Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiyanathaal Ulakai Vellungal
Thiyanathaal Ulakai Vellungal
Thiyanathaal Ulakai Vellungal
Ebook113 pages39 minutes

Thiyanathaal Ulakai Vellungal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

This book introduces about meditation.
Languageதமிழ்
Release dateJul 29, 2016
ISBN6580110801384
Thiyanathaal Ulakai Vellungal

Read more from Udayadeepan

Related to Thiyanathaal Ulakai Vellungal

Related ebooks

Reviews for Thiyanathaal Ulakai Vellungal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiyanathaal Ulakai Vellungal - Udayadeepan

    http://www.pustaka.co.in

    தியானத்தால் உலகை வெல்லுங்கள்

    Thiyaanthaal Ulakai Vellungal

    Author:

    உதயதீபன்

    Udayadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/udayadaeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    என் தேவ குருவான திரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் நற்கருணையில், வழிகாட்டலில் தியானத்தால் உலகை வெல்லுங்கள் என்னும் அற்புதமான நூலை உங்கள் முன் அற்பணிக்கிறேன்.

    இந்நூலுக்கான அணிந்துரை இதைப் படிக்கும் என், தமிழ் மக்களின் மனதில் தோன்றும் கருத்துக்கள்தான். வார்த்தையற்ற, அவர்தம் வார்த்தைகளை அவர்தம் இதயங்களிலிருந்து எனக்கு அவை உணர்த்துதலாக வரும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு ஒர் அளவிருக்காது. ஒரு கலைஞனுக்கு அவைதான் இப்பூவுலக தேவர்களின் ஆசீர்வாதங்களாக அமையும்.

    எனக்கு எழுத்துலக வழிகாட்டியாக விளங்கும் விகடகவி ஆசிரியர் திரு. ஜெ. பால் அவர்களுக்கும், இந்நூலுக்கு பிழை திருத்தம் செய்த என் உயிர் நண்பர் திரு தமிழ்ப்பிரியன் அவர்களுக்கும் என் மனமார்ந்த அன்பினையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன்.

    அன்புள்ள ஆசிரியன்,

    உதயதீபன் எம்.ஏ.,

    தியானம் என்பதன் பரிணாமம்

    தியானம் இந்த நான்கு எழுத்து எல்லைக்குள் பல்வகை அற்புதங்கள் நிகழ்கின்றன. வாழ்க்கையின் வழிகள் இதுவரை மூடி இருந்தவை திறந்து கொள்கின்றன.

    பாதை, பயணம் மனிதனுக் கானாவை; ஒரு ஒப்புயர்வற்ற மற்றும் புனித இலக்கை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கின்றன. சாதாரண மனிதனின் எல்லா வகை துன்பங்களும் ஒரு சுழலில் அழிந்து பட்டு அவனுக்கு தெளி வென்னும் விளக்கு, ஒளி காட்ட மனிதனுக்கு ஒரு கம்பிரம் வருகிறது.

    வாழ்க்கை என்ற கூண்டுக்குள் அடைக்கப்பட்டு தேவைகள் பூர்த்தியாகாமல் தனது அரைகுறை அறிவில் தோல்விகள், குழப்பத்தில் விழுந்த மனிதனுக்குப் பின்னால் ஒரு தெளிவான சக்தி மனிதனுக்கு பின்புலமாக இருந்து செயல்படுகிறது.

    பேச்சில் தடுமாற்றம், சிந்தனையில் தடுமாற்றம், முடிவு எடுப்பதில் தடுமாற்றம் கண்ட மனிதன், மிகத் துள்ளியமாக முடிவெடுக்க உதவி நிற்பது இந்த தியான சக்தி.

    மனிதப் பாதையில் வரும் எதிர்பாராத பேரிழப்பை தாங்கிக் கொள்ள மனிதனுக்கு இந்தத்தியானம் அதன் அமைதி சக்தியோடு அவன் இதயத்தில் பின்னிப் பிணைந்து தன்னம்பிக்கை சக்தியாகிறது.

    நம்மைச் சார்ந்தவர்கள், நம்மை விட்டுப் பிரிந்து. விடுவரே ஆனால் அத்தகைய சமயங்களில் பதட்டம் கொள்ளாமல் படபடப்பு அடையாமல் அமைதியாக இருக்க நமக்கு தியானம் உதவி நிற்கிறது.

    மின்சக்தி ஒன்றுதான். ஆயினும் அதன் பயன் எண்ணிறந்தன. காற்றின்றி புழுங்கும்போதி மின் விசிறியைச் சுழலச் செய்வது மின்சக்தி. உணவு தயாரிக்க மிக்ஸி, கிரைண்டர் என்று ஒடவிட்டு நம் பசித் தேவையை தீர்ப்பது மின் சக்தி.

    தனிமனித தேவைகளுக்கு மேல் தொழிற்சாலை உற்பத்தி பல்வேறு தொழில்களில் அப்பொருள்களை தயாரிக்க மின் சக்தி பலவாறாக பயன்பட்டு நிற்கிறது.

    மின் சக்தி ஒன்றுதான். ஆனால் அதன் பலன்கள் மட்டும் எண்ணிறந்தனவோ, அப்படியே இந்ததியான சக்தி மனிதனோடு இணையும் போது மனிதனுக்கு அதனால் கிடைக்கும் பலன்களும் எண்ணிறந்தன.

    சக்தியின் உயிர்த்துளிகளை கண்ணில் தேக்கி ஒரு இலக்கில் சக்தியை பாய்ச்சினால் மேஜை மேல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிக் குவளை வெடித்து சிதறுகிறது.

    இது ஒரு குறிப்பிட்ட வழியில் சக்தியை சிதறாமல் ஒருமுகப் படுத்தி பாயச் செய்கையில் நமக்குக் கிடைக்கும் அற்புத வெற்றியாகிறது.

    கண்ணாடியால் ஆன குவளை எப்படி உடைத்து தூள் தூளாக்க நமது கண் வழிச் சென்ற சக்தி பயன் பட்டதோ அதே போன்று நம் தடைகளை உடைத்துத் தூள் தூளாக்கி நமக்கு முன்னேற பாதையை உண்டாக்குகின்றது இச்சக்தி.

    மனித வாழ்க்கையில் திரும்பிய இடங்களில் எல்லாம் தடைகள் பிரச்சனைகள் மற்றும் ஒன்றினை அடைய பல ஆயிரம் பேர்கள் போட்டியிடுகிற போது, அத்தனை ஆயிரம் பேர்களில் நமது பயணம் வெற்றிபெற நமக்கு தியான சக்தி துணை நிற்கிறது.

    தியானம் என்பது புதிதான ஒன்றல்ல. பலரிடத்தில் இச்சக்தி வேலை செய்கிறது. தியானம் என்பது எண்ணம் ஒன்றில் மனத்தைக் குவிப்பது. மனோசக்தியை அதன் மூலம் பண்மடங்கு விருத்தி

    செய்து மனோ சக்தியையே சக்திமிக்க அஸ்திர மாக்கித் தடைகளை உடைப்பது. எண்ணியதை அடைவது. வாழ்வில் வெற்றியை ருசிப்பது.

    நாம் ஒரு மலரை ஒரு ஈர்ப்புடன் உற்று கவனிக்கிறோம் கவனச் சிதறல் இல்லாமல் அப்போது சக்தி வேறு எங்கும் புறவழிகளில் நம்மிடம் செலவு ஆகுவதில்லை.

    நம் முழுசக்தியும் அம்மலரின் மீது நாம் திருப்புகிறோம் அதுதான் தியானம். மலரைத் தவிர்த்து வேறு எங்கும் நம் கவனம் பதிவது இல்லையே இதன் பெயர்தான் தியானம்.

    மாலை நேரம், மாடிக்கு வந்து நிற்கிறோம். சில்லென்று காற்று நம்மீது வீசுகிறது. தூரத்தில் பச்சைப்சேல் என்று உயர்ந்து கனத்து நம்முன் நிற்கும் மலையை நாம் நம்மை மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் நாம் தியானத்தில் இருக்கிறோம் என்பதே அதன் பொருள்.

    விடியற்காலை நேரம் பறவைச் சிறகடிப்ஷபயும் பனி படிந்த அதிகாலை நேரத்தில் அடுத்து நாம், திருப்பள்ளி யெழுச்சிப் பாடலையும் கவனித்து அதில் நம்மைக் கரைத்துக் கொள்கிறோம். இதற்குப் பெயரும் தியானம் தான்.

    நல்ல வாலிபம், பருவம், எங்கிருந்தோ இரு கண்களிலிருந்து அதன் பெண்மைப் பார்வைகளிலிருந்து விடுபட முடியாமல் நம்மைக் கட்டிப் போட்டது போல் அப்பார்வையில் சிக்குகிறோமே அதுவும் கூட தியானம்தான்.

    இப்படி நாம் ஆழ்ந்து கவனித்துப்படிப்பது, பேசுவது, ஆழமான ஈடுபாட்டுடன் அளவளாவுவது

    Enjoying the preview?
    Page 1 of 1