Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manithan
Manithan
Manithan
Ebook203 pages1 hour

Manithan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதன்- ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியானவர்கள். அவர்களுக்குள் எத்தனை வித்தியாசங்கள். உருவத்தில், குணத்தில் செயல்களில்... அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நடுவில் இந்த சமுதாயத்தில் வாழ, நாம் நம்மை மாற்றிக் கொள்கிறோமா? இல்லை அவர்களை நமக்கு தகுந்தாற்போல மாற்றுகிறோமா? என்பதைப் பற்றிய சிறுகதைகளின் தொகுப்புதான், இந்த மனிதன் சிறுகதைத் தொகுப்பு.

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580123904026
Manithan

Read more from Indhumathi

Related authors

Related to Manithan

Related ebooks

Reviews for Manithan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manithan - Indhumathi

    http://www.Pustaka.co.in

    மனிதன்

    சிறுகதை கள்

    Manithan

    Sirukathaigal

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http: //www. pustaka. co. in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நாக்கு

    2. தாஜ்மஹால் புன்னகை

    3. துணி

    4. துறவு

    5. கல்லினுள் தேரைகள்

    6. கிணறு வெட்ட...

    7. சிகரங்கள்

    8. மனிதன்

    9. அனுமானங்களும் ஹேஷ்யங்களும்

    10. தேடல்....

    11. அவள் அப்படித்தான்!

    12. அக்கரைப் பச்சைகள்

    13. தண்டனை

    1. நாக்கு

    அவள் அந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியையாகச் சேர்ந்து இரண்டே மாதங்கள்தான் ஆகியிருந்தன. பெண்கள் பத்திரிகை மாதம் இரண்டு இதழ்கள். எல்லாப் பெண்கள் பத்திரிகைகளிலும் வெளிவருகிற வழக்கமான செய்திகள் இதிலும் உண்டு ஒரு உண்மைக்கதை. சமையல் பகுதி, அழகுக் குறிப்புகள் என எல்லாம் உண்டு. இவற்றுக்கிடையில் ஒரு கதை. ஒரு கட்டுரை என சிந்தனையைத் தூண்டுகிற இலக்கியத்தரம் வாய்ந்த பகுதியும் பிரசுரிக்கப்படுவதுண்டு. அந்தப் பகுதிகளால் அதிகம் கவரப்பட்டே அவள் அப்பத்திரிகையில் உதவி ஆசிரியையாகச் சேர்ந்திருந்தாள்.

    பத்திரிகை அலுவலகத்தில் வேலை என்பது அவள் பள்ளிக்கூட நாட்களிலிருந்தே கண்ட கனவு. தேடித்தேடிப் புத்தகங்களைப் படித்ததன் விளைவு. ஆங்கில இலக்கியத்தைக் கல்லூரியில் பாடமாக எடுத்துக் கொண்டிருந்தாலும் தமிழிலும் அவளால் சரளமாக எழுத வந்தது. சில பிரபலமான பத்திரிகைகளில் வெளியான அவளது கவிதைகளும், சிறு கதைகளும் வாசகர்களின் கவனத்தில் பதிந்திருந்த காரணத்தினாலேயே அவளுக்கு அந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியை வேலை கிடைத்தது.

    அந்த வேலையில் சேர்ந்த அன்று அவள்பட்ட சந்தோஷம் அதிகம். கண்ணில் தெரிந்த பொருளினைக் கைகள் கவர்ந்துவிட்ட சந்தோஷம். மண்ணில் தெரிந்த வானம் அவளது வசப்பட்டுவிட்ட சந்தோஷம். சம்பளம் என்று பார்த்தபோது சற்றுக்குறைவான ஊதியம்தான். என்றாலும் ஆத்மாவிற்குத் திருப்தி தரக்கூடிய, மனதை மகிழ வைக்கக்கூடிய ஒரு பெரிய காரியத்தில் தானும் ஒரு துளியாய்ப் பங்குபெறப் போகிற சந்தோஷம். நிறைய இலக்கியம் படைக்கப் போகிற சந்தோஷம்.

    அந்தப் பத்திரிகையில் அவள் விரும்பிப் படிக்க சிறுகதைப்பகுதியையும், சிந்தனைக் கட்டுரைகளையுமே அவள் பார்த்துக் கொள்ள நினைத்தாள். அவற்றில் எவ்வளவோ மாற்றங்கள் செய்ய ஆசைப்பட்டாள். தான் தேடிப் படித்திருந்த சிறு பத்திரிகைகளின் எழுத்தாளர்களிடமிருந்து கதைகள் வாங்கிப்போட நினைத்தாள். தன் மனதைத்தொட்ட கவிஞர்களின் கவிதைகளை வெளியிட ஆவலாக இருந்தாள். தானே சில அறிவு பூர்வமான கட்டுரைகளை எழுத ஆயத்தமானாள்.

    ஆனால் அவள் எதிர்பார்த்து வந்தமாதிரி அவளுக்கு அந்த இலக்கியப் பகுதி கொடுக்கப்படவில்லை. அதற்குப்பதிலாக வெளியில்போய் சில பெரிய இடத்துப் பெண்களைப் பேட்டி காணுவதும், பிரபலங்களைச் சந்திக்க வைத்து அவர்களின் உரையாடலைக் கட்டுரையாக்குவதும், சினிமா நட்சத்திரங்களைப் பற்றின குறிப்புகளைச் சேகரிக்கிற விஷயங்களுமே தரப்பட்டன.

    அதில் சற்று ஏமாற்றம் ஏற்பட்டாலும் சமாளித்துக் கொண்டாள். கொடுக்கப்பட்ட இப்பகுதிகளையே இலக்கியத் தரமானதாக மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை வந்தது. தன் எழுத்தால் எதையும் சுவைப்படச் சொல்ல முடியும் என்ற காரணத்தால், அதனையும் சந்தோஷத்துடனே செய்யத் துவங்கிய போதுதான் அன்று அவளுக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டது.

    பத்திரிகையின் ஆசிரியர் கூப்பிட்டுச் சொன்னார். மறுநாள் காலை எட்டு மணியளவில் பிரபல சமூகசேவகி - அந்த ஆண்டு அதற்காகப் பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீரஞ்சனியையும், எம். பி. யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பிரபல பழைய திரைப்பட நடிகை ஒருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்ததைக் குறிப்பிட்டார்.

    இந்த ஏற்பாட்டைச் செய்யறதுக்குள்ள போறும்னு ஆயிருச்சு. எம். பி. யோட செகரெட்டரிகிட்டப் பத்துத் தரத்துக்கு மேல போன்பண்ணிப் பேசி கடைசியா ஒரு வழியா அப்பாய்ன்ட்மெண்ட் வாங்கினேன். அந்தம்மாவோட அப்பாய்ன்ட்மெண்ட் கிடைச்ச விஷயத்தை இந்தம்மா ஸ்ரீரஞ்சனிகிட்ட சொல்லி நாளைக்கு காலைல எட்டு மணிக்கு நீங்க எம். பி. வீட்டுக்கு வந்துடுங்கம்மா ஊர்ல இவங்க என்னவோ அது தன் மரியாதைக்குக் குறைச்சல்ன்ற மாதிரிப் போறாங்க. ஏன், எம். பி. யை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்களேன்றாங்க...

    அது எப்படியம்மா... அவங்க எம். பி. அதுக்கு மரியாதை தர்ற விதமாக நாம் போறதுதான் நல்லா இருக்கும். இந்தச் சந்திப்பு நாளைக்கு உங்களுக்கு நிறைய விஷயங்களில் உதவியா இருக்கும்னு சொன்னப்புறமும் தயங்கிக்கிட்டே ஒத்துக்கிட்டாங்க. இரண்டு தேசத்தோட பிரதம மந்திரியைக்கூட சுலபமா சந்திக்க வச்சுடலாம் போல இருக்கு. இரண்டு பிரபலமான பெண்களைச் சந்திக்க வைக்கிறது பெரும்பாடாக இருக்கு. ஈகோ கிளாஷ் நிறைய வர்றது. அதனால் ரொம்பப் பாடுபட்டு ஏற்பாடு செய்த சந்திப்பு.

    இதைத் தவற விட்டுடாதீங்க. எட்டு மணின்னால் நீங்க ஏழரைக்கே போயிடுங்க. நேரா அந்தம்மா ஸ்ரீரஞ்சனி வீட்டுக்குக் காரை எடுத்திட்டுப் போய் அவங்களைக் கூட்டிக்கிட்டு சரியா எட்டு மணிக்கு எம். பி. வீட்டுக்குப் போயிடுங்க. போட்டோகிராபர்கிட்டே சொல்லிடுங்க. அவரை எம். பி. வீட்டுக்கே வரச் சொல்லிடுங்க. அட்டைப் படத்துலயே போடணும். அதுக்குத் தகுந்தமாதிரி எடுத்துக்கச் சொல்லுங்க. உள்ளயும் போட கலர் போட்டோ எடுக்கணும். முக்கியமா நீங்க சீக்கிரம் போயிடுங்க. அப்புறம் உங்களால் லேட்டுன்னு மேட்டர் கிடைக்காமப் போயிடக்கூடாது. என்ன... புரிஞ்சுதா...?

    எப்படியாவது மேட்டரை முடிச்சுக்கிட்டு வாங்க என்ன...?

    சரி சார்...

    மறுநாள் காலையில் அவள் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, வீட்டில் தன் வேளைகளை முடித்துக்கொண்டு, டேப்ரிகார்டரையும் இரண்டு காஸெட்டுகளையும், குறிப்பு நோட்டையும் பையில் போட்டுக்கொண்டு ஆபீஸ் கார் வந்ததும் சரியாக ஏழு மணிக்கெல்லாம் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டாள். அவள் வீட்டிலிருந்து அந்தச் சமூக சேவகியின் வீடு பக்கத்தில்தான் இருந்தது. அங்கு அவள் போய்ச் சேர்ந்தபோது மணி ஏழேகால்தான் ஆகியிருந்தது.

    சமூக சேவகி என்றதும் இவள் எளிமையானதோர் வீட்டைக் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தாள். ஓர் ஆசிரமம் மாதிரி இருக்கும் என எண்ணிக் கொண்டிருந்தாள். சமூக சேவகியும் கதர் அல்லது கைத்தறி புடவையில் இருப்பாள். தலையை இறுகக்கட்டி, மூக்குக்கண்ணாடி போட்டுக்கொண்டு இவளைப் பார்த்தும் கைகூப்பி வரவேற்பாள் என்பதெல்லாம் இவளது எதிர்பார்ப்பாக இருந்தது.

    ஆனால் இவள் போய் இறங்கின வீடோ வாசல் கூர்காவும், பெரிய அல்சேஷன் நாயுமாகப் பணத்தில் மினுமினுத்தது. வீட்டின் போர்டிகோவில் ஒரு வெள்ளை மாருதியும், சிமெண்ட் வர்ண பியட்டும், வீட்டை ஒட்டி பக்கத்தில் ஆழ்ந்த நீல அம்பாஸிடர் காரும் நிறுத்தப்பட்டிருக்க இவள் யோசித்தாள்.

    இத்தனை கார்கள் இருக்கிறபோது இந்தம்மா எதற்காக எடிட்டரிடம் கார் கொண்டு வரும்படி சொன்னாள்...?

    கூர்காவையும், அல்சேஷனையும் தாண்டி உள்ளே போனதும் வாசல் வராந்தாவிலேயே ஒரு வேலைக்காரப் பையன் எதிர்ப்பட்டான். அவனிடம் இவள் தான் வந்திருக்கிற விஷயத்தைத் தெரியப்படுத்தி அனுப்பினாள். ஐந்து நிமிடத்திற்கெல்லாம் திரும்பி வந்த பையன்அம்மா உங்களை உட்காரச் சொன்னாங்க. வராங்களாம்... என்றான்.

    இவள் வராந்தாவில் போடப்பட்டிருந்த பிரம்புக்கூடை நாற்காலிகள் ஒன்றில் உட்கார்ந்து டீபாயில் கிடந்த பழைய ஆங்கிலப் பத்திரிகையைப் புரட்டினபோது,

    உள்ளே சமூகசேவகி யாருடனோ டெலிபோனில் பேசுவது கேட்டது. குழைவான மெல்லிய தொனியில் கொஞ்சலான ஆங்கிலப் பேச்சு. இடையிடையே வெளிப்பட்ட சிரிப்பு. கிட்டதட்ட கால் மணிநேரப் பேச்சிற்குப் பின்னர் - சிரிப்பிற்குப் பின்னர்ஸோ வென் ஆர் யு கமிங் டு மெட்ராஸ்...? என்ற கேள்வி.

    ஐ வில் பி எக்ஸ்பெக்ட்டிங் யு. இஃப் யு டோண்ட் டர்ன் அப். ஐ வில் காட்சி தி ப்ளைட் அண்ட் கம் டு யுவர் ப்ளேஸ்

    பெரியதாய் அலைஅலையாய் ஓடிய சிரிப்பிற்குப் பின்னர் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட இவள் தன் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள். ஏழு நாற்பது. இப்போது கிளம்பினால்தான் எம். பி. யின் வீட்டிற்கு எட்டு மணிக்குப் போகமுடியும். இன்னும் சமூகசேவகி தன் முகத்தைக்கூடக் காட்டவில்லை. புகைப்படக்காரர் வேறு எம். பி. யின் வீட்டில் காத்துக் கொண்டிருப்பார். ஒருவேளை இங்கு நேரமாகி எம். பி. யின் வீட்டிற்குப் போகத் தாமதமாகிற பட்சத்தில் எம். பி. சந்திப்பிற்கு மறுத்துவிட்டால் என்ன ஆவது? பத்திரிகையாசிரியருக்கு என்ன பதில் சொல்வது? சமூக சேவகியின் வீட்டிலேயே நேரமானது தெரியாமல் அவர் தன்னைத்தான் சத்தம் போடுவார்.

    என்னம்மா பொறுப்பில்லாம் நடந்துக்கறே... எத்தனை தரம் இந்த மேட்டர் முக்கியம்னு சொல்லியனுப்பினேன். அது புரியாம இப்போ ஏதோ சாக்கு சொல்லிட்டு வந்து நிற்கறியே... என்று கோபப்படுவார்.

    ʻகடவுளே! அதற்கெல்லாம் இடம் வைக்காமல் இந்தச் சமூக சேவகியம்மாளை சீக்கிரம் வெளியில் வரவழையேன்..."

    இவளது பிரார்த்தனை கடவுளை எட்டியிருக்கும் போலிருக்கிறது. அடுத்த சில நிமிஷங்களில் சமூகசேவகி வெளியில் வந்தாள். பளீரென்ற பச்சை பிரிண்டெட் பட்டுப் புடவையும், அதே பிரிண்டெட் பட்டியில் ஜாக்கெட்டும், முகம் நிறைய தன் நிறத்தை இன்னும் அதிகமாக்கிக் காட்டுகிற மேக்கப்பும், கன்னங்களில் லேசான ரூஜ் மின்னலும், கண்களில் ஐ லைனரும், இமைகளைப் பெரிதாக்கிக் காட்டுகிற மஸ்காராவும், உதட்டில் சிவப்பும், காதிலும், கழுத்திலும், கைகளிலும் மின்னிய ஒற்றைக்கல் வைர நகைகளும்...!

    இவள் சடாரென்று எழுந்து நின்றுகுட்மார்னிங் மேடம்... என்றாள்.

    வாம்மா... சந்திப்பு எப்ப? எட்டரை மணிக்குத்தானே?

    இல்ல மேடம் எட்டு மணிக்கு.

    எட்டு மணிக்கா? என் செகரெட்டரி எட்டரைன்னு இல்ல சொன்னா... ஜஸ்ட் எ மினிட். என்று உள்ளே திரும்பிபவானி என்று குரல் கொடுத்தாள்.

    பாப் தலையும், சமூக சேவகியைவிட அதிக மேக்-அப்புமாக வந்த அந்த இளம் பெண்எஸ் மேம்...? என்றாள்.

    இவங்க பத்திரிகை சந்திப்பு எட்டரை மணிக்குன்னு இல்ல நீ என்கிட்ட சொன்ன?

    இல்ல மேம் எட்டுன்னு சொன்னேன். காலைல நீங்க டெல்லி கால் பேசறதுக்கு முன்னால்கூட ஞாபகப்படுத்தினேன்

    ஓ. கே. தட்ஸ் ஆல்ரைட் நீ போ... யார் போன் பண்ணினாலும் நான் இன்னும் டூ அவர்ஸ்ல வந்துடுவேன்னு சொல்லு... கெட் மீ மை ஹாண்ட் பாக்...

    அந்தப் பெண் கைப்பையைக் கொண்டுவர உள்ளே சென்ற சில விநாடிகளில் இவளிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டு விட்டன.

    போட்டோகிராஃபர் வரலையா?

    அவர் நேரே எம். பி. வீட்டுக்கு வந்து காத்துட்டிருப்பார் மேடம்.

    போட்டோகிராஃபர்?

    இவள் பெயரைச் சொன்னாள்.

    நல்லா எடுப்பாரில்ல...?

    ரொம்ப நல்லா எடுப்பார்.

    கலர்தானே?

    ஆமாம் - இவள் வேண்டுமென்றே அதுவரை சொல்லிக்கொண்டு வந்த மேடத்தைத் தவிர்த்தாள்.

    அட்டையிலேயே வருமில்ல…

    ரேப்பர் மேட்டர்தான்...

    போஸ்ட்டர் ஒட்டுவீங்க இல்ல...

    ஐ திங்க் ஸோ...

    நோ, நோ... போஸ்ட்டர் அடிச்சு ஒட்டணும்னு உங்க எடிட்டர்கிட்ட சொல்லிடு. நிறைய பப்ளிசிடி தரணும். பப்ளிசிடிகூடத் தரலைன்னால் எப்பிடி?

    இவள் பேசாமலிருக்க சமூக சேவகியிடமிருந்து அதட்டலாகக் குரல் வந்தது.

    என்ன?

    எடிட்டர்கிட்ட சொல்றேன். இதெல்லாம் அவர் முடிவு செய்யவேண்டிய விஷயம்.

    நான் சொன்னேன்னு சொல்லு....? இந்தப் பச்சைப் புடவையே போறுமா? கலர்ல நல்லா வருமா?

    வரும்னுதான் நினைக்கிறேன்.

    எதுக்கும் கைல இன்னொரு கலர் புடவையும் ஜாக்கெட்டும் எடுத்துக்கறேன். இன் கேஸ் இது சரியா வராதுன்னு உங்க போட்டோகிராஃபர் அபிப்ராயப்பட்டால் அங்க எம். பி. வீட்டிலேயே மாற்றிக்கலாம் பாரு.

    புடவை கொண்டு வர அவள் உள்ளேபோக இவள் பதட்டப்பட்டாள். கைவிரல் நகங்களைக் கடித்தாள். மீண்டும் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள். நல்ல வேலையாக அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சமூகசேவகி ஒரு வெளிநாட்டுப் பையும், வெளிநாட்டு அழகிய

    Enjoying the preview?
    Page 1 of 1