Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuzhanthaigal Kondadum Kudiyarasu Thalaivar
Kuzhanthaigal Kondadum Kudiyarasu Thalaivar
Kuzhanthaigal Kondadum Kudiyarasu Thalaivar
Ebook127 pages44 minutes

Kuzhanthaigal Kondadum Kudiyarasu Thalaivar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“இந்தியா என் தாய் நாடு: இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர்" என்று தினமும் மாணவர்கள் பள்ளிக் கூடங்களில் உறுதிமொழி எடுப்பார்கள். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பலரும் அந்த உறுதிமொழியை மறந்து விடுவார்கள். ஆனால் பள்ளி வாழ்க்கையிலேயே ஒருவர் நாட்டுப்பற்றை வளர்த்துக் கொண்டார். எல்லோரையும் உறவினர்களாகவே கருதினார். அப்பா, அம்மா, ஆசிரியர் மூவரையும் மதித்து வணங்கினார். இறைவனின் கருணையை எப்போதும் மனத்தில் எண்ணி வழிபட்டார். அவர்தான் 'அப்துல் கலாம்', 'ராக்கெட் மனிதர்' என்று பெருமையோடு அழைக்கப்படுகிறார்.

எளிமையானவர்; அடக்கத்தை அணிகலனாகக் கொண்டவர். விண்வெளி ஏவுகணைகளைக் கண்டுபிடிப்பதில் சாதனை படைத்து விண்ணைத் தொட்டவர். அதேபோல் தமிழ் இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டவர். தாய்மொழியின் சிறப்பை உணர்ந்தவர். கவிதைகள் எழுதுவார், வீணை வாசிப்பார். பல்துறை வித்தகர் அப்துல் கலாம்.

அப்துல் கலாம் அவர்கள் இன்று நம் நாட்டுக் குடியரசுத் தலைவர். அதுவும் குழந்தைகள் போற்றும் குடியரசுத் தலைவர்.

'குழந்தைகள் கொண்டாடும் குடியரசுத் தலைவர்' நூலில் கலாம் அவர்களின் குணநலன்களைப் படிப்பதன் மூலம் நம் இந்திய நாட்டுக் குழந்தைகள் இணையிலாச் சிறப்புகள் எல்லாம் பெறுவர். வளமான இந்தியா அவர்களால் உருவாகும்.

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580141907045
Kuzhanthaigal Kondadum Kudiyarasu Thalaivar

Read more from M. Kamalavelan

Related to Kuzhanthaigal Kondadum Kudiyarasu Thalaivar

Related ebooks

Reviews for Kuzhanthaigal Kondadum Kudiyarasu Thalaivar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuzhanthaigal Kondadum Kudiyarasu Thalaivar - M. Kamalavelan

    https://www.pustaka.co.in

    குழந்தைகள் கொண்டாடும் குடியரசுத் தலைவர்

    Kuzhanthaigal Kondadum Kudiyarasu Thalaivar

    Author:

    மா. கமலவேலன்

    M. Kamalavelan
    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    புத்தகங்களே கனவுகளை வளர்க்கும்,

    கனவுகள் எண்ணங்களை உண்டாக்கும்,

    எண்ணங்கள் செயல்களை உருவாக்கும்.

    ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

    குழந்தைகள் கொண்டாடும் குடியரசுத் தலைவர்

    பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்

    நிறுவனர்: மெய்யப்பன் தமிழாய்வகம்

    இந்தியக் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். அவர்களை நேசிப்பவர் யார்? நூறுகோடி மக்களின் தலைவர் அல்லவா அவர்களை விரும்புகிறார்! அவர்தாம் அப்துல் கலாம். அவர் குடியரசுத் தலைவர் என்பதோடு குழந்தைகள் கொண்டாடும் குடியரசுத் தலைவர். குழந்தைகளை நேசிக்கும் பெருமனம் படைத்த குணக்குன்று அவர். துணைக்கண்டமனைய இந்தியப் பெருநாட்டில் ஒரு மாமனிதர் - மாமேதை மக்களால் நேசிக்கப்படுகிறார் என்பதும் குழந்தைகளிடையே இருப்பதில் அவர் கொள்ளை இன்பம் அடைகிறார் என்பதும் பாரதநாட்டின் பாலர்கள் அனைவரும் அப்துல் கலாம் அவர்களைத் தங்கள் உறவினர் போலக் கருதி மகிழ்கின்றனர் என்பதும் எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி!

    சாச்சா நேரு, நேருமாமா என்று 50, 60களில் இந்தியக் குழந்தைகள் தலைமை அமைச்சர் நேருவைக் கொண்டாடியது போல, இந்த 2000இல் இந்தியக் குழந்தைகளின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பவர் அறிவின் அடையாளமாய், எளிமையின் எடுத்துக்காட்டாய், குழந்தை உள்ளம் கொண்டவராய்த் திகழும் நம் குடியரசுத் தலைவர். பிள்ளை உள்ளம்போல் வெள்ளை உள்ளம் என்பார் உளநூலார். இந்த அறிவியல் உண்மைக்கு வாழ்கால சாட்சியம் நம் குடியரசுத் தலைவர். பதவிகள் சிலருக்குச் சிறப்பு நல்கும். பதவிக்குச் சிறப்புச் சேர்த்த பண்பாளர் இவர். இது ஒப்புக்குச் சொல்வது அல்ல, உண்மை. அவரைக் கண்டவர்கள் அவரோடு பேசியவர்கள், அவரோடு பழகியவர்கள் அவர்தம் ஆழ்ந்த அன்பினை அறிவர். ஒருதேசத்தின் தலைவர் எளிமையின் எளிமையாய் இருப்பது அருமையின் அருமை. மரபு மரபு என்று சொல்லி மனிதர்களிடையே இடைவெளியைப் பெருக்கும். அரசு சட்டவிதிகளுக்கிடையே இவர் விதிவிலக்கு. மனிதநேயம் இவர் விதிக்கும் விதி. கள்ளமிலாச் சிறுவர்களே இவர்காணும் இந்தியக் கனவின் ஆணிவேர். அற்புதம் அதி அற்புதம், ஒரு குடியரசுத் தலைவர் குழந்தைகளே குவலயச் செல்வம் எனக் கொண்டாடுவது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பைந்தமிழ்ப் பழமொழி; பட்டறிவின் வெளிப்பாடு. குடியரசுத் தலைவர்பற்றி விஞ்ஞானி நெல்லை சு. முத்து எழுதிய நூல் ஒன்றினை மகிழ்ச்சியுடன் வெளியிட்டது. அது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பாட்டுடைத் தலைவரின் பண்புநலன்களால் அறிஞர் பலரால் போற்றப்பெறுகிறது.

    அந்தவகையில் உலகம் கொண்டாடும் அணுவிஞ்ஞானி, ஆற்றலாளர், அரும்பெருங்குணங்களின் சொந்தக்காரர் வரலாற்றைக் குழந்தைகள் கொண்டாடும் வகையில் சிறுகதைச் சிற்பி மா. கமலவேலன் எழுதியுள்ளார்கள். சிறுகதைகள், நாவல் மூலம் பெரும்புகழ்பெற்ற அகிலன் அவர்கள் செந்தமிழ்நாட்டுச் சிறுவர்களுக்கெனக் குழந்தை இலக்கியம் படைத்தார்கள். குழந்தை இலக்கியத்திற்கு இயக்கம் கண்ட குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் சான்றோர்கள், பெருமக்கள், தலைவர்கள் வரலாற்றைக் குழந்தைகளுக்காகவே பழகு தமிழில் பைந்தமிழ் நூல்களாக வடித்தார்கள்.

    சான்றோர் சென்ற செந்நெறியில், மேதைகள் வகுத்த பாதையில் எழுத்தாளர் கமலவேலன் குடியரசுத் தலைவரின் பண்புநலன்களை உயிரோவியமாக்குகிறார். இதுவெறும் கதையன்று. கற்பனையன்று. வாழுங்காலத்து வரலாறு படைத்த ஒரு மாமனிதரின் மாண்பினை குழந்தையர் நெஞ்சில் பதியவைக்கும் வண்ண ஓவியம். வளரும் பயிர்களுக்கு நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் தரும் ஒரு நூல். குழந்தைகளும் சிறுவர்களும் மிட்டாய்களை விரும்பிச் சுவைப்பது போல, இச்செந்தமிழ் நூலைச் சுவைத்துச் சிந்தை மகிழ்வர். நல்லோரைப் போற்றும் நாடே உயரும் என்பது பழமொழி. நம்நாட்டுக் குழந்தைகள் பழமொழிக்கு வாழ்வு தரும் புதுமைப்பூக்கள். ஓவியக்கலையைக் கற்றுத்தரும் ஓவியர் ஆழி அவர்கள் தம் கைவண்ணத்தால் நூல் வண்ணத்தினைக் கூட்டியுள்ளார். நூலை ஓவியமாக உருவாக்கிய நூலாசிரியர் கமலவேலனுக்கும் உயிர்த்துடிப்புள்ள ஓவியம் வரைந்த ஓவியர் ஆழி அவர்களுக்கும் இளஞ்சிறார்கள் நன்றி என்றும் உரியது.

    முன்னுரை

    இந்தியா என் தாய் நாடு: இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர் என்று தினமும் மாணவர்கள் பள்ளிக் கூடங்களில் உறுதிமொழி எடுப்பார்கள். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பலரும் அந்த உறுதிமொழியை மறந்து விடுவார்கள். ஆனால் பள்ளி வாழ்க்கையிலேயே ஒருவர் நாட்டுப்பற்றை வளர்த்துக் கொண்டார். எல்லோரையும் உறவினர்களாகவே கருதினார். அப்பா, அம்மா, ஆசிரியர் மூவரையும் மதித்து வணங்கினார். இறைவனின் கருணையை எப்போதும் மனத்தில் எண்ணி வழிபட்டார். அவர்தான் 'அப்துல் கலாம்', 'ராக்கெட் மனிதர்' என்று பெருமையோடு அழைக்கப்படுகிறார்.

    எளிமையானவர்; அடக்கத்தை அணிகலனாகக் கொண்டவர். விண்வெளி ஏவுகணைகளைக் கண்டுபிடிப்பதில் சாதனை படைத்து விண்ணைத் தொட்டவர். அதேபோல் தமிழ் இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டவர். தாய்மொழியின் சிறப்பை உணர்ந்தவர். கவிதைகள் எழுதுவார், வீணை வாசிப்பார். பல்துறை வித்தகர் அப்துல் கலாம்.

    அப்துல் கலாம் அவர்கள் இன்று நம் நாட்டுக் குடியரசுத் தலைவர். அதுவும் குழந்தைகள் போற்றும் குடியரசுத் தலைவர்.

    நாட்டின் பன்னிரண்டாவது குடியரசுத் தலைவர் அவர். தலைநகர் டில்லியில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் மாணவர்கள் கலந்து கொள்ளச் செய்தார் அவர். குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் மாணவர்கள் கலந்து கொள்வது இதுவே முதல்முறை.

    அன்புருவானவர் நம் குடியரசுத்தலைவர். அனைவரும் அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொண்டால் நாமும் அன்பு வாழ்க்கையைக் கடைப்பிடிக்க முடியும். எனவே அவரது வாழ்க்கை வரலாற்றைக் குழந்தைகட்கு ஏற்றவாறு எளிய நடையில் ஆக்கியுள்ளேன்.

    குழந்தைகள் கொண்டாடும் குடியரசுத் தலைவர் - நூல் எழுத வேண்டுமென்று திட்டமிட்டவுடன் நான் முதலில் சென்ற இடம் இராமேஸ்வரம்.

    இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் கலாம் அவர்களின் சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் வசித்து வருகிறார். அவரது புதல்வர் திரு. ஜெயினலாபுதீன் அவர்கள் கலாம் பற்றிப் பல

    Enjoying the preview?
    Page 1 of 1