Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thigaikka Vaikkum Dindigul
Thigaikka Vaikkum Dindigul
Thigaikka Vaikkum Dindigul
Ebook113 pages37 minutes

Thigaikka Vaikkum Dindigul

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“பயண இலக்கியம் படைப்பதென்பது ஒரு தனி ஆற்றல். எப்படி சிறுகதை, புதினம், கவிதை எல்லாம் தனித்தனி ஆற்றல் தேவைப்படும் இலக்கிய வகையோ அப்படிப் பயண இலக்கியமும் ஒரு தனித்திறன் தேவைப்படும் எழுத்துக்கலை” என்பார் கலைமாமணி திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்.

அந்த வகையில் தான் சென்று வந்த சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பற்றி எழுதுவதில் தனித்திறன் பெற்று தனி முத்திரை பதித்து வருகிறார் எழுத்தாளர் ஆர்.வி.பதி அவர்கள். அதற்கு ஓர் எடுத்துக் காட்டு அவர் எழுதியள்ள “திகைக்க வைக்கும் திண்டுக்கல்” என்ற நூல் ஆகும். திண்டுக்கல் பெயர்க்காரணம் கோட்டை ஓர் அறிமுகம் திண்டுக்கல் பூட்டு காந்தி மகாத்மாவும் திண்டுக்கல்லும் என திண்டுக்கல் பற்றிப் பல சுவையான அரிதானத் தகவல்களை அவருக்கே உரிய எளிய தமிழ்நடையில் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்.

Languageதமிழ்
Release dateOct 22, 2022
ISBN6580138809190
Thigaikka Vaikkum Dindigul

Read more from R.V.Pathy

Related to Thigaikka Vaikkum Dindigul

Related ebooks

Related categories

Reviews for Thigaikka Vaikkum Dindigul

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thigaikka Vaikkum Dindigul - R.V.Pathy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திகைக்க வைக்கும் திண்டுக்கல்

    Thigaikka Vaikkum Dindigul

    Author:

    ஆர். வி. பதி

    R.V.Pathy
    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    ஆர்.வி.பதி

    திண்டுக்கல் - பெயர்க் காரணம்

    வணிகத் தலங்கள்

    கோட்டை ஓர் அறிமுகம்

    காந்தி மகாத்மாவும் திண்டுக்கல்லும்

    மலைகளின் இளவரசி கொடைக்கானல்

    சிறுமலை

    திண்டுக்கல் இலக்கியவாதிகள்

    காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்

    சின்னாளப்பட்டி

    திருமலைக்கேணி

    திண்டுக்கல் பழங்குடியினர்

    ஆத்தூர் காமராஜர் அணை

    திண்டுக்கல் பிரியாணி

    கோபால்பட்டி பால் பன்

    பார்வை நூல்கள்

    ஆர்.வி.பதி

    அணிந்துரை

    மா. கமலவேலன்

    எழுத்தாளர்

    பால சாகித்ய புரஸ்கார் விருதாளர்

    116 மாசிலாமணிபுரம்

    திண்டுக்கல் 624005

    9942173875

    பயண இலக்கியம் படைப்பதென்பது ஒரு தனி ஆற்றல். எப்படி சிறுகதை, புதினம், கவிதை எல்லாம் தனித்தனி ஆற்றல் தேவைப்படும் இலக்கிய வகையோ அப்படிப் பயண இலக்கியமும் ஒரு தனித்திறன் தேவைப்படும் எழுத்துக்கலை என்பார் கலைமாமணி திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்.

    அந்த வகையில் தான் சென்று வந்த சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பற்றி எழுதுவதில் தனித்திறன் பெற்று தனி முத்திரை பதித்து வருகிறார் எழுத்தாளர் ஆர்.வி.பதி அவர்கள். அதற்கு ஓர் எடுத்துக் காட்டு அவர் எழுதியள்ள திகைக்க வைக்கும் திண்டுக்கல் என்ற நூல் ஆகும்.

    திண்டுக்கல் பெயர்க்காரணம்

    கோட்டை ஓர் அறிமுகம்

    திண்டுக்கல் பூட்டு

    காந்தி மகாத்மாவும் திண்டுக்கல்லும்

    என திண்டுக்கல் பற்றிப் பல சுவையான அரிதானத் தகவல்களை அவருக்கே உரிய எளிய தமிழ்நடையில் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்.

    மலைகளின் இளவரசி கொடைக்கானல் பற்றி மனம் மகிழ நெகிழக் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.

    காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது குறித்த வரலாறு மிகவும் சுவையானது. மாவட்ட மக்களில் பலர் அறியாததும் கூட.

    நாடா கொன்றோ காடா கொன்றோ

    அவலா கொன்றோ மிசையா கொன்றோ

    எவ்வழி நல்லவர் ஆடவர்

    அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்:187)

    புறநானூற்றுப் பாடலை நினைவில் கொண்டு, திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் வாழ்ந்த மற்றும் தற்போது வாழ்ந்து வரும் எழுத்தாளர் பெருமக்கள் பற்றி பெருமையுடன் பதிவு செய்துள்ளார் நண்பர் ஆர்.வி.பதி.

    அறிவுப்பசிக்குத் தீனி போடுவது போல் வயிற்றுப் பசிக்கும் தீனி போட்டுள்ளார் அவர்.

    திண்டுக்கல் பிரியாணி ஓ... அதன் அருமை… பெருமை… ருசி படித்துப் பாருங்கள்.

    கோபால்பட்டி பால் பன் படிக்கப் படிக்கத் திகட்டாமல் தித்திக்கிறது.

    பழகிய மனிதர்கள், பார்த்த இடங்கள் பற்றிப் பதிவு செய்வதில் படைப்பாளர் ஆர்.வி.பதி அவர்கள் தனித்து நிற்கிறார். அது இறைவன் அவருக்கு அளித்த வரம் என்றே சொல்லலாம்.

    பயணம் தொடரட்டும்

    பணி, எழுத்துப்பணி என்றும் தொடரட்டும்.

    அன்புடன்

    மா. கமலவேலன்

    திண்டுக்கல்

    24.07.2022

    ஆர்.வி.பதி

    அன்புடையீர்

    வணக்கம். நான் 25.05.2022 முதல் 27.05.2022 வரை திண்டுக்கல் பயணம் மேற்கொண்டேன். திண்டுக்கல்லை அடைந்ததும் நேராக மலைக்கோட்டைக்குச் சென்றேன். அங்கு சுமார் இரண்டு மணி நேரம் முழுவதுமாகச் சுற்றிப் பார்த்தேன். பின்னர் எனது நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான திரு.மா. கமலவேலன் அவர்களை சந்தித்தேன். அவர் திண்டுக்கல் மலைக்கோட்டையின் பெருமையினைப் பற்றி எடுத்துரைத்தார்.

    அடுத்தநாள் மாலை நான் தங்கியிருந்த இடத்திற்கு நண்பர் திரு.ஏ.ஆர்.முருகேசனுடன் வந்து என்னை சந்தித்து திண்டுக்கல் பற்றிய மூன்று நூல்களை ஒப்படைத்தார். மூன்றுமே முத்தான வரலாற்று நூல்கள். அவற்றைப் படிக்கத் தொடங்கினேன். திண்டுக்கல் ஒரு சரித்திர பிரசித்தி பெற்ற நகரம் என்பதை உணர்ந்தேன். அவ்வப்போது நான் பார்த்த மலைக்கோட்டைக் காட்சிகளும் என் கண்முன்னே விரிந்தன.

    மலைக்கோட்டையை நிறைய புகைப்படங்கள் எடுத்து வைத்திருந்தேன். திண்டுக்கல் ஏராளமான சிறப்பு அம்சங்களையும் சுற்றுலா மையங்களையும் கொண்டது. இங்கு கிடைக்கும் சிறுமலை வாழைப்பழம், கோபால்பட்டி பால் பன், பிரியாணி முதலான உணவு வகைகள் மிகவும் பிரபலமாகத் திகழ்கின்றன. சிறந்த கோடைவாசஸ்தலமான கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. திண்டுக்கல் குறித்து ஏராளமான தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருந்தன. பின்னர் இதையே ஒரு நூலாக்க முடிவு செய்து முழுமூச்சாகப் பணிகளைத் தொடர்ந்தேன். இதுவே இந்த நூல் உருவான பின்னணியாகும்.

    இதை ஒரு சுற்றுலா நூல் வரிசையாகவும் கொள்ளலாம். முதன்முறையாக திண்டுக்கல் செல்பவர்களுக்கு இந்நூல் நிச்சயம் ஒரு வழிகாட்டியாக அமையும். இந்நூல் உருவாகக் காரணமானவரும் அணிந்துரை வழங்கி இந்நூலுக்குப் பெருமை சேர்த்துள்ள புகழ்பெற்ற எழுத்தாளருமான திரு.மா.கமலவேலன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. மேலும் இந்த நூலுக்கு சில தகவல்களைத் தந்து உதவிய திண்டுக்கல் கவிஞர்.பூர்ணா அவர்களுக்கும் நன்றி.

    அன்புடன்

    ஆர்.வி.பதி

    ஜீலை 2022

    திண்டுக்கல் - பெயர்க் காரணம்

    திண்டுக்கல் நகரமானது பல்வேறு காலகட்டங்களில் திண்டீச்சுரம், பத்மகிரி, நெல்லிவனம், கலிக்கா பாத், திண்டிகல் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. கி.பி.ஏழாம் நூற்றாண்டில் அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரப்பதிகத்தின் மூலம்

    Enjoying the preview?
    Page 1 of 1