Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arutperunjothi Agavalil Ariyathakka 1000 - Thoguthi 4
Arutperunjothi Agavalil Ariyathakka 1000 - Thoguthi 4
Arutperunjothi Agavalil Ariyathakka 1000 - Thoguthi 4
Ebook442 pages2 hours

Arutperunjothi Agavalil Ariyathakka 1000 - Thoguthi 4

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Mr. C. Seganathan born in 1948 has written almost 30 books on various topics like Tamil Literature, Spiritual topics etc. He has got many many recognitions like “Arutkavi Arasu”, “Akaval Arasu”, “Varakavi” etc and many awards/prizes for his writings. His books like “Manamey Iraivan”, “Thirukkural Gnana Urai”, “Vinayakar Akaval” are very famous amongst his books. He is still writing many books like “Ovvai Kural”, “Gnana Kural” etc.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123002603
Arutperunjothi Agavalil Ariyathakka 1000 - Thoguthi 4

Read more from C. Seganathan

Related to Arutperunjothi Agavalil Ariyathakka 1000 - Thoguthi 4

Related ebooks

Reviews for Arutperunjothi Agavalil Ariyathakka 1000 - Thoguthi 4

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arutperunjothi Agavalil Ariyathakka 1000 - Thoguthi 4 - C. Seganathan

    http://www.pustaka.co.in

    அருட்பெருஞ்ஜோதி அகவலில் அறியத்தக்க 1000 - தொகுதி 4

    Arutperunjothi Agavalil Ariyathakka 1000 – Thoguthi 4

    Author:

    சி. செகாநாதன்

    C. Seganathan

    For more books

    www.pustaka.co.in/home/author/c-seganathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அருட்பெருஞ்சோதி

    அருள்

    வள்ளற் பெருமான்

    சிவம்

    மெய்ப்பொருள்

    சிற்சபை

    ஐம்பூத விரி

    ஒருமை

    சித்து

    தாய்

    அருட்குரு

    ஐந்தொழில் விரியில் ஆக்கல் விரி

    காத்தருள் விரி

    அடக்கியருள் விரி

    திரை மறைப்பு

    அருளல் விரி

    மருந்து

    மந்திரம்

    சத்து

    சித்து

    தனி இன்பம்

    அமுத வகை

    ஒற்றுமை-வேற்றுமை

    பல்சுவை

    ***

    என்னுரை

    அகவலில் அறியத்தக்க ஆயிரம் என்ற இந்த நூல் ஆனது அறியத்தக்க ஆயிரம் என்ற வரிசையில் வரும் நான்காவது நூல் ஆகும்.

    அகவல் என்பது அருட்பாவின் ஒரு பகுதியாகிய நெடும் பாட்டு. இப்பாட்டே இதுவரை புலவர்கள், ஞானிகள் பாடிய அகவலை விட நீண்ட நெடிய வரிகளாம். 1596 வரிகளைக் கொண்ட பாட்டு.

    1596 வரிகளைக் கொண்ட இப்பாட்டில் 1000 கேள்விகளை எழுப்பிப் பதில் எழுதுவது எவ்வளவு கடினம் என்பதை எழுத எழுத என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்நூல் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக தொகுக்கப்பெற்றதாகும்.

    இதனைத் தொகுக்கும் பொழுது மிக விழிப்பாக, அருள்வழி நடத்த ஒவ்வொன்றாக என்னுள் உணர்த்த உணர்த்த எழுந்ததை அப்பொழுதே எழுதிவிடுவேன். அது இரவு 2 மணி 3 மணி 4 மணியாக இருந்தாலும் எழுந்து நோட்டில் குறித்துவிட்டுத்தான் படுப்பேன்.

    இவ்வாறு ஒருநோட்டில் குறித்துக் கொண்டு வந்து, 1000 கேள்விகள் முடிந்தவுடன், மறுபடியும் அதனை ஊன்றிப் படித்து, ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் அவைகளைத் தொகுத்தேன். தலைப்புக்குள் கொண்டு வர முடியாத கேள்விகளைப் பல்சுவை எனத் தலைப்பிட்டு அதனுள் சேர்த்தேன்.

    இவ்வாறு செய்து வருகையில் கேட்ட கேள்வியைத் திரும்ப திரும்ப கேட்டு, அதே போல் பதில் எழுதியுள்ளமையை அறிந்தேன். அதனால் மறுபடியும் மறுபடியும் வந்த கேள்விகளை அடித்து, புதிதாக கேள்விகளைச் சேர்த்தேன்.

    அச்சகத்தாரின் திருத்தப் படிகளைத் திருத்தி கொண்டு வரும் பொழுதும் கேட்ட கேள்விகள் மறுபடியும் வந்துள்ளதை அறிந்தேன். இவ்வாறு போராடிப் போராடி முடிவில் உங்கள் கரங்களில் இந்த நூலைத் தவழ விட்டுள்ளேன்.

    இதனுள்ளும் மேற்படித் தவறுகள் இருப்பின் பொறுத்துக் கொள்ளுமாறும் ஒரு பதிலுக்குரிய அகவலடியை வைத்து, வேறு வேறு கோணங்களிலும் கேள்வி கேட்டுள்ளேன் என்பதையும் அன்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

    இந்த அருட்பெருஞ்சோதி அகவலுக்கு இனிய எளிய உரை என ஒரு நூல் வெளியிட்டுள்ளேன். அடுத்து அகவலில் அறியத்தக்க ஆயிரம் என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது. இனி அகவல் பட்டறை என்ற நூலும், அகவல் பேருரை என்ற நூலும் வெளிவர உள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதுவரை எழுதி வெளிவந்த நூல்களுள் இது பதினொன்றாவது நூல் ஆகும். இந்த நூலை ஆழப் படிக்கும் பொழுது, அகவலில் வரும் ஒவ்வொரு வரிக்கும், கண்ணிக்குள்ளும் இருக்கும் ஆழமான பொருள் வெளி வருவதைக் காணலாம். ஆகவே ஒருவகையில் இது அகவலுக்கு ஒரு உரைநூல் போன்றும் அமைந்திருக்கிறது.

    அருட்பெருஞ்சோதி அகவலை சன்மார்க்கத்தார்கள் எல்லா நிகழ்வுகளுக்கும் தொடக்கமாக அகவற் பாராயணம் என்று முழுவதும் பலரால் படித்து முடிக்கப்பட்ட பின்னர் நிகழ்வுகளைத் தொடங்குகிறார்கள். இவ்வாறு சன்மார்க்கர் ஒருவர் தன் வாழ்நாளில் 30, 40 ஆண்டுகள் கூட அகவலைப் படித்துப் படித்து வந்துள்ளார். ஆயினும், அவரால் அவ்வரிக்கோ, கண்ணிக்கோ பொருள் புரிந்து கொள்ள முடியவில்லை. முயலவில்லை.

    இந்த நூல் அக்குறையைத் தவிர்க்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் ஒரு கேள்விக்குரிய பதிலாக ஒரு கண்ணியின் விளக்கத்தை படிக்கும் பொழுது, அவருக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். அதனால் அகவல் முழுமைக்கும் நாம் பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் உண்டாகும் என்பது திண்ணம்.

    இந்நூல் வெளிவர மிகுதியும், ஆர்வமும் எல்லா வகையிலும் உதவி எனக்கு உறுதுணையாய் இருந்து ஆதரவு நல்கிய சொக்கம்பட்டி எனது அண்ணன் உ.சி.ராம. உடையப்பன், சிகப்பி ஆச்சி இவர்களின் திருக்குமாரன் உ. இராஜகோபால் குடும்பத்தாருக்கு முதற்கண் நன்றி உரித்தாகுக.

    இந்நூலின் கணிணிப் பிரதிகளைப் பிழைதிருத்தம் செய்ய எனது பக்க துணையாய் இருந்த எனது துணைவியார் செல்வ மீனாளுக்கும், குமாரன் இராமசிவத்திற்கும் நன்றி கூறுகிறேன்.

    இந்நூலை மிக அழகிய முறையில் ஒளி அச்சு செய்து, வடிவமைத்து மிக நேர்த்தியாக நூலாக்கித் தந்த சூர்யா பிரிண்ட் சொலூசன்ஸ் உரிமையாளர் திரு. C. முருகேசன் அவர்களுக்கும் இவ்வச்சக நண்பர்களுக்கும், தொழிலாள மேம்பாட்டாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.

    அன்புடன்

    சி. செகநாதன்

    ***

    அருட்பெருஞ்சோதி

    1. கே: அருட்பெருஞ்சோதி அகவலைத் தொடங்கும் பொழுதும் முடிக்கும் பொழுதும் அருட்பெருஞ்சோதி என நான்கு முறை கூறியுள்ளது ஏன்?

    ப: மகா மந்திரத்தில் அருட்பெருஞ்சோதி என மூன்று முறையும், தனிப் பெருங்கருணை என ஒரு முறையும் வந்துள்ளது. அகவலில் 4 முறையும் அருட்பெருஞ் சோதி என்றே கூறித் தொடங்குகிறார். ஏனெனில் அகவல் முழுவதும் தனிப் பெருங்கருணை எனக் குறிக்கும் பொருட்டே தனிப் பெருங்கருணை எனப் போடாது. அதுவும் (தனிப் பெருங் கருணை) அருட் பெருஞ் சோதிபதியே தான் என 4 முறை கூறியுள்ளார். முடிக்கும் பொழுதும் அந்தத் தனிப் பெருங்கருணை முழுக்க அகவலில் கூறிவிட்டதாகவும், அதுவும் அருட்பெருஞ்சோதியே என 4 முறையும் கூறி முடித்துள்ளார்.

    2 கே: அருட்விபருஞ் சோதி எது?

    ப: உடல் கரணமாகிய மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகியவற்றாலும் உடலில் உள்ள மற்றைத் தத்துவங்களும் அறிய முடியாதவாறு தாமே தாமாகிக் அவைகளை கடந்து நிற்பது. அது அனுபவத்தால் மட்டுமே அறிய முடியும் அனுபவமாக இருப்பது.

    நினைக்கின்ற உணர்வாகவும் அப்படிப்பட்ட உணர்வுகள் எல்லாவற்றையும் கடந்து அது அனுபவ அதீதமாகவும் இருப்பது.

    தனுகர ணாதிகள் தாம் கடந்தறியுமோர்

    அனுபவமாகிய அருட்பெருஞ் சோதி-118

    உணுமுணர் உணர்வாய் உணர்வெலாங் கடந்த

    அனுபவா தீத அருட்பெருஞ் சோதி,-120

    3. கே: அருட்லிபருஞ்சோதி தன் அடியார்களுக்கும் அன்பர்களுக்கும் தரும் ஆற்றல்கள் யாது?

    ப: குற்றத்தை எல்லாம் வேரற அறுத்து அவர்களின் தேகத்தைத் திட தேகமாக அதாவது அழிவுறாத தேகமாக ஆக்கி அத்திட தேகத்திற்குரிய போகத்தையும் தன் அடியவர்களுக்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தருவார்.

    செடியறுத் தேதிட தேகமும் போகமும்

    அடியருக்கேதரும் அருட்பெருஞ்சோதி-182

    துன்பங்களை எல்லாம் வேரறுத்து ஒருமையாம் சிவ துரிய இன்ப சுகத்தைத் தன் அன்பர்களுக்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தருவார்,

    துன்பறுத்தொருசிவ துரிய சுகந்தனை

    அன்பருக்கேதரும் அருட்பெருஞ்சோதி-184

    மேலும் இன்ப சித்திகளின் இயலையே, அதன் எண்ணற்ற இயல்களையும் அன்பர்களுக்கு ஆண்டவர் தருவார்

    இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம்

    அன்பருக்கே தரும் அருட்பெருஞ்சோதி-256.

    4. கே: அருட்வபருஞ்சோதி எப்படிவயல்லாம் இருக்கும்?

    ப: அது புதியதற்கெல்லாம் புதியதாகிய, புதுமையதாகவும், பழையனவற்றுக்கெல்லாம் பழையனதாகவும், இவற்றிக்கெல்லாம் பொதுவானதாகவும், சிறப்பானவற்றுக்கெல்லாம் சிறப்பானதாகவும், இவைகள் எல்லாவற்றுள்ளும் அது அதுவாகக் திகழ்ந்து கொண்டு இருப்பது அருட்பெருஞ்சோதி ஆகும்.

    பொதுவது சிறப்பது புதியது பழையதென்

    றதுவது வாய்த் திகழ் அருட்பெருஞ்சோதி-186.

    5. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவரை நாம் அடையவுள்ள ஆறு அதாவது வழிகள் ஆறு உள்ளன. அவைகள் யாவை?

    ப :

    பிறிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்

    அறிவுக் கறிவாம் அருட்பெருஞ்சோதி-114

    சாதியும் மதமும் சமயமும் காணா

    ஆதி அனாதியாம் அருட்பெருஞ்சோதி -116

    தனுகர ணாதிகள் தாம்கடந் தறியுமோர்

    அனுபவ மாகிய அருட்பெருஞ்சோதி -118

    உணுமுணர் உணர்வாய் உணர்வெலாங் கடந்த

    அனுபவாதீத அருட்பெருஞ் சோதி-120

    பொதுவுணர் உணரும் போதலால் பிரித்தே

    அதுயெனில் தோன்றாதருட்பெருஞ் சோதி-122

    உளவினில் அறிந்தால் ஒழியமற்றளக்கின்

    அளவினில் அளவாஅருட்பெருஞ் சோதி-124

    மேற்கண்ட ஆறு ஆறுகளே (வழிகளே) அருட்பெருஞ்சோதி ஆண்டவரை அடைய உள்ள வழி என வள்ளலாரே திட்டவட்டமாக அறிவிக்கின்றார் இதனையே ஆறாறு காட்டியதாகவும், கடத்தியதாகவும் பெருமான் கூறுவதற்கு பொருத்தமானதாகவும் இருக்கும்.

    6 கே: அருலேபருஞ்சோதி அகவலை ஒரு முறை படித்தால் அதில் எத்தனை முறை அருட் பெருஞ் சோதி என்ற சொல் வருகிறது?

    ப: அகவலை ஒரு முறை படித்தால் அதில் 454 முறை அருட்பெருஞ்சோதி என்ற சொல் வருகிறது. விபரம் :- முதல் 874 வரிகளில் பாதி 437 முதலும் கடையும் வருவது 8. கடைசியில் வருவது 9. ஆக 454 முறை வருகிறது.

    7. கே: தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வப் பதியாக விளங்கும் அருட்பெருஞ்சோதி நம்முள் எவ்விடத்தில் உற்று இருக்கிறது?

    ப: அது நம்முள் உள்ள ஆன்மாவுள் வெளிநடு என்ற பகுதியில் உற்று உள்ளது. (ஆன்மா இரண்டு பகுதியாக உள்ளது. அது வெளிநடு என்றும் உரு நடு என்றும் கூறப்படுவது இதனை அருட்பாவுள் வள்ளலாரே கூறியுள்ளார்)

    மெய்வைத்தழியா வெறுவெளி நடுவுறும்

    தெய்வப் பதியாம் சிவமே சிவமே-952

    8. கே: அருட்பெருஞ் சோதி ஆண்டவர் எப்படி இருப்பார்?

    ப: அவர் மெய் பொருளாக இருப்பார். மெய் பொருள் என்பது இயல், உண்மை, அறிவு, இன்பம் ஆகிய நான்கும் ஒன்று சேர்ந்து இருப்பது. இதனை

    "எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்

    இயல் உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்

    மெய்பொருளாம் சிவமொன்றே என்றறிந்தேன்"-5803

    என்று அருட்பாவுள் விளக்கியுள்ளார். இதனையே அகவலில்

    "எப்பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய்கண்டோர்

    அப்பொரு ளாகிய அருட்பெருஞ் சோதி -142

    என்பது காண்க

    9. கே: நமதுடம்பகத்தே அருவேபருஞ்சோதி ஆண்டவர் விளங்கி தோன்றும் இடங்கள் யாவை?

    ப: உள்ளம், கண், உயிர், தலை உச்சி ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நமதுடம்பில் விளங்கித் தோன்றுவார்.

    "உளத்தினுங் கண்ணினும் உயிரினும் எனது

    குளத்தினும் நிரம்பிய குரு சிவ பதியே - 1038

    10. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஓங்கித் தோன்றும் இடங்கள் யாவை?

    ப: பரம், ஞானம், சிதம்பரம் என்று கூறக்கூடிய மூன்றும் ஒன்றினைந்த அம்பரத்தே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒங்கி தோன்றுவார்.

    தம்பர ஞான சிதம்பரம் எனுமோர்

    அம்பரத் தோங்கிய அருட்பெருஞ்சோதி-98

    11. கே: அருட்பெருஞ்சோதி எப்படியாக உள்ளது?

    ப: சிகரம், வகரம், இதனுடன் சேர்ந்த உகரம், அகரம் ஆகிய சேர்ந்த சிவ ஒம் என்பதாக அருட்பெருஞ்சோதி உள்ளது.

    சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும்

    அகரமும் ஆகிய அருட்பெருஞ்சோதி-174

    12. கே: அருட்லிபருஞ்சோதி ஆண்டவர், பெருமானுக்கு தந்த இரகசியங்கள் எத்தனை? அவை யாவை? அவைகளை எப்படி தந்தார் ஆண்டவர்?

    ப: மூன்று பெரிய இரகசியங்கள் வள்ளலாருக்கு ஆண்டவர் தந்தார், அவற்றுள் பிரம இரகசியத்தைப் பேசி உபதேசித்தார் பரம இரகசியத்தைப் பகர்ந்து உபதேசித்தார் சிவ இரகசியங்கள் எல்லாம் தெரிவித்தார்

    பிரம இரகசியம் பேசியென்னுளத்தே

    தரமுற விளங்கும் சாந்த சற் குருவே-1048

    பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே

    வரமுற வளர்த்து வயங்குசற் குருவே-1050

    சிவ ரகசியமெல்லாம் தெரிவித் தெனக்கே

    நவநிலை காட்டிய ஞானசற் குருவே-1052

    13. கே: அருட்வபருஞ்சோதியாம் ஒருமையின் நுண்ணியத்தை வள்ளலார் எவ்வாறெல்லாம் காண்கிறார்?

    ப:

    அருவினுள் அருவாய் அருவே அருவாய்

    உருவினுள் விளங்கும் ஒரு பரம்பொருளே-906

    அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்

    பொதுவினுள் நடிக்கும் பூரணப்பொருளே-902

    இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய்

    உயலுற விளங்கும் ஒரு தனிப்பொருளே-904

    பொருளினுட்பொருளாய் பொருளது பொருளாய்

    ஒருமையின் விளங்கும் ஒரு தனிப்பொருளே-910

    14. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவர் குருவாகி வந்து வள்ளற் பெருமானுக்கு செய்தவை களை தனிப்பட்டியல் இடுக?

    ப: குருவானவர் ஒரு நல் மாணாக்கனுக்கு 14 நிலைகளில் தன் ஆற்றலை வெளிபடுத்த முடியும், வெளிபடுத்த வேண்டும் இதனை அருட்பெருஞ்சோதி குருவாகி வந்து வள்ளலாருக்கு கொடுத்தாக அகவல் கூறுகிறது. இதுவே அருட்குருவின் இலக்கணமும் ஆகும். இனி அந்த பதினான்கு நிலைகயைம் விரிவாகக் காண்போம்.

    1. அருளியது - பரம், அபரம் இவை தான் எனத் திர முற அருளியது

    2.தெரித்தது - மதிநிலை, இரவியின் வளர்நிலை, அனலின்திதிநிலை கணநிலை, அவற்றின் கருநிலை அனைத்தும் மற்றும், பதிநிலை, பசுநிலை, பாசநிலை எல்லாமும், மற்றும் சத்தியல் அனைத்தும், சித்தியல் முழுவதும், தெரிவித்தது அல்ல. தெரித்தது, தெரித்தது என்றால் தெளிவாகக் காட்டியது என்பது ஆகும்.

    3. பேசியது - பிரம ரகசியம்

    4. பகர்ந்தது - பரம ரகசியம்

    5. தெரிவித்தது - சிவரகசியம்

    6. காட்டியது - நவநிலை

    7. அறிவித்தது - அறிபவை எல்லாம்

    8. கேட்பித்தது - கேட்பவை எல்லாம்

    9. காண்பித்தது - காண்பவை எல்லாம்

    10. செய்வித்தது - செய்பவை எல்லாம்

    11. உண்ணுவித்தது - உண்பவை எல்லாம்

    12. ஈந்தது - சாகாக் கல்வியின் தரம்.ஏகாக கரப் பொருள்

    13. அளித்தது - சத்தியமாம் சிவ சித்திகள் அனைத்தையும்

    14. வைத்தது - எல்லா நிலைகளின் ஏற்றிச் சித்தெல்லாம் என வைத்தது - 1039 - 1070.

    இவ்வாறு பதினான்கு நிலைகளில் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் குருவாகி வந்து வள்ளலாருக்குச் செய்து கொடுத்தார்,

    15. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவருள் விளங்குகின்ற பதங்கள் எத்தனை? அவைகள் யாவை?

    ப: அருட்பெருஞ்சோதி ஆண்டவருள் விளங்குகின்ற பதங்களாக 20 பதங்கள் அகவலில் கூறப்பெற்றுள்ளன அவைகள் 1. சத்திய பதம் 2. சத்துவபதம் 3. நித்தியபதம் 4. நிர்குணபதம் 5. தத்துவபதம் 6. தற்பரபதம். 7. சித்துறுபதம் 8. சிற்ககபதம் 9. தம்பரபதம் 10. தனிச்சுகபதம் 11. அம்பரபதம் 12. அருட்பரம்பதம் 13. தந்திர பதம் 14. சந்திர பதம் 15. மந்திரபதம் 16. மந்தணபதம் 17. நவந்தருபதம் 18. நடந்தருபதம் 19. சிவந்தருபதம், 20. சிவசிவ பதம். இவ்வாறு உள்ள 20 பதங்களில் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் விளங்குகின்றார். 931 to 940.

    16. கே: அருலேபருஞ்சோதி ஆண்டவர் நம்முள் மேவி இருக்கும் இடம் யாது?

    ப: சிவமாகிய அருட்பெருஞ்சோதி ஆண்டவர் மேவி இருக்கும் இடம், நம்முள் உள்இயங்கி இயங்கா உயிர்ப்பாம் ஒருமைக் கதியே ஆகும். இதுவே ஒரு நிலை. இதுவே உயர் நிலை. இதுவே திரு நிலை ஆகும்.

    ஒருநிலையிதுவே உயர்நிலை எனமொரு

    திருநிலை மேவிய சிவமே சிவமே -950

    17. கே: அருலேபருஞ்சோதி ஆண்டவரின் வநறி, நிலை, பதி ஆகியவை யாது?

    ப: 1, அவர் அருட்சிவ நெறியை உடையவர், 2, அவர் அருட்பெருநிலையில் வாழ்பவர் 3, அவர் அருட்பதத்திற்கே பதியாக உள்ளவர். அருள், சிவம் என்ற இந்த இரு பெரிய நிலைகளுக்கு மேலான பதித் தன்மையை உடையவர், இது அகவலில் வரும் முதற்கண்ணி,

    அருட்சிவநெறிசார் அருட்பெருநிலைவாழ்

    அருட்சிவபதியாம் அருட்பெருஞ்சோதி-2

    18. கே: அருட்பெருஞ்சோதி அரசோச்சும் இடம் எங்குள்ளது?

    ப: சொல்லாலும் மனத்தாலும் அறிய முடியாத அவற்றையெல்லாம் கடந்த ஒரு பெரு வெளியின் மேல் ஆட்சி செய்து ஓங்கி நிற்கின்றார் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

    உரைமனங் கடந்த ஒருபெரு வெளிமேல்

    அரைசு செய் தோங்கும் அருட்பெருஞ்சோதி-12

    19. கே: அகவலின் முதற் பதின்மூன்று கண்ணிகளில் அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் உள்ள தாக என்று கூறும் கண்ணிகள் எத்தனை?

    ப: முதல் ஐந்து கண்ணிகளில் அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் உள்ளவைகள் கூறப்பட்டுள்ளன.

    20. கே: அகவலின் முதற் பதின்மூன்று கண்ணிகளில் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தனக்கு என்னென்ன ஆற்றல்களை தந்தார் என்று கூறுகிறார்?

    ப: 1. ஊக்கம் 2. உணர்ச்சி 3. ஒளியைத்தரும் உடம்பு 4. எல்லையற்ற பிறப்பு என்னும் கடிய கடலைக் கடத்தி அல்லல் நீங்கல் 5. ஏறாநிலை மேல் ஏற்றி ஆறாறு காட்டியது. 6. ஐயம் திரிபு, இவைகளை என்னுள் அறுத்து ஐயமாம் சந்தேகமும் நீங்கப் பெற்றது. 7. ஒதாது உணர்தலுக்கு வேண்டிய ஒளி அளிக்கப் பெற்று. அதனையே ஆதாரம் ஆக்கி கொண்டது. 8. பொறாமை முதலாக உள்ள காமம், கோபம், உலோபம், மோகம், மதம், அகங்காரம் ஆகிய 6ஐயும் தவிர்த்தது. என்னும் எட்டுப் பெரிய ஆற்றல்களை ஆண்டவர் வள்ளலாருக்குத் தந்துள்ளார்.

    ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்

    ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்சோதி -114

    எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தியென்

    அல்லலை நீக்கிய அருட்பெருஞ்சோதி

    ஏறா நிலைமிசை ஏற்றிஎன் தனக்கே

    ஆறாறு காட்டிய அருட்பெருஞ்சோதி-18

    ஐயமும் திரிபும் அறுத்தெனதுடம்பினுள்

    ஐயமும் நீக்கிய அருட்பெருஞ் சோதி-20

    ஒதா துணர்ந்திட ஒளியளித் தெனக்கே

    ஆதார மாகிய அருட் பெருஞ்சோதி-24

    ஒளவியம் ஆதியோர் ஆறுந் தவிர்த்தபேர்

    அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ்சோதி-26

    21. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நின்று ஒங்கும் இடம் எது?

    ப: ஆகமத்தின் முடி மீதும், ஆரணமாம் வேதத்தின் முடி மீதும், இவைகளாக ஆகியும் நின்று இவற்றிற்கு மேலாகவும் நின்று ஒங்குகின்றார் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

    (ஆகமம் என்பது அனைத்துயிர்களும் உயிர்க்கும் வேறுபட்ட உயிர்ப்பின் அளவு. வேதம் என்பது எந்த ஒரு உயிரையும் கற்பத்துள் உருஆக்கித்தந்து வளர்க்கின்ற உள் உயிர்ப்பு)

    ஆகம முடிமேல் ஆரண முடி மேல்

    ஆகநின் றோங்கிய அருட்பெருஞ்சோதி-6

    மேலும் குறைவே இன்றி இகம் பரம் ஆகிய இரண்டிலும் நின்றும் அவைகளுக்கு மேற்பட்ட பொருளாகவும் இவை இரண்டினின்றும் நீங்கல் இன்றி ஓங்குகின்றார்.

    ஈனமின்றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்

    ஆனலின்றோங்கிய அருட்பெருஞ்சோதி-10

    ஆனல் இன்றி-நீங்குதல் இன்றி,

    22. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவர் லபாருந்தி இருக்கும் இடம் யாது?

    ப: இகமாம் இவ்வுலகமும், இவ்வுலக பொருள்கள் யாவும் நிலை பேறு பெற்று என்றும் நிலைத்து நிற்பதற்குரிய பொருளாகவும், பரமும், அதிலுள்ள பொருள்கள் யாவும் நிலைபேறு பெற்று நிலைத்து நிற்பதற்குரிய பொருளாகவும், இவற்றின் அக நிலைப் பொருளாகவும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் பொருந்தி நிற்கின்றார்.

    இகநிலைப் பொருளாய் பரநிலைப் பொருளாய்

    அகமறப் பொருந்திய அருட்பெருஞ்சோதி-8

    23. கே: அருட்விபருஞ்சோதி ஆண்டவர் எப்படி விளங்கித் தோன்றுகிறார்?

    ப: அவர் ஒன்றாகவும். அதிலே இரண்டாகவும், ஒன்றே இரண்டாகவும், இவை மூன்றும் இல்லாததாகவும் விளங்கத் தோன்றுவது ஆகும். (உதாரணம் - ஒன்று என்பது சூரிய கலை, அந்த சூரிய ஒளியை பெற்று ஒளி தருவது சந்திரன் இது சந்திர கலை. ஒன்றே இரண்டு என்பது ஒருமைக்கதியில் இருந்தே இவை இரண்டும் தோன்றின. அன்றென என்பது. (இவைகள் மூன்றும் இல்லாத அதற்கும் மேம்பட்டது என்பது)

    ஒன்றென இரண்டென ஒன்றிரண்டெனவிவை

    அன்றென விளங்கிய அருட்பெருஞ்சோதி-22

    24. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எதிற் பதிந்து வளர்ந்து கொண்டிருக்கிறார்?

    ப: திருவாகிய குறைவு அற்று நிலைத்துள்ள தனி வெளி, சிவவெளி, அருள் வெளி ஆகிய இம்மூன்று வெளிகளிலும் பதிந்து நின்று வளர்ந்து கொண்டுள்ளார் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்

    திருநிலைத் தனிவெளி, சிலவெளி எனுமோர்

    அருள்வெளிப்பதிவளர் அருட்பெருஞ்சோதி - 28

    25. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவர் பரநிலைகளாக ஏற்றுகொண்ட நிலைகள் எத்தனை?

    ப பரநிலையில் 20 நிலைகளை ஏற்றுள்ளார் ஆண்டவர் அவைகள் - 1. பரத்தின் பரம் 2. பரத்தின் மேற்பரம் 3. பரத்தின் உட்பரம் 4. பரம் பரம்பரம் 5. பரம் பெறும் பரம் 6. பரம் தரும் பரம் 7. பரபதபரம் 8. பரசிதம்பரம் 9. பரம் புகழ்பரம் 10. பரம் பகர் பரம் 11. பரஞ்சுக பரம் 12. பரம் சிவம்பரம் 13. பரங் கொள் சிற்பரம். 14. பரஞ்செய் தற்பரம் 15. தரங்கொள் பொற்பரம் 16. தனிப் பெரும் பரம் 15. தரங்கொள் பொற்பரம் 16. தனி பெரும்பரம் 17. வரம்பராபரம் 18. வணம்பராபரம் 19. பரம்பராபரம் 20. பதம்பரா பரம்.

    இது 921 முதல் 930 முடிய உள்ள வரிகள்

    26. கே: அருட்விபருஞ்சோதிபதி நின்று திருநடம் புரியும் இடம் எது?

    ப: அவர் நின்று திரு நடம் புரியும் இடம் சிற்சபையே ஆகும் அதுவும் சிற்சபையின் நடு இடம் ஆகும்.

    சிற்சபை நடுவே திருநடம் புரியும்

    அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே - 1336

    27. கே: எழுவகை பிறப்பில் உதிக்கும் உயிர்களிடத்தில் அருட்பெருஞ்சோதி பதியின் திறம் எப்படிக் காரியப் பாடாம் வகையாகி இருக்கிறது?

    ப: தமிழில் உள்ள 'ஒ' என்னும் ஒரு எழுத்து எத்தனை விதமாக எத்தனை வித அர்த்தமாக விளங்குகின்றது என்பதனைப் பார்ப்போம், இது 1. அதிசயம் 2. ஆச்சரியம் 3. அழைப்பு 4. அசைநிலை என உணர்ச்சிகளை வெளிகாட்டுவதோடு, அதுவே சாத்தனோ என வினாவாகவும் ஆணோ, பெண்ணோ, என ஐய வினாவாகவும் அவனோ எடுத்தான் என பிரிநிலையாகவும், நானோ செய்தேன் என எதிர்மறையாகவும், நானோ தாழ்ந்தேன் என இழிவு சிறப்பாகவும், இன்னும் ஒழிபிசையாகவும், அதிசய இரக்கச் சொல்லாகவும் வரும் ஒரு உயிர் எழுத்தாகும்.

    அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எழுவகை பிறப்பாம் உயிர்களிடத்தில் மேலே காட்டிய 'ஒ'வுக்குரிய அனைத்து நிலைகளாம் அதிசயம், ஆச்சரியம், அழைப்பு, இரக்கம், அசைநிலை, எதிர்மறை, பிரிநிலை, தெரிநிலை, வினா ஒழிபிசை, இழிவு, சிறப்பு என்ற இந்தப் பதினோரு நிலைகளையும் கடந்து, அந்தந்த உயிர்களை உடம்போடு தோற்றப்படுத்தியும். திறமாக ஆக்கியும் அளித்து கொண்டுள்ள திறம் ஆண்டவரிடத்தில் உள்ளன.இதனை

    ஓவுறா எழுவகை உயிர்முதல் அனைத்தும்

    ஆவகை வகுத்த அருட்பெருஞ்சோதி-720

    என்று கூறுகிறார்.

    28. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நம்முள் எதுவாக உள்ளார்?

    ப :

    அவர் நம்முள் அறிவுக் கறிவாகவே உள்ளார்

    பிறிவுற்றறியாப் பெரும்பொரு ளாயென்

    அறிவுக் கறிவாம் அருட்பெருஞ்சோதி-14.

    29. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நமதுடம்பில் எவற்றில் எள்ளுள் எண்ணெயைப் போல் கலந்து விரவி விளையாடுவார்?

    ப: உள்ளம், உணர்ச்சி, உயிர் இம்முன்றிலும் ஆண்டவர் எள்ளுள் எண்ணெய் எங்கும் கலந்திருப்பது போல கலந்து விரவித் தோன்றுவார்.

    உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்து கொண்

    டெள்ளுறு நெய்யில் உள்ளுறு நட்பே -184

    30. கே: நமக்குள் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளின் ஆற்றலை எப்பொழுது காட்டுவார்? அருளை எப்பொழுது காட்டுவார்?

    ப: பிறவியாம் தோற்றத்தைக் தருகின்ற மாமாயையின் தொடர்பை முற்றிலும் அறுத்த பின்னரே அருளின் ஆற்றலை நமக்குள் அருட்பெருஞ்சோதி காட்டுவார்.

    தோற்றமாமாயைத் தொடர்பறுத்தருளின்

    ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்சோதி-834

    சுத்தமா மாயையின் தொடர்பை முற்றிலும் அறுத்த பின்னரே அருளை அப்படியே நமக்குள் ஆண்டவர் காட்டுவார்.

    சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை

    அத்தகை காட்டும் அருட்பெருஞ்சோதி-834

    31. கே: அருட்பெருஞ்சோதி பதி நமக்கு அனுக்கிரகம் புரிவது எப்போது வாய்க்கும்?

    ப: ஆணவம் முதலாகக் கூறப்பெறும் கன்மம், மாயை ஆகிய ஜம்மலங்கள் எத்தனையும் இல்லாதவாறு தவிர்த்த பின்னரே ஆண்டவர் நமக்கு அனுக்கிரகம் புரிதல் கிடைக்கும்.

    எனைத்தாணவமுதல் எல்லாந் தவிர்த்தே

    அனுக்கிரகம்புரி அருட்பெருஞ்சோதி-836

    32. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எப்பொருளாக உள்ளார் என வமய் கண்டோர் கூறுகின்றனர்?

    ப: அவர் மெய்ப் பொருளாக உள்ளார் என மெய் கண்டோர் கூறுகின்றனர். மெய்பொருள் என்பது இயல், உண்மை, அறிவு இன்பம் என்ற நான்கும் ஒன்று சேர்ந்தது என அருட்பா கூறுகிறது.

    எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோர்

    அப்பொருளாகிய அருட்பெருஞ்சோதி- 142

    33. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவருக்கு ஆகாத பேர்கள் நம்முள் யார் யார்?

    ப: 1. சவலை பாய்ந்த நெஞ்சகம், 2. அதன் இயக்கத்தால் வரும் தளர்வாம் முதுமை, 3. அந்நெஞ்சகத்தால் உண்டாகும் அச்சம் 4. கவலை 5. இருகலை உயிர்ப்பாம் சூரிய சந்திர, சுழுமுனைக் கலைகளின் அளவின் பிணக்கம், 6. அதனால் ஏற்படும் பேதங்கள் 7. பேய் உலகவர்கள் கூறும் உடலின் ஆயுட் கணக்கு ஆகிய ஏழும் அருட்பெருஞ்சோதி ஆண்டவருக்கு நம்முள் ஆகாத பேர்கள் ஆகும். இவர்கள் நீங்கிய பிறகே அவர் நம்முள் நட்பாகி கலப்பார்.

    சவலைநெஞ்சகத்தின் தளர்ச்சியுமச்சமும்

    கவலையும் தீர்த்தெனைக் கலந்தநன் நடப்பே-1192

    பிணக்கும் பேதமும் பேயுலகோர்புகல்

    கணக்கும் தீர்த்தெனைக் கலந்தநன் நடப்பே-1190

    34. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒருவரே கடவுள். அவர் எவ்வாறு உள்ளார்?

    ப: அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒன்றதில் ஒன்றாகவும் அதில் இரண்டாகவும், ஒன்றினில் இரண்டாகவும், ஒன்றினில் ஒன்றாகவும் உள்ளார் ஒன்று எனும் ஒன்றாம் கடவுள்.

    அவர் ஒன்று அல்ல. இரண்டு அல்ல. ஒன்றினில் இரண்டு அல்ல, ஒன்றினுள் ஒன்றல்ல. ஒன்று என்னும் ஒன்றாம் கடவுள்.

    அவர் ஒன்றினில் ஒன்றாக உளவாகவும், ஒன்றினுள் ஒன்றாக இலவாகவும், ஒன்று உற்று விளங்குகின்ற ஒன்று எனும் ஒன்றாக விளங்குகிறார்.

    ஒன்றதிரண்டது ஒன்றினி ரண்டது

    ஒன்றினுளொன்றது ஒன்றெனுமொன்றே-876

    ஒன்றலஇரண்டல ஒன்றினி ரண்டல

    ஒன்றினுளொன்றல ஒன்றெனுமொன்றே -878

    ஒன்றினி ளொன்றுளஒன்றினிலொன்றில

    ஒன்றற ஒன்றிய ஒன்றெனுமொன்றே - 880

    35. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எது எதுவாகத் திகழ்கிறார்?

    ப: அவர் பொதுவாகவும், சிறப்பாகவும், புதியதாகவும், பழையதாகவும், இவற்றில் அது அதுவாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்,

    பொதுவது சிறப்பது புதியது பழையதென்

    றதுவது வாய்த்திகழ் அருட்பெருஞ்சோதி-186

    36. கே: அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எது எதுவாகி இருக்கிறார்?

    ப: சிகரம், வகரம் இவற்றோடு சேர்ந்த தனித்த உகரம், அகரம் ஆகிய சிவ ஒம் என்றும்,

    உப ரச வேதியாகவும் அதில் உபயமாகவும், பரமாகவும், அபரமாகவும் ஆகி உள்ளவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

    சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும்

    அகரமுமாகிய அருட்பெருஞ் சோதி- 176

    உபரச வேதியின் உபயமும்

    Enjoying the preview?
    Page 1 of 1