Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mandhira Mohini
Mandhira Mohini
Mandhira Mohini
Ebook513 pages4 hours

Mandhira Mohini

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pushpanathan Pillai alias Kottayam Pushpanath is a famous Malayalam author. He wrote many detective novels, mainstream novels, science fiction,
and horror fiction. He has translated Bram Stoker's Dracula into Malayalam. He created two two fictional detective characters - Marxin and Pushparaj.
Now he lives in Kottayam, Kerala. He had published many books on tourism and other India-related subjects. Many of his books are translated by Sivan to
Tamil language.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851591
Mandhira Mohini

Read more from Kottayam Pushpanath

Related to Mandhira Mohini

Related ebooks

Related categories

Reviews for Mandhira Mohini

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mandhira Mohini - Kottayam Pushpanath

    http://www.pustaka.co.in

    மந்திர மோகினி

    Mandhira Mohini

    Author:

    கோட்டயம் புஷ்பநாத்

    Kottayam Pushpanath

    Translated by:

    சிவன்

    Sivan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சில வார்த்தைகள்...

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    சில வார்த்தைகள்...

    வருடம் 1991. டிசம்பர் மாதத்தின் முதல் வாரம். சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அருகிலுள்ள சிந்தூரி ஓட்டலில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. ஏற்பாடு செய்தவர் அன்புக்குரிய பேராசிரியரும், பகுதி நேரப் பத்திரிகையாளருமான திரு. அப்துல் மஜீத். அதுவரை ஒரு திரைப்படப் பத்திரிகையாளனாக இருந்த நான், அதற்குப் பிறகுதான் தொழில் ரீதியான மொழிபெயர்ப்பாளன் ஆனேன். அன்று ஓட்டலில் நான் சந்தித்தவர்களில் ஒருவர் ‘மங்களம்’ பத்திரிகையின் உரிமையாளர் திரு. வர்க்கீஸ். உடனிருந்தவர் தமிழ் ‘மங்களம்’ பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த திரு. பாக்கியம் ராமசாமி. இந்தக் கதையின் முன்னுரையில் இதைக் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு.

    மலையாள மொழியில் வெளிவரும் மங்களம், அன்று இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் பிராந்திய மொழிப் பத்திரிகையாக இருந்தது. வாரம் ஒன்றுக்கு பதின்மூன்று லட்சம் பிரதிகள் விற்பனையானது. 88-99-ம் ஆண்டுகளில் ‘படகாளிமுற்றம்’ என்ற பெயரில் திரு. கோட்டயம் புஷ்பநாத் மலையாளம் மங்களத்தில் எழுதிய நாவல் இது. தமிழ் மொழியில் பத்திரிகை தொடங்குவதற்கு முன்பாக ‘மங்களம்’ கன்னடத்தில் மேற்குறிப்பிட்ட கதையின் மொழிபெயர்ப்பு வெளியாகி மகத்தான வரவேற்பு பெற்றது. எனவே, தமிழ் மங்களம் பத்திரிகையிலும் அதையே தொடராக வெளியிடலாம் என்று திரு. வர்க்கீஸ் தீர்மானித்திருந்தார்.

    அவர் தீர்மானம் எனக்குத் தெரியாததால், அதே டிசம்பர் முதல் வாரம் மலையாள மங்களம் பத்திரிகையில் தொடங்கியிருந்த இலக்கியங்களை உயர்த்திப் பிடித்தால் அவற்றில் எத்தனை சதவிகிதம் தேறும்?’ என்று யோசிக்கிறேன். தொடர்ச்சியாக ‘கடந்த ஐம்பதாண்டு கால சமூகவாழ்வில் பகுத்தறிவு வளர்ந்துள்ளதா, பக்தி இயக்கம் வளர்ந்துள்ளதா?’ என்பதை என்னால் துல்லியமாக நிதானிக்க முடியவில்லை.

    எப்படி இருப்பினும் இது போன்ற நாவல்கள், மற்ற வகை நாவல்களைக் காட்டிலும் அதிக அளவில் தீமை பயப்பதில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

    கேரளத்தின் பேய் - பிசாசுகளை நான் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்வதாக இலக்கிய நண்பர் ஒருவர் வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. அது எவ்வளவுதூரம் சரியென்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, அது உண்மையாகக்கூட இருக்கலாம்.

    இந்தப் பெரிய நாவலை மொழி பெயர்க்கவும், வெளியிடவும் அனுமதியளித்த கோட்டயம் புஷ்பநாத், தொடராக வெளியிட்ட ‘பாக்யா’ வார இதழ் நிறுவனம், அதன் ஆசிரியர் மதிப்புக்குரிய கே. பாக்யராஜ் மற்றும் ஆசிரியர் குழவினர், அழகிய முறையில் தற்போது புத்தகமாக வெளியிடும் கலாநிலையம் சீனிவாசன் தொடராக வெளிவந்த போதும், புத்தகமான பிறகும் வாங்கிக ஆதரிக்கும் வாசகப் பெருமக்கள் ஆகியோருக்குப் பணிவான என் நன்றி உரித்தாகிறது.

    சென்னை -600 078.

    தோழமையுடன்

    சிவன்

    1

    யாரது... அங்கே என்ன கலாட்டா? புவனேஸ்வரன் நாயர் கேட்டார்.

    நம்பூதிரிவீட்டுப் பையன்தாங்க! வேலைக்காரன் ஒருவன் பதில் குரல் கொடுத்தான்.

    போகச் சொல்லுய்யா அவன்கிட்ட! நாயர் கோபத்துடன் கட்டளையிட்டார்.

    எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன்கிறாருங்க... வேலைக்காரன் வராந்தாவை நெருங்கி வந்து பதிலளித்தான்.

    இது ஒரு பெரிய தொல்லையாப் போச்சே... என்ன சொன்னாலும் அவன் காதுல ஏறுறதில்லை. புவனேஸ்வரன் நாயர், தான் பரிசோதித்துக் கொண்டிருந்த முத்திரைத்தாள் பத்திரங்கைள அடுக்கி வைக்கத் தொடங்கினார்.

    விடியற்காலையில் தொடங்கிய வேலை.

    ஏறத்தாழ அறுபது பத்திரங்களுக்கு மேல் அப்போது அவரது கைவசமிருந்தன. அவை எல்லாமே அந்தக் கிராமத்திலுள்ள நாயருக்குச் சொந்தமான சொத்துக்கள்தான்!

    இந்தப் பத்திரங்களைத் தவிர, வெள்ளைக் காகிதத்தில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, கையெழுத்து வாங்கிய கட்டு ஒன்றும் தனியாக இருந்தது.

    புவனேஸ்வரன் நாயர் திருவல்லூர் கிராமத்தின் ஜமீன்தார் என்றே சொல்லலாம். தவறு, ராஜா என்றே கூறலாம்.

    முடியாட்சிக் காலமாக இருந்தால் நாயர் நிச்சயமாக ஒரு திவானாக இருந்திருப்பார். காரணம், அந்தக் கிராமத்தில் மொத்த நிலத்தில் ஏறத்தாழ எண்பது சதவிகிதம் இப்போது அவருக்குச் சொந்தமானதுதான்.

    ஆள் பார்க்கவும் கம்பீரமாக இருப்பார்.

    நல்ல உயரம், வராந்தாவில் நின்றால் ஏறத்தாழத் தூணின் உயரமிருப்பார். தூரத்திலிருந்து பார்க்கிற எவருக்கும், அவர்தான் திண்ணைப் பகுதியின் மேற்புறத்தைத் தாங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றும்.

    அதற்கேற்ற வாட்டசாட்டமான உடம்பு, விசாலமான நெற்றி வழுக்கை, அவரது தலையின் முன்புற வழியாக வெகு தொலைவுக்கு ஊடுருவியிருந்தது. கம்பளிப் போர்வையைக் கத்திரித்து ஒட்டியது போல் காதின் இருபறமும் ரோமங்கள்.

    தினந்தோறும் சவரம் செய்து பளபளப்பாக்கிய முகம். இடைவெளியின்றி அடர்த்தியாக வளர்ந்திருக்கும் புருவக்கொடிகள்.

    அவற்றின் கீழே பாம்பின் பார்வையுள்ள கருவிழிகள்.

    கழுகின் அலகு போல் நீண்டு வளைந்த மூக்கு. அகலமாகப் பரந்து கிடக்கும் மார்புப் பிரதேசம். உறுதியான தசைப்பிடிப்பான திரண்ட புஜங்கள்.

    திருவல்லூர் கிராமத்தில் புவனேஸ்வரன் நாயர் என்று சொன்னால் யாரும் ஒரு கணம் நடுங்குவார்கள். அவரைப் பற்றி யாராவது ஏதாவது பேசிவிட்டால், பேசியவனுக்கு மறுநாள் நாக்கே இருக்காது!

    நாயருக்காக எதையும் செய்யத் தயாராக ஒரு கூட்டமே அவரிடம் இருந்தது. அதை ஒரு சிறிய ராணுவம் என்றே சொல்லலாம். இந்த ராணுவத்தில் ரகசிய போலீசார்கூட உண்டு.

    நாள் கணக்கில் நடந்தே பார்த்தாலும் சுலபத்தில் சுற்றிப் பார்த்துவிட முடியாத அளவிலான நிலப்பரப்பு அவருடையது. அதையெல்லாம் அவர் கைப்பற்றியது பல்வேறு முறைகளில்.

    ஒரு காலத்தில், திருவல்லூர் கிராமத்தின் பழைமையான குடும்பமான ‘பனங்காட்டு மனை’யின் வேலைக்காரராக இருந்தார் ஒருவர். புவனேஸ்வரன் நாயரின் தாய்மாமனான அவரது பெயர் அப்பு நாயர்.

    அப்பு நாயர் தந்திரசாலியான நபர். குறிப்பாகச் சொத்துச் சேர்க்கும் விஷயத்தில் ஒரு சூரப்புலியாகவே இருந்தார்.

    பனங்காட்டு மனையின் அன்றைய காரணவர் (தாய்மாமன், குடும்பத்தலைவர், மருமக்கள் தாயம் என்கிற வழக்கப்படி குடும்பத்தின் மூத்த தாய்மாமன்தான் மொத்தச் சொத்துக்களையும் நிர்வகிப்பவர். அவருக்குப் பிறகு அந்த வீட்டின் மூத்த சகோதரியின் முதல் மகனுக்கு அதன் அனுபவபாத்தியதை தொடரும். குடும்பச் சொத்தின் வாரிசு பெண்கள்தான். அனுபவ பாத்தியதை மட்டும் இவ்வாறு தொடரும்.) நாராயணன் நம்பூதிரிப்பாடு சுகபோகங்களில் தீவிர ஈடுபாடு உடையவராக இருந்தார். பெண்கள் விஷயத்தில் மிகவும் பலவீனமாயிருந்த நம்பூதிரி, அப்பு நாயரின் வலையில் வகையாகச் சிக்கிக்கொண்டார்.

    ‘கிராமத்துக் கோயிலில் திருவிழா நடத்துகிறேன்’ என்ற பெயரில் எந்தெந்தப் பகுதியிலிருந்தெல்லாமோ நாட்டியக் குழுக்களை வரவழைத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார்.

    இப்படி வருபவர்களில் அப்பு நாயரின் திட்டத்துக்கு இணங்குபவர்கள், நம்பூதிரியின் படுக்கையறைக்குப் போகும் போது, அப்பு நாயர் நோட்டுக்கட்டுகளைச் சொந்தமாக்கிக் கொள்வார்.

    இதைத் தவிர திருவிழாச் செலவு என்ற பெயரில் பொய்க் கணக்குகள் எழுதி, நம்பூதிரியின் சொத்துக்கள் பலவற்றைப் பெயர் மாற்றம் செய்திருந்தார்.

    தற்காலிகமாக இப்படிப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட சொத்துக்கள் பிற்பாடு நிரந்தரமாகவே அப்பு நாயருக்கு உரிமையானவையாக மாறின. அவரது காலத்துக்குப் பிறகு அவை, அவரது மருமகனான புவனேஸ்வரன் நாயருக்குச் சொந்தமானதாகத் தொடர்ந்தன.

    புவனேஸ்வரன் நாயரின் ஒரே சகோதரியான சரஸ்வதியுடன், நாராயணன் நம்பூதிரி நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். ஒரு வகையில் சொன்னால் அங்கீகரிக்கப்படாத கணவன்-மனைவியாகவே அவர்கள் வாழ்ந்தனர். சரஸ்வதி கர்ப்பிணியானதும் அவளுக்காகவும், அவளது குழந்தைக்காகவும் தனது சொத்தில் பாதியை அவர் மனமார எழுதிக் கொடுத்தார்.

    நாராயணன் நம்பூதிரி இறந்ததுகூட எதிர்பாராத ஒரு விபத்தில்தான். சாதாரணமாக உறங்குவதற்கு முன் - அதாவது, எட்டு மணியளவில் இல்லத்துக்குச் சொந்தமான குளத்தில் குளித்த பின் பரதேவதையை வணங்கிவிட்டுத்தான் படுப்பார். அதை வெகு நாட்களாக அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

    வழக்கம் போல் குளிக்கப் போன நம்பூதிரி ஒரு நாள் திரும்பி வரவில்லை! மறுநாள் அவரது உடம்பு குளத்தில் மிதக்கத் தொடங்கியது.

    அதைப் பற்றி, கிராமத்தின் முற்போக்குச் சிந்தனையாளரான சந்திரன்குட்டி டீக்கடையில் இப்படிப் பேசினார்: திருமேனி (நாராயணன் நம்பூதிரி) குளிக்கப் போனபோது புவனேஸ்வரன் நாயரின் ஏதோ ஒரு கையாள், திருமேனிக்குத் தெரியாமல் குளத்துள் இறங்கி அவரை மூச்சுத்திணற வைத்துக் கொலை செய்திருக்கிறான்!

    ஆனால், மறுநாள் அதைப் பற்றிப் பேச சந்திரன்குட்டி உயிரோடு இல்லை! கோயில்குளத்தின் மறுபுறத்திலிருந்த மரோட்டி (விஷத்தன்மையுள்ள காய் காய்க்கும் ஒரு மரம். இதிலிருந்து எண்ணெய் எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவார்கள். மரோட்டிக்காயை இரண்டாகப் பிளந்து உட்புறத்தைச் சுரண்டி அகல் விளக்கு மாதிரியும் பயன்படுத்துவார்கள்.) மரத்தில் இடுப்பு வேஷ்டியால் தூக்குப்போட்டு இறந்திருந்தார். அதன் பிறகு யாருமே புவனேஸ்வரன் நாயரைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. உணர்ச்சிவசப்பட்டு எதையாவது பேச வாய் திறந்தவுடன் சந்திரனின் ஞாபகம் வரும். அத்துடன் அடங்கிவிடுவார்கள்!

    புவனேஸ்வரன் நாயரின் கர்ப்பிணியான சகோதரி சரஸ்வதி, திடுமென்று ஒரு நாள் தானிய அறைக்குள் இறந்து கிடந்தாள். நாயர்தான் காலால் உதைத்து அவளைக் கொன்றுவிட்டார் என்று சொல்ல எவருக்கும் தைரியமில்லை - அவர் வீட்டு வேலைக்காரிகளுக்குக் கூட!

    புவனேஸ்வரன் நாயருக்கு இரண்டு மனைவியர். எட்டுக் குழந்தைகள். அவ்வளவு பேரும் ஆண்கள். மனைவியர் இருவரும் உடன்பிறப்புகள். எல்லாப் பையன்களும் ஒரே அச்சில் வார்த்து எடுத்தது போல் ஒரே மாதிரியிருந்தார்கள். இரண்டுபேர் இரட்டைக் குழந்தைகள். மற்றவர்கள் முறையே ஒவ்வொரு வயது வித்தியாசத்துடன் பிறந்தவர்கள்.

    எல்லா விஷயத்திலும் எட்டுப் பேரும் ஒரே மாதிரியான சிந்தனை உடையவர்கள். மது, மாது என்கிற இரண்டு விஷயத்திலும் தேர்ந்தவர்கள்!

    அவர்களுக்கு உடன்படாத பெண்கள் அந்த ஊரில் நிம்மதியாக இருக்க முடியாது!

    பனங்காட்டு மனையில் நாராயணன் நம்பூதிரி இறந்த பிறகு மீதமிருந்தது இரண்டு பேர் மட்டும்தான். ஒருவர் அவர் தாயார் சங்கரி. தொண்ணூறு வயதானவர். மற்றொரு நபர் அவரின் மகள் வயிற்றுப் பேரன் உண்ணிக்கிருஷ்ணன். பிறந்தவுடனேயே அவன் அம்மா இறந்து போனாள். பாட்டி சங்கரி அந்தர்ஜனம் தான் பேரனை வளர்த்தவர்.

    இரண்டு வயதான பிறகுதான் பேரனுக்குக் காது கேட்கவில்லை என்பதும், வாய்பேச முடியவில்லை என்பதும் புரிந்தது. அதனால் அவனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவும் முடியவில்லை!

    இருப்பினும் சங்கரி, நிலவிளக்குக்கு முன்னால் பூஜை அறையின் வெளியே உட்கார்ந்து ஹரிநாம கீர்த்தனம் சொல்லும்போது, தன் பெயர் என்னவென்றுகூட விளங்கிக் கொள்ள முடியாத உண்ணிக்கிருஷ்ணன் அவரின் உதடுகள் அசைவதைக் கண்ணிமைக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். பேரனின் நிலையை உணர்ந்து வருத்தம் அடைந்த பாட்டி, அவனை முன்னால் உட்கார வைத்துப் பஞ்சதந்திரக் கதைகளைச் சொல்லித் தருவது வழக்கம்.

    பேரனோ வெறுமனே சிரித்தபடி தலையாட்டிக் கொள்வான்.

    அந்தப் பாட்டியும் ஒரு நாள் இறந்துபோனாள். உண்ணிக்கிருஷ்ணனுக்கு அப்போது வயது பதினேழு. அவன் அநாதையாகிப் போனான்.

    அதற்குள் அந்தக் குடும்பத்தின் மொத்தச் சொத்தும் புவனேஸ்வரன் நாயரின் கைவசமாகி விட்டிருந்தது.

    பனங்காட்டு மனையில் ஊழியம் பார்த்தவர்கள் இப்போது புவனேஸ்வரன் நாயரின் ஊழியர்களாகியிருந்தனர்.

    அந்தக் கிராமத்தில் ‘பெரிய வீடு’ என்று சொன்னால் அது அரண்மனைக்கு ஈடானதாகக் கட்டப்பட்ட புவனேஸ்வரன் நாயரின் வீடுதான்.

    உண்ணிக்கிருஷ்ணன் இப்போது இருபத்தைந்து வயது வாலிபன். அவனைப் பார்க்கிற எவருக்கும் அவனது குறை சட்டென்று புலப்படாது. ‘இவனுக்கா இப்படிப்பட்ட குறை?’ என்று மூக்கில் விரல் வைத்து அதிசயப்படுவார்கள்!

    ஐந்தே முக்கால் அடி உயரம். சிவந்த நிறம். அழகான கண்கள். அளவான- எடுப்பான மூக்கு. சிரிக்கும்போது எப்படிப் பட்டவரும் விரும்பும் கவர்ச்சிகரமான உதடுகள்.

    பிறந்ததிலிருந்து இதுவரை முகச்சவரம் செய்யப்படாத முகம். அதனால் அடர்த்தியான தாடி மீசை. வாரப்படாத தலைமுடி. அவன் மீது மரியாதையும் மதிப்புமுள்ள சவரத் தொழிலாளி அவனைப் பார்க்கும்போதெல்லாம் தலைவாரி விடுவார். ஆனால், முகச்சவரம் செய்ய உண்ணிக்கிருஷ்ணன் ஒப்புக்கொள்வதே இல்லை.

    வேலைக்காரன் சொன்னதைக் கேட்டு புவனேஸ்வரன் நாயர் வராந்தாவுக்கு வந்தார்.

    என்ன வேணுமாம் அவனுக்கு ராமுண்ணி? நாயர் கேட்டார்.

    யாரெல்லாமோ அவருக்கு எதையெல்லாமோ தப்பாச் சொல்லிக் குடுத்திருக்காங்கன்னு தோணுது முதலாளி! வேலைக்காரன் ராமுண்ணி கூறினான்.

    என்னன்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க? இவன் என் மகன்னா? நாயர் கேலித் தொனியில் கேட்டார்.

    இந்த மொத்தச் சொத்தும் இவரோடதுன்னு என்கிட்ட சைகை மூலமா சொல்றாரு. வேண்டாதவங்க யாரோ, பொறாமையில் சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

    இது ஒரு புதுச் செய்தியா என்ன? சொல்லிட்டுப் போகட்டும். நாயர் தெருவாசற்படியைப் பார்த்தபடி தொடர்ந்தார்: இவன் போட்டிருக்கிற சட்டை யார் கொடுத்ததாம்?

    சமீபத்துல இந்தத் தம்பி ரிஜிஸ்ட்ரர் ஆபீஸ் பக்கமா சுத்திட்டிருந்ததா, பார்த்த ரெண்டு மூணு பேரு சொன்னாங்க. போதாக்குறைக்கு திமிர்பிடிச்ச ரெண்டு மூணு போக்கிரிப் பசங்களும் இவர்கூட இருந்திருக்காங்க.

    ஓகோ... அப்படியா கதை? என்றவாறே வீட்டுக்குள் போனவர் திரும்பி வந்தபோது அவர் கையில் பத்து ரூபாய் நோட்டுகள் சில இருந்தன.

    இந்தா ராமுண்ணி, இதை அவன்கிட்டக் கொடு! போய் எதையாவது சாப்பிட்டுத் தொலையட்டும்!

    ராமுண்ணி அந்த ரூபாய் நோட்டுகளை வாங்கி உண்ணிக்கிருஷ்ணனின் கையில் கொடுத்தான்.

    அதைப் பெற்றுக்கொண்ட உண்ணி, நன்றியுடன் புவனேஸ்வரன் நாயரைப் பார்த்துவிட்டு நடையைக் கட்டினான்.

    ராமுண்ணி, இப்படி வா! புவனேஸ்வரன் நாயர் அழைத்தார்.

    அவன், அவரருகில் வந்து நின்றான்.

    பெரிய பையன் கொப்பரைக்களத்தில் இருக்கிறான். அவனை நான் உடனடியா வரச்சொன்னதாகச் சொல்லு!

    நாயர் வீட்டுக்குள் போனார்.

    சற்று நேரத்துக்குள் ஸ்ரீதரன் குட்டி வந்து சேர்ந்தான்.

    ஸ்ரீதரா, நீ போய் நம்ம புலிக்குட்டியையும் அவனோட நாலு சிடப் பிள்ளைங்களையும் சாயந்திரமா வரச் சொல்லு. வரும்போது அவனுங்களை கள்ளுக்கடைப் பக்கம் கொண்டு போய்த் தண்ணி காட்டிட்டுக் கொண்டுவா!

    சொன்னபடியே எல்லாம் நடந்தன.

    இன்னிக்கு உங்களுக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு. இனிமே அதைத் தள்ளிப் போடுறதுல அர்த்தமே இல்லை!

    இன்னிக்கு உங்களுக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு. இனிமே அதைத் தள்ளிப் போடுறதுல அர்த்தமே இல்லை!

    செய்தி என்னவென்று தெரிந்து கொள்வதற்காக புலிக்குட்டி காதைக் கூர்மையாக்கிக்கொண்டு நின்றான்.

    இன்னிக்கு ராத்திரியோட அந்த நம்பூதிரிப் பையன் இல்லாமல் போயிடணும்! ஆழமாப் புதைச்சுடுங்க. நாளைக்குக் காலையில் யாரும் அவனை உயிரோட பார்க்கக் கூடாது! புறப்படுங்க. நாயர் மிகவும் ரகசியமான குரலில் பேசினார்.

    இரவு மணி பத்துக்கு மேலாகிவிட்டது. உண்ணிக்கிருஷ்ணன் தனது வீட்டு வராந்தாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

    புலிக்குட்டியும் அவன் கூட்டத்தாரும் நெருங்கியதை காது கேளாதவனும், வாய்பேச முடியாதவனுமான அந்த அப்பாவி உணரவில்லை.

    ஈரமான துண்டால் வாய் மற்றும் கை கால்களைக் கட்டி உண்ணிக்கிருஷ்ணனை அங்கிருந்து கொண்டுபோனார்கள்.

    கோயில்குளத்தைத் தாண்டிச் சற்றுத் தொலைவு வந்த போது எதிரே கொஞ்சம் பேர் கியாஸ் லைட் சகிதமாக வருவது தெரிந்தது. உண்ணிக்கிருஷ்ணனைத் தூக்கி வந்தவர்கள் ஓரமாக ஒதுங்கி நின்றார்கள். அதே நேரம் அவர்களுக்குப் பின்னாலிருந்து மாட்டு வண்டி ஒன்றும் வந்து அவர்களைக் கடந்து போனது.

    வாசு, விஷயம் ரொம்பவும் ஆபத்தானது. இந்தப் பையனின் மாமாவைக் கொன்னதே என் பையன்தான். குளத்துக்குள்ள காத்திருந்து காலைப் பிடிச்சு இழுத்து அமுக்கிட்டான். இப்படிப் பட்டவங்க செத்துப் போயிட்டா பிரம்ம ரக்ஷஸா (காட்டேரியா) மாறிடுவாங்க!

    நீங்க சொல்றதும் நியாயம்தான். அப்படியெல்லாம் ஏதாவது ஏடாகூடமா ஆகிட்டா நம்ம பரம்பரையே நாசமாப் போயிடம். ஆவி-பிசாசுகளுக்கு அதிகமாகப் பயப்படும் பப்பு கூறினான்.

    அப்படியானால் ஒரு வேலை செய்யலாம். நானும் வாசுவும் இவனை மாட்டு வண்டியில் ஏத்திட்டுப் போய் முப்பது நாப்பது கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் எங்கேயாவது போட்டுட்டு வர்றோம். பையன் இப்ப மயக்கமாத்தான் இருக்கிறான். அதுக்கு அப்புறம் இவனால இந்த ஊருக்குள்ள திரும்பிவர முடியாது!

    ‘அதுவும் நல்லதுதான்!’ என்று மற்றவர்கள் நினைத்தனர்.

    புலிக்குட்டியும் மற்றொருவனும் உண்ணிக்கிருஷ்ணனை ஒரு நோயாளி போல் மாட்டு வண்டியில் போட்டுப் பயணம் செய்தனர்.

    மாட்டுவண்டி வடக்குத் திசையில் நகர்ந்தது.

    நள்ளிரவு இரண்டு மணியானபோது அவர்கள் ஆள் நடமாட்டமற்ற ஓர் அத்துவானக் காட்டுப்பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

    புலிக்குட்டி வண்டியிலிருந்து இறங்கிச் சுற்றுமுற்றும் பார்த்தான். வலது புறத்தில் காட்டுச் செடிகள் கன்னாபின்னாவென்று வளர்ந்திருந்தன. பெரிய சுற்றுச்சுவர் ஒன்று தென்பட்டது.

    பூஜையோ, முறையான பராமரிப்போ இல்லாமல் சிதிலமடைந்த ஒரு கோயில் அது என்பது பார்த்தவுடனேயே புரிந்தது.

    இங்கேதான் நாங்க இறங்கணும். வண்டியை நிறுத்துங்க. புலிக்குட்டி, வண்டிக்காரனிடம் சொன்னான்.

    வண்டி நின்றதும் வாசு ஈரத் துண்டை எடுத்து வண்டிக்காரனின் கழுத்தில் போட்டு முறுக்கினான்.

    உண்ணிக்கிருஷ்ணனைத் தோளில் போட்டுக்கொண்டு நடந்த புலிக்குட்டி, அவனைக் கோயிலின் உட்புறமாக விசையுடன் வீசியெறிந்தான். வண்டிக்காரனின் பிணத்துடன் மாட்டுவண்டி திரும்பு பயணத்தைத் தொடர்ந்தது. வழியிலிருந்த பாழடைந்த கிணறு ஒன்றில் வண்டிக்காரனின் பிணத்தையும் தள்ளி விட்டனர்.

    மதிலின் மறுபுறம் விழுந்த உண்ணிக்கிருஷ்ணனுக்குச் சற்று நேரத்திலேயே நினைவு திரும்பியது. அவன் முள்செடிகளின் மீது விழுந்திருந்தான்.

    பல்லைக் கடித்தபடி வேதனையைத் தாங்கிக்கொண்டு மெதுவாக தட்டுத் தடுமாறி ஊர்ந்தவாறு நகர்ந்தான்.

    அருகிலேயே மற்றொரு சுவர் தட்டுப்பட்டது. அதைப் பிடித்துக் கொண்டு வழி எங்கே இருக்கிறதென்று தேடுவதற்குள் மறுபடி மயங்கிச் சரிந்தான்!

    நிலவு, மேகங்களின் பிடியிலிருந்து விடுபட்டுத் தெளிவாக ஒளி சொரிந்தது.

    சட்டென்று திடுக்கிட்டு எழுபவனைப் போல உண்ணிக் கிருஷ்ணன் கண்களைத் திறந்து பார்த்தான்.

    உண்ணிக்கிருஷ்ணன்... உண்ணிக்கிருஷ்ணன்! யாரோ அழைத்தார்கள்!

    ‘அப்படி அழைத்தது தனக்குக் கேட்கிறது! காது கேட்கும் சக்தி தனக்குக் கிடைத்து விட்டதா என்ன?’

    உண்ணிக்கிருஷ்ணன்... உங்களைத்தான் கூப்பிடுகிறேன். இப்போது யாரோ தன் உடலைத் தொடுவது போல் உணர்ந்தான். தலையை உயர்த்திப் பார்த்தான்.

    நிலவொளி சுவரில் தெளிவாக விழுந்திருந்தது. அங்கே பேரழகியான ஓர் இளம்பெண்ணின் சிற்பம் இருந்தது.

    ‘அந்தச் சிற்பத்தின் கைகள்தான் தன்னைத் தொட்டுக் கொண்டிருக்கிறதா என்ன!’ ஒரு நிமிடம் குழம்பினான் உண்ணிக்கிருஷ்ணன்.

    திக்பிரமையடைந்தவனாக அந்தச் சிற்பத்தின் உதடுகளைக் கவனித்தான்.

    அதன் உதடுகள் அசைந்தன.

    உண்ணிக்கிருஷ்ணன்...

    2

    உண்ணிக்கிருஷ்ணனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. தன் பெயர் உண்ணிக்கிருஷ்ணன் என்பதே அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது!

    ‘இப்படியொரு பெயர் தனக்கு இருக்கிறதா?

    எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது தன் காது நன்றாகக் கேட்கிறது.’

    உண்ணிக்கிருஷ்ணன், என்ன பார்க்குறீங்க?

    மறுபடியும் அதே குரல், தெளிவாகக் கேட்கிறது!

    அவன் கண்களை ஒரு முறை நன்றாக மூடித் திறந்தான்.

    இதோ தனக்கு முன்னால் - நிலவொளியில் குழைத்தெடுத்த ஒரு தேவமனோகரி. இவ்வளவு அழகான ஒரு பெண்ணை அவன் இதுவரையிலான வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை.

    இப்போது அவள் சிற்பமல்ல!

    எலும்பும் சதையும் ரத்தமும் உள்ள அழகு வழிந்தொழுகும் ஓர் இளம்பெண்.

    அவள் கண்களில் நட்சத்திரங்கள் பிறப்பெடுத்தான்.

    அந்தக் கன்னக் கதுப்புகளில் மாலை நேரச் சூரியனின் சிவப்பு நிறம்.

    வாங்க! அவள், உண்ணிக்கிருஷ்ணனின் கையைப் பிடித்தபடி கூறினாள்.

    நிதானமாக எழுந்தவன், கோயில் சுவரைப் பார்த்தான்.

    இப்போது அங்கு சிற்பம் எதுவுமில்லை!

    ‘அங்கே சற்று முன்பு தான் பார்த்த சிற்பம் ஒருவேளை தன் பிரமையாக இருக்குமோ?’

    அவள், அவன் கையைப் பிடித்து எழுப்பியபோது, முட்செடிகளால் உடம்பில் ஏற்பட்டிருந்த காயங்களின் எரிச்சல் மாயமாக மறைந்துவிட்டது.

    பௌர்ணமிச் சந்திரன் தெளிந்த ஆகாயத்தில் முழுப்பொலிவுடன் ஒளி சொரிந்து கொண்டிருந்தது. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டிய அந்தக் கோயில் மீது பாலை ஊற்றிவிட்டது போல் பளபளத்தது.

    கோயில் சுற்றுப்புறத்திலிருந்த தேவி மற்றும் தேவன்களின் சிலைகள் உயிருள்ளவை போல் தோன்றின.

    உண்ணிக்கிருஷ்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு சரஸ்வதியின் சிலைக்கு முன்பாக வந்தாள் அவள்.

    சரஸ்வதி தேவியின் வலது கையிலிருக்கும் எழுத்தாணியைக் கையில் எடுத்துக் கொண்டவள், உண்ணிக்கிருஷ்ணனிடம் நாக்கை நீட்டச் சொன்னாள்.

    ஹரி ஸ்ரீ கணபதாய நம அவள் உச்சரித்தாள்.

    என் பேரென்னன்னு கேளுங்க! அவள், அவனைத் தூண்டினாள்.

    உங்க பேர் என்ன? மிகுந்த பிரயாசைக்குப் பிறகு அவன் கேட்டான்.

    மந்தாகினி! பதிலளித்தாள்.

    என் பேரை நீங்களும் ஒரு தடவை சொல்லிப் பாருங்க.

    மந்தாகினி.

    என்ன...! பதில் குரல் கொடுத்தாள்.

    உங்களுக்கு இப்போ எல்லாப் பாடங்களும் கைவசமாகி இருக்கிறது. இப்போதுதான் நீங்கள் சரியான ஒரு நம்பூதிரி ஆகியிருக்கிறீர்கள். இந்தக் கணத்திலிருந்து உங்களுக்குள் எல்லா வித வித்தைகளும் புகுந்து கொண்டிருக்கின்றன. ரிக் வேதத்தின் முதல் சுலோகத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

    "ஓம் அக்னிநீளே புரோஹிதம்

    யஜ்ஞஸு தேவமிருத்விஜம்

    ஹோதாரம் ரத்ன தாதமம்"

    உண்ணிக்கிருஷ்ணன் எந்த விதமான தயக்கமோ தடங்கலோ இல்லாமல் ஒரு பண்டிதனைப் போல் ஒப்புவித்தான்.

    அதன் அர்த்தத்தைச் சொல்லுங்கள்! அவள் கேட்டுக் கொண்டாள்.

    கண்ணுக்குப் புலப்படாத வடிவத்தில் உறைந்திருப்பவனும், விருப்பமான வரத்தை, வேண்டுபவருக்கு வழங்குபவனும், யாகங்களில் தேவாதி தேவன்களை அழைப்பவனும், இயற்கை வடிவானவனும், ரத்தினங்களை அணிந்தவனுமான அக்னியின் அதிஷ்டான தேவதையை நான் வணங்குகிறேன். அவன் விளக்கினான்.

    போதும் உண்ணிக்கிருஷ்ணன். நீங்கள் பண்டிதனாகி விட்டிருக்கிறீர்கள். சர்வகலா வல்லவனாகியிருக்கிறீர்கள். அவள் தன் கையிலிருந்த எழுத்தாணியை மீண்டும் சரஸ்வதி தேவியின் கையிலேயே வைத்தாள்.

    வாருங்கள்... அதோ அந்த மண்டபத்தில் சற்றுநெரம் உட்காருவோம். மந்தாகினி, உண்ணக்கிருஷ்ணனை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு முன்புறம் இருந்த பாழடைந்த மண்டபத்தில் வந்து அமர்ந்தாள்.

    உங்களுக்குப் பசிக்கிறதா... சற்றுப் பொறுங்கள். இதோ வந்துவிடுகிறேன். என்று சொல்லிவிட்டுக் கோயிலுக்குள் நுழைந்தவள், இரு கைகளிலும் தாங்கிய தலை வாழை இலையுடன் திரும்பி வந்தாள். அதை அவனுக்கு முன்பாக வைத்தாள்.

    அவலும், நெல்பொரியும், சர்க்கரையும், கதலி வாழைப் பழமும் அதில் இருந்தன. கடுமையான பசியோடு இருந்த உண்ணி, அதையெல்லாம் மிகுந்த ஆவலுடன் சாப்பிட்டான். அதற்குள் வெண்கலச் சொம்பு ஒன்றில் துளசியினை போட்ட நீருடன் வந்தாள். ஒரே மூச்சில் அதையும் குடித்துத் தீர்த்தான்.

    நான் யாருன்னு இன்னும் நீங்க கேட்கவே இல்லையே? வாழையிலையை எடுத்து சுருட்டி அந்தரத்தில் வீசியெறிந்தபடி அவள் கேட்டாள்.

    உண்ணிக்கிருஷ்ணன் சட்டென்று மேற்புறம் பார்த்தான். ஒரு கணம் திடுக்கிட்டான்! தன் கண்ணால் கண்ட காட்சி உண்மையா? அவன் கண்களில் வியப்பு படர்ந்தது.

    தலைவாழையிலை ஒரு பறவையாக மாறிப் பறந்து போனது. சிறகசைத்துப் பறப்பதுபோல் மிகவும் வேகமாக அது அந்தரத்தில் விரைந்தது.

    கோயிலின் பின்புறம் பறந்த இலை சட்டென்று பார்வையிலிருந்து மறைந்தது.

    ‘தன்னுள் ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சியால் ஒருவேளை தன் கண்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோன்றுகிறதோ என்னவோ?’ என்றுகூட நினைத்தான்.

    இப்போது நடந்துகொண்டிருப்பதை எல்லாம் கவனித்தால் எல்லாமே அழகான ஒரு மாயக் கனவுபோல்தான் தட்டுப்படுகிறது. அவன் சிந்தையே ஒட்டு மொத்தமாகக் குழம்பியது.

    வாங்க போகலாம்! அவள் எழுந்தாள்.

    இன்னும் நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே?

    பேச்சு வந்த மகிழ்ச்சியில் அவன் படபடப்புடன் கேட்டான்.

    இதைக் கேட்டதாலோ என்னவோ, கோயிலின் முன்புறத்திலிருந்த பிரம்மாண்டமான ஆலமரத்தின் ஆயிரமாயிரம் தளிர் இலைகள் சலசலத்தன.

    அது தேவதைகளுக்கான மந்திர உச்சரிப்பு என்று உண்ணிக்குத் தோன்றியது.

    என்னை உங்களுக்குத் தெரியாது இல்லையா? இந்தக் கோயில் பூசாரியின் மகள் நான்!

    உண்ணிக்கிருஷ்ணன் தன்னையும் மீறி முதன் முதலாக அவளைப் பார்த்த சுவரின் பக்கம் திரும்பிப் பார்த்தான்.

    ‘அந்த இடத்தில் தான் பார்த்தது உண்மையான சிற்பமா, அல்லது தேவதையைப் போன்ற இந்தப் பெண்ணையா?’ விடை தெரியாமல் தவித்தான்.

    அவன் மனம் எதையெல்லாமோ யோசித்துக் குழம்புகிறது என்பதைப் புரிந்துகொண்ட மந்தாகினி சொன்னாள்:

    வாங்க போகலாம்!

    வாங்க போறது? கேள்வி நிறைந்த கண்களுடன் அவளையே பார்த்தபடி கேட்டான்."

    பனங்காட்டு மனைக்குதான்!

    அதைக் கேட்டுத் திகைப்படைந்த அவன் விழிகள் மறுகணம் பயத்தால் மிரண்டன: அந்த வீட்டுக்கா, நான் வரமாட்டேன்!

    நான்தான் உங்ககூட இருக்கிறேனே... எதுக்காகப் பயப்படறீங்க?

    காரணமிருக்கு. அங்கே போயிட்டா நாம ரெண்டு பேரும் உயிரோட இருக்க முடியாது!

    அதை, நாம அங்கே போன பிறகு பார்த்துக்கலாம்... வாங்க!

    வேண்டாம். நாம வேற எங்கேயாவது போகலாம்!

    மந்தாகினி தலைஉயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தாள்.

    சரி... ஜாம நட்சத்திரம் மறைஞ்சுட்டது. ராத்திரியோட மூணாவது ஜாமம் ஆரம்பமாயிடுச்சு. என் மடியில தலை வெச்சு இங்கேயே படுத்துக்கங்க.

    அவள் சப்பணமிட்டு அமர்ந்தாள். எந்த விதத் தயக்கமும் இல்லாமல் அவன் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டான் உண்ணிக்கிருஷ்ணன்.

    அடுத்த ஒருசில விநாடிகளுக்குள் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்தான்.

    மண்டபத்தின் நிழல் அவன் முகத்தை மறைக்கவில்லை. அவள், அவன் முகத்திலிருந்த ரோமங்களின் ஊடாக விரல்களை ஓட்டினாள். அவள் விரல் பட்டதாலோ என்னவோ மாயாஜாலம் போல் அவன் முகத்தில் வளர்ந்திருந்த செம்பட்டை கலந்த ரோமங்கள் வழித்தெடுத்தவைபோல் மறைந்தன. அவள், அந்த முகத்தின் கம்பீரமான இளமை ததும்பும் அழகை ரசனையுடன் பார்த்தாள்.

    உண்ணிக்கிருஷ்ணன் சட்டென்று விழித்தாள்.

    கண்ணைத் திறந்து பார்த்தபோது தனது மனைக்குள் இருப்பதை உணர்ந்தான். மிகவும் பழைமையான இந்த மனையின் - நாலு கெட்டின் (வீட்டின் அமைப்பை ஒட்டி எழுந்த காரணப்பெயர்) வெளிப்புறமிருந்த சவுக்கையில்தான் அவன் படுப்பது வழக்கம்.

    பாட்டி இறப்பதற்கு முன்பு வரையில் அவன் வீட்டுக்குள் தான் படுத்திருந்தான். கிழக்குப் புறமிருந்த திட்டிவாசல் வழியாக வெளிச்சம் உட்புறமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

    அவன் எழுந்து உட்கார்ந்தான்.

    வெளிப்புறம் பார்த்தபோது மாடத்திலிருந்த துளசிச் செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் மந்தாகினி.

    கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தான். இருந்தும் அவனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. சந்தேகத்தால் கையின் மணிக்கட்டுப் பகுதியைக் கிள்ளிப் பார்த்தான். வலிக்கவே செய்தது!

    எழுந்து கதவை நோக்கி நடந்தான்.

    விழிச்சிட்டீங்களா? அதோ கிண்டியில் தண்ணீர்! திண்ணைப் பக்கமாகச் சுட்டிக் காட்டினாள்.

    பாசம் பிடித்து, தானியம் இடிக்கும் அறை மூலையில் கிடந்த கிண்டி அப்போது திண்ணையில் பளபளத்துக் கொண்டிருந்தது.

    வாய் கொப்பளித்து முகம் கழுவிவிட்டு வந்தபோது ஆவி பறக்கும் சூடான வரகாபியை அவனிடம் நீட்டினாள்.

    மந்தாகினி! பேசுவதற்காக அவன் வாயைத் திறந்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1