறது. இனி ஏதாவது அறிவிக்காமல் இருந்தால் அது அரசுக்குக் கேடு விளைவிக்கும் என்கிற அளவுக்கு பிரபலமாகிவிட்டது

    Enjoying the preview?
    Page 1 of 1