Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Cocktail Kanavugal
Cocktail Kanavugal
Cocktail Kanavugal
Ebook92 pages32 minutes

Cocktail Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்துருக்கு திறமைகள் இருந்தாலும் பார்வையற்றவன் என்பதால் அதை ஏற்க மறுக்கும் குடும்பத்தினர். அவன் வாழ்வில் ஒரு தேவதையாக வரும் மாதவி. சந்துருவை உயர்ந்த நிலைக்குகொண்டு வர மாதவி என்ன செய்தாள்? குடும்பத்தில் கணவன், மனைவி இருவரிடமும் நம்பிக்கை இருந்தால்தான் அந்த குடும்பம் நந்தவனமாய் இருக்கும் என காக்டெயில் கனவுகளில் வாசிப்போம்…

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580100608146
Cocktail Kanavugal

Read more from Devibala

Related to Cocktail Kanavugal

Related ebooks

Reviews for Cocktail Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Cocktail Kanavugal - Devibala

    http://www.pustaka.co.in

    காக்டெயில் கனவுகள்

    Cocktail Kanavugal

    Author :

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காக்டெயில் கனவுகள்

    கொஞ்சம் ஒயின். கொஞ்சம் விஸ்கி என்று சகல ரக உயர் பானங்களையும் முறையான விகிதத்தில் கலக்கத் தொடங்கினான் உம்மர். அந்தக் கண்ணாடிக் கோப்பை ஒரு மாதிரி தங்க நிற மதுவை அணிந்து ப்ளாரசன்ட் வெளிச்சத்தில் கண் சிமிட்டியது.

    இந்தா மயூர் சாப்பிடு!

    மயூர் உன்னைத்தான்! என்ன யோசனை?

    விரலைச் சுட்ட சிகரெட் மிச்சத்தை வீசிவிட்டு உம்மரை உற்றுப்பார்த்தான்.

    நல்ல ஒரு கதை வேணும் உம்பர்!

    முதல்ல காக்டெய்லை சாப்பிடு கதை கிளம்பும்!

    கண்ணாடிக் கிண்ணத்தைக் கையில் பெற்றுக்கொண்டு, இதழ்களை அதன் விளிம்பில் பதித்தான்.

    அடுத்த படத்துக்கா?

    ம்! டெல்லியிலேருந்து ஒரு பார்ட்டி, கொழுத்த பணத்தோட நேத்து வந்திருக்கான். பிலிம் ஃபெஸ்டிவல்ல நம்ம படத்தைப் பார்த்திருக்கான். கமல் கால்ஷீட் கூட வாங்க ரெடியா இருக்கான். நான் ஒரு படம் பண்ணித்தரணும்னு சொல்றான். இன்ஃபாக்ட், கெஞ்சறான்!

    உங்கிட்ட ஆயிரம் மசாலாக் குப்பைகள் இருக்கே. ஒண்ணை எடுத்துவிடேன். கமலை வச்சு கொஞ்சம் ‘ரிச்’ சா செஞ்சிட்டா, பாக்ஸ் ஆபிஸ் ஹிட்!

    நோ...!

    ஆகாதுங்கறியா?

    ஆகும். பட் எனக்கு இஷ்டமில்லை!

    பார்ட்டிக்கு பணம்தானே பிரதானம்?

    பட். எனக்கில்லை. இதுவரைக்கும் நான் டைரக்ட் பண்ணின இருபது படம். வசதியான ஒரு எல்லைக்கு என்னைக்கொண்டு வந்தாச்சு. கரன்சிகளைப் பார்த்து களைச்சுப்போயாச்சு நான். ஸம்திங் வித்தியாசமா செய்யணும். உலக அரங்குலகொண்டு போய் நிறுத்தணும் அதை!

    இப்பத்தானே தொடங்கின... அதுக்குள்ள ‘சிக்’கா?

    இல்லை உம்மர். எனக்குள்ள ‘அறிவு ஜீவி’ ஸ்நேகம் நீ மட்டும்தான். நீதான் அப்படியொரு கதையை எனக்குக் காட்டணும். பார்ட்டிக்கு பதினைஞ்ச நாள்ல நான் பதில் சொல்லியாகணும்!

    உம்மர் சிகரெட் பற்ற வைத்தான்.

    யோசனையோடு மயூரைப் பார்த்தான்.

    மயூர்...

    கடந்த பத்தாண்டுகளாக தமிழ் திரைப்பட உலகில் வெற்றி வாகை சூடி வரும் ஒரு பிரபல இயக்குநர்.

    தனது இருபத்தி நாலாவது வயதில் உள்ளே நுழைந்தான் மயூர். தனக்கென ஒரு தனி பாணி அமைத்துக்கொண்டு இயங்கி வரும் மனிதன்.

    பெரும்பாலான படங்கள் மசாலா ரகமாக இருந்தாலும், நேர்த்தியாக படத்தை நகர்த்துவதில் வல்லவன். அதனால்தான் இருபது படங்களில் பத்து நூறு நாள் படங்கள். ஆறு வெள்ளி விழா ஒன்று பொன் விழா... அடிபட்ட படங்கள் மூன்றுதான்.

    அழகான இளைஞன்…

    மது, மாது என்று அவ்வப்போது தொட்டுக்கொள்பவன்… நாலு வருடங்கள் முன்னால் கல்பனாவைக் கல்யாணம் செய்துகொண்டு இதுவரை குழந்தைகள் இல்லாமல் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன்.

    உம்மர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வந்து சேர்ந்தவன்தான். அவனிடமிருந்த அறிவு வெளிச்சம் சட்டென மயூரின் பார்வையில் விழ,

    உம்மர் கூட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டான்.

    ஏறத்தாழ சம வயது.

    யாருமில்லாத மனிதன்.

    தன்னுடனேயே வைத்துக்கொண்டான் மயூர். இன்று மயூருக்கு எல்லாமே உம்மர்தான்.

    உம்மர் எழுந்தான்.

    எழுந்திரு மயூர். இப்ப மிட் நைட். நாளைக்கு எட்டு மணிக்கு நீ அவுட்டோர் புறப்படணும். கம்மான்!

    கதையை மறக்காதே. பை த பை, கதாநாயகியும் புதுசு வேணும்!

    நம்ம பக்தன் ஒரு ஆல்பம் தந்திருக்கார். பாக்கறியா?

    நோ. தொழில்னு வந்துட்ட பொண்ணுக்கு ஒரு தே***த்தனம் வந்துடும் முகத்துல. இது வேறமாதிரி இருக்கணும்.

    நான் பார்த்துக்கறேன். குட்நைட்!

    லேசான தள்ளாட்டத்துடன் விலகினான் மயூர்.

    உம்மர் அவனைத் தொடர்ந்தான்.

    தன்னறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டான் உம்மர்.

    தமிழ் பத்திரிகைகளை அள்ளிக்கொண்டு வந்து படுக்கையில் போட்டான்.

    ஒற்றை விளக்கை அமைத்துக்கொண்டு படுக்கையில் சரிந்தவன், பத்திரிகைகளை நோட்டம் விட்டான்.

    வாரப்பத்திரிகைகள்...

    மாத நாவல்கள் என்று சகலமும் அங்கே முற்றுகையிட்டிருக்க, பிரபலங்களை ஒதுக்கிவிட்டு வாரப்பத்திரிகையை எடுத்துப் புரட்டத் தொடங்கினான்.

    அறுபது நிமிடங்களின் தேடலின் முடிவில், அது அவன் கண்ணுக்குள் விழுந்தது.

    ‘சிந்தனைக்குரிய சிறுகதை’ ‘அறிமுக எழுத்தாளர் -6

    ஜெயராஜ் ஓவியம் வரைந்திருக்க, மெல்ல அதைப் படிக்கத் தொடங்கினான். அரைப்பக்கம் படிப்பதற்குள் நிமிர்ந்து உட்கார்ந்தான் படக்கென்று.

    சொப்னா என்ற துணிச்சல்கார பெண்ணை மையமாகக்கொண்ட கதை. தனிமனித சுதந்திரத்துக்கு முன்னுரிமை தரும். ஆண்மை கலந்த பெண் அவள். வெளியுலக விமர்சனத்தை விலக்கிவிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1