Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aanmeega Agarathi
Aanmeega Agarathi
Aanmeega Agarathi
Ebook249 pages1 hour

Aanmeega Agarathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம். இந்தியா ஒரு ஆன்மிக நாடு. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 36000 கோயில்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. நாம் அடிக்கடி கோயிலுக்குச் செல்லுகிறோம். வீட்டில் விழாக்களை எடுத்து மகிழ்கிறோம். ஆனால் நம்மில் பலர் அனைத்தையும் பெயரளவிலேயேதான் தெரிந்து வைத்திருக்கிறோம். இன்றைய தலைமுறையினருக்கு நமது முன்னோர்களின் அருமை பெருமைகள் தெரிவதில்லை. அவற்றை எடுத்துக் கூறவும் யாரும் முயற்சிப்பதும் இல்லை. எங்களைப் போன்ற எழுத்தாளர்கள்தான் இதுகுறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் வெளிப்பாடே இந்த முயற்சி. இதில் நாம் அன்றாடம் கேள்விப்படும் பலப்பல ஆன்மிக சொற்களுக்கு எளிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. சிறுசிறு குறைகள் இருக்கலாம். சிறு தவறுகளும் இருக்கலாம். அப்படி இருப்பதாக அறிந்தால் அதைத் தயங்காமல் எனது மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். திருத்திக் கொள்ளலாம்.

இந்த ஆன்மிக நூலினை சிறந்த முறையில் மின்புத்தகமாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றி.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580138806597
Aanmeega Agarathi

Read more from R.V.Pathy

Related to Aanmeega Agarathi

Related ebooks

Reviews for Aanmeega Agarathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aanmeega Agarathi - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    ஆன்மிக அகராதி

    Aanmeega Agarathi

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    உங்களோடு ஒரு நிமிடம்

    அட்சய திருதியை

    அட்டவீரட்டனத்தலங்கள்

    அத்வைதம்

    அர்த்தநாரீஸ்வரர்

    அருகம்புல் வழிபாடு

    அரையர் சேவை

    அன்னாபிஷேகம்

    அனுமன் ஜெயந்தி

    அஷ்டலட்சுமிகள்

    ஆச்சாரியர்கள்

    ஆடி அமாவாசை

    ஆடிதபசு

    ஆடிப்பூரம்

    ஆடிப்பெருக்கு

    ஆடிவெள்ளி

    ஆயுதபூஜை

    ஆயுஷ்ய ஹோமம்

    ஆருத்ரா தரிசனம்

    ஆவணி அவிட்டம்

    ஆழ்வார்கள்

    ஆறு வகையான பிரிவுகள்

    ஆனித்திருமஞ்சனம்

    உத்தவ கீதை

    உபநயனம்

    உபநிஷத்

    எண்பத்திரண்டு வார்த்தைகள்

    ஏகாதசி விரதம்

    ஏழுமலை

    ஐந்து வகை பக்திகள்

    கணபதி ஹோமம்

    கந்தசஷ்டி விரதம்

    கஜேந்திர மோட்சம்

    காயத்ரி மந்திரம்

    கார்த்திகை தீபம்

    கார்த்திகை விரதம்

    காரடையான் நோன்பு

    காளிங்க நர்த்தனம்

    கிரிவலம்

    கிருததாரை

    கிருஷ்ணஜெயந்தி

    கிருஷ்ணமந்திரம்

    கும்பமேளா

    குருபூர்ணிமா

    குலசேகரன் படி

    கேதார கௌரி விரதம்

    கைசிக ஏகாதசி

    கொடிமரம்

    கொலு

    கோயில் மண்டபங்கள்

    கோயில் வாகனங்கள்

    கோளறுபதிகம்

    கோஷ்டம்

    சக்கரத்தாழ்வார்

    சக்தி பீடங்கள்

    சகஸ்ரலிங்கம்

    சங்கடஹர சதுர்த்தி

    சடாரி

    சண்டிகேஸ்வரர்

    சண்டிகேஸ்வரி

    சப்தவிடங்கத்தலங்கள்

    சமயக்குரவர்கள்

    சரபேஸ்வரர்

    சரஸ்வதி பூஜை

    சிதம்பர இரகசியம்

    சிவலிங்கம்

    சிவாலய ஓட்டம்

    சிறிய திருவடி எனும் அனுமன்

    சுகப்பிரம்ம மகரிஷி

    சுந்தரகாண்டம்

    சுப்ரபாதம்

    சூரசம்ஹாரம்

    சைதன்யர்

    சொர்க்கவாசல் திறப்பு

    சொர்ண ஆகர்ஷண பைரவர்

    சோமவார விரதம்

    த்வைதம்

    தசதரிசன இராஜகோபுர பிரவேச விழா

    தசரா

    தசாவதாரம்

    தட்சிணாமூர்த்தி

    தத்தாத்ரேயர்

    தல விருட்சம்

    தாருலிங்கம்

    திதி

    திருநாங்கூர் கருடசேவை

    திருவோணம்

    தீட்சை

    தீபாவளி

    துர்க்கை

    துவாரபாலகர்கள்

    துளசி வழிபாடு

    தை அமாவாசை

    தைப்பூசம்

    தைப்பொங்கல்

    தொண்டை நாட்டு திவ்ய தேசங்கள்

    தோப்புக்கரணம்

    நட்சத்திரங்கள்

    நந்தீஸ்வரர் பூஜை

    நமஸ்காரம்

    நரசிம்ம ஜெயந்தி

    நவக்கிரக பூஜை

    நவராத்திரி

    நாயன்மார்கள்

    நாலாயிர திவ்ய பிரபந்தம்

    நிவேதனம்

    நூற்றியெட்டு திவ்ய தேசங்கள்

    பகல் பத்து இராப் பத்து

    பகவத்கீதை

    பஞ்ச கிருத்தியம்

    பஞ்ச கிருஷ்ணத் தலங்கள்

    பஞ்ச கவ்வியம்

    பஞ்ச சபைகள்

    பஞ்ச புத்திரர்கள்

    பஞ்ச பூத ஸ்தலங்கள்

    பஞ்சமாபாதகங்கள்

    பஞ்சயக்ஞ ஹோமம்

    பஞ்சாயுதங்கள்

    பஞ்சாரண்யத் தலங்கள்

    பதினெண் புராணங்கள்

    பலி பீடம்

    பவித்ர உற்சவம்

    பன்னிரு திருமுறைகள்

    பாஞ்சராத்ரம்

    பாவை நோன்பு

    பிரதோஷம்

    பிரம்ம முகூர்த்தம்

    புரட்டாசி சனிக்கிழமை

    புஷ்கரத் திருவிழா

    பெரிய திருவடி எனும் கருடாழ்வார்

    பைரவர் வழிபாடு

    மகரசங்கராந்தி

    மகாமகம்

    மகாளய அமாவாசை

    மயானக்கொள்ளை

    மாவிளக்கு வழிபாடு

    முக்தி தரும் தலங்கள்

    ரதசப்தமி

    ராகு கேது கதை

    லட்சுமி குபேர பூஜை

    லலிதா ஸஹஸ்ரநாமம்

    லிங்கோத்பவர்

    வரலட்சுமி விரதம்

    வராஹிதேவி

    வாஸ்து

    விநாயக சதுர்த்தி

    விநாயகரின் அஷ்ட அவதாரங்கள்

    வில்வம்

    விஜயதசமி

    விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

    விஸ்வரூப தரிசனம்

    வைகானசம்

    வைகுண்ட ஏகாதசி

    ஜலபரிஷேஸனம்

    ஜேஷ்டாதேவி

    ஹயக்ரீவ ஜெயந்தி

    ஹயக்ரீவர்

    ஹரிபலம்

    ஸ்மிருதி

    ஸ்ரீஇராமநவமி

    ஸ்ரீசக்கர வழிபாடு

    உங்களோடு ஒரு நிமிடம்

    வணக்கம். இந்தியா ஒரு ஆன்மிக நாடு. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 36000 கோயில்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. நாம் அடிக்கடி கோயிலுக்குச் செல்லுகிறோம். வீட்டில் விழாக்களை எடுத்து மகிழ்கிறோம். ஆனால் நம்மில் பலர் அனைத்தையும் பெயரளவிலேயேதான் தெரிந்து வைத்திருக்கிறோம். இன்றைய தலைமுறையினருக்கு நமது முன்னோர்களின் அருமை பெருமைகள் தெரிவதில்லை. அவற்றை எடுத்துக் கூறவும் யாரும் முயற்சிப்பதும் இல்லை. எங்களைப் போன்ற எழுத்தாளர்கள்தான் இதுகுறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் வெளிப்பாடே இந்த முயற்சி. இதில் நாம் அன்றாடம் கேள்விப்படும் பலப்பல ஆன்மிக சொற்களுக்கு எளிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. சிறுசிறு குறைகள் இருக்கலாம். சிறு தவறுகளும் இருக்கலாம். அப்படி இருப்பதாக அறிந்தால் அதைத் தயங்காமல் எனது மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். திருத்திக் கொள்ளலாம்.

    இந்த ஆன்மிக நூலினை சிறந்த முறையில் மின்புத்தகமாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றி.

    வாழ்த்துக்களுடன்

    ஆர்.வி.பதி

    rvpathi@yahoo.com

    ***

    அட்சய திருதியை

    அட்சய திருதியை என்பது சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரும் திருதியை நாளாகும். அட்சயம் என்றால் வளருதல் என்று அர்த்தம். இத்தகைய நன்னாளில் எந்த நல்ல செயலைச் செய்தாலும் அது மேலும் வளரும் என்பத ஐதீகம். குழந்தைகளின் கல்வியைத் துவங்குதல், அன்னதானம் செய்தல், இல்லாதவர்க்குப் பொருளுதவி செய்தல், புதிய தொழில் தொடங்குதல் போன்றவற்றை இந்த நன்னாளில் செய்தால் அவை மென்மேலும் நல்ல முறையில் வளர்ந்து அனைவருக்கும் பயனளிக்கும் என்பதே இந்த நன்னாளின் பொருள். தங்க நகை வியாபாரிகள் இந்த நாளை தங்கள் வியாபாரத்துடன் தொடர்புபடுத்தி தங்கள் வாணிபத்தை பெருக்கிக் கொள்ளுகிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

    ஸ்ரீகண்ணபிரானின் ஆத்ம நண்பரான குசேலர் வறுமையில் வாடினார். ஒருநாள் அவர் தன் நண்பனைச் சந்திக்க தனது கிழிந்த மேலாடையில நண்பனுக்குப் பிடித்தமான அவலை ஒரு பிடியளவு கொண்டு சென்றார். தன் நண்பன் குசேலரை வரவேற்ற ஸ்ரீகண்ணபிரான் அவன் கொண்டு வந்த அவலை வாங்கி சாப்பிட்டு அட்சயம் என்றார். இதனால் குலேசர் குபேர சம்பத்து பெற்றார் என்பது புராணக்கதை. கண்ணபிரான் அவலைத் தின்று குசேலருக்கு அருள்புரிந்தது இந்த அட்சய திருதியை நன்னாளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    அட்சய திருதியை நன்னாளில் ஏழைகளுக்கு ஆடைதானமும் அன்னதாமும் செய்தால் மறுபிறவியில் இராஜவாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம். கர்நாடக மாநிலத்தில் பெண்கள் இந்த நாளில் சுவர்ண கௌரி விரதத்தைக் கடைபிடிப்பது வழக்கம். இந்த நன்னாளில் சுமங்கலிப் பெண்கள் சுமங்கலி பூஜை செய்வதும் நன்மை பயக்கும்.

    ***

    அட்டவீரட்டனத்தலங்கள்

    சிவபெருமான் எட்டு வகையான வீரச்செயல்களை எட்டு தலங்களில் நடத்தினார். இவையே அட்ட வீரட்டனத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பிரம்மனின் தலையைக் கொய்த தலம் திருக்கண்டியூர். முப்புரத்தையும் எரித்த தலம் திருவதிகை. காமனை அழித்த தலம் திருக்குறுக்கை. சலந்தாசுரனை அழித்த தலம் திருவிற்குடி. அந்தகாசுரனை அழித்த தலம் திருக்கோவிலூர். தட்சனின் யாகத்தை அழித்த தலம் திருப்பறியலூர். யானைத் தோலை உரித்து தரித்த தலம் திருவழுவூர். மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்த தலம் திருக்கடவூர். இந்த எட்டு திருத்தலங்களும் அட்ட வீரட்டனத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    ***

    அத்வைதம்

    பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறானவை அல்ல. அவை இரண்டும் ஒன்றே என்பதே ஆதிசங்கர்ர் நிறுவிய சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தம் அத்வைதம் என்று பெயரால் அழைக்கப்படுகிறது.

    ***

    அர்த்தநாரீஸ்வரர்

    சிவன் பாதியாகவும் சக்தி பாதியாகவும் இணைந்த இறைவனின் ஒரு அதிசயத் திருவுருவமே அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. அர்த்த என்றால் பாதி என்று பொருள். இத்தகைய திருவுருவம் கொண்ட கோயில் தமிழ்நாட்டில் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது. அம்மன் பாதி உருவத்தைக் கொண்டிருப்பதால் பாகம் பிரந்த அம்மன் என்று அழைக்கப்படுகிறார். ஒரே சமயத்தில் சிவனையும் சக்தியையும் வழிபடுவது மிகுந்த பலனைத்தரும் என்பதால் அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டானால் இந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருத்து வேறுபாடுகள் மறைந்து கணவனும் மனைவியும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

    ***

    அருகம்புல் வழிபாடு

    விநாயகரை அருகம்புல் அர்ச்சனை செய்து வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளது. இதுகுறித்த ஒரு புராணக்கதை உண்டு. எமனுடைய மகன் அனலன் என்பவன் பிறருடைய உடலுக்குள் புகுந்து அவர்களை உருக்கித் தொந்தரவு செய்து கொண்டிருந்தான். மண்ணுலகத்தில் இருப்பவர்களின் உடலுக்குள் புகுந்து வெப்பத்தை ஏற்படுத்தித் துன்புறுத்திக் கொண்டிருந்தான். பின்னர் தேவலோகத்தில் உள்ள தேவர்களின் உடலுக்குள் புகுந்து அவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். தேவர்கள் விநாயகப்பெருமானிடம் முறையிட அவரும் அனலனைத் தன் தும்பிக்கையில் பிடித்து விழுங்கினார். அவனை விழுங்கிய அடுத்த நொடியிலிருந்து அனைவருடைய வயிறும் வெப்பத்தால் எரியத் தொடங்கியது. அனைவரும் வெப்பம் தாங்கமுடியாமல் தடுமாறி நின்றனர். விநாயகரின் உடல் குளிர்ச்சி அடைந்தால்தான் அனைவரின் பிரச்சினையும் தீரும் என்பதை உணர்ந்த தேவர்கள் சந்திரனின் குளிர்ச்சியான ஒளிக்கற்றைகளை விநாயகரின் திருமேனியில் சாற்றினர். ஆனாலும் பிரச்சினை தீரவில்லை. இதன்பின் முனிவர்கள் ஒவ்வொருவரும் 21 அருகம்புல்லை விநாயகரின் திருமேனியில் சாற்ற விநாயகரின் வயிறு குளிர்ந்தது. இதனால் அனைவரும் துன்பம் நீங்கினர். இதன் பின்னால் அனைவரின் வெப்பமும் நீங்கி சகஜநிலையை அடைந்தார்கள். இதன்பின்னரே விநாயகப்பெருமானுக்கு அருகம்புல்லைச் சாற்றி வழிபடும் வழக்கம் தோன்றியது.

    ***

    அரையர் சேவை

    கி.பி.பத்தாம் நூற்றாண்டில் இருந்து தமிழ்நாட்டில் மகாவிஷ்ணு வழிபாட்டில் அரையர் சேவை முக்கியமான ஒரு வழிபாடாக கருதப்படுகிறது. வைணவத்தைச் சேர்ந்த ஒரு ஆண் பிரத்யோகமாக உடைகளை அணிந்து நாலாயிரத்திவ்ய பிரபந்தப் பாடல்களை நாட்டிய நாடகமாடிப் பாடி நடித்து மகாவிஷ்ணுவை வழிபடும் நிகழ்ச்சி அரையர் சேவை என்று அழைக்கப்படுகிறது.

    பிரத்யோகமான உடை அணிந்து நாலாயிரத் திவ்ய ப்ரபந்தங்களைப் பாடி மகாவிஷ்ணுவை வழிபடும் நிகழ்ச்சியே அரையர் சேவை எனப்படுகிறது. இதற்காக ஒரு வைணவக் குடும்பத்திலிருநது ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவரே இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவர். இது அந்த குடும்பத்திற்கான உரிமையாகக் கருதப்படுகிறது. இத்தகைய அரையர்களுக்கு விண்ணப்பம் செய்வார், நம்பாடுவான், இசை அறியும் பெருமான், தம்பிரான்மார் என்ற வேறு பெயர்களும் உண்டு.

    அரையர் சேவை நிகழ்ச்சியில் திருப்பல்லாண்டு, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருப்பள்ளி எழுச்சி, அமலனாதிப்பிரான், கண்ணிநுண்சிறுத்தாம்பு, பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருவாய்மொழி, பெரிய திருமடல், சிறிய திருமடல் போன்ற பாசுரங்களைப் பாடுவது வழக்கம்.

    தமிழ்நாட்டில் பல வைணவத்தலங்களில் அரையர் சேவை விழா நடத்தப்பட்டாலும் ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ஆழ்வார்திருநகரி வைணவத்தலங்களில் இந்த விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    ***

    அன்னாபிஷேகம்

    தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பது ஆன்றோர் வாக்கு. எவ்வளவு பெரிய பெரிய தானங்களைச் செய்திருந்தாலும் அது பசி என்று நம்மை நாடி வரும் ஒருவருக்கு நாம் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது. அந்த அளவிற்கு அன்னதானம் மிக உயர்வாகக் கருதப்படுகிறது. பஞ்ச பூதங்களின் கலவையே அன்னம். சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவது அன்னாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது.

    ஒரு சமயம் பிரம்மதேவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவபெருமானுக்கு நிகரானவர் என்ற அகந்தை அவருக்கு ஏற்பட்டது. இதை அறிந்த சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையைத் தன் கைகளால் கொய்தார். அப்படி துண்டிக்கப்பட்ட பிரம்மனின் தலையானது சிவபெருமானின் கையைக் கவ்விக் கொண்டது. இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. சிவனின் கையைக் கவ்விக் கொண்ட பிரம்மனின் கபாலம் பிச்சைப் பாத்திரமாக மாறியது. அந்த கபாலத்தில் அன்னமிட்டு அது முழுமையாக நிறையும் போதுதான் கபாலமானது சிவபெருமானின் கையை விட்டு அகலும் என்பது சாபம்.

    சிவபெருமான் காசிக்குச் செல்ல அங்கு அன்னபூரணி அவருக்கு அன்னமிட அவளுடைய அன்பின் காரணமாக கபாலம் அன்னத்தால் நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக சாப விமோசம் ஏற்பட்டு கபாலம் கீழே விழுந்து சிவபெருமானின் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கியது. இவ்வாறு அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம் ஐப்பசி மாத பௌர்ணமி தினமாகும். இதன் காரணமாகவே ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் சிவத்தலங்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகங்களில் மிகவும் சிறப்பாகக் கருதப்படுவது அன்னாபிஷேகமாகும்.

    ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த நன்னாளில் லிங்கத்திருமேனியை அன்னத்தால் அலங்கரித்து அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இந்த அன்னப்பிரசாதமானது மனிதர்களுக்கும் நீர் நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

    சமைக்கப்பட்ட அன்னத்தை லிங்கத்திருமுனி முழுவதையும் சமைத்து ஆற வைக்கப்பட்ட அன்னத்தால் மறைப்பார்கள். அதன் மீது காய் கனி வகைகளை படைப்பார்கள். மந்திர பாராயணங்களோடு வழிபாட்டினை முடித்து லிங்கத்தின் ஆவுடையார் மற்றும் அடிப்பாகத்தில் சாத்தப்பட்ட அன்னத்தை எடுத்து நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கு உணவாக வேண்டும் என்ற நோக்கத்தில் கோயில் குளம், ஆறு முதலான நீர்நிலைகளில் கரைப்பார்கள். பாணத்தின் மீது படைக்கப்பட்ட அன்னத்தை எடுத்து மனிதர்களுக்குப் பிரசாதமாக விநியோகிப்பார்கள். இந்த பிரசாதம் நோய் நொடிகள் அண்டாது நம்மைப் பாதுகாக்கும் சக்தி நிறைந்தது. இந்த பிரசாதத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1