Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tiruppur Kumaran
Tiruppur Kumaran
Tiruppur Kumaran
Ebook115 pages44 minutes

Tiruppur Kumaran

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இருள் விலகும்... பொழுது புலரும்!

‘இறந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும், இனிமேல் பிறப்பவர்களுக்கும் இடையே நிகழும் உடன்படிக்கையே வரலாறு’ என்றார் எட்மண்ட் பர்க்.

நம் கடந்தகால வாழ்க்கையில் அரங்கேறிய நிகழ்வுகள் வருங்காலப் பயணத்தின் திசையைத் தீர்மானிக்கும் வழிகாட்டிகளாக வடிவம் பெறுகின்றன.

ஒரு சமூகம் தன்னுடைய முகத்தைச் சரிபார்த்துக் கொள்வதற்கு அதன் சென்ற காலச் சரித்திரமே நிலைக் கண்ணாடியாய் நிற்கிறது.

என்றோ ஒரு நாள் ஆண்டு, அதன்பின் மாண்டு மண் மூடிப்போன மன்னர்களின் கல்லறைகளைக் காலவரிசைப் படி நமக்குக் காட்டுவதுதான் நாட்டு வரலாறு என்று நாம் பொய்யாகப் புரிந்து வைத்திருப்பதுதான் பெரிய பேதமை.

புதிதாய்ப் பூத்திருப்பதுதான் ‘திருப்பூர் குமரன்’ என்ற இந்த அரிய நூல்.

இன்று எத்தனை பேருக்குச் சுதந்திரப் போரில் கொடி காக்க உயிர் துறந்த குமரனைத் தெரியும்? வாடகை மனிதர்களாய் மேடைகளில் வலம் வரும் எத்தனை பேச்சாளர்களுக்கு நாட்டு விடுதலைக்காக அடிப்பட்டு உடலின் ஒவ்வொரு எலும்பும் முறிபட்டுப் போன சுந்தரத்தின் தியாகம் தெரியும்?

நாளுக்கொரு கட்சியாய் நாடகமாடும் எண்ணற்ற அரசியல் வழிப்போக்கர்களில் எத்தனைபேர் அப்புக் குட்டியை அறிவார்கள்? இன்றைய தலைமுறை சுதந்திரக் காற்றைச் சுகமாய் சுவாசிக்க எண்ணும் உரிமை, எழுதும் உரிமை, ஏசும் உரிமை, பேசும் உரிமை என்று ஆயிரம் உரிமைகளை அணுவளவும் சிரமமின்றி அனுபவிக்க சென்ற தலைமுறை செய்த தியாகங்களை நன்றியோடு நாம் நினைத்து பார்க்க வேண்டாமா?

“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடந்ததும், நூலோர்கள் செக்கடியில் நொந்து தவித்ததும் யாருக்காக?” என்று தேசத்தின் கடந்த கால வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து அவர்களுக்காக இதயம் நெகிழ்ந்து, இருவிழி கசிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டாமா?

நன்றி கொன்றவர்கள் வாழும் நாடு நரகத்தை விட மோசமானது என்ற உண்மையை உணர்த்துவதற்காக ஜீவபாரதியின் எழுத்தில் உயிர்த்தெழுந்ததுதான் ‘திருப்பூர் குமரன்’ நூல்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580144406946
Tiruppur Kumaran

Read more from K. Jeevabharathy

Related to Tiruppur Kumaran

Related ebooks

Reviews for Tiruppur Kumaran

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tiruppur Kumaran - K. Jeevabharathy

    https://www.pustaka.co.in

    திருப்பூர் குமரன்

    Tiruppur Kumaran

    Author:

    கே. ஜீவபாரதி

    K. Jeevabharathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/k-jeevabharathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இருள் விலகும்... பொழுது புலரும்!

    ‘இறந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும், இனிமேல் பிறப்பவர்களுக்கும் இடையே நிகழும் உடன்படிக்கையே வரலாறு’ என்றார் எட்மண்ட் பர்க்.

    நம் கடந்தகால வாழ்க்கையில் அரங்கேறிய நிகழ்வுகள் வருங்காலப் பயணத்தின் திசையைத் தீர்மானிக்கும் வழிகாட்டிகளாக வடிவம் பெறுகின்றன.

    ஒரு சமூகம் தன்னுடைய முகத்தைச் சரிபார்த்துக் கொள்வதற்கு அதன் சென்ற காலச் சரித்திரமே நிலைக் கண்ணாடியாய் நிற்கிறது.

    என்றோ ஒரு நாள் ஆண்டு, அதன்பின் மாண்டு மண் மூடிப்போன மன்னர்களின் கல்லறைகளைக் காலவரிசைப் படி நமக்குக் காட்டுவதுதான் நாட்டு வரலாறு என்று நாம் பொய்யாகப் புரிந்து வைத்திருப்பதுதான் பெரிய பேதமை.

    நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது தான் சுயதரிசனத்தின் சூட்சுமம் புரியும்.

    வாழ்க்கை அனுபவங்களின் மூலம் கிடைக்கும் அறிவோ அர்த்தமுள்ளது. சமூகத்தின் வரலாறு என்பது நம் மூதாதையர்கள் பெற்ற முற்றிய அனுபவங்களின்மூலம் அதை ஒழுங்காகப் பிரித்துப் படிப்பவனுக்குத்தான் எது மேடு, எது பள்ளம் என்று புரியும்; எந்தப் பாதை எங்கே போகும் என்றும் தெளிவாகத் தெரியும்.

    இன்று இந்தியச் சமூகத்தின் எந்தப் பக்கம் திரும்பினாலும் பொய் முகங்கள்; போலிக் கூச்சல்கள். நாடு விடுதலை பெற்றது. ஆனால் நாமோ இன்னும் எந்தப் பிரச்சினையிலிருந்தும் விடுதலை பெறவில்லை.

    ஒரு ஹிரோஷிமா, நாகசாகி அழிவுக்குப் பின்பும் ஜப்பான் அமெரிக்காவிற்கு ஈடுகொடுத்து எழுந்து நிற்க முடிகிறது.

    இரண்டாம் உலகப் போரில் மரண அடி வாங்கிய பின்பும் ஜெர்மனி மகத்தான முன்னேற்றத்தைச் சந்திக்க முடிகிறது.

    சின்னஞ்சிறிய கொரியா கூட பொருளாதார வளர்ச்சியில் புதிய சரித்திரம் படைக்க முடிகிறது.

    நம் இந்தியத் திருநாடு மட்டும் ஏன் உரிய அளவிற்குக் கூட முன்னேற முடியாமல் நொண்டியடிக்கிறது?

    ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று அரசியல்வாதிகள் ஆனந்த பைரவியை ஆலாபனை செய்யலாம். ஆனால் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை இன்னும் முகாரி ராகத்தில்தான் மூழ்கிக் கிடக்கிறது.

    இந்த அவலத்திற்கு யார் காரணம்?

    அதிகார நாற்காலியில் அமர்ந்திருக்கும் மக்கள் நலனில் உண்மையான நாட்டமில்லாத ஆட்சியாளர்களா?

    சுய ஆதாயத்திற்காகவே புதிது புதிதாய்க் கட்சிகளைக் கடை பரப்பும் அரசியல் வாதிகளா? அட பொறுப்பற்ற முறையில் பேனா பிடிக்கும் பத்திரிகையாளர்களா?

    பொழுதுபோக்கு என்ற போர்வையில் மனித மனத்தை மலினப்படுத்தும் கலை, இலக்கியக் கர்த்தாக்களா?

    மேலான இலட்சிய நோக்கங்கள் இல்லாமல் இழிந்த விவகாரங்களில் இதயத்தைப் பறிகொடுத்து, பொருளீட்டுவதிலும், ஈட்டிய பொருளைக் கொண்டு வகை வகையாய்ப் போகங்களில் மூழ்குவதிலும் வெறிபிடித்து அலைந்து, உலக மயமாக்கலில் உருக்குலைந்து போகும் இளைய தலைமுறையா?

    இவர்கள் அனைவரும் அவரவர் சக்திக்கேற்ப இந்தத் தேசத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதே சந்தேகத்திற்கிடமில்லாத உண்மை.

    இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு முதல் முட்டுக்கட்டையாய் இருப்பவர்கள் சுயலாபம் தேடிப் பொதுவாழ்வில் புகுந்திருக்கும் அரசியல்வாதிகளே.

    இவர்களில் பெரும்பாலோர் விழுகிற ஒவ்வொரு வியர்வைத் துளிக்கும் விளைச்சலை எதிர்பார்க்கும் வியாபாரிகள்.

    பொதுநலத்தைக் கற்பழித்துச் சுயநலத்தின் தினவைத் தீர்த்துக் கொள்ளத்துடிக்கும் இந்தச் சமூகக் காமுகர்கள் சொந்த வசதிக்காகத் தேசத்தைக் கூட விலைபேசத் துணிந்த மனிதப் பதர்கள்.

    இன்றைய அரசியல் உலகத்தில் கைம்மாறு கருதாத, பிரதிப்பலன் பார்க்காத, சுயலாபம் தேடாத தேவ மனிதர்களைத் தேடிப் பிடிப்பது அப்படியொன்றும் எளிய செயல் அன்று.

    எதையும் கொடுக்காமல் எல்லாவற்றையும் பெறுவது எப்படி என்று கணக்குப் போட்டுக் காரியமாற்றுபவர்களே சகல தளங்களிலும் காட்சி தருகின்றனர்.

    ஆயிரம் கைகளைக் கொண்ட பகாசுரனைப் போல் பார்க்கும் இடமனைத்தும் ஊழல் பரவியிருப்பதற்கு அடிப்படைக் காரணம் அரசியல்வாதிகளே.

    இங்கே அடுத்தவன் இரத்தத்தில் ஆயுளைப் பெருக்கிக் கொள்ளும் கொசுக்களின் கூட்டம் அதிகரித்துவிட்டது.

    இன்னொருவன் சோற்றைத் தட்டிப் பறிக்கும் சுயநல நரிகளின் சொர்க்கபூமியாக அரசியல் அரங்கம் மாறிவிட்டது.

    நம் ஏழை நாட்டில் கட்சிகளுக்குக் குறைவில்லை. ஒவ்வொரு வைகறையும் ஒரு புதிய கட்சியின் பூபாளத்தோடு தான் இங்கே புலர்கிறது.

    மனித மரங்கள் மானத்தை மறைக்கக் கோவணத்திற்குத் துணியில்லாமல் தாழ்ந்து தலை கவிழ்ந்து நிற்கும் போது, கொடி மரங்களில் மட்டும் கட்சிக் கொடிகள் குதூகலமாய்ப் பறந்து கொண்டிருக்கின்றன.

    இன்று ஒவ்வொரு கட்சியும் ஆட்சி நாற்காலியில் ஆசை வைப்பது மக்களின் ஏழ்மையைப் போக்குவதற்கு அன்று; தலைவர்கள் பலரைப் பங்களாவாசிகளாய்ப் பார்ப்பதற்காகவே.

    ஊதியம் இல்லாவிட்டால் உழைப்பைத் தருவதற்கு இங்கே யாருமில்லை.

    கர்மகாரியம் கூட அவனவன் கர்மம் தொலைய வேண்டும் என்ற பாவ புண்ணியப் போர்வையில் நடக்கும் பண்டமாற்றுப் பரிவர்த்தனையாகி விட்டது.

    சமூகத்தைச் சரியாகவும், முறையாகவும் சமைக்க வேண்டிய பொறுப்புள்ள அரசியல் உலகம் இன்று ஒரு தரங்கெட்ட வியாபாரத் தலமாக வீழ்ச்சியடைந்து விட்டது.

    ‘ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆற்றில் இறங்க மாட்டார்’ என்ற வாழ்க்கைமுறை இங்கே வாழ்கால நிஜமாக வளர்ந்து வருகிறது.

    எதிர்கால நம்பிக்கையே அற்றுப் போகிற நிலையில் வெளிச்சக் கீற்றாய் மின்னலிடுகிற சில நல்ல அரசியல் வாதிகளை நாடு ஆதரிக்காமலும், அங்கீகரிக்காமலும் கைவிட்டுவிடுவதுதான் காலத்தின் கொடுமை.

    பெருகிக் கிடக்கும் தீமைகளுக்கும், குறுகிக் கிடக்கும் நன்மைகளுக்கும் இடையே இப்போதும் ஒரு குருஷேத்திரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    குருஷேத்திரப் போர் பாரதக் கதையோடு முடிந்து விட்டதாக நினைப்பது முட்டாள்தனம்.

    தீமையின் ஆணிவேரையும், அங்குமிங்குமாய்ப் பல்கிப் பரவிக் கிடக்கும் அதன் சல்லி வேர்களையும் முற்றாகக் கிள்ளி எறியும் வரை அந்தப் போருக்கு அஸ்தமனம் இல்லை.

    தீமைகள் திரண்டு கௌரவர்களாகக் காட்சி தரும்போது, நல்லறம் அனைத்தும் பாண்டவர்களாகப் படை நடத்த வேண்டும் என்பது நியாயத்தின் நியதி.

    புழுத்துப் போன இந்தியச் சமூகத்தில் புதிய மாற்றங்கள் நிகழாதா என்று எத்தனையோ ஆரோக்கியமான மனிதர்கள் ஏக்கத்தைச் சுமந்து தூக்கமின்றித் தவிக்கின்றனர்.

    அப்படிப்பட்ட அரிதான மனிதர்களில் ஒருவர் தான் இந்த நூலாசிரியர் ஜீவபாரதி அவர்கள். பலர் நாம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் கர்மயோகிகளைப் போல் நாட்டின் நலனுக்காகக்

    Enjoying the preview?
    Page 1 of 1