Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - August 2022
Kanaiyazhi - August 2022
Kanaiyazhi - August 2022
Ebook171 pages53 minutes

Kanaiyazhi - August 2022

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

August 2022 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateAug 20, 2022
ISBN6580109508990
Kanaiyazhi - August 2022

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - August 2022

Related ebooks

Reviews for Kanaiyazhi - August 2022

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - August 2022 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி ஆகஸ்ட் 2022

    மலர்: 57 இதழ்: 05 ஆகஸ்ட் 2022

    Kanaiyazhi August 2022

    Malar: 57 Idhazh: 05 August 2022

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உழைப்பின் அதிகாரம்!
    உலகக் கொண்டாட்டம்!!

    உலகச் செஸ் விளையாட்டுத்

    தொடக்க விழாவை

    உலகத் தமிழ்க்கலை மாநாடாக

    நடத்திக் காட்டியிருக்கிறார்

    தமிழ்நாடு முதலமைச்சர்!

    காவல் தெய்வத்திற்குத்

    தென் தமிழகத்தில் புரவி எடுப்பது போல

    ஊரெங்கும் குதிரை முகங்கள்!

    கையில் தம்பி என்று

    பச்சை குத்திக்கொண்டு

    கும்பிட்டு வரவேற்பதும்

    வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு

    மிரட்டும் கண்களுடன்

    போட்டிக்கு அழைப்பதுமாகத்

    தெருவெங்கும் குதிரை மனிதர்கள்!

    சதுரங்க விளையாட்டில்

    மற்ற காய்களை விடுத்துக்

    குதிரை மட்டும் கொண்டாடப்படுகிறது!

    குதிரை உழைப்பின் அடையாளம்!

    குதிரைத் திறன் (Horse Power)

    உலகம் முழுதும் ஆற்றலின் அலகீடு!!

    சதுரங்க விளையாட்டில்

    ஒருபக்கம் கருப்பு மறுபக்கம் வெள்ளை!

    கருப்புக்கும் வெள்ளைக்கும்

    சதுரங்கப் பலகையில் நடக்கும் போர்!

    போர் நடவடிக்கைகளே

    விளையாட்டுகள் தானோ?

    15 ஆடுகளைக் கொண்டு

    3 புலிகளை அடக்க நடக்கும்

    ஆடுபுலி ஆட்டமும்

    பெரும்பான்மை கொண்டு சிறுபான்மையை

    அடக்கக் கற்றுக் கொடுக்கிறதோ!

    சுற்றியுள்ள கட்டங்களைக் கடந்து

    வெட்டிச் சாய்த்தும் வெட்டுப் பட்டும்

    கோட்டையைப் பிடிக்கக்

    கற்றுக் கொடுக்கிறதோ தாய ஆட்டம்!

    எதை அடிக்கிறோம்?

    எங்கே அடிக்கிறோம்?

    ஏன் அடிக்கிறோம்? என்று

    புரிய விடாமல் காய்களைப் போடும்

    கேரம் விளையாட்டிலும்

    போர்க்கள உத்திகள் இருக்கின்றனவோ?

    யானைப்படை, குதிரைப்படை,

    தேர்ப்படை, காலாட்படை என்ற

    நால்வகைப் படைகள் அரசனின் சதுரங்கம்.

    பின்னர் அரசன்,

    அரசி, மந்திரிகளும்

    சதுரங்கப் போரில்

    களம் இறங்கியுள்ளனர்!

    காலப் போக்கில்

    மந்திரி, ராஜகுருவாகி-

    மதகுருவாகிக் களத்தில்

    பிஷப் ஆகி இருக்கிறார்.

    மதகுரு காய்கள் மட்டும்

    மூலை விட்டத்தில் குறுக்கும்

    நெடுக்குமாகப் பாய்ந்து

    எதிரியைக் கதிகலங்கச் செய்யும்.

    எதிரிகள் அரணைத் திறக்கவும்

    தங்கள் அரணை அடைப்பதுமாகச்

    சதுரங்கப் போர் உச்சம் அடையும்.

    போர்க் களத்தில்

    தலைவனுடன் தலைவி நின்று

    தலைவனைக் காப்பாற்ற

    உயிர் விட்ட

    தொன்மங்களை நினைவுபடுத்துகிறது

    செஸ் ஆட்டம்!

    அரசியை வீழ்த்தினால்

    அரசனை வீழ்த்துவது எளிது என்று

    காய் நகர்த்துகிறார்கள்!

    அடுத்தவரின் 

    ஒவ்வொரு நகர்விலும் இருக்கும்

    ஆக்கிரமிப்பை அடக்க

    மூளைக்குள் ஒரு போர்க்களம்!

    தோல்வியை எதிர்கொள்ளும்

    துணிச்சலே

    வெற்றியின் முதல் படி!

    வெற்றி அல்லது கற்றல்!

    சுற்றிலும் என்ன நடக்கிறது?

    கவனிப்பும் கண்காணிப்பும்

    தற்காப்பும் தாக்குதலுமாக

    நகர்வில் அமைதி

    முற்றுகையில் கொண்டாட்டம்!

    பல படிநிலை கடந்து வரப்போகும்

    இரட்டை தாக்குதலுக்கான

    சேர்க்கை நகர்வுகளின் மிரட்டல்!

    திசை திருப்பவும்

    தடுத்து நிறுத்தவும்

    கொடுத்து எடுக்கவும்

    நீண்டகால இலக்கு

    உடனடி உத்திகள்!

    மனிதர்களுடன் நடத்திய

    போட்டி விளையாட்டுகள்

    இப்போது கணினியுடனும்!

    இப்போதெல்லாம்

    போட்டியாளர்கள்

    கண்ணுக்குத் தெரிவதில்லை

    ஆனாலும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

    சதுரங்கப் போட்டியில்

    அரசர்களுக்கு மட்டும்

    முன் எச்சரிக்கை!

    களத்தில் சிறைபிடிக்கப்படுகிறார்கள்!

    தன் அரசனைக் காப்பதும்

    எதிரியைச் சிறை பிடிப்பதுமே

    மற்றவர்கள் வேலை!

    விளையாட்டில் படை வீரன்

    முன்னோக்கி மட்டுமே செல்லலாம்

    வெட்டி முன்னேறும் வாய்ப்பில் மட்டும்

    மூலை விட்டத்தில் கால் வைக்கலாம்!

    வெட்டி முன்னேறலாம் இல்லையேல்

    வெட்டுப்பட்டு வீர மரணம்!

    மற்ற காய்களுக்குப்

    பின்வாங்கிக் கொள்ள

    அனுமதியுண்டு!

    ஆனால் ஒருபோதும்

    படைவீரன் மட்டும்

    பின்வாங்க முடியாது.

    எல்லாவற்றையும் தாங்கி

    எதிர்த்துக் கடந்து

    இலக்கைத் தொட்ட படை வீரரின்

    உழைப்புக்கும் உத்திக்கும்

    அதிகாரம் தருகிறது

    சதுரங்க ஆட்டம்!

    அதனால்

    உலகச் செஸ் விளையாட்டுத்

    தொடக்க விழாவை

    உழைப்பின் அதிகாரத்திற்கான

    உலகக் கொண்டாட்டமாக

    நடத்திக் காட்டியிருக்கிறார்

    தமிழ்நாடு முதலமைச்சர்!

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - அ.நாகராசன்

    சிறுகதை - ப. தனஞ்ஜெயன்

    கவிதை - சௌவி

    கட்டுரை - மு. இராமசுவாமி

    கவிதை - ஆர். வத்ஸலா

    சிறுகதை - கவிஜி

    அய்யனார் ஈடாடி கவிதைகள்

    சிறுகதை - இலக்கியா நடராஜன்

    கவிதை - ரகுநாத் வ

    கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்

    சிறுகதை - வாசுதேவன் அருணாசலம்

    சிறுகதை - அகராதி

    கட்டுரை -சிரஞ்சீவி இராஜமோகன்

    கவிதை - கி.சரஸ்வதி

    சிறுகதை - செ.புனிதஜோதி

    கவிதை - ந.சிவநேசன்

    கவிதை  - இரா. மதிராஜ்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கட்டுரை - அ.நாகராசன்

    01.jpg

    கணையாழியும் குறு நாடகங்களும்

    பேராசிரியர் செண்பகம் இராமசாமி குறுநாடகப் போட்டி முடிந்து, கணையாழி குறுநாடகங்களை வெளியிட்டு ஓராண்டு ஆன நிலையில், தமிழ் மொழியில் நாடகங்கள் பற்றிய ஒரு நேர்மையான பரிசீலினையும் விவாதமும் இன்றைய தேவையாகத் தோன்றுகிறது.

    தமிழ் இலக்கிய மரபில் நாடகத் தமிழ் பிரதான இடத்தை பெற்று இருந்த போதும், நாடக காப்பியமாக பேசப்பட்ட உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனும் சிலப்பதிகாரம் காலங்காலமாய் மக்கள் மத்தியில் பல ஊடகங்கள் வழியே சென்றடைந்து கொண்டு இருந்த போதிலும், நிஜ நாடக இயக்கம், கூத்துப்பட்டறை, திணை நிலவாசிகள் மற்றும் தெருக்கூத்து போன்ற அமைப்புகள் மக்கள் தொடர்பில் இருந்தாலும், தமிழில் நாடக இலக்கிய வளர்ச்சி என்பது தேக்க நிலையை நோக்கி கொண்டிருக்கிறது. வண்ண நிலவன் அவர்களும் நாடகங்கள் இனி வளர்ச்சி அடையாது என்ற கருத்தை தெரிவித்திருந்ததாக ஒரு முகநூல் பதிவில் பார்த்தேன்..

    ஆண்டவனை கூத்தபிரான் என்று வழிபட்டு வந்த தமிழ் மரபில் குரவைக் கூத்து, நாட்டியம், தெருக்கூத்து, மேடை நாடகம், வீதி நாடக இயக்கம், என்று காலம்தோறும் புதிய நாமகரணத்தில் நாடகம், சில குழுக்களால் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறது. வேகமாய் மாறிக் கொண்டு வரும், இன்றைய நுகர்வு கலாச்சார சூழலில், இதுபோன்ற செயல்பாடுகளும், குறைந்து போய் காலப்போக்கில் வழக்கொழிந்து போய்விடுமோ என்ற அச்சம் இலக்கிய ஆர்வலர் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.

    கோவில் கலாச்சாரத்தில் அரசர்கள், அறிவுஜீவிகள், வணிகர்கள், மத்தியில் தங்களை இறைவன் பிரதிநிதியாக முன்நிறுத்திக் கொள்ள கலைகள் தேவைப்பட்டன. பக்தி மார்க்கத்தில் நாட்டியத்தை பிரதானமாய் பார்த்தனர் உயர்குடி மக்கள். சாதாரண மக்கள் மத்தியில் கூத்து வடிவம் இறை ஈடுபாட்டை வளரச் செய்து வந்தது. பின்வந்த குறுநில மன்னர்கள், சமஸ்தானங்கள், ஜமீன்தார்கள் போன்ற செல்வந்தர்கள் ஆதரவால் கூத்து நாட்டிய நாடக மரபு வீழ்ச்சி இன்றி தொடர்ந்திருந்தது.

    ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் திராவிடச் சிந்தனைகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய மேடை ப் பேச்சுடன், கவிதை நடை இன்றி அன்றாடப் பேச்சு தமிழில் எழுதப்பட்ட நாடகங்களும் முக்கியமாக கருதப்பட்டது. ஆகையால், Cloud Funding போல நாட்டுப்பற்று மிக்க தியாகிகள், சீர்திருத்த வாதிகள், சுய மரியாதை இயக்கத்தார், தங்களின் சொந்த கைக்காசைக் கொடுத்து, நாட்டுப்பற்று, சீர்திருத்த கருத்துகள் சாமான்யரை சென்றடைய தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், மேடை நாடகம் போன்ற கலை வடிவங்களை வளர்த்து வந்தனர், செல்வந்தர்கள் ஆதரவு இன்றி ஒத்த சிந்தனையாளர்களால் நிகழ் கலைகள் வளர்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.

    சலனப் படங்கள், மற்றும் புராணக் கதைகள் சொல்லும் திரைபடங்கள் வருகையால் மக்கள் புதிய விஞ்ஞான ஆச்சர்யத்தை காணக் கூடவே, கூத்து, நாடகம் போன்ற வடிவங்கள் பின்னடைவை சந்தித்க நேர்ந்தது. தெருக் கூத்து போன்ற சில கலை வடிவங்கள் கிராம மக்களின் ஆதரவால்

    Enjoying the preview?
    Page 1 of 1