Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - December 2018
Kanaiyazhi - December 2018
Kanaiyazhi - December 2018
Ebook210 pages1 hour

Kanaiyazhi - December 2018

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

December month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109503764
Kanaiyazhi - December 2018

Read more from Kanaiyazhi

Related to Kanaiyazhi - December 2018

Related ebooks

Reviews for Kanaiyazhi - December 2018

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - December 2018 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, டிசம்பர் 2018

    மலர்: 53 இதழ்: 09 டிசம்பர் 2018

    Kanaiyazhi December 2018

    Malar: 53 Idhazh: 08 December 2018

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    தலையங்கம் - ம.ரா.

    எப்படி ஈடு செய்யப் போகிறோம்?

    கஜா புயல்

    கரை கடந்திருக்கிறது

    இலங்கையில் அரசியல் புயல்

    இன்னும் கடந்தபாடில்லை!

    கரைகாண முடியாத மீட்புப் பணியில்

    சிக்கித் தவிக்கின்றன

    ஆளும் கட்சிகள்!

    தலையில் வெயில் தாங்கிப்

    பசி நெருப்பு அவிக்க

    நெல் சுமந்த வயல் வெளிகள்

    மழை நெருப்பில்!

    கோடையிலும் வாடையிலும்

    பெருமிதத் தலையசைப்பில்

    பறவைகளை ஊஞ்சல் ஆட்டி

    வளர்த்த மரங்கள் சடலங்களாக!

    தாகம் தணிக்கத்

    தலையில் நீர் சுமந்த தென்னைகள்

    விழுந்து கிடக்கின்றன

    புயல் நெருப்பில்!

    காவிரி பொய்த்த போதும்

    பூமித்தாய் வயிற்றின்

    புதையல் தண்ணீரால் நடந்த

    டெல்டா மக்களின்

    வாழ்க்கைப் பயணம்

    கஜா புயலில்

    தண்ணீர்ப் பாலையில்

    தகித்துக் கொண்டிருக்கிறது!

    இந்தமுறை இயற்கையும் மக்களை

    ஏமாற்றி இருக்கிறது.

    அரசும் ஊடகங்களும்

    புலி வருது புலி வருது என்று

    புயல் வரவு பற்றிச் சொன்னவற்றை

    அரசு செய்தி, அறிவிப்பு என்று

    எப்போதும் போல மக்கள் நம்பாமல்

    இருந்து விட்டார்களோ!

    மப்பு மந்தாரம் என்று

    பதற்றமே இல்லாமல்

    வழக்கம் போல

    மாலை சூரியன் மறைந்திருக்கிறது.

    ஊடக அலறலைப்

    பொருட்படுத்த விடாமல்

    இயற்கைகூட

    எப்போதையும் விட

    அமைதி காத்திருக்கிறது.

    எல்லோரையும் தூங்க வைத்துவிட்டு

    கஜா ஆடியுள்ளது பேயாட்டம்!

    விளைந்த நெல்மணிகளை

    வீட்டுக்குக் கொண்டுவரவும்

    அறுவடைக்குப் பின்

    அடைக்க வேண்டிய கடன்களின்

    அச்சுறுத்தும் பட்டியலைத்

    தூக்கத்தில் விரட்டவும்

    தூங்கப் போனவர்கள், விடியலில்

    துடித்துப் போயிருக்கிறார்கள்.

    வேலையும் செலவும் குறையுமென்று

    உணவுப் பயிர் தவிர்த்துத்

    தென்னை வளர்த்துத்

    தலை நிமிர்ந்து நடந்தவர்கள்-

    அடுத்தநாள் தேங்காய் வெட்ட

    ஆட்களை வரச் சொல்லிவிட்டுத்

    தூங்கப் போனவர்கள்

    புயல் புரட்டிப் போட்டபின்பு

    நின்ற மரங்கள்

    நெடுஞ்சாண் கிடையாகத்

    தரையில் கிடப்பதைப்

    பார்க்க முடியாமல்

    பதறிக் கிடக்கிறார்கள்!

    வளர்க்கும் தென்னையைப்

    பார்க்கிற போதெல்லாம்

    வளர்ப்பவர்களையும்

    தலை நிமிர்த்திய

    தென்னை மரங்கள்

    இப்போது

    வந்து பார்க்கிறவர்களின்

    காலடியில்…

    பழைய நினைப்பில்

    தென்னை மரங்களைப் பார்க்க

    நிமிர்ந்த தலைகளின் மேலே

    வெறுப்பேற்ற ஹெலிகாப்டர்கள்!

    பசிக்கும் கொசுக்கடிக்கும்

    அடுத்த வேளை தண்ணீருக்கும்

    அவதிப் படுகிறவர்களைப் பார்ப்பதற்கும்

    ஊடக விளம்பர ஒப்பாரி வைப்பதற்கும்

    அமைச்சர்களின் அணிவகுப்பு!

    அரசு நடவடிக்கை போல

    புயல் மழையும் புதிதில்லை

    ஆண்டுக்கு ஒருசில முறை

    அச்சுறுத்தி அகலும்! அரசும் அறிவிக்கும்.

    மக்களும் அமைதி காப்பார்கள்!

    ஆனால் கஜாவுக்குப் பின்

    மக்களின் மனதில் சூறாவளி!

    வழக்கமாகப் புயல் மழையில்

    மக்கள் வீடு வாசலை இழப்பார்கள்

    அரசு ஈடு செய்ய உதவும்;

    ஆனால் இந்த முறை அப்படி இல்லை

    மக்கள் மரம் கிடக்கும் சாலையில்

    மறியல் செய்கிறார்கள்!

    தேர்தல் நேரத்தில்

    வீடு வீடாக வந்து

    கதவைத் தட்டிக் கும்பிட்டவர்களைப்

    புரட்டி எடுக்கிறார்கள்!

    கழுதைகளிலும் படகுகளிலும்

    வாக்குப் பெட்டிகளை ஏற்றிச்

    சாலை இல்லாத பகுதிகளிலும்

    ஜனநாயகம் காக்க விரும்புகிறவர்கள்

    மக்களைக் காப்பதாகச் சொல்வதை

    நடிப்பதாக நினைக்கத் தொடங்கி விட்டார்களோ?

    அல்லது

    கண்டு கொண்டுவிட்டார்களோ?

    புயல் வரப் போவதை முன்னதாகவே

    அறிவுறுத்தி மக்களைத்

    தயார்ப்படுத்திய அரசு

    புயல் கடந்தபின்பான

    மீட்பு நடவடிக்கைகளுக்குத்

    தயார் ஆகாமல் இருந்தது எப்படி?

    மக்கள்

    கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள்!

    இப்போது அவர்கள் இழந்து நிற்பது

    உடைமையை இல்லை;

    நம்பிக்கையை!

    மீண்டு வருவோம் என்று

    அவர்களிடம்

    நம்பிக்கை விதைக்கும்

    அரசுகள் இல்லை!

    ஆம்!

    அரசுகளின் மீதான நம்பிக்கையை

    மக்கள்

    இங்கேயும்

    இழந்திருக்கிறார்கள்!

    எப்படி ஈடு செய்யப் போகிறோம்?

    அன்புடன்

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    முன்னாள் முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரன் அவர்களுடனான நேர்காணல்

    சிறுகதை - வண்ணதாசன்

    கட்டுரை - புலவர் காசுமான்

    கவிதை - நலங்கிள்ளி

    குறுநாவல் - ஆத்மார்த்தி

    கவிதை - தேவரசிகன்

    சிறுகதை - கிருஷ்ணமூர்த்தி

    கட்டுரை - மதுமிதாஸ்ரீ

    கவிதை - பத்மநாபபுரம் அரவிந்தன்

    கவிதை - முனைவர் த. டான் ஸ்டோனி

    கவிதை - சேயோன் யாழ்வேந்தன்

    சிறுகதை – ஹாலாஸ்யன்

    கட்டுரை - இமையம்

    சிறுகதை - ஜனநேசன்

    கடைசிப்பக்கம் - இந்திராபார்த்தசாரதி

    ***

    நேர்காணல் தொகுப்பு - எழுத்தாளர் மதுமிதா

    தமிழகத்தில் நீங்கள் தமிழீழம் என்று பேசினால் இங்கே அடிபடிவது நாங்கள்

    இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரன் அவர்களுடனான நேர்காணல்.

    நேர்கண்டவர்கள்: முனைவர் க.சுபாஷிணி, முனைவர் கண்ணன், எழுத்தாளர் மதுமிதா

    மதுமிதா: வணக்கம் அய்யா. அக்டோபர் 26ஆம் தேதி நாங்க இங்கே இலங்கைக்கு வர்றோம். வர்ற அன்னிக்கு மதியத்துக்கு மேல அரசியல் மாற்றம் வருது... 24ஆம் நாள் உங்களுடைய பதவிக்காலம் முடியுது அப்டீங்கறது இருந்தது. இதை ஒட்டி சில விஷயங்கள் உங்ககிட்டே கேக்கலாம்னு... இந்தக் கட்சி மாற்றத்தினால நமக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள்... அதை எப்படி நீங்க அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியும்?

    விக்னேஷ்வரன்: நாங்கள் இப்போது பதவியில் இல்லை... இந்தக் குழம்பிய நிலையை எங்களுக்குச் சாதகமாக நாங்க பாவிக்க முடியும். அதாவது ஏற்கனவே நாங்கள் ஒருவரோடு தொடர்பு வச்சு அவர்களோட சிநேகபூர்வமாக நடந்து கொண்டோம் என்றால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இந்த நிலையை நாங்க எங்களுக்கு சாதகமாகப் பாவிக்கலாம். ஆனால் எங்களுக்கு தனிப்பட்ட முறையிலே யாருடனாவது கூடிய ஒரு சினேகபூர்வமாக உறவு இருந்ததென்றால் அது கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் மக்களுக்காக இதை செய்யத்தான் வேண்டும். ஏனென்றால் இவ்வளவு காலத்திலே எங்களுக்கு எந்தவிதமான சலுகைகளையும் உரிமைகளையும் தொடர்ந்து வந்த சிங்கள அரசாங்கங்கள் தராமல்தான் இருந்தார்கள்... ஆகவே எங்களுக்கு பலரும் தில்லை அவர்களோடு பேசி... ஒரு பேரம் பேசி... இப்ப உதாரணத்துக்கு மலைநாட்டு தமிழர்களுடைய தலைவராகச் சௌமிய மூர்த்தி தொண்டைமான்...... இப்போது இருக்கும் தொண்டைமானுடைய க்ராண்ட் ஃபாதர். அவர் அந்தக் காலத்துல வந்து சொல்லுவார்... ஒரு தோசையை எப்போ திருப்பவேண்டும் என்று தெரிஞ்சுவெச்சுக்கணுமெண்டு.... அதாவது சில நேரத்துல தொழிற்சங்க ரீதியாக வேலை நிறுத்தம் சிலதெல்லாம் செய்வாரு. அத முழுமையா கொண்டுபோகணுமெண்டு... எந்தெந்த இடத்துல நாங்க மாத்தவேணுமெண்டு தெரிஞ்சுவெச்சுக்கணுமென்று... அப்படி அவர் ஒரு பேரம் பேசி தன்னுடைய தொழிற்சங்கத்தினுடைய பலத்தைக் காட்டி கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களுடைய மக்களுடைய..... உரித்துக்களைப் பெற்றுக் கொண்டார். 1949ல,.... எங்களுக்கு சுதந்திரம் கெடைச்சவுடனேயே... ஒரு மில்லியன், பத்து லட்சத்துக்கும் மேலான இந்தியத் தமிழர்களுடைய வாக்கு பறிபோனது. அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக 1964, 1965 வரைக்கும் அந்தப் பிரச்சினை இருந்தது. இவருடைய பலவிதமான நடவடிக்கைகளின் காரணமாகத்தான் அவர்கள் தாங்கள் வலியுறுத்தியதைத் திரும்ப பெற்றுக்கொண்டார்கள். ஆகவே இப்போ இந்த நிலையிலே நாங்க என்ன செய்யவேண்டும் என்று சொன்னால், எங்களுக்கு சலுகைகள் தரக்கூடியவர்களுக்கு...... நாங்கள் எங்கள் உதவியைத் தருவோமென்று சொல்லமுடியும். இதுல ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன, எங்களுக்கு எந்தவிதமான பிரச்சசினையும் இல்ல. ஆனா எங்களுடைய மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டியதுதான் முக்கியம். ஆகவே இப்போ சிறைக்கைதிகள் சம்பந்தமாக, 125 சிறைக்கைதிகள் பல வருட காலமாக, 25 வருஷமாக இருக்கிறார்கள். வழக்கமாக 16, 17 வருஷத்துல விட்ருவாங்க..... அவர்களெல்லாரும் பொலிட்டிகல் அதாவது அரசியல் கைதிகள்..... அவர்களை உடனேயே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், அந்த உத்தரவாதத்தைத் தரவேண்டும். மற்றது வடகிழக்கு மாகாணத்துல அரசாங்கத்தினுடைய உள்ளீடு, பௌத்தத்தைக் கொண்டு வருவதற்கும் சிங்களத்தவர்களைக் குடியிருத்தச் செய்வதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன... இதையெல்லாம் நிப்பாட்ட வேண்டும்...

    சில விஷயங்களை வெளிப்படையாக இல்லையென்றால் அந்தரங்கமாகவாவது அவர்களோடு பேசி எழுத்து மூலமான ஒரு உடன்பாட்டை நாங்கள் கொண்டோமென்றால் ஒருவேளை சில நம்பிக்கைகளை நாங்கள் பெற்றுக் கொள்ளலாம்... சென்றமுறை என்ன நடந்ததுவென்றால் எங்களுடைய தலைவர்கள்... இல்லல்ல அவர் சொல்வதை நாங்க நம்பலாம்.... அவர் சொன்னதுக்கு காரணம் என்னவெண்டு எழுத்துல போட்டால் மற்ற கட்சியில.... இப்படி செய்துட்டாங்க, எங்களுடைய சிங்கள இனத்தைத் தமிழர்களுக்கு விற்கப் பார்க்குறார்கள் அப்டியெண்டுதான் சொல்வார்கள். அதுக்காக இவர் எழுத்துல ஒண்டும் வேண்டாமெண்டு சொல்லிட்டார். அப்ப அவர்கள் நம்பினால்..... நம்பிக்கை மாதிரிதான் பேசிக்கொண்டால் கடைசியா எதுவுமே தேவையில்ல.

    இப்ப இது சம்பந்தமாக இண்டைக்கு சம்பந்தன் போயி மகிந்த ராஜபக்ஷேவுடன் பேசியிருக்கிறார்கள் எண்டு கேள்வி... என்ன பேசினார்கள் எண்டு தெரியல்ல... ஆனால் நெருக்குதல் மூலமாக அரசாங்கத்திலயிருந்து சில சலுகைகள நாங்க பெறுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

    மதுமிதா: டிஎன்ஏவிலிருந்து பிரிஞ்சு நீங்க தனியாக இப்போ கட்சி ஆரம்பிச்சிருக்கீங்க இல்லையா. அது அடுத்த தேர்தல்ல நீங்க தனியாக வரணும் அப்டிங்கறதனால இந்தப் பிரிவு நடந்ததா? சேர்ந்து இருக்க முடியாம இப்போ தனி கட்சி ஆரம்பிச்சதுக்கு உண்டான காரணம் பிரத்யேகமாக ஏதாவது...

    விக்னேஷ்வரன்: காரணம் வந்து, தேர்தல்ல நிக்கவேண்டுமெண்டு எலக் ஷன்ல வெல்லவேண்டுமெண்டு எந்தவிதமான எண்ணமுமில்ல. ஆனால் எங்களுடைய கட்சி பிழையான பாதையில் செல்லக்கூடாது. அதாவது நான் 5 வருஷம் முடிஞ்சவுடனே விட்டு போயிருப்பேன். ஆனா இந்தக் கட்சி போற விதத்த பார்த்தா இது எங்க போகுமெண்டு எங்களுக்கு நல்லா விளங்குது. அப்போ பிழையான வழியில போகும்போது அவர்களை தடுத்து நிறுத்தி நாங்கள் சரியா இப்படி போகவேண்டுமெண்டு சொல்ல வேண்டியதிருக்கிறது. அதைச் சொல்லிப்பார்த்தேன் ஏற்றுக்கொள்கிறார்போல தெரியல. நீ ஐந்து வருடங்களாகத்தான் அரசியலில் இருக்கிறாய். எங்களுக்குத் தெரியாதா என்று… ஆகவே ஒரு ஒழுக்க நெறி சம்பந்தமாகத்தான் ஒழுங்குபடுத்துவதற்காக நாங்கள் கட்சி கொண்டந்துருக்கோம். அதன் மூலமாக ஒரேவிதமான சிந்தனைகள் இருக்கின்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து... நாங்கள் மக்கள் முன் சென்று மக்கள் அதை ஆதரித்தார்கள் என்றால் எங்களுடைய சிந்தனை சரியென்பதை நாங்கள் நிரூபிப்பதற்கு ஏதுவாக இருக்கும்... அதான் அந்த நிலையில்தான் இந்தக் கடைசி நேரத்துல

    Enjoying the preview?
    Page 1 of 1