Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiraiyulagai Thirumbi Paarkkirargal
Thiraiyulagai Thirumbi Paarkkirargal
Thiraiyulagai Thirumbi Paarkkirargal
Ebook111 pages36 minutes

Thiraiyulagai Thirumbi Paarkkirargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரையுலகை திரும்பிப் பார்க்கிறார்கள் என்னும் புத்தகத்தில் உள்ள திரையுலக கலைஞர்களின் அனுபவங்களும் அப்படி பட்டதொரு முதல் தரமானவைதான். அதில் வலியும் உண்டு, வசந்தமும் உண்டு, வாழ்க்கையும் உண்டு. பிரபலங்கள் திரும்பிப் பார்த்த அந்த நாள் அனுபவங்களை பற்றியும் வாசித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580122808875
Thiraiyulagai Thirumbi Paarkkirargal

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Thiraiyulagai Thirumbi Paarkkirargal

Related ebooks

Reviews for Thiraiyulagai Thirumbi Paarkkirargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiraiyulagai Thirumbi Paarkkirargal - Kalaimamani Sabitha Joseph

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திரையுலகை திரும்பிப் பார்க்கிறார்கள்

    Thiraiyulagai Thirumbi Paarkkirargal

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    பொருளடக்கம்

    என்னுரை

    ஆபீஸ் பாய் வேலை மாதம் மூணு ரூபாய் சம்பளமுடன் என் பயணம் ஆரம்பம்.

    என் தாயார் மனைவி நகைகளை விற்று முதல் பிரிண்ட் போட்டோம்.

    அந்த நாட்களை திரும்பிப்பார்க்கிறேன்

    இரும்பு வியாபாரம் செய்தேன்!

    திரையுலகில் என் முதல் நாள்...!

    திருப்புமுனையான முதல் நாள்

    வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம்

    என் குரு மைக்கேல் ஜாக்சன்

    இப்படித்தான் ஆரம்பம்

    எம்.ஜி.ஆருக்கு இத்தனைக் கூட்டம் ஏன்?

    ரஜினி என்று நினைப்பா ...?

    காமெடி நடிகைகள் வாழ்க்கை ரொம்ப சோகமானது...

    என்னுரை

    ஒவ்வொரு மனிதனும் தங்கள் வாழ்வின் முதல் விஷயங்களை எப்போதும் மறப்பதில்லை, நினைவேடுகளில் எப்போதும் அந்த முதல் பகுதி பரவசமானதாகவே இருக்கும்.

    முதல் முத்தம், முதல் காதல், முதல் பாராட்டு, முதல் வேலை, முதல் சம்பளம், முதல் சந்திப்பு இப்படி மறக்கமுடியாத முதல்நாள் அனுபவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு.

    இந்த புத்தகத்தில் உள்ள திரையுலக கலைஞர்களின் அனுபவங்களும் அப்படிபட்டதொரு முதல் தரமானவைதான்.

    அதில் வலியும் உண்டு, வசந்தமும் உண்டு, வாழ்க்கையும் உண்டு.

    பிரபலங்கள் திரும்பிப்பார்த்த அந்தநாள் அனுபவங்களை உங்கள் கைகளில் அழகான புத்தகமாக அமைத்துக் கொடுத்த மரியாதைக்குரிய அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்றி!

    என்றும் நட்புடன்,

    சபீதா ஜோசப்.

    நன்றி

    பொம்மை

    டி.சினிமா

    நான் பேச நினைப்பது (போதி வெளியீடு)

    ராஜரிஷி

    ஆபீஸ் பாய் வேலை மாதம் மூணு ரூபாய் சம்பளமுடன் என் பயணம் ஆரம்பம்.

    மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்

    கழைக்கூத்தாடியிடம் இசை:

    ஒருநாள் நான் தங்கியிருந்த குடியிருப்பில் கழைக்கூத்தாடிகள் வந்து வித்தை காட்டினார்கள். பலவகையான தாளவாத்தியங்களை வைத்துக்கொண்டு அவர்கள் வாசித்து கும்பல் சேர்த்தார்கள். நானும், நண்பன் கருணாகரனும் சேர்ந்து வேடிக்கை பார்க்க அங்கே நின்று கொண்டிருந்தோம். கருணாகரன் என்ன விட இரண்டு வயது மூத்தவன்.

    கழைக்கூத்தாடிகளின் ஆட்டம் கொஞ்சம் கொஞ்மாக சூடு பிடித்தது. ஒரு ஆள் தாளம் அடிக்க உயரமாக கட்டப்பட்டிருந்த கயிற்றின் மேல் ஒரு பெண் சர்க்கஸில் செய்வதுபோல பாலன்ஸ் காட்டி நடந்தாள்.

    எனக்கு அந்தப்பெண் செய்து காட்டிய சாகஸங்களைவிட சப்தம் எழுப்பும் அந்த தாளவாத்தியத்தின் மேல்தான் அதிக ஆர்வம். நான் வாசிக்கின்றேன் என்று அந்த வாத்தியத்தை வாங்கி லாவகமாக வாசித்தேன். அந்த கழைக்கூத்தாடிக் கும்பலின் தலைவன் பலே… ரொம்ப பிரமாதமாய் வாசிக்கிறீயே தம்பி, என்று பாராட்டியது என்னை மேலும் உசுப்பிவிட்டது. தாளம் தவறாத அந்த வாசிப்பும், அன்றைய அதிக வசூலுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

    இந்த சமயத்தில் நண்பன் கருணாகரனுக்கு என்ன தோன்றியதோ நானும் அந்த வாத்தியத்தை வாசிக்கிறேன் பாரு என்று யாருடைய அனுமதியும் இன்றி அதை எடுத்து மனம்போன போக்கில் அடிஅடி என்று அடிக்க வாத்தியத்தின் மேல் தோல் கிழிந்து தொங்கியது. கழைக்கூத்தாடிகள் தன்னை பின்னி எடுத்து விடுவார்கள் என்று பயந்து நைஸாக அவன் என்மீது பழியைப் போட்டுவிட்டு கருணாகரன் காணாமல் போனான்.

    உடனே கழைக்கூத்தாடிகள் நேராக எனது தாத்தாவிடம் அவருடைய அலுவலகத்திற்கே போய் புகார் செய்தார்கள். தாத்தா இப்படிப்பட்ட சேட்டைகளையெல்லாம் ஆதரிப்பவர் அல்ல. அவர் உன்பிள்ளை செய்திருக்கும் வேலையைப்பாரு என்று தன்மகளிடம் சத்தம் போட்டார்.

    ஊரை விட்டு ஓட்டம்:

    அம்மாவுக்கு வந்தது ஆவேசம். கையில் கிடைத்த உலக்கையால் அடித்து என்னை நிமிர்த்தி விட்டார். நான் அதைச் செய்யலேம்மா என்ற என்கதறல் ஏதும் அம்மா காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.

    அம்மாவும் நானும் அன்று இரவு தூங்வே இல்லை. பையனை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியவில்லையே என்று அம்மா மனதிலும், யாருக்கும் நான் பாரமாக இருக்கக்கூடாது என்று என்மனதிலும் ஒரு உளைச்சல் இருந்திருந்தது.

    அன்று இரவே என் மனதில் ஒரு தீர்மானம் நிறைவேறியது.

    இனி இங்கே இருக்கக்கூடாது ஊரை விட்டுப்போய்விட வேண்டும். திருட்டு ரயிலேறி திருப்பூர் வந்திறங்கினேன். அங்கே எனது தாய் மாமா, ராசன் மாமா இருந்தார். அவர் எல்.ஆர்.ஜி. நாயுடு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திருப்பூரை நான் தேர்தெடுத்ததற்கு இரண்டு காரணங்கள். ஜெயிலில் போட்ட ஹரிச்சந்திரா நாடகத்திற்குப்பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று முளைத்த ஆசை ஒரு காரணம் அப்போது பலபடங்கள் எடுத்து பிரபலமாக இருந்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் திருப்பூரில் இருந்தது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான சோமசுந்தரம் செட்டியார், எஸ்.கே. முகைதீன் ஆகியோருடன் ராசன் மாமாவின் முதலாளி எல்.ஆர்.ஜி. நாயுடுவுக்கு பரிச்சயம் இருந்தது. எனவே நடிப்பதற்குத் தன் மாமா ஏதேனும் வழி செய்து தரமாட்டாரா என்ற ஆசை இன்னொரு காரணம்.

    ஜூபிடர் பிக்சர்ஸில் வேலை:

    எனது ஆசையை அறிந்துகொண்ட மாமா ஜூபிடர் பிக்சர்ஸுக்கு என்னை அழைத்துப்போனார். உரிமையாளர் சோமசுந்தரத்திடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் பார்க்கலாம் என்று ஏதோ ஒப்புக்காக சொல்லாமல், சீரியஸாகவே என்னை சென்னைக்கு தனது ஆஸ்டின் காரிலேயே அழைத்துக்கொண்டு வந்தார்.

    அப்போது கண்ணகி படத்தயாரிப்பு தொடங்கப்பட்டிருந்தது. பி.யூ. சின்னப்பா, பி.கண்ணாம்பா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், இளங்கோவன் (வசனம்), எஸ்.வி. வெங்கட்ராமன் (இசை), ஒரு முன்னணி நட்சத்திர குழுவே கண்ணகியில்

    Enjoying the preview?
    Page 1 of 1