Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pachai Kiliyai Maarava?
Pachai Kiliyai Maarava?
Pachai Kiliyai Maarava?
Ebook75 pages24 minutes

Pachai Kiliyai Maarava?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்தோரதயா நவீன நாகரிக மங்கை. திடீரென அவள் அந்த நாகரீக வாழ்க்கையிலிருந்து விலகி கிராமத்து இளைஞனை திருமணம் செய்து கொள்கிறாள். திருமணத்திற்கு பிறகு அவள் சராசரி வாழ்க்கை வாழ முடியாமல் தவிக்கிறாள். அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதை தெரிந்துக் கொள்ள விறுவிறுப்பான இந்த நாவலை படியுங்கள்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580137106146
Pachai Kiliyai Maarava?

Read more from R. Sumathi

Related to Pachai Kiliyai Maarava?

Related ebooks

Reviews for Pachai Kiliyai Maarava?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pachai Kiliyai Maarava? - R. Sumathi

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    பச்சைக் கிளியாய் மாறவா?

    Pachai Kiliyai Maarava?

    Author :

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    என்னங்க… சந்ரோதயா வர்ற ட்ரெயின் சரியா பன்னிரெண்டுக்கெல்லாம் ஸ்டேஷனுக்கு வந்திடும். நீங்க ஸ்டேஷனுக்குப் போய் அவளைக் கூட்டிக்கிட்டு வர்றீங்களா?

    அடுக்களையில் மகளுக்குப் பிடித்த அயிரை மீன் குழம்பை ருசி பார்த்தபடியே கேட்டாள் கண்ணம்மா.

    கூடத்தில் ஏதோ ஒரு நோட்டை விரித்துவைத்து கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த ஜெகதீசன்,

    எனக்கு இன்னைக்கு காளவாய் போட்ட ஆட்களுக்கு சம்பளம் தர்ற வேலையிருக்கு, என்னால போக முடியாது. அவ என்ன குழந்தையா? தானா… டாக்ஸி ஏதாவது பிடிச்சு வந்திடுவா.

    இடது கையில் ஊற்றிய மீன் குழம்பை மறுபடியும் நக்கி ருசிபார்த்தப்படியே கூடத்திற்கு வந்த கண்ணம்மா,

    நம்ம ஊர்… என்ன மெட்ராஸா? நினைச்ச உடனேயே டாக்ஸி கிடைக்க, சிரமம் பார்க்காம காரை எடுத்துக்கிட்டுப்போய் கூட்டிட்டு வந்தா என்ன? சற்றே கோபமாகக் கேட்டாள்.

    டாக்ஸி கிடைக்கலைன்னா… என்ன? ஆட்டோ… தாராளமா கிடைக்கும், வருவா…

    ஏங்க இப்படியிருக்கீங்க? பெரிய படிப்பு படிச்ச பொண்ணு, கைநிறைய சம்பாதிக்கறா, இந்த கிராமத்து கண்ணெல்லாம் அவமேலதான். அவ படிப்புக்கும் தகுதிக்கும் அவ கார்ல வந்தாத்தானே கௌரவம் நமக்கு.

    பார்த்துக் கொண்டிருந்த கணக்கு, மனைவியின் பேச்சால் தடைப்பட்ட எரிச்சலில்…

    அவ்வளவு கௌரவம் பார்த்தின்னா… உன் மகளை நடந்தே வரச்சொல்லு.

    ம்… இது அதைவிடக் கேவலம். முகத்தை தோள்பட்டையில் இடித்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

    ஜெகதீசன் அரை மணிநேரத்தில் உடை மாற்றி அலமாரியிலிருந்து ஊதியம் தர வேண்டிய பணத்தை எடுத்து ஒரு பையில் வைத்துக்கொண்டு கிளம்பிப் போய்விட்டார்.

    மறுபடி சமையலறையில் பால் பாயசம் வைப்பதற்காக அடுப்பில் பாலை ஏற்றியபோது செல்ஃபோன் ஒலித்தது.

    சந்ரோதயா…

    என்னடா… எங்க வந்துக்கிட்டிருக்கே?

    கடலூர் கிட்ட வந்துட்டேன். ஒரு மணிநேரத்துல வீட்ல இருப்பேன்.

    அப்பா சூளை போட்ட ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கற வேலை இருக்குன்னு போய்ட்டார். அவரால ஸ்டேஷன்னு வர முடியாது! நீ டாக்ஸி பிடிச்சு வந்துடு.

    நம்ம கிராமத்துல டாக்ஸி கிடைக்கறது கஷ்டம்மா, ஆட்டோல வந்திடறேன்.

    வேண்டாம். ஆட்டோல வரவேண்டாம். கொஞ்சம் வெயிட் பண்ணு, டாக்ஸி கிடைக்கும்.

    சரிம்மா, பார்க்கறேன். அம்மா… என்ன சமையல் பண்ணியிருக்கே எனக்காக?

    உனக்குப் பிடிச்ச அயிரை மீன் குழம்பு வறுவல், பால்பாயசம் செய்யப் போறேன்.

    வாவ்… அதான் பேசும்போதே மீன் குழம்பு வாசனை மூக்கைத் துளைக்குது!

    ஆமாடி. உனக்கு போன் வழியா வாசனை வரும்?

    பின்னே அம்மாவோட கை மணம் அப்படி!

    சரி… வேற என்ன செய்யணும் சொல்லு, செய்யறேன்.

    "அதான்… ஒருவாரம் தங்கப்

    Enjoying the preview?
    Page 1 of 1