Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arul, Porul, Inbam…
Arul, Porul, Inbam…
Arul, Porul, Inbam…
Ebook198 pages2 hours

Arul, Porul, Inbam…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நூலில் உள்ள கட்டுரைகளை நாளிதழின் ஆன்மீக மலரில் வாராவாரம் எழுதும் ஒரு வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. இதற்கு அதன் பொறுப்பாசிரியராக இருக்கும் நண்பர் பிரபு சங்கர் அவர்களே காரணம்.

ஒரு எழுத்தாளராக இன்று நான் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இதழ்களில் எழுதி வருகிறேன். அவைகளில் மர்மத் தொடர், குடும்பத் தொடர், ஆன்மீகத் தொடர் என்று பல விதங்கள் உண்டு. ஆனாலும் எனக்கு சமூகத் தாக்கத்தோடு சிந்தித்து எழுதுவதே மிகப்பிடித்த ஒன்றாகும். அதற்கு எனக்கு இந்த "அருள் பொருள் இன்பம்" தொடர் மிகுந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

ஒவ்வொரு நாளும் நாடு முழுக்க எவ்வளவோ சம்பவங்கள். அதில் நல்லதும் கெட்டதுமாய் பல விதமான தாக்கங்கள். இந்தத் தொடரும் அவைகளை ஒட்டியே இருக்க வேண்டும் என்பதே திரு. பிரபு சங்கர் எனக்குச் சொன்னதாகும்.

குறிப்பாக, நான் எந்த சமூக விஷயத்தைப் பற்றி சிந்தித்தாலும் சரி, எப்படிப்பட்ட கருத்தை அதில் கூறியிருந்தாலும் சரி, அது ஆன்மிகமாக வந்து முடிய வேண்டும் என்று கூறிவிட்டார். அதாவது ஆன்மீக மலரில் இக்கட்டுரைகள் வருவதால், சமுதாயச் சிந்தனைகளை ஆன்மீகத்தோடு பொருத்தி முடிப்பது ஒரு புது வடிவாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்பது அவர் நம்பிக்கை.

ஆனால், பிரச்சனைக்கேற்ற ஆன்மீக விஷயத்தைப் பிடிக்க நான் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டி வந்தது. அதே வேளையில் அந்த உழைப்பு வீண் போகவில்லை. இத்தொடர் வெளி வந்த சனிக்கிழமைகளில் எனக்கு தமிழகம் முழுவதிலுமிருந்தும் தொலைபேசி அழைப்புகள் வந்து, நான் மிகவே ஊக்கப்படுத்தப்பட்டேன். என் உணர்வுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னுடைய சமூக கோபத்தையும் பல நலன் சார்ந்த விருப்பங்களையும் வெளிப்படுத்த இக்கட்டுரைகள் பெரும் வாய்ப்பளித்தன. ஒரு எழுத்தாளருக்கு சமூக பார்வையும் அதன் மேலான அக்கறையும்தான் மிக முக்கியம். இது இல்லாமல் கற்பனையில் எத்தனை கதைகள் செய்தாலும் அவர்களை காலம் மறந்து விடும். எனவே சமூக பிரக்ஞையோடு உண்மை உணர்வோடு ஒவ்வொரு எழுத்தாளரும் திகழ வேண்டும் என்பது என் பணிவான கருத்து. இந்தக் கருத்தோடு இக்கட்டுரைகளை நான் எழுதிய ஒரு எழுத்தாளனுக்கும் அதுதானே வேண்டும்! இத்தொடர் முடிந்த நிலையில் புத்தகமாக தயாராகும் போது இதற்கான மதிப்புரைகளை சமூக நலத்தில் மிகுந்த அக்கரை கொண்ட சிலரிடம் பெற விரும்பினேன்.

அந்த வகையில் மதுரையில் கம்பன் கழகத்தை நிறுவி ஓசைப்படாமல் தமிழுக்கும் ஆன்மீகத்துக்கும் பெரும் சேவை செய்து வரும் திரு. சங்கர. சீத்தாராமன் என் மனக்கண்களில் முந்தி வந்தார். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாதபடி இவர் செய்த பல கொடைகளை நானறிவேன். கொடையாளியாக மட்டுமன்றி, தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவராகவும், அதில் மிகுந்த ஆழங்கால்பட்டவராக அவர் இருப்பதும் நான் நன்கு உணர்ந்த விஷயங்கள். எனவே, இந்த நூலை மதிப்பிட மிக ஏற்றவராக இவரைக் கருதினேன்.

அடுத்து என் மனதில் பளிச்சென தோன்றியவர் திரு. எஸ். வி. சேகர் அவர்கள். திரு சேகர் அவர்களோடு கிட்டத்தட்ட ஒரு 25 ஆண்டு கால பழக்கம் எனக்கு. அவரை நகைச்சுவை நடிகராகத் தான் பலருக்கும் தெரியும். ஆனால் இரத்ததானம் செய்வதிலும் அனாதை பிணங்களை உரிய முறையில் அடக்கம் செய்வதிலும் ஓசைப்படாமல் தான தர்மங்கள் செய்வதிலும் அவர் எந்த அளவு ஈடுபாடுடையவர் என்று நெருங்கிப் பழகியவர்களுக்கே தெரியும்.

தமிழக மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து அவர் சிறந்த தொண்டாற்றியுள்ளார். ஆழமான பக்தி. சுலபமாக அணுகமுடிந்த தன்மை. எப்போதும் மகிழ்ச்சியான மன நிலை. பிறரை புண்படுத்தாத நாகரீக நகைச்சுவை உணர்வு என்று சேகரிடம் பளிச்சிடும் விஷயங்கள் பல. மனதில் பட்டதை பளிச்சென்று தெரிந்தவர் முதல் தெரியாதவர் வரை அனைவரிடமும் பேசிவிடும் இவர் தன்மை பலமா பலவீனமா என்று நான் சிந்திப்பதுண்டு. அதேபோல சேகருக்கு இனிதான் பல பெரிய பதவிகளும், கெளரவங்களும் காத்திருப்பதாகவும் நான் கணித்ததுண்டு. அவருக்கும், திரு. சங்கர. சீத்தாராமன் அவர்களுக்கும் நண்பர் பிரபு சங்கருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் என்றும் உரியது.

நன்றி!
அன்புடன்
இந்திரா சௌந்தர்ராஜன்

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580100704575
Arul, Porul, Inbam…

Read more from Indira Soundarajan

Related to Arul, Porul, Inbam…

Related ebooks

Reviews for Arul, Porul, Inbam…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arul, Porul, Inbam… - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    அருள், பொருள், இன்பம்…

    Arul, Porul, Inbam…

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. அருள் பொருள் இன்பம்…

    2 அருள் பொருள் இன்பம்…

    3. அருள் பொருள் இன்பம்…

    4. திருவடி மகிமை...

    5. அள்ளிக் கொடுப்பவர்கள் கிள்ளிக் கொடுக்க ஏன் மறுக்கிறார்கள்?

    6. அறம் அருளானதேன்?

    7. ஒளி தருமா மின்சாரம்?

    8. மனதில் ஈரம் வேண்டும்!

    9. ரிமோட் என்ற மாயா ஜாலம்

    10. சந்தோஷத்தில் குளம் வெட்டியவர்கள்!

    11 இது ஒரு கார்காலம்

    12. ரத்த பூமியின் கறை எப்போது நீங்கும்?

    13. கொசு வளர் கலையைக் கைவிடுவோம்

    14. சாமியேய்.... சரணம் ஐயப்பா...

    15. பரிகாரங்கள் பலன் தரத்தான் செய்கின்றன!

    16. நாளைய மன்னவர்களே...!

    17. புண்ணிய பூமி பண்ணிய பாவம்தான் என்ன?

    18. இறுதி ஊர்வலத்தில் ஏன் இந்த அநாகரிகம்?

    19. பக்திக்குப் பொருள் சொன்னவர்கள்

    20. கிரிக்கெட் என்ற உச்சபட்ச சுவாரஸ்யம்

    21. பேச்சு பேச்சா இருக்கணும்!

    22. வானம் ஆனந்தக் கண்ணீர் விடட்டும்

    23. செல்போன் என்ற அத்தியாவசிய அற்பம்!

    24. சரணாகதியில் ஒரு நாள்!

    25. அமிலக் கலாசாரம் எப்போது அழியும்?

    26. மனிதம் எங்கே போயிற்று?

    27. மின்சாரம், அதுவே வாழ்வின் சாரம்!

    28. அனுமன் வாலுக்குத் தீயிட்ட கதைதான்!

    29. தமிழ் இனி...

    என்னுரை

    இந்த நூலில் உள்ள கட்டுரைகளை நாளிதழின் ஆன்மீக மலரில் வாராவாரம் எழுதும் ஒரு வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. இதற்கு அதன் பொறுப்பாசிரியராக இருக்கும் நண்பர் பிரபு சங்கர் அவர்களே காரணம்.

    ஒரு எழுத்தாளராக இன்று நான் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இதழ்களில் எழுதி வருகிறேன். அவைகளில் மர்மத் தொடர், குடும்பத் தொடர், ஆன்மீகத் தொடர் என்று பல விதங்கள் உண்டு. ஆனாலும் எனக்கு சமூகத் தாக்கத்தோடு சிந்தித்து எழுதுவதே மிகப்பிடித்த ஒன்றாகும். அதற்கு எனக்கு இந்த அருள் பொருள் இன்பம் தொடர் மிகுந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

    ஒவ்வொரு நாளும் நாடு முழுக்க எவ்வளவோ சம்பவங்கள். அதில் நல்லதும் கெட்டதுமாய் பல விதமான தாக்கங்கள். இந்தத் தொடரும் அவைகளை ஒட்டியே இருக்க வேண்டும் என்பதே திரு. பிரபு சங்கர் எனக்குச் சொன்னதாகும்.

    குறிப்பாக, நான் எந்த சமூக விஷயத்தைப் பற்றி சிந்தித்தாலும் சரி, எப்படிப்பட்ட கருத்தை அதில் கூறியிருந்தாலும் சரி, அது ஆன்மிகமாக வந்து முடிய வேண்டும் என்று கூறிவிட்டார். அதாவது ஆன்மீக மலரில் இக்கட்டுரைகள் வருவதால், சமுதாயச் சிந்தனைகளை ஆன்மீகத்தோடு பொருத்தி முடிப்பது ஒரு புது வடிவாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்பது அவர் நம்பிக்கை.

    ஆனால், பிரச்சனைக்கேற்ற ஆன்மீக விஷயத்தைப் பிடிக்க நான் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டி வந்தது. அதே வேளையில் அந்த உழைப்பு வீண் போகவில்லை. இத்தொடர் வெளி வந்த சனிக்கிழமைகளில் எனக்கு தமிழகம் முழுவதிலுமிருந்தும் தொலைபேசி அழைப்புகள் வந்து, நான் மிகவே ஊக்கப்படுத்தப்பட்டேன். என் உணர்வுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னுடைய சமூக கோபத்தையும் பல நலன் சார்ந்த விருப்பங்களையும் வெளிப்படுத்த இக்கட்டுரைகள் பெரும் வாய்ப்பளித்தன. ஒரு எழுத்தாளருக்கு சமூக பார்வையும் அதன் மேலான அக்கறையும்தான் மிக முக்கியம். இது இல்லாமல் கற்பனையில் எத்தனை கதைகள் செய்தாலும் அவர்களை காலம் மறந்து விடும். எனவே சமூக பிரக்ஞையோடு உண்மை உணர்வோடு ஒவ்வொரு எழுத்தாளரும் திகழ வேண்டும் என்பது என் பணிவான கருத்து. இந்தக் கருத்தோடு இக்கட்டுரைகளை நான் எழுதிய ஒரு எழுத்தாளனுக்கும் அதுதானே வேண்டும்!

    இத்தொடர் முடிந்த நிலையில் புத்தகமாக தயாராகும் போது இதற்கான மதிப்புரைகளை சமூக நலத்தில் மிகுந்த அக்கரை கொண்ட சிலரிடம் பெற விரும்பினேன்.

    அந்த வகையில் மதுரையில் கம்பன் கழகத்தை நிறுவி ஓசைப்படாமல் தமிழுக்கும் ஆன்மீகத்துக்கும் பெரும் சேவை செய்து வரும் திரு. சங்கர. சீத்தாராமன் என் மனக்கண்களில் முந்தி வந்தார். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாதபடி இவர் செய்த பல கொடைகளை நானறிவேன்.

    கொடையாளியாக மட்டுமன்றி, தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவராகவும், அதில் மிகுந்த ஆழங்கால்பட்டவராக அவர் இருப்பதும் நான் நன்கு உணர்ந்த விஷயங்கள். எனவே, இந்த நூலை மதிப்பிட மிக ஏற்றவராக இவரைக் கருதினேன்.

    அடுத்து என் மனதில் பளிச்சென தோன்றியவர் திரு. எஸ். வி. சேகர் அவர்கள். திரு சேகர் அவர்களோடு கிட்டத்தட்ட ஒரு 25 ஆண்டு கால பழக்கம் எனக்கு. அவரை நகைச்சுவை நடிகராகத் தான் பலருக்கும் தெரியும். ஆனால் இரத்ததானம் செய்வதிலும் அனாதை பிணங்களை உரிய முறையில் அடக்கம் செய்வதிலும் ஓசைப்படாமல் தான தர்மங்கள் செய்வதிலும் அவர் எந்த அளவு ஈடுபாடுடையவர் என்று நெருங்கிப் பழகியவர்களுக்கே தெரியும்.

    தமிழக மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து அவர் சிறந்த தொண்டாற்றியுள்ளார். ஆழமான பக்தி. சுலபமாக அணுகமுடிந்த தன்மை. எப்போதும் மகிழ்ச்சியான மன நிலை. பிறரை புண்படுத்தாத நாகரீக நகைச்சுவை உணர்வு என்று சேகரிடம் பளிச்சிடும் விஷயங்கள் பல. மனதில் பட்டதை பளிச்சென்று தெரிந்தவர் முதல் தெரியாதவர் வரை அனைவரிடமும் பேசிவிடும் இவர் தன்மை பலமா பலவீனமா என்று நான் சிந்திப்பதுண்டு. அதேபோல சேகருக்கு இனிதான் பல பெரிய பதவிகளும், கெளரவங்களும் காத்திருப்பதாகவும் நான் கணித்ததுண்டு. அவருக்கும், திரு. சங்கர. சீத்தாராமன் அவர்களுக்கும் நண்பர் பிரபு சங்கருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் என்றும் உரியது.

    நன்றி!

    அன்புடன்

    இந்திரா சௌந்தர்ராஜன்

    1. அருள் பொருள் இன்பம்…

    எங்கே படித்தேன் என்பது ஞாபகத்தில் இல்லை; ஆனால், மனித வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதைச் சொல்லும் ஒரு கவிதை என்னுள் பசை போட்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

    "வாழ்வென்பதோர் நதி – மழைத்துளி போல்

    விண்ணின்று வீழ்ந்தாவதே விதி!

    மண்ணிடை கலங்கி மயங்கவே மதி

    வி(டு)டை பெற இறை நாமங்களை துதி

    அன்றேல் அல்லாது போகும் கதி"

    இந்த கவிதையின் சந்தக்கட்டும், பொருட் செறிவும், என்னை மிகவே சிந்திக்க வைத்தன. இதில் வாழ்க்கையை நதியோடு ஒப்பிட்டதுதான் சிறப்பு. நதி ஓடிட வழி வேண்டும். விரைந்து ஓடிட பெரும் மழைநீர் வேண்டும். பள்ளம் கண்ட இடத்தே பாய்ந்திட மழை நீருக்கு யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. அங்கே அது குட்டையாய் தேங்கி விடும். குட்டையில் மீன், தவளை என்று உயிரிகள் திளைக்கத் தொடங்கி விடுகின்றன.

    சில குட்டைகளில் முதலைகளும் பன்றிகளும் கூட வந்து குடியேறி விடுவதுண்டு. இதுவே சுத்தமாக தேங்கினால் குளம் என்றாகி, கோயிலில் உள்ள இறைவனுக்குரிய அபிஷேக நீராய் மதிப்போடு பயன்படுத்தப்படுகிறது. ஊருணியானாலோ ஜனக் கூட்டத்தின் தாகம் தீர்க்கிறது.

    இங்கெல்லாம் பயன்பாட்டை வைத்தே மதிப்பு. அதேசமயம் அழுக்காகியே விடுதலை! ஆனால் நதியாகி ஓடும் நீரோ ஒரு பழுதும் இன்றி ஓட்டமாய் ஓடி தாய் மடியாம் கடலில் சென்று கலந்து விடுகிறது. அதன்பின் கதிரவனோடும் காற்றோடும் புணர்ச்சி கொண்டு வானமேறி மேகமாகிப் போவதெல்லாம் அடுத்தடுத்த கட்டங்கள்.

    மனித வாழ்வும் மழைநீர் போல் ஒரு சொட்டில் இருந்தே தொடங்குகிறது. விண்ணில் இருந்து வீழும் இந்த மழை நீரானது விழும் இடத்தைப் பொறுத்து தேங்குவதும் ஓடுவதுமாய் ஆவது போலவே மனித வாழ்வும் யாருடைய வயிற்றில் எப்படிப் பிறக்கிறோம் என்பதை வைத்தே அது நதியா, குளமா, குட்டையா, ஏரியா, இல்லை தடாகமா, பொய்கையா என்பதையெல்லாமும் அமைகிறது.

    பிஞ்சாய் பிறப்பதில் தொடங்கி, தவழ்ந்தும் விழுந்தும் பின் எழுந்தும் நடந்தும் அதன்பின் ஓடியும் ஆடியும் பாடியும் வளர்ந்து கொண்டே போய் சுயமாய் ஒருநாள் சிந்தித்து நான் யார்? எதற்காக இந்த பிறப்பு? என்கிற கேள்விகளை கேட்டுக் கொள்கிறவரை நாம் எங்கே சுயமாய் நம்மாலே செதுக்கப்பட்டோம்?

    இப்போது நம் வசம் இருப்பதாக நம்மால் உணரப்படும் உடம்பு கூட நம் விருப்பத்தில், நம் திட்டமிடலில் உருவானதல்லவே?

    நம் தாயும் தந்தையும் கூடியதில் அவர்களின் சுக்ல சுரோணிதங்கள் எடுத்த வடிவம் தானே நான் - நாம்?

    இந்த நானோ - நாமோ அமைவதில்தானே எல்லாம் இருக்கிறது? குட்டையோ நெட்டையோ, கறுப்போ சிவப்போ, சொட்டையோ செழிப்போ அமைவதில்தானே உள்ளது? அதன் பின்னும் அப்படி அமைந்து விட்டதை மாற்றிக் கொள்ள நம்மால் முடிகிறதா?

    இந்த மூக்கு பெரிதாய் உள்ளது. காதும் விசிறியாக இருக்கிறது என்று சுழற்றி போட்டுவிட்டு நம் ரசனைக்கு மாற்றிக் கொள்ள முடிகிறதா? நாமும் அமைந்ததை ஒப்புக் கொண்டே வாழ்ந்திருக்கிறோம். இனியும் வாழப் போகிறோம். வேறு வழி?

    உடல் மட்டுமா, அதுவாய் அமைந்த விஷயம்? பேசும் மொழி, பெற்ற தாய் தந்தையர், உற்ற சகோதர சகோதரியர், எதிர் - பக்கத்து வீடுகள், வாழும் தெரு, அது உள்ள ஊர், அந்த ஊர் உள்ள நாடு... இதில் எதை நாம் நம் விருப்பத்துக்கு தேர்வு செய்ய முடிந்தது?

    ஒரு நாள் இதெல்லாம் நம் அறிவுப்புலனுக்கு தெரிய வரும் நாளில்தான், நாம் அமைந்தவர்கள் மட்டுமே என்னும் ரகசியம் உடைய ஆரம்பிக்கிறது. அப்படியே அமைந்தவைகளில் நமக்கு பிடிக்காமல் பேசுவதை மாற்றி அமைத்துக் கொள்ளும் விருப்பம் தோன்றி ஒரு முயற்சி தொடங்குகிறது.

    இப்படி ஒரு முயற்சியை மனித இனத்தைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் செய்வதில்லை. செய்யவும் அவற்றால் முடியாது. ஒரு நாய்க்கோ, பூனைக்கோ தான் நாய் என்பதே, பூனை என்பதே தெரியாது. இது ஒரு பூமி. பூமிக்கு மேலே விரிந்து கிடப்பதுதான் வானம், நான் ஒரு விலங்கினம், வாழ்வதற்காக பிறந்திருக்கிறேன் என்று எதுவுமே தெரியாது. தெரிவிக்கவும் யாராலும் முடியாது.

    உணர்வாலே மட்டும் இயங்கும் அவையெல்லாம் பசித்தால் புசிக்கும், தூக்கம் வந்தால் தூங்கும், வலித்தால் கத்தும், காமத் தீ கொழுந்துவிடும் போது புணரும். ஒரு நாள் மரணம் வரும். மரணித்தும் போகும்.

    ஆனால் மனிதன் மட்டும் இந்த ஆறாம் அறிவால் தானொரு மனிதன் என்பதில் இருந்து தனக்கு தனித்த அடையாளம் வேண்டும் என்பதற்காக தனக்கென பெயர் வைத்துக் கொள்வதில் ஆரம்பித்து இன்று டி.வி. செல்போன் என்று விஞ்ஞானத்தில் முன்னேறி செவ்வாய் கிரகத்துக்கு விண்கலனை அனுப்பி அங்கே புகைப்படம் எடுத்து அதை ஆராயும் அளவிற்கு வளர்ந்துள்ளான். இவையெல்லாம் மனித முயற்சிகளின், பிரயத்தனங்களின் விளைவுகள்தான்.

    அதே சமயம், அமைந்திடாத ஒன்றை அமைத்துக் கொள்ள முயலும் மனிதனுக்கு மிகப் பெரிய பலமாக, பக்க துணையாக இருப்பவை அறநெறிகள். இந்த அறநெறிகளின் மேம்பட்ட வடிவம்தான் ஆன்மிகநெறி. இதை அருள்நெறி, முக்திக்கான வழி, சொர்க்கத் தேடல், மீண்டும் பிறவாமை என்று விதம் விதமாக கூறலாம். ஒரு வரியில் சொல்வதானால் 'இரை தேடுவதோடு இறையையும் தேடு' எனலாம். சுவையான இரை நாவுக்கும் உடலுக்கும் இன்பம் தருகிறது. தெளிவான இறைவழிபாடு மனதுக்கும் ஆன்மாவுக்கும் இன்பம் தருகிறது. இரையோடு இறையையும் தேடும் முயற்சியின் விளைவு

    Enjoying the preview?
    Page 1 of 1