Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ushadeepan Kurunovelgal
Ushadeepan Kurunovelgal
Ushadeepan Kurunovelgal
Ebook438 pages2 hours

Ushadeepan Kurunovelgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Udayadeepan has written many books on self-improvement, spiritual and meditation related topics.
Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580110804758
Ushadeepan Kurunovelgal

Read more from Udayadeepan

Related to Ushadeepan Kurunovelgal

Related ebooks

Reviews for Ushadeepan Kurunovelgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ushadeepan Kurunovelgal - Udayadeepan

    http://www.pustaka.co.in

    உஷாதீபன் குறுநாவல்கள்

    Ushadeepan Kurunovelgal

    Author:

    உஷாதீபன்

    Ushadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ushadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    உறவு சொல்ல ஒருவன்

    என்னவளே, அடி என்னவளே...!

    ஆனந்தக் கண்ணீர்

    எல்லாம் உனக்காக...

    முன்னுரை

    இத்தொகுதியில் உள்ள நான்கு குறுநாவல்களுமே குடும்பப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு ஸ்வாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தோடு வெற்றிகரமாகப் புனையப்பட்டவையாகும்.

    பெண்ணின் திருமணம் என்கிற மையப்புள்ளியைக் கருவாகக் கொண்டு வெவ்வேறு குடும்பங்களில் படிப்படியாக எழும் உறவுச் சிக்கல்களும், பொருளாதாரப் பிரச்சனைகளும், மனக் கசப்புகளும், விரிசல்களும், விலகல்களும் இப்பொழுதும், எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

    எந்தவொரு குடும்பமும் இந்த மாதிரியான குழப்பங்களிலிருந்து மெல்ல மெல்ல விலகி, மீண்டு உயிர்த்தெழுந்து இடைவிடாத சுழற்சியில் தொடர்ந்து ஆரோக்கியமாய் இயங்கிக் கொண்டேதான் வாழ்க்கைச் சக்கரம் கடந்து செல்கிறது. ஆனால் அந்த மாதிரியான ஆரோக்கிய நிலையை நோக்கி ஒரு குடும்பம் கட்டுக்கோப்பாக நகரும் போது அதன் பின்னே ஒரு பெண்ணின் அல்லது ஒரு ஆணின் தன்னலமற்ற தியாகங்கள் அமைதியாய், அழுத்தமாய் தன்னை மறைத்துக் கொண்டு கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது.

    குடும்பம் என்கின்ற இந்த அமைப்பு நமக்குக் கற்றுத் தருபவை ஏராளம். அதுதான் இந்த தேசத்தையே காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்று உறுதியாய்ச் சொல்லலாம்.

    உஷாதீபனின் இந்தக் குறுநாவல்கள் இவற்றை மிக அழுத்தமாய்ப் பேசுகின்றன. அவருக்கு என்று படிந்து போன ஒரு வல்லமையான எழுத்து நடை வாசகனை இப்படி அப்படி நகர விடுவதில்லை. கையிலெடுத்தால் முடித்து விட்டுத்தான் கீழே வைப்பீர்கள். அதற்கு இந்தப் புத்தகம் தலை நிமிர்ந்து உத்தரவாதமளிக்கிறது.

    *****

    இந்தப் பத்திகளை உள்வாங்கி நாவலுக்குள் செல்லுங்கள் உங்களைச் சட்டென உள்ளிழுத்துக் கொள்ளும்

    அவன்தான் எதையும் அந்தக் குடும்பத்தில் பார்த்தாக வேண்டும். தங்கையை சீக்கிரம் கல்யாணத்தைப் பண்ணி அனுப்பி வைக்க வேண்டும் என்கிற அக்கறையெல்லாம் அவனுக்கு இருக்கத்தான் செய்கிறது. அவன் லீவு பூராவும் இப்படித்தான் கரைகிறது. வேறு பொழுதுபோக்கு என்று அவனுக்கு எதுவும் கிடையாது. வாங்கும் சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து அப்பாவிடம் நீட்டி விடுகிறான். அவராய்ப் பார்த்து இவன் செலவுக்குத் தரும் தொகையை வாங்கிக் கொள்கிறான். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பிள்ளையா? பார்ப்பவர்கள் அதிசயித்தார்கள். அவனுக்கென்று சுக துக்கங்கள் எதுவுமேயில்லையா? இல்லை என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான் சந்திரன். அப்பாவின் லட்சியமே தன் லட்சியம். அவர் மனசு கோணக்கூடாது. அவர் மனம் புண்பட்டு ஒரு வார்த்தை சொல்லி விடக் கூடாது. அவர் திருப்திக்கும் நிறைவுக்கும்தான் தன் வாழ்க்கை. முடிவே செய்து விட்டான் சந்திரன். இனி அவனே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது. அப்படிப் பதிந்து போனது மனதில், அவர் திருப்திக்குத்தான் வாழ்கிறான் அவன். பெற்றோரின் சந்தோஷத்திற்காக வாழும் பிள்ளை.

    - உறவு சொல்ல ஒருவன்

    *****

    அந்த ஒரே வீட்டிற்குள்ளேயே ஒருவருக்கொருவர் வித்தியாசங்கள் வந்துவிட்டன. தனித் தீவு போல் இயங்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லோரும் சேர்ந்து அமர்ந்து பேசுவது இல்லாமல், தனித் தனி மாநாடுகள். என்ன காரணம்? எது சரியோ அதைக் காலாகாலத்தில் இருக்கும் பெரியவர்கள் செய்யாததுதான். அதுபற்றிச் சிந்தித்துச் செயல்படாததுதான். அதனால் மூத்தவர்களின் மரியாதை கொஞ்சம் கொஞ்சமாய்த் தேய்கிறது. இளையவர்கள் தனித்துச் செயல்பட ஆரம்பிக்கிறார்கள். தங்களின் செயல்பாடுகளைப் பெரியவர்களோடு கலந்து கொள்வது விடுபடுகிறது. ஆலோசனைகளை எதிர்பார்ப்பதில்லை. இனி அவர்களை எதிர்பார்த்துப் புண்ணியமில்லை என்று முடிவு செய்து விடுகிறார்கள். தனது நிலை இப்போது அதை நோக்கித்தான் வீட்டில் படிப்படியாய்த் தேய்ந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றியது வைத்தியநாதனுக்கு.

    வாழ்நாளில் அவர் இதுவரை அப்படி உணர்ந்ததேயில்லை. இப்போதுதான் இந்த மாதிரிச் சிந்தனைகளெல்லாம் தன்னிடம் தலையெடுத்திருக்கிறது. பிள்ளைகள் தலையெடுக்கும்போது குடும்பத்திற்கு வேண்டியவைகளையெல்லாம் செய்து முடித்திருந்தால்தான் அந்த மதிப்பு நீடிக்கும். பிறகு நீடிக்காவிட்டாலும் கூடப் பரவாயில்லை. நிறைவாவது மிஞ்சும். கடமைகளை முழுமையாக நிறைவேற்றி விட்டோம் என்கிற திருப்தி. ஆத்ம திருப்தி. இப்போது அது குலைந்து கொண்டிருக்கிறது.

    - என்னவளே, அடி என்னவளே...!

    *****

    உயர்கல்வி என்பது எப்படியெல்லாம் மாறி விட்டது. திடீரென்று ஒரு மூத்த தலைமுறையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவர்களது அனுபவத்துக்கு எட்டாத உயரத்துக்குப் போய் விட்டது போல் அல்லவா தோன்றுகிறது? கல்வி அதிகமாய்த் தனியார் வசம் போய் விட்டதுதானே இந்த அளவுக்கு அது அதிக விலையாய்ப் போயிற்று? அரசாங்கம் நடத்த வேண்டிய கல்வித்துறையை தனியார் நடத்துகிறார்கள். தனியார் நடத்த வேண்டிய மது விற்பனையை அரசாங்கம் நடத்துகிறது. என்ன விபரீதம் இது? கல்வி இங்கே வியாபாரமாகி எப்படிச் சீரழிகிறது? சீரழிவு என்பதெல்லாம் வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்குத் தானே? வியாபாரம் செய்பவர்கள் கொடி கட்டிப் பறக்கிறார்களே? இந்தச் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? சாதாரண ஏழை எளிய மக்கள் வருடா வருடம் லட்சக்கணக்காகக் கொடுத்து எப்படிப் படிக்க வைக்க முடியும்? எத்தனை லட்சக்கணக்கான பேர்கள் ப்ளஸ் 2 படிப்போடு முடித்து வெறுமே ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள்? எத்தனை பேர் நாளடைவில் கெட்டுச் சீரழிந்து போகிறார்கள்? எத்தனை எண்ணிக்கையிலானோர் சமுதாயத்தின் தீய சக்தியாய் உருவெடுத்து விடுகிறார்கள்? நினைக்க நினைக்க அகிலனுக்கு ஏனோ மனது வேதனையாய் இருந்தது. ஒன்றைத் தொட்டு ஒன்று என்று என்னவெல்லாம் எண்ணங்கள்?

    - ஆனந்தக் கண்ணீர்

    *****

    தன்னைப் புறக்கணிப்பது போல் தானும் ஆண்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று மனது கெட்டிப்பட்டுப் போய் விட்டது அவளிடம். நானும் உன்னைத் தூக்கி எறிய முடியும், நானென்ன வெறும் பெண்பிள்ளையா? சுளையாய் மாதம் முப்பதாயிரம் சம்பாதிப்பவளாக்கும். காலத்திற்கும் இதை வைத்துக் கொண்டு என் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு என்னால் தனியே வாழ்ந்து விட முடியும். ஆண் துணை என்ன ஆண் துணை? இல்லையென்றால் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாதா? சமூகம் என்ன ஏற்பது என்னை? நான் சமூகத்தை ஏற்கிறேனா என்பது கேள்வியில்லையா? கணவனோடு சேர்ந்து பிள்ளை, குட்டி என்று இருந்தால்தான் ஆயிற்றா? பிள்ளை பெறவில்லையென்றால் அவள் தாயில்லையா? தாய்மையின் மனநிலையை, பிள்ளை பெற்றுத்தான் அடைய வேண்டுமா? அல்லாமல் பெற முடியாதா? அது உணர்ச்சியா? அல்லது அனுபவ முதிர்ச்சியா? நானும் இருந்து காட்டுகிறேன். இந்த சமூகம் என்னைத் தாங்குகிறதா இல்லையா என்று பார்ப்போம்!

    -எல்லாம் உனக்காக...!

    *****

    உறவு சொல்ல ஒருவன்

    1

    இவளுக்கு ஒருத்தனைப் பிடிக்கிறதுங்கிறது இனிமே என்னாலாகாது...

    கோபமாய்ச் சொல்லியவாறே வீட்டுக்குள் வந்தான் சந்திரன்.

    அவன் நுழைவதைப் பார்த்ததுமே எதற்கு எதிர்த்தாற் போல் நின்று கொண்டு என்று அறைக்குள் புகுந்து கொண்டாள் மாதுரி.

    தன்னைப் பார்த்தால் இன்னும் கோபம் அதிகமாகும். கண்டபடிக்குக் கத்த ஆரம்பிப்பான். நிறுத்தவே மாட்டான்.

    அப்பாவோ, அம்மாவோ எதுவுமே சொல்ல மாட்டார்கள். அவனாகக் கத்தி ஓயட்டும் என்று இருப்பார்கள்.

    இரண்டு காதுகளுக்கும் பஞ்சு வைத்து அடைத்துக் கொள்ளாத குறைதான். செவிடு போல் இருந்து விடுவார்கள். அவர்கள் கண்டுபிடித்த வழி அது.

    பேசப்போனால் அடித்தாலும் போச்சு... ஒரு முறை அதுவும் நடந்து விட்டது.

    நீ பேசாதே, வாயைத் திறந்தே, கழுத்தை நெறிச்சுக் கொன்னுப்புடுவேன்... என்று விட்டு பளாரென்று கன்னத்தில் அறைந்து விட்டான். நிலை குலைந்து போனாள் மாதுரி.

    அடித்த பின்னால்தான் அவனுக்கே உறைத்தது.

    சே... தப்புப் பண்ணிட்டமே...?

    பெரிய, வளர்ந்த பொண்ணைப் போய் இப்டிக் கை நீட்டி அடிக்கலாமா? தவறாச்சே... எப்டிச் செய்தேன்?

    அடக் கடவுளே... என் புத்தி ஏன் இப்டிக் கோணிப் போச்சு...?

    வயசுக்கு வந்த பொண்ணை இப்டிக் கை நீட்டி அடிக்கிற வேலை இனிமே வச்சிக்காதே...

    சந்திரனை அப்பா அன்று வாங்கி விட்டார் வாங்கி. அதிர்ந்து போனான் அவன்.

    மன்னிச்சிக்குங்கப்பா... தெரியாமச் செய்திட்டேன்... என்றான்.

    அதென்னடா தெரியாமச் செய்றது? கை ஓங்கிற போது நிறுத்திக்க முடியாதோ?

    அடிக்கிற அளவுக்குக் கோபம் வர்ற போது, அதை அடக்கத் தெரியாதோ?

    அந்தளவுக்கா கோபம் கண்ணை மறைக்குது? அப்டியா அறிவு கெட்டுக் போகுது? முட்டாள்...

    அன்று தான் அப்பா திட்டினார் சந்திரனை. அப்பாவுக்கும் திட்டத் தெரியும் என்று அப்பொழுதுதான் தெரிந்தது.

    இன்னொரு தரம்ப்பா... இன்னொரு தரம் திட்டுங்கப்பா... என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

    அந்தக் கோபத்தை மறந்து, அவனுக்கு இப்படித் தோன்றியது. உரிமையோடு அப்பா திட்டி அன்றுதான் கேட்டான்.

    வயசுக்கு வந்த பொண்ணைக் கை நீட்டி அடிக்கக் கூடாது. வயசுக்கு வந்த பையனை மட்டும் திட்டலாமா? ஒரு வயசுக்கு மேலே யாரையும் அவச் சொல் சொல்லி திட்டவோ, அடிக்கவோ செய்றது நாகரீகமான செயலா?

    பரமேஸ்வரனுக்கும் உடனே தோன்றித்தான் விட்டது. அவர் தன் வாயைப் பொத்திக் கொண்டு திண்ணையை நோக்கிப் போனது உணர்த்தி விட்டது சந்திரனுக்கு.

    துளியும் அவனுக்கு அவர் மேல் கோபமில்லை. மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

    மனிதர்கள் தங்கள் தவறுகளை உடனுக்குடன் உணரும்போதுதான் என்ன அழகாய் இருக்கிறது என்று ரசித்தான்.

    தவறு செய்வது இயற்கை. தவறே செய்யாத அப்பா அந்த இயற்கைக்கு என்றும் உடன்பட்டதேயில்லை. எல்லாமே மனுஷ அறிவுக்குட்பட்டது என்று நினைப்பவர்.

    தன் அறிவை எவனொருவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆள்கிறானோ அவனால் தவறு செய்ய முடியாது.

    அதைக் கண்டபடி அலைய விடுபவன்தான் மனதில் தோன்றுவதையெல்லாம் செய்து கொண்டே போகிறான்.

    அதற்கு முடிவே இல்லாமல் போய் கடைசியில் அழிந்தும் மடிகிறான் என்பார்.

    புத்தியைச் செப்பனிடு. அதை எப்பொழுதும் கூர்மையாய் வைத்துக் கொள். என்ற சித்தாந்தம் உடையவர் பரமேஸ்வரன்.

    இது நடந்து ஏழெட்டு வருடத்திற்கு மேல் இருக்கும். அன்றிலிருந்து கை நீட்டும் பழக்கத்தை விட்டு விட்டான் சந்திரன்.

    பயங்கரமாய்க் கோபம் வரும் சமயத்தில்... சமயத்தில்தான். அபூர்வமாய் அன்று என்னவோ வந்து விட்டது. அது அவனுக்கே புரியவில்லை. புரியாமல் வருவது தானே கோபம். அறிவைக் கெடுத்து முன்னிற்பதுதானே... என்று சமாதானம் செய்து கொண்டான்.

    தன் படிப்புக் கெடுகிறது என்று பக்கத்து வீட்டில் சத்தம் போட்டு விளையாடிக் கொண்டிருந்த பையனைச் சொல்லிச் சொல்லிக் கேட்காமல், போய் ஒரு அறை கொடுத்தான்.

    அப்பமாய் வீங்கிவிட்டது அவன் கன்னம். பழியாய்ச் சண்டைக்கு வந்து விட்டார்கள் அவர்கள் வீட்டில்.

    வாசலில் அடியாட்கள் நாலு பேர் வந்து நின்று, யாருய்யா எங்க பையனை அடிச்சது, வெளியே வா... என்றார்கள்.

    அம்மா பார்த்தாள். அந்தக் கூட்டத்தைச் சமாளிக்க, அவர்கள் கோபத்தை அடக்க, அதுதான் சரியான வழி... என்று ஒன்று செய்தாள்.

    கையில் கம்பை எடுத்துக் கொண்டு அண்ணனை விளாறி விட்டாள். போதும் போதும் என்கிற அளவுக்கு அடித்துத் துவைத்தாள்.

    உண்மையான அடிதான். செமையான அடி. அசையாமல் கல்லாய் நின்றான் சந்திரன். செய்தது தப்புதான் என்று அந்த அடி உணர்த்தியது.

    இனி இந்தத் தப்பு நடக்கக்கூடாது என்று அவனே தீர்மானித்துக் கொண்டது போல், அத்தனை அடியையும் அமைதியாய் வாங்கிக் கொண்டான்.

    அவர்களே, போதும்மா, விட்டிடுங்க... என்னவோ தெரியாமச் செய்துட்டாரு பையன்... விடுங்க... விடுங்க... இனிமே இப்டிச் செய்யாதீங்க தம்பீ... அதென்ன அடுத்த வீட்டுப் பிள்ளையக் கை நீட்டுறது...? என்று விட்டுக் கலைந்து போனார்கள்.

    அந்த வேகம் இப்போது எப்படி வந்தது. அதே இடி அடி இல்லையென்றாலும், பழக்கம் இன்னும் தன்னிடமிருந்து விலகவில்லையா? அம்மா அடித்த அடிக்கு அப்புறம் என்னதான் மரியாதை?

    அதென்ன பொம்பளையைக் கை நீட்டுறது? நானே என் பொண்ணை அடிச்சதில்லை... இது நாள் வரைக்கும் என் விரல்கூட அவள் மேல் பட்டதில்லை. நீ எல்லாம் எடுத்துச் செய்றேங்கிறதுக்காக இதையும் செய்வியா? - பார்வதியும் பிடித்துக் கொண்டாள் அன்று.

    வெளியே உட்கார்ந்திருந்த பரமேஸ்வரன் அமைதி காத்தார். தான் ஏதாவது பேசப் போக அவனது கோபம் இன்னும் வெடிக்கும். வீடே அதிருவது போல் கத்த ஆரம்பிப்பான்.

    பதிலுக்குப் பதில் பேசினால்தானே வளர்ந்து கொண்டு போகும்? சிவனே என்று பேசாமல் இருந்து விட்டால்? கோபம் தானே தணிந்துதானே போயாக வேண்டும்? விலையற்றுப் போகுமல்லவா?

    இரு தரப்பில் ஒரு தரப்பு விலகும் போது, எந்த விஷயமும் நீர்த்துத்தானே போகும்?

    ஒவ்வொரு முறையும் இப்படித்தான் செய்ய வேண்டியிருக்கிறது. அவனை விட்டால் வேறு ஆள் இல்லைதான் அந்தக் குடும்பத்துக்கு. அந்த நினைப்பில் அவன் செயல்படவில்லைதான்.

    அப்படியெல்லாம் சந்திரனுக்கு மமதையான, மிதப்பான எண்ணம் கிடையாது. அவன் நல்லவன். பொறுப்பானவன். இந்த முன் கோபம்தான் அவனைக் கெடுக்கிறது. பிறவிக் குணம். அத்தனை சீக்கிரத்தில் போய் விடுமா?

    அவன்தான் எதையும் அந்தக் குடும்பத்தில் பார்த்தாக வேண்டும். தங்கையை சீக்கிரம் கல்யாணத்தைப் பண்ணி அனுப்பி வைக்க வேண்டும் என்கிற அக்கறையெல்லாம் அவனுக்கு இருக்கத்தான் செய்கிறது. அவன் லீவு பூராவும் இப்படித்தான் கரைகிறது. வேறு பொழுதுபோக்கு என்று அவனுக்கு எதுவும் கிடையாது. வாங்கும் சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து அப்பாவிடம் நீட்டி விடுகிறான். அவராய்ப் பார்த்து இவன் செலவுக்குத் தரும் தொகையை வாங்கிக் கொள்கிறான். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பிள்ளையா? பார்ப்பவர்கள் அதிசயித்தார்கள். அவனுக்கென்று சுக துக்கங்கள் எதுவுமேயில்லையா? இல்லை என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான் சந்திரன். அப்பாவின் லட்சியமே தன் லட்சியம். அவர் மனசு கோணக் கூடாது. அவர் மனம் புண்பட்டு ஒரு வார்த்தை சொல்லி விடக் கூடாது. அவர் திருப்திக்கும் நிறைவுக்கும் தான் தன் வாழ்க்கை. முடிவே செய்து விட்டான் சந்திரன். இனி அவனே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது. அப்படிப் பதிந்து போனது மனதில். அவர் திருப்திக்குத்தான் வாழ்கிறான் அவன். பெற்றோரின் சந்தோஷத்திற்காக வாழும் பிள்ளை.

    விடாமல் அலைகிறான். மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு எந்த வரனாவது வகையாய் அமைந்து விடாதா என்று அல்லாடுகிறான். ஓடி ஓடிப் போய் அந்தச் சங்கம், இந்த சமாஜம், கோயில், குளம், ஜாதகம் கொடுக்கும் இடம், வாங்கும் இடம் என்று யார் சொன்னாலும், எங்கு கேள்விப்பட்டாலும் என்று தடங்கலில்லாமல் தேடித் தேடிப் போய் வாங்கி வருகிறான். விடாமல் அவனும் அலையத் தான் செய்கிறான். அமைந்தால்தானே...! அமைந்திருக்கிறது என்று கடிதம் போட்டால் பதிலே வருவதில்லை. ஃபோன் கூடக் கிடையாது. அப்படியே காலமும் கழிகிறது.

    சந்திரனை நினைக்க நினைக்கப் பரமேஸ்வரனுக்குப் பூரிக்கத்தான் செய்கிறது. அவன் தான் வீட்டின் முதல் நாற்பதை நெருங்குபவன். மூத்த முதல்வன். அவருக்கு அடுத்து அவன். அதனால் அவனுக்கு எல்லா உரிமையும் உண்டு.

    தன் ஸ்தானத்தில் இருந்து அனைத்தையும் செய்கிறான். மற்ற இளைய சகோதரர்கள் மோகனும், பாலாவும் வயதில் கல்யாணம் பண்ணியாக வேண்டும் என்கிற எதிர்காலத் திட்டத்தோடு அவரவர்கள் திருமணத்தை காலத்தே முடித்துக் கொண்டு கழன்று கொண்டார்கள்.

    பொறுப்பாய் வெளியூரில், ஜாக்கிரதையாய் தனிக்குடித்தனம் போய் விட்டார்கள்.

    ஏன் மூத்தவனுக்குப் பண்ணலே? என்று வந்தவர்கள் கேட்கத்தான் செய்தார்கள்.

    அவனுக்கு லட்சியம் இருக்கு மனசிலே. தங்கைகள் மூவருக்கும் பண்ணிட்டுத்தான் பண்ணிப்பானாம்...

    வந்தவர்களிடம் கணீரென்று பெருமையாய்ச் சொல்லிக் கொண்டார் பரமேஸ்வரன்.

    வந்தவர்களும் சரி சரி என்று கேட்டுக் கொண்டார்கள்.

    அதுவே பெண் என்றால் உடனே அந்தச் சந்தேகம் தீருமா? ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். வெளியே ரகசியமாய் விசாரிப்பார்கள்.

    இவர் ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டுக் கடமைகளைச் செய்ய வேண்டிதானே...?

    வர்றவ எப்படியிருப்பாளோங்கிற பயம் அவனுக்கு... எதுக்குப் பிரச்னைன்னு, முடிச்சிட்டுத்தான் நகருவேன்னுட்டான்... கேட்பவர்கள் என்ன நினைத்தார்களோ என்ற எண்ணமேயில்லாமல், எப்டிப் பிள்ளை பெத்து வச்சிருக்கேன் பார்த்தீங்களா? என்பது போல் பகன்றார் பரமேஸ்வரன்.

    சந்திரன் மனதில் என்ன இருக்கிறது? என்று கூட அவர் ஆழமாய் யோசித்ததில்லை. அந்த அளவுக்கு அவன் மேல் நம்பிக்கை.

    புடம் போட்ட தங்கமாச்சே அவன்...! என்பார் அவன் காது கேட்கவே...! தன் எதிர்கால பயம்தான் தன்னை இவ்வாறெல்லாம் செயற்கையாய்ப் பேச வைக்கிறதோ என்று தோன்றுவதுண்டுதான்.

    அதை அவர் லட்சியம் செய்வதில்லை. இப்படி அழுத்தமாய்ச் சொல்லிச் சொல்லி அவன் மனதில் விதையை ஊன்றி விட்டார். மரமாய் வளர்ந்து ஆழ வேரூன்றி விட்டது அது!

    அவனும் லட்சிய புருஷனாகி விட்டான். தியாகம்தான் இந்த உலகத்தில் பெரியது என்ற எண்ணம் அழுத்தமாய் விழுந்து விட்டது அவன் மனதில்.

    பொறுமையும், பொறுப்புணர்வும் மிக்கவன் சந்திரன் என்று உறுதி செய்து கொண்டு, இவனை விட்டால் தனக்கு வேறு நாதியில்லை என்று அவன் வாழ்க்கையைத் தான் கெடுத்து விட்டோமோ?

    எப்பவாவது, சமயங்களில் மனது சுண்டித்தான் போகிறது அவருக்கு. வேறு வழியில்லை. அந்தச் சிந்தனையைப் புறந்தள்ளுகிறார் அவர்.

    நாதியற்றுத்தானே நிற்கிறேன் என்று வருந்துவதும் உண்டு. மனித மனம்தானே... நினைப்பிற்குப் பஞ்சமா?

    இத்தனை குழந்தைகள் பெற்றது தவறு.

    ஒருவன் வருவாயை வைத்துக் கொண்டு ஆறு குழந்தைகளா? வாழ்க்கையில் கிடைத்தது அந்தச் சந்தோஷம் ஒன்றுதான் என்றால், அதற்காக இப்படியா?

    கொஞ்சமாவது யோசனை வேண்டாமா? பெற்றுத் தள்ளுகிறோமே, பின்னால் எப்படிக் காப்பாற்றுவது, கரையேற்றுவது என்கிற ஜாக்கிரதையுணர்வு வேண்டாம்?

    ஊரும் உலகமுமா வளர்க்கும். இல்லை, மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான் என்று இருந்து விட முடியுமா?

    அட, இந்தப் பார்வதியாவது அதற்கு இடம் கொடுக்காமல் இருந்தாளா? எனக்குத்தான் புத்தியில்லை என்றால், அவளுக்கு எங்கே போயிற்று அறிவு? எத்தனை வேணும் சொல்லுங்க, நானிருக்கேன் பெற்றுத் தர்றதுக்கு என்று மறுப்புச் சொல்லாமல் இணங்கி விட்டாளே? அவளும் அதை மட்டும்தான் சந்தோஷம் என்று கருதினாளோ என்னவோ? அல்லது புருஷனுக்குப் பணிந்து போவதுதான் பொம்மனாட்டியின் கடமை என்ற தாத்பரியமோ?

    வாழ்க்கையில் முன் யோசனை இல்லாமல் செயல்பட்டால் இப்படித்தான் கஷ்டப்பட வேண்டும். இன்று என்ன பாடுபடுகிறோம்.

    எனக்கென்ன ராஜா...! மூணு பிள்ளைகள் இருக்கு எனக்கு... தூணா நிற்பாங்க அத்தனை பேரும்...! அவங்க கைல பொறுப்பை ஒப்படைச்சிட்டு, ஜாலியா ஒதுங்கிடுவேன் நான்... பார்க்கத்தானே போறீங்க எல்லாரும்...

    கட்டிய கோட்டை என்னவாயிற்று? மணல் வீடாய் சரிந்து விட்டதே...!

    அதுவாகவே அமைந்தது போலவும், வேறு வழியில்லை என்பது போலவும், எதிர்காலத் திட்டம் அல்லவா போட்டுவிட்டார்கள்? தொலை நோக்குப் பார்வையாம். மண்ணாங்கட்டி...

    நாளை நடப்பதை யார் அறிவார்? நாளை என்பது நமக்கு ஏது? நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகு... வள்ளுவர் சொல்லவில்லையா?

    எங்கே பாதை தொடங்கும்... அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை... இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது... பாதையெல்லாம் மாறிவரும்... பயணம் முடிந்து விடும்... மாறுவதைத் தெரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்... கவியரசு எழுதவில்லையா?

    அப்படியான மயக்கத்தில்தானே அந்த இறைவன் இந்த வாழ்க்கையை வைத்திருக்கிறான். அதனால்தானே அவனவன் ஆடுகிறான்.

    சாவுங்கிற நாடகத்தோட ஒத்திகைதானடீ தூக்கம்...? - பிரஸ்டீஜ் பத்மநாபய்யர் தன் மனைவி சாவித்திரியிடம் கூறுவாரே... நினைவிருக்கிறதா?

    தூங்கப் போற நாம, எழுந்திரிப்போம்ங்கிறது என்ன நிச்சயம்?

    எல்லாமும் அறிந்தவன்தான் அவரின் மூத்த பிள்ளையான இந்தச் சந்திரன். அவன் தேடித் தேடிப் படிக்கும் புத்தகங்கள் அவனுக்கு இவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்திருக்கின்றன. அவனைப் பக்குவப்படுத்தியிருக்கின்றன. அவனிடமிருந்த சளசளப்பைப் போக்கி அவனை அமைதியாக்கியிருக்கின்றன. அவனைச் சிறந்த விவேகியாக மாற்றியிருக்கின்றன. இயற்கையை, மனிதர்களைப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான் அவன்.

    மாதுரி போக இரண்டு இளைய சகோதரிகள்... சங்கவி, பார்கவி. அவர்களைக் கரையேற்ற நான் இருக்கிறேனப்பா என்று ஸ்திரமாய் நின்றவன் சந்திரன்.

    இன்றுவரை அவன் தன் செயலில் பின் வாங்கியதேயில்லை.

    மனுஷன்தானே... ஏதாவது அலுப்பு சலிப்பு. இருக்கத்தான் செய்யும்... அதைப் பொருட்படுத்தக் கூடாது.

    தன் அறைக்குள் சென்று காற்றாடியைச் சுற்ற விட்டு, கண்களை மூடிக் கொண்டான் சந்திரன்.

    கொஞ்ச நேரம் போகட்டும் என்றிருப்பார்கள் வீட்டில். பிறகு அவனாகவே வந்து சொல்வான். அது அவன் பாணி. அதனால் அவனை யாரும் நெருக்குவதில்லை.

    பெண் பார்க்க வந்தவர்களை ஊருக்கு வழியனுப்பி விட்டுத் திரும்பியிருக்கிறான்.

    அவர்கள் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஏதேனும் விபரம் சேகரித்திருக்க மாட்டானா?

    எந்த வழியிலாவது அவர்களின் முடிவைத் தெரிந்து கொண்டிருக்க மாட்டானா?

    சொல்லட்டும் என்று பார்த்தால் எவ்வளவு நேரம் சஸ்பென்சாக இருப்பது?

    அஞ்சு நிமிஷம் ஃபேனுக்கடில உட்கார்ந்தாச்சுல்ல... சொல்ல வேண்டிதானே...? வியர்வை இன்னுமா ஆறலை...

    அவன் அறையையே பார்த்தவண்ணம் எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்தார் பரமேஸ்வரன்.

    திண்ணை இருப்பு நேர் பார்வையில் அவன் ரூம் வரை நீண்டிருந்தது.

    ஒன்றும் புரிபடாமல், இவளுக்குப் மாப்பிள்ளை பார்க்க இனிமே என்னாலாகாது... என்று சொல்லிக் கொண்டே நுழைந்தானே...? அப்படியானால் என்ன அர்த்தம்?

    பெண்ணைப் பிடிக்கவில்லை என்று விட்டார்களா? அப்படி உடனே முறித்து யாரும் சொல்ல மாட்டார்களே? ஊருக்குப் போய் லெட்டர் எழுதறோம், அல்லது ஃபோன்ல முடிவைச் சொல்றோம் என்று நாசூக்காகத்தானே பகருவார்கள். அதை வைத்துத்தானே நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். பின் எதற்காக இப்படிச் சலித்துக் கொண்டான்...?

    ஒரு வேளை அவர்கள் அப்படிச் சொன்னதே இவனுக்குத் தீராத சலிப்பை ஏற்படுத்தி விட்டதோ? முடிவை எதிர்பார்த்து, கூடப் போக, இழுபறி ஆகிவிட்டதால் ஏற்பட்ட கசப்போ?

    யம்மா... கொஞ்சம் வர்றியா...? - குரல் கேட்டு ஆவலுடன் அவன் அறையை நோக்கிப் போனாள் பார்வதி. திண்ணையில் இருந்த மேனிக்கே கவனிக்கலானார் பரமேஸ்வரன்.

    மெல்லப் பூனையைப் போல் தலையை வெளியே நீட்டி, சந்திரன் சொல்லப் போவதை எதிர் நோக்கிக் காதைக் கூர்மையாக்கிக் கொண்டு நின்றாள் மாதுரி.

    அவங்களுக்கு ஓ.கே.ம்மா... என்றான் சந்திரன்.

    அப்டியா...? என்னடா சொல்றே? வீட்டுக்குள்ளே நுழையும்போது வேறே மாதிரி அலுத்துக்கிட்டே வந்தே? - என்று நொடித்தாள் பார்வதி. ஓரக்கண்ணால் பார்த்து மென்மையாய்ச் சிரித்தான் சந்திரன். அதே சமயம்...

    எனக்குப் பிடிக்கலேண்ணா... என்றவாறே ஹாலுக்குள் நுழைந்தாள் மாதுரி.

    *****

    2

    எல்லோருடைய பார்வையும் அவள் பக்கம் திரும்பின. மாடியில் இருந்து எட்டிப் பார்த்த சங்கவியும், பார்கவியும் ஹாலில் கலகம் விளையப் போவதைப் பயத்தோடு எதிர்நோக்கியது போலிருந்தது.

    என்ன பிடிக்கல்லே? அந்தப் பையனுக்கு என்ன குறைச்சல்...? உனக்கென்ன பைத்தியமா? சற்றுக் கோபத்துடனேயே கேட்டுக் கொண்டு அவளை நோக்கி நடந்து வந்தான் சந்திரன்.

    அவங்க பணக்காரக் குடும்பமாத் தெரியுது... எனக்கது வேண்டாம்... பயமாயிருக்கு...

    பரமேஸ்வரனும், சந்திரனும், பார்வதியும் ஒருவரையொருவர் புரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.

    பணக்காரக் குடும்பம்னா என்னம்மா மாதுரி? உனக்கு நல்லதுதானே... வசதியா இருக்கலாமில்ல...? பரமேஸ்வரன் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டார்.

    வசதியெல்லாம் ஒண்ணும் பெரிசா இருக்க வேண்டாம்... எனக்கு சாதாரணமா இருந்தாப் போதும்...

    சாதாரணம்னா எப்படிச் சொல்றே? சிவகாமி பெண்ணைக் கூர்ந்து பார்த்துக் கேட்டாள். செடு செடு என்று வந்தது அவளுக்கு.

    சாதாரணம்னா நம்மள மாதிரி... இல்லன்னா நமக்கும் கீழே... அவுங்க வீட்ல காரு, பங்களால்லாம் இருக்கு... சொல்றாங்கல்ல... ஏதோ பிஸினஸ் வேறே பண்றாங்க போலிருக்கு... பெரிய்ய எடமாத் தெரியுது... எனக்கு அங்க போக பயமா இருக்கு... நான் போயி அந்த வீட்ல அடிமை மாதிரி இருக்க முடியாது... எனக்குப் பிடிக்கல்லே...

    இந்த பார் மாதுரி, நீ புரியாமப் பேசறே... அவுங்க நம்மள மாதிரி மிடில் க்ளாஸ் ஃபேமிலி வேணும்னு தேர்ந்தெடுத்து வந்திருக்காங்க... அவுங்களும் மிடில் க்ளாசா இருந்தவங்கதான்... இப்போ அப்பர் மிடில் க்ளாஸ்... அவ்வளவுதான்...

    உழைப்புனால உயர்ந்த குடும்பம் அது... உன்னை நல்லா வச்சிப்பாங்க... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் கிடையாது... எல்லாம் நான் விசாரிச்சிட்டேன்...

    என்னவோ எனக்குத் தோணிடுச்சண்ணா... சொன்னாக் கேளேன்... பிடிக்கலைன்னா விடேன்... கட்டாயமா...? இதில்லேண்ணா இன்னொண்ணு பார்க்கக் கூடாதா? எனக்காக நீ செய்ய மாட்டியா?

    சந்திரன் அமைதியாகி விட்டான். மாதுரி சொன்னது போல் அந்த வீடு சற்று பணக்கார இடம்தான்.

    அவர்கள் தொழிலினால் முன்னேறி வருடங்கள் ஓடி விட்டன. இப்போது அவர்களின் ஸ்டேட்டஸ் நல்ல உயரத்தில்தான் இருக்கிறது.

    அந்தக் குடும்பத் தலைவரான மேகநாதன் இப்போது அந்த விதமான பணக்காரத் தோரணையில்தான் இருந்தார்.

    பரம்பரைப் பணக்காரர்களை விட, திடீர் பணக்காரர்கள் அல்லது காலப் போக்கில் ஆன பணக்காரர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கிறது.

    சந்திரனுக்கே பேசப் பயமாகத்தான் இருந்தது. நாங்களாத் தேடி வந்திருக்கோம்னா எவ்வளவு அதிர்ஷ்டம் உங்களுக்கு? என்பது போல் தென்படுகிறதே என்று ஆரம்பத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1