Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kudiyarasu Thalaivar K.R.Narayanan
Kudiyarasu Thalaivar K.R.Narayanan
Kudiyarasu Thalaivar K.R.Narayanan
Ebook165 pages50 minutes

Kudiyarasu Thalaivar K.R.Narayanan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரத நாட்டின் மிக உன்னத பதவி குடியரசுத் தலைவர் பதவி ஆகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவர் அதிக அதிகாரங்கள் படைத்தவராகத் தோன்றினாலும் உண்மையில் அவர் பாராளுமன்றத்தின் அறுதிப்பெரும் பான்மை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவரே என்பதும் நாம் அறிந்ததே. என்றாலும், நாடு நெருக்கடியான காலகட்டங்களைச் சந்திக்கும் போது குடியரசுத் தலைவர் தமது தனித்த அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாட்டை வழி நடத்திச்செல்கிறார் என்பதும் வரலாறு காட்டும் உண்மையாகும்.

இந்தச் சூழ்நிலையில்தான் இந்தியத் திருநாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவராக மேன்மை மிகு நாராயணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத்தலைவர் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்தான் குடியரசுத் தலைவராக வரப்போகிறார் என்று ‘யூகங்கள்’ தோன்றிய போதே, பத்திரிகைகள் இவரைப்பற்றிப் பத்தி பத்தியாக எழுதத் தொடங்கின. பதவிக்கு வரப்போகின்றவர்களைப் பற்றி ‘ஆஹா’ ‘ஓஹோ’ என்று புகழாரம் சூட்டுவது நமது இயல்பாயிற்றே! அப்படித்தான் இந்தச் செய்திகளும் என்று நான் முதலில் நினைத்தேன் ஆனால், பின்னர் தொடர்ந்து, அனைத்துச் செய்தித்தாள்களும் நாராயணனைப் பற்றி வெளியிட்ட செய்திகள், தகவல்கள் எல்லாம் நெஞ்சத்தைத் தொடும் வண்ணம் இருந்தன. அதிலும் சில செய்திகள் நெஞ்சைத் தொட்டது மட்டுமல்ல... சுட்டன... தைத்தன.

நாராயணன் அவர்கள் வாழ்க்கையில் பட்ட அவலங்கள், அல்லல்கள் என்னைச் சிந்திக்கவைத்தன.

முதல் தோல்வியிலேயே முகத்தை மூடிக்கொண்டு மூலையில் முடங்கிவிடும் முதுகெலும்பற்ற இந்திய நாட்டு இளைஞர்கள் இவரது வாழ்க்கை வரலாற்றை அவசியம் உணர வேண்டும் உணர வைக்க வேண்டும் என்ற உந்துதல் என் மனத்தில் எழுந்தது.

அதன் பின்னர் நான் ஆர்வத்தோடு, அனைத்துத் தமிழ், ஆங்கில நாளேடுகளைப் படிக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றிய செய்திகளைத் தனியே ஒழுங்குபடுத்தி... சேர்க்கத் தொடங்கினேன்.

வார, திங்கள் இதழ்கள் எல்லாவற்றிலிருந்தும், தகவல்களைத் தொகுத்தேன். பின்னர் அவற்றை ஒன்றோடொன்று பொருத்திப் படித்துப் பார்த்து, உண்மைகளைச் சரிபார்த்து உறுதி செய்துகொண்டேன்.

முன்னேறத் துடிக்கும் பல நாராயணன்கள் நம்மில் இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் நாராயணன் அவர்களின் இந்த வாழ்க்கை வரலாறு, அவர்களின் சோர்ந்த உள்ளங்களைத் தட்டி எழுப்பும். வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியானது தான் என்று அவர்கட்கு அறிவுறுத்தும்.

கிட்டத்தட்ட மூன்று மாத காலம் என் நினைப்பும், எழுத்துமாக நாராயணனே நிறைந்து நின்றார். வேறு பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு, முழுமையாக இப்பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580141907034
Kudiyarasu Thalaivar K.R.Narayanan

Read more from M. Kamalavelan

Related to Kudiyarasu Thalaivar K.R.Narayanan

Related ebooks

Reviews for Kudiyarasu Thalaivar K.R.Narayanan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kudiyarasu Thalaivar K.R.Narayanan - M. Kamalavelan

    https://www.pustaka.co.in

    குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்

    Kudiyarasu Thalaivar K.R.Narayanan

    Author:

    மா.கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அன்பும் அமுதமும் ஊட்டி வளர்த்த என் அம்மாவுக்கு... காணிக்கை

    C:\Users\ram\Pictures\குடியரசு 2.JPG

    சூரிய வடிவம்

    C:\Users\ram\Pictures\குடியரசு 3.JPG

    எல்லோருக்கும் சமவாய்ப்பு பதிப்புச்செம்மல், தமிழவேள், ச. மெய்யப்பன்

    பாரத நாடு பழம்பெரும் நாடு. உலக நாடுகளுள் உயர்ந்தோங்கி வளர்ந்து வரும் நாடு இந்திய நாடு. வேதம் மலிந்த திருநாடு. ஞானியர் நிறைந்த நாடு. வேளாண்மை, தொழில், வணிகம் முதலியவற்றில் வளம் பெற்று வளரும் நாடு. பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வகைப் பண்பாடுகள் பெற்று பரந்து விரிந்தது இந்தியத் துணைக் கண்டம். ஆயினும் ஒரே நாடு, ஒரே கொடி, ஒரே இலக்கு அது தான் இந்திய ஒருமைப்பாடு. பல வடிவ வண்ண மலர்களின் பூமாலை இந்தியா.

    அடிநாள் தொட்டு பஞ்சசீலகக் கொள்கையைப் பாருக்கு உணர்த்தி வரும் நாடு. 165 நாடுகள் கொண்ட ஐ.நா. சபையில், உறுப்பினராக இருந்து, தெளிவான கொள்கைகளால் அடிநாள் தொட்டு உலகுக்குப் பிரகடனப்படுத்தி வருகிறது. பாரம்பரிய பழம் பெருமையைக் காத்து வருவதோடு மட்டுமல்லாமல் புதிய கொள்கைகளை ஏற்று நாளும் பூத்துக் குலுங்கும் நல்ல நாடு இந்திய நாடு. 60 உறுப்பினர்களைக் கொண்ட காமன்வெல்த் சபையில் இந்தியாவிற்கென்று தனிப்பெருமை எப்போதும் உண்டு. இத்தகு பெருநாட்டை திருநாட்டைக் காத்துவரும் தலைமகன் முதல் குடிமகன் இந்தியக் குடியரசுத் தலைவராவார். முதல் குடியரசுத்தலைவர் இராசேந்திர பிரசாத் தொடங்கி பத்தாவது குடியரசுத் தலைவராகிய நாராயணன் உள்ளிட்ட எல்லோரும் நல்லவர்கள், வல்லவர்கள், ஜனநாயக மரபு காத்த சான்றோர்கள். இந்தியக் குடிமகன் எவரும் குடியரசுத் தலைவராகலாம் என்பதற்கு நாராயணரே சாட்சி. அண்ணல் காந்தியடிகளின் கனவு விடுதலைப் பொன்விழாவில் நனவாகிறது. அறிவுலக மேதை அம்பேத்காரின் அவாவும் இன்று நிறைவேறியது. இன்றையக் குடியரசுத் தலைவர் பதவியில் படிப்படியாகக் கடந்த பாங்கினர். உலக நாடுகள் பலவற்றில் பண்பாட்டுத் தூதுவராகப் பணியாற்றிச் சிறந்தவர். குடியரசுத் துணைத் தலைவராய் இருந்து இன்று குடியரசுத் தலைவராய் உயர்ந்துள்ளார். உலகைப் பலமுறை வலம் வந்த இக்கல்வியாளர் நல்ல பொழிஞர். நாடு போற்றும் நல்லறிஞர், நனி நாகரிகர், இவர் முயற்சிகளுக்கு ஏழ்மை தடையாக நிற்கவில்லை. இவர் உயர்வுக்கு வறுமை வழிகளை அடைக்கவில்லை. உழைப்பில் உயர்ந்த உத்தமர் இந்தியாவின் பத்தாவது குடியரசுத்தலைவர். நல்ல குடிமகன் நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்திருப்பது நாம் பெற்ற தனிப்பேறு. திறமையால் தலைமையும், உழைப்பால் உயர்வும் பெற்ற இவரின் வாழ்க்கை இளைஞர் எல்லோரும் கற்கத்தகுந்த வாழ்க்கை.

    நூல் சிறியதாயினும் அடிப்படைச் செய்திகள் எதுவும் விடுபடவில்லை. மிகைக் கூற்றுக்கள் எவையும் இல்லை. குற்றால அருவியில் குளிக்கிற சுகம் நூலைப் படிக்கிற போது ஏற்படுகிற சுகம். கோடானு கோடி மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்றும் நாராயணன் ஆயிரத்தில் ஒருவரல்லர்; கோடியில் ஒருவர். சாதி, குலங்கடந்து தனிப்பெருமை பெற்ற தனிப் பெருந் தலைவர்.

    இந்த அழகிய வரலாற்று நூலை எழுதிய ஆசிரியர் கமலவேலன் நூற்றுக்கு மேற்பட்ட நல்ல சிறுகதைகளைப் படைத்தவர். ஆறு சிறுகதைத் தொகுதிகள் உருவாக்கிய படைப்பாளி. கடுமையான உழைப்பாளி. பணி செய்யும் பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் எழுத்தாளர்.

    மணிவாசகர் பதிப்பகம் தொடக்க நாள் தொட்டே வாழ்க்கை வரலாறுகளை வெளியிட்டு வருகிறது. பதிப்பகத்தின் முதல் நூலே ‘அன்பு நெறியினர் வாழ்க்கை’ உலகப் பெரு மக்கள்.

    நெப்போலியன் பாதயா

    ஆபிரஹாம் லிங்கன்

    சர்ச்சில்

    அன்னை தெரெசா

    -வீரர் சிவாஜி

    முதலியோர் வாழ்க்கை வரலாறுகளை வண்ணத் தமிழில் வடித்துத் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்வில் உயர வழி காட்டியுள்ளோம். அவ்வகையில் இன்று ஏற்றம் பெற்று விளங்கும் ஏந்தல் நாராயணன் அவர்கள் வரலாற்றை நல்ல தமிழில் நாட்டுக்கு வழங்குகிறோம். தேர்ந்த கல்வியும் தெளிந்த ஞானமும் உடையவர் நாராயணன் என்பதையும் தெளிவாக, விரைந்து முடிவு எடுப்பதிலும் வினை முடிப்பதிலும் வல்லவர் என்பதனையும் உத்திரப்பிரதேச ஆளுநர் முடிவை மாற்றி அமைத்த மதி நுட்பத்தால் அறியலாம். இவரது ஆளுமையும் செயல் திறனும் இவருக்கு நாளும் பேரும்புகழும் சேர்த்து வருவதை இந்த வரலாற்று நூல் விளக்குகிறது. காத்தல் கடவுளின் பெயரைக் கொண்டுள்ள நாராயணன் இந்திய மக்கள் அனைவரையும் காக்கும் கடவுளாக விளங்குகிறார். நாராயணன் என்னும் சொல் நலம் தரும் சொல் என்பதனை நாட்டு மக்கள் இன்று கண்டு கொண்டனர்.

    நாராயணன் என எண்ணாத நா என்ன நாவே.

    வரலாற்றின் வரலாறு

    ஐம்பது ஆண்டுகட்குப் பிறகு, இந்திய வரலாற்றில் ஓர் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தேழில் வாங்கிய சுதந்திரத்திற்குத் தொண்ணூற்றேழில் பொன்விழா கொண்டாடிய செய்தியை நான் குறிப்பிடவில்லை. பெற்ற விடுதலையைப் பேணிக் காப்பது என்பதும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஆனால், அதே சமயம் இந்திய நாட்டு மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாகவே செயல்பட்டு வருகிறார்கள் என்பதைத் தேர்தல்களில் நிரூபித்து வருகிறார்கள். பாராளுமன்றத்திற்கும், மாநிலங்களுக்கும் அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்கி விட்டார்கள் என்பதுதான் இந்த விடுதலைப் பொன் விழா ஆண்டின் அதிசயமாக நான் கருதுகிறேன்.

    பாரத நாட்டின் மிக உன்னத பதவி குடியரசுத் தலைவர் பதவி ஆகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவர் அதிக அதிகாரங்கள் படைத்தவராகத் தோன்றினாலும் உண்மையில் அவர் பாராளுமன்றத்தின் அறுதிப்பெரும் பான்மை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவரே என்பதும் நாம் அறிந்ததே. என்றாலும், நாடு நெருக்கடியான காலகட்டங்களைச் சந்திக்கும் போது குடியரசுத் தலைவர் தமது தனித்த அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாட்டை வழி நடத்திச்செல்கிறார் என்பதும் வரலாறு காட்டும் உண்மையாகும்.

    அப்படிப்பட்ட ஓர் உயர்பதவிக்கு மிகவும் பின்தங்கிய மக்கள் என்று பலராலும் கருதப்படுகின்ற சாதாரண மனிதன் ஒருவனும் வர முடியும் என்பதை இந்தப் பொன் விழாவில் கண்டோம். அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான டாக்டர் அம்பேத்கார் அவர்களின் கனவு நனவானது, இந்தப் பொன்விழா ஆண்டில்தான்.

    சாதி, மத பேதமின்றி அனைவர்க்கும் கல்வி தரப்பட வேண்டும். கற்றவர்களுக்கு உரிய வாய்ப்புகள் சமமாக அளிக்கப்பட வேண்டும் என்ற அவரது இலட்சியங்கள் ஈடேறி வருகின்றன.

    அரசியல் தலைவர்கள் அம்பேத்காரின் எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

    பாராளுமன்றம் நமது பத்தாவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டது என்று தான் கூற வேண்டும்.

    ஜனநாயகத்தில் எதிர் அணி

    Enjoying the preview?
    Page 1 of 1