Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uzhaithean Uyarnthean
Uzhaithean Uyarnthean
Uzhaithean Uyarnthean
Ebook183 pages1 hour

Uzhaithean Uyarnthean

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுத வேண்டும்’ என நண்பர் சபீதாஜோசப் என்னிடம் கேட்டபோது, நான் சம்மதிக்கவில்லை. ‘நான் என்ன அப்படி பெரிதாக சாதனை செய்து விட்டேன்! என் வாழ்க்கை அனுபவம் படிக்கிறவர்களுக்கு எந்தவிதத்தில் பயன்படப் போகிறது?’ என மறுத்துவிட்டேன்! ‘எத்தனையோ தோல்விகள், கஷ்டங்கள் இதையெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறீர்கள்! இந்த ‘வைராக்கியம்’ பல இளைஞர்களுக்கு.... தன்னம்பிக்கை ஊட்டக்கூடும் என்று சபீதாஜோசப் சொன்னார். எனக்கும் அது நியாயமாகப்பட்டதால்.... எனது வாழ்க்கை அனுபவத்தை எழுத சம்மதித்தேன்.

நிச்சயம் இது சுயதம்பட்டமல்ல! வாழ்க்கை கற்றுக்கொள்ள.... ஒன்று அனுபவித்து புரிய வேண்டும்! அல்லது கற்று புரிய வேண்டும்! என் வாழ்க்கை அனுபவம் இதை படிக்கிற இளைஞர்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்று தெரியாது! ஆனால்.... கலைத்துறையோ… இல்லை வேறு எந்த துறை மூலமோ.... பொதுவாழ்வில் வெற்றி பெற நினைக்கிறவர்களுக்கு எனது வாழ்க்கை அனுபவம் சில அன்பான, தோழமையான ஆலோசனைகளை வழங்கக்கூடும்!

Languageதமிழ்
Release dateAug 20, 2022
ISBN6580122808721
Uzhaithean Uyarnthean

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Uzhaithean Uyarnthean

Related ebooks

Reviews for Uzhaithean Uyarnthean

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uzhaithean Uyarnthean - Kalaimamani Sabitha Joseph

    http://www.pustaka.co.in

    உழைத்தேன் உயர்ந்தேன்

    Uzhaithean Uyarnthean

    Author :

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இந்த புத்தகம் எதற்காக....?

    எங்க குடும்பம்

    இந்தி எதிர்ப்புப் போராட்டம்

    நான் முரட்டுத்தனமான ஆளு

    திருட்டு ‘தம்’

    அக்குளில் வெங்காயம்! வந்தது காய்ச்சல்!

    இப்ராகிம் அனுப்பிய தந்தி

    வாத்தியார் படுக்கையில் பாம்பு!

    எங்களுக்கு டிரஸ் பைத்தியம்!

    காமராஜருக்கு இட்லி எடுத்து போனேன்!

    புதுசா ஒரு காதல் அனுபவம்!

    மீண்டும் ஒரு காதல்!

    நல்லவன்

    காதலுக்கு ஒரு குட்பை!

    நண்பர்களுடன் கொண்டாடிய பண்டிகை!

    அப்பாவுக்கு எதிராக அரசியல்!

    பெண்கள் ஜாதி பார்க்கலாமா?

    எல்லாரும் மனுஷ ஜாதிதான்!

    கலாட்டா காதல்

    சிவாஜி பட போஸ்டர் கிழிப்பு!

    எம்.ஜி.ஆர். ரசிகன்!

    கலைஞர் கையால் கேடயம் வாங்கத் தடை....

    எனக்கு பெண் தரமாட்டேன்னாங்க....

    என்னை மாதிரியே இருக்கீங்களே - ரஜினி

    ‘சினிமாவில் நடிக்கிறீங்களா தம்பீ!’

    ‘எனக்கு தமிழ் தெரியாது என்றார்கள்!’

    இனிக்கும் இளமையில் கசப்பான அனுபவங்கள்

    என் கூட நடிக்க மறுத்த கதாநாயகிகள்!

    அது ஒரு சோதனை காலம்

    கடன்பட்டார் நெஞ்சம்போல....

    சினிமாவை தெரிஞ்சுக்கிட்டேன்

    சந்தித்த வி.ஐ.பி.க்கள்!

    எம்.ஜி.ஆர். படங்களில் கற்ற பாடம்

    ஊர் நன்மைக்காக போராடுங்க....

    அந்த பயங்கர விபத்தும் கசப்பான அனுபவமும்

    என் கல்யாணம்....

    இறைவன் கொடுத்த வரம் என் மனைவி

    நானும் திரைப்படக் கல்லூரி மாணவர்களும்…

    விஜயகாந்த் பெற்ற விருதுகள்!

    நினைவில் வாழும்

    அப்பா அழகர் சாமி

    அம்மா ஆண்டாள் அம்மாள்

    சின்னம்மா ருக்குமணியம்மாள்

    அண்ணன் நாகராஜ்

    ஆகியோருக்கு இந்நூல் சமர்ப்பணம்

    இந்த புத்தகம் எதற்காக....?

    ‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுத வேண்டும்’ என நண்பர் சபீதாஜோசப் என்னிடம் கேட்டபோது, நான் சம்மதிக்கவில்லை.

    ‘நான் என்ன அப்படி பெரிதாக சாதனை செய்து விட்டேன்! என் வாழ்க்கை அனுபவம் படிக்கிறவர்களுக்கு எந்தவிதத்தில் பயன்படப் போகிறது?’ என மறுத்துவிட்டேன்!

    ‘எத்தனையோ தோல்விகள், கஷ்டங்கள் இதையெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறீர்கள்! இந்த ‘வைராக்கியம்’ பல இளைஞர்களுக்கு.... தன்னம்பிக்கை ஊட்டக்கூடும் என்று சபீதாஜோசப் சொன்னார்.

    எனக்கும் அது நியாயமாகப்பட்டதால்.... எனது வாழ்க்கை அனுபவத்தை எழுத சம்மதித்தேன்.

    நிச்சயம் இது சுயதம்பட்டமல்ல! வாழ்க்கை கற்றுக்கொள்ள.... ஒன்று அனுபவித்து புரிய வேண்டும்! அல்லது கற்று புரிய வேண்டும்! என் வாழ்க்கை அனுபவம் இதை படிக்கிற இளைஞர்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்று தெரியாது! ஆனால்.... கலைத்துறையோ… இல்லை வேறு எந்த துறை மூலமோ.... பொதுவாழ்வில் வெற்றி பெற நினைக்கிறவர்களுக்கு எனது வாழ்க்கை அனுபவம் சில அன்பான, தோழமையான ஆலோசனைகளை வழங்கக்கூடும்!

    கஷ்டம், அவமானம், தோல்வி, ஏளனம்.... இப்படி பல கசப்பான அனுபவங்களையும் கூட உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்!

    அப்படிப்பட்ட அனுபவங்கள் உங்களுக்கு ஏற்படும்போது, அதை மிகுந்த வைராக்கியத்தோடு நான் எதிர்கொண்டு ஜெயித்ததையும், உங்களோடு பகிர்ந்து கொள்வதால், கண்டிப்பாக எனது வாழ்க்கை அனுபவம் உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

    நட்பின் ஆழம், நன்றி மறவாமை, ஏழைகள் மீது அன்பு காட்டல், சமூக அக்கறை, ஜாதி, மத பேதங்களை ஒழித்தல்… என நான் கண்டறிந்த பல நல்ல விஷயங்களையும், உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்! என் சமகால சமூக அரசியல் நிகழ்வுகளையும் இதில் நான் பதிவு செய்து இருக்கிறேன்.

    எனவே, இளைஞர்களுக்கு என் வாழ்க்கை போராட்டம் தன்னம்பிக்கை ஊட்டும் என நம்புகிறேன்.

    இந்நூலைப் படித்து விட்டு ஒரே ஒரு இளைஞனாவது சாதி வெறிக்கும், சமூக விரோதத்திற்கும் எதிராக குரல் கொடுப்பானேயானால், இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்று நினைப்பானேயானால்.... அதுதான் என் வாழ்க்கை அனுபவங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

    என் வாழ்க்கை வரலாற்றை தொடராக வெளியிட்ட குங்குமம் இதழுக்கும், நான் சொல்ல சொல்ல தொகுத்து எழுதிய நண்பர் பத்திரிகையாளர் சபீதா ஜோசப் அவர்களுக்கும், என் நன்றி!

    வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

    அன்புடன்

    எங்க குடும்பம்

    எங்கப்பாவுக்கு அருப்புக்கோட்டைப் பக்கத்துல இருக்கிற ‘ராமானுஜபுரம்’தான் சொந்த ஊர். சின்ன வயசுலேயே மதுரைக்கு வந்துட்டேன்னு சொல்லுவாரு. அப்பா மதுரையில ஆரம்பகாலத்துல இருந்த இடங்களையும், அவர் வேலை பார்த்த இடங்களையும் எங்கிட்டே காட்டி சொல்லியிருக்கார்.

    எங்கப்பா (அழகர்சாமி)க்கு இரண்டு மனைவிங்க. எங்கம்மா (ஆண்டாள்) மூத்ததாரம். அவங்களுக்கு நாலு பிள்ளைங்க அக்கா விஜயலட்சுமி, அண்ணன் நாகராஜ், நான், எனக்கு அடுத்தது ஒரு தங்கச்சி திருமலாதேவி.

    என் தங்கச்சி பிறந்த இருபதாவது நாளில் எங்கம்மா இறந்துட்டாங்க. அப்போ எனக்கு ஒரு வயசு. அம்மாவின் அன்பைப்பத்தியோ, அம்மாவின் இழப்பைப்பத்தியோ தெரியாத வயசு. அம்மா கண்மூடித் தூங்குறாங்க. இவங்கள்லாம் சுத்தி நின்று ஏன் அழுவுறாங்கன்னு தெரியாம வெளியே ஓடி விளையாடிக்கிட்டிருந்த விளையாட்டு பருவம். ஆனா நாகராஜ் அண்ணனுக்கு அம்மாவின் இழப்பு, சோகம் ரொம்ப நாள் வரைக்கும் இருந்தது.

    சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து, குழந்தைங்க வளரணும்னா அதுகளுக்கு தாயன்பு வேணும்னு சொல்லி, உடனடியா எங்கப்பாவுக்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க அவங்கதான் எங்க சின்னம்மா ருக்குமணியம்மாள்.

    அவங்களுக்கு மொத்தம் ஏழு பேர் பிறந்தாங்க, அதுல நாலு பசங்க, மூணு பொம்பளப் பிள்ளைங்க. நாங்க அத்தனை பேரும் ஒரே வீட்ல, ஒண்ணா கூட்டுக் குடும்பமாகத்தான் வாழ்ந்துட்டிருந்தோம். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எங்கப்பா, ரொம்பக் கஷ்டப்பட்டுதான் முன்னுக்கு வந்தார்.

    அப்பா முதல்முறையா ஒரு ரைஸ்மில்லை ‘லீசு’க்கு எடுத்தார். அதுல இரவு பகல்னு பார்க்காமல் உழைச்சார். அப்போ ஒரு ஜோசியர் ‘உனக்கு முதல்ல ஒரு பெண் குழந்தை பிறக்கும். ரெண்டாவதா ஒரு ஆண் குழந்தை பிறக்கும் போது, இதை (ரைஸ்மில்லை) நீ சொந்தமாக்கிடுவே’னு சொன்னாராம். அப்படியே நடந்ததால் முதல்ல வாங்கின ரைஸ்மில்லுக்கு ‘நாகராஜ் ரைஸ்மில்’னு பேர் வச்சார்.

    எங்க குடும்பத்துல பார்த்தீங்கன்னா எல்லார் பேர்லேயும் ராஜ் வரும். அண்ணன் பேர் நாகராஜ், என் பேர் விஜயராஜ், தம்பிங்க பால்ராஜ், ராமராஜ், எங்க பேர்ல ‘ராஜ்’ இருந்த மாதிரியே நாங்களும் ராஜா மாதிரி வளர்க்கப்பட்டோம்.

    எங்க சொந்தபந்தத்துல யாரும் அதிகமாகப் படிக்கலேங்கற ஆதங்கம் எங்கப்பாவுக்கு இருந்தது. எங்க குடும்பத்துல பெரிய படிப்பு படிச்சவங்க இருக்கணும்னு ரொம்ப பாடுபட்டு எங்களைப் படிக்கவச்சார். அக்காவை டாக்டருக்கு படிக்க வச்சாரு. அதே போல துரைராஜ்ங்கற டாக்டர் மாப்பிள்ளைக்கு கட்டி வச்சாரு.

    எங்கண்ணன் நாகராஜுக்கு அம்மாவை பறிகொடுத்த சோகம் எப்பவுமே இருக்கும். அண்ணன் நிறைய புக்ஸ் படிக்கும் பழக்கமுள்ளவர். உலகியல், தத்துவம், ஆன்மீகம், சினிமானு பலரக புஸ்தகங்களை படிப்பாரு. நியாயமாக பார்த்தா, எங்க குடும்பத்துல சின்ன வயசுலேர்ந்து சினிமாவை அதிகமா நேசிச்சவர் அவர்தான். அப்பவே, புரஜக்டரெல்லாம் ஒட்டிப் படங்கள் பார்ப்போம். ஞாயிற்றுக்கிழமைகள்ல நாங்களே வெளியே போர்டுல இன்று ‘மகாதேவி’ படம் காண்பிக்கப்படும்னு எழுதி வைப்போம். அப்போ டிக்கெட் நாலணாவோ, ரெண்டணாவோ வச்சிருந்தோம். வீட்ல சினிமா காட்றதும், அதனால பல பேரு வீட்டுக்குள்ள வந்து போறதும் அப்பாவுக்கு பிடிக்கலே. கூப்பிட்டு கண்டிச்சார். அப்புறம் அதை விட்டுட்டோம்.

    மதுரை செய்ண்ட் ஜோசப் ஸ்கூல்ல நான், அக்கா, அண்ணன், தங்கச்சி எல்லாம் படிச்சுக்கிட்டிருந்தோம். ஒண்ணா ஸ்கூல் போவோம், வருவோம். எங்க அக்கா என்னை ரொம்ப அன்பா, ஒரு அம்மா மாதிரி கவனிச்சுக்குவாங்க. அந்த ஸ்கூல்ல படிக்கும்போது எனக்கு என்ன வேணுன்னாலும் அவங்ககிட்டேதான் போய் நிப்பேன். வீட்ல எனக்கு பணிவிடை செய்யறதோடு ஸ்கூல்லேயும் போய் அக்காவைத் தொந்தரவு பண்ணுவேன். பாத்ரூம் போக வேண்டியிருந்தால், அக்கா படிக்கிற வகுப்புக்கு போயி, ‘அக்கா எனக்கு பாத்ரூம் வருது’னு சொல்வேன். சில சமயம் டவுசரிலே யூரின் போயிடுவேன். அப்பவும் அக்கா வகுப்புக்கு போய் நின்னுடுவேன். ‘டவுசர்ல பாத்ரூம் போயிட்டேன்; வந்து கழுவி விடுக்கா’னு சொல்வேன். ‘ஏண்டா என் உயிரை வாங்குறே’னு செல்லமா கோபிப்பாங்களே தவிர, அக்காவுக்கு என்மேல கொள்ளைப் பாசம்!

    இப்படித்தான் என் பள்ளி நாட்கள் போனது. அப்புறம் அக்கா ஹாஸ்டலுக்கு போயிட்டாங்க, மதுரை தெப்பக்குளம் பக்கத்துல இருந்த ‘ஆர்.சி. ரோஸரி சர்ச்’ங்கற ஸ்கூல்ல என்னை சேர்த்தாங்க அண்ணனை வேறு ஓரிடத்திலே சேர்த்தாங்க.

    இந்த ஸ்கூலுக்கு போன பிறகு, என் தேவைக்காகவும், என் நண்பர்களுக்கு செலவு பண்ணவும் அப்பாவின் சட்டை பாக்கெட்ல கைவைக்க வேண்டியதாகிவிட்டது. அப்பாவோட சட்டை பாக்கெட்ல எப்பவும் சில்லறை காசும், ரூபா நோட்டும் இருக்கும். நான் வெறும் நாலணா, எட்டணாத் திருடன்தான். ரூபா நோட்டு எடுக்க மாட்டேன் அப்பா எனக்கு பாக்கெட் மணி கொடுப்பார். இருந்தாலும் செலவு அதிகமாயிருக்கும் போது என்ன பண்றது அப்பாவோட பாக்கெட்டே

    Enjoying the preview?
    Page 1 of 1