Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Autograph
Autograph
Autograph
Ebook158 pages56 minutes

Autograph

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற கோவிலுக்கு சென்ற நந்தினி. அங்கு பெற்றோர்களால் தவறவிடப்பட்ட சிறுமி ஒருத்தி அழுவதைக் கண்டு தன்னையுமறியாமல் சிறுமிக்காக வேண்டிக்கொள்கிறாள். தனக்காக மட்டும் இல்லாமல் பிறருக்காகவும் "வேண்டுதல்" வேண்டும் என்பதையும், "மாறும் நியதிகள்", "குழந்தை மனசு" போன்ற கதைகள், செல்போன்கள் இல்லாத காலகட்டத்தில் எழுதப்பட்டவை. ஆதலால் நடுத்தர வர்க்கத்தினர் எதையெல்லாம் கடந்து வந்திருக்கின்றனர் என்பதையும், இன்னும் சில சுவாரஸ்யமான சிறுகதைகளையும் வாசித்து மகிழ்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateJun 17, 2023
ISBN6580166909901
Autograph

Related to Autograph

Related ebooks

Reviews for Autograph

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Autograph - G. Shekar

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    ஆட்டோகிராஃப்

    சிறுகதைகள்

    Autograph

    Sirukathaigal

    Author:

    ஜி. சேகர்

    G. Shekar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    1. தியாகி சேர்த்த சொத்து

    2. மாறும் நியதிகள்

    3. குழந்தை மனசு

    4. ச்சீ... ஷேம் ஷேம்!

    5. ஜெயிக்கலாம் வாங்க!

    6. லட்சியவாதி...

    7. என்ன பார்வை உந்தன் பார்வை!

    8. வேண்டுதல்!

    9. மனதில் உறுதி வேண்டும்!

    10. மன்மதன் அம்பு

    11. ஜெக(ன்) ஜாலம்

    12. அடையாளம்

    13. நாகரிகம்

    14. சபலம்

    15. ஆட்டோகிராஃப்

    16. முதலாளி Vs தொழிலாளி

    17. புகழ்

    18. உறவுகள்

    19. நாளை விடியும்

    20. நிமிடக் கதைகள் 2

    முன்னுரை

    அன்பு வாசகர்களே!

    வணக்கம்! இந்த சிறுகதை தொகுப்பில், கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு, நான் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தது முதல், கடைசியாக வெளிவந்த சிறுகதைகள் வரை தொகுத்துள்ளேன்.

    இச்சிறுகதைகளை வெளியிட்ட வார, மாத இதழ் ஆசிரியர்களுக்கு எனது நன்றிகள்!

    இவர்களைத் தவிர அணிந்துரை எழுதிய பத்திரிகையுலகில் 50 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக (தினத்தந்தி) இருந்ததோடல்லாமல், பல சிறந்த நாவல்களையும் இருபதாம் நூற்றாண்டு வரலாறு போன்ற வரலாற்று ஆராய்ச்சி நூல்களையும் எழுதியவருமான, மூத்த பத்திரிகையாளர் திரு. ஐ. சண்முகநாதன் (நாதன்) அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    இனி இந்த கதைகளை படித்துவிட்டு அது எப்படியிருக்கிறது என்பதை வாசகர்களாகிய உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    திருச்சி-17

    15-05-2023.

    இப்படிக்கு

    ஜி. சேகர்

    6381148731

    என்னுரை

    அன்பு வாசகர்களே!

    இது எனது முதல் சிறுகதை தொகுப்பு. இதற்கு முன்பு சிறுகதை வானில் என்ற சிறுகதை தொகுப்பில், எனது சில சிறுகதைகள் வந்திருந்தாலும், முழுமையான தொகுப்பு இதுதான். இதில் நான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தது முதல், தற்பொழுது கடைசியாக எழுதியுள்ள சிறுகதைகள் வரை உள்ளன.

    நான் இப்படி சிறுகதைகள் எழுத ஆர்வம் வருவதற்கு முக்கிய காரணம், எங்கள் வீட்டிலேயே இருக்கும் மற்றொரு எழுத்தாளரும், எனது அண்ணனுமான செல்வன்ஜிதான். ஆமாம், அவர் பத்திரிகைகளுக்கு துணுக்குகள், கதைகள் எழுதி அனுப்பி, அது பத்திரிகைகளில் பிரசுரமாகி,கூடவே அதற்கு சன்மானமும் பெறுவதைப் பார்த்து, எனக்கும் அந்த ஆசை தொற்றிக் கொண்டது. இதற்கு உதவியாக அவர் அப்பொழுது நடத்தி வந்த சிறு நூலகமும், எனக்கு உதவி செய்ய, அந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களையெல்லாம், வீட்டிற்கு எடுத்து வந்து படித்து, படித்து நானும் கதைகள் எழுத ஆரம்பித்தேன். இது தவிர அவர் நடத்தி வந்த அந்த நூலகம், திருச்சியில் அந்த சமயத்தில் பத்திரிகைகளில் துணுக்குகள், சிறுகதைகள் எழுதி வந்த எழுத்தாளர்களின் சந்திப்பு மையமானது. அந்த நூலகத்திற்கு அப்பொழுது திருச்சி சையது, தென்னூர் யாதவன், தி.மா. தமிழழகன், ஹேமந்த் குமார், எஸ். பிரேம் சந்தர், இந்திர பூபதி, ஸ்ரீரங்கம் ஸ்ரீகாந்தன், எஸ். சக்திவேல், மற்றும் தற்பொழுது சென்னையில் சினிமாத் துறையில் டைரக்டராக இருக்கும் சந்துரு மாணிக்கவாசகம் போன்றோர் அடிக்கடி வருவார்கள். நாங்கள் அவ்வாறு சந்திக்கும் சமயத்தில், பெரும்பாலும் கதைகளைப் பற்றியே பேசுவோம், விவாதிப்போம். அப்படி ஆரம்பித்த ஆர்வம், பிறகு பணி நிமித்தமாக பலரும் பல இடங்களுக்கு போய்விட்டாலும், நான் தொடர்ந்து எழுதியவைகள்தான் இந்த சிறுகதைகள்.

    இந்த கதைகள் கடந்த இருபது வருடங்களாக, பல்வேறு காலகட்டங்களில் எழுதியவை என்பதால், சில கதைகளை இப்பொழுது படிக்கும்பொழுது வேடிக்கையாகக்கூட தோன்றலாம். (உ.ம்.) மாறும் நியதிகள் குழந்தை மனசு போன்ற கதைகள், செல்போன்கள் எல்லாம் எளிய மனிதர்களிடம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாதபொழுது எழுதப்பட்டவை என்பதால், இன்றைக்கு இந்த கதைகளை படிக்கும் வாசகர்களுக்கு, வீட்டில் போன் இருப்பது இவ்வளவு கஷ்டமான விஷயமா? என்றுகூட தோன்றலாம். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் இதையெல்லாம் கடந்துதான் வந்திருக்கின்றனர் என்பது நிதர்சன உண்மை.

    1. ‘மாலை முரசு’ தொழில் மலருக்காக தன்னம்பிக்கை தரும்படி எழுதவேண்டும் என்று நினைத்து, எழுதிய கதைகள்தான் மனதில் உறுதி வேண்டும். ஜெயிக்கலாம் வாங்க போன்ற கதைகள்.

    2. நான் ஈ படம் பார்த்துவிட்டு, அதன் பாதிப்பில் எழுதியதுதான் நான் கொசு சிறுகதை.

    3. எங்கள் தெருவில் புதிதாக குடி வந்த ஒரு அழகான ஜோடியை பார்த்து ரசித்து, பின்பு உண்மை நிலையை அறிந்தபொழுது, தோன்றியவைதான் ஜோடிப் பொருத்தம் கதை.

    4. வழக்கமான குடும்பக் கதைகள் தவிர்த்து, வேறு மாதிரி கதைகள் எழுதிப் பார்க்கலாமா? என்று யோசித்து எழுதியவைதான், ச்சீ... ஷேம் ஷேம்! விஞ்ஞானத்தின் மறுபக்கம் போன்ற கதைகள்.

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் இத்தொகுப்பில் நான் சிலருக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளேன்.

    முதலாவதாக இக்கதைகள் வெளியிட்ட மாலைமுரசு, தினமலர் - வாரமலர், தினத்தந்தி, பாக்யா, தேவி, தமிழ் முரசு, சுவாசம் செய்திகள் மற்றும் சில பத்திரிகைகளுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகள்.

    அடுத்து நான் முன்பு ‘மாலைமுரசில்’ பணிபுரிந்த பொழுது, என்னிடம் கதை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தி, ஆர்வமாக அதை கேட்டு வாங்கி பிரசுரித்த, அப்போதைய அதன் உதவி ஆசிரியர்களான திரு. ரத்னகுமார், திரு. நாகராஜன் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

    இத்தொகுப்பு வெளிவருவதற்கு மற்றொரு காரணம், கவிஞர். திரு. எஸ். அறிவுமணி அவர்கள். அவர்தான் மதிப்பிற்குரிய திரு. ரவி தமிழ்வாணன் அவர்கள், திருச்சி அஜந்தா ஹோட்டலில் தங்கியிருந்தபொழுது, என்னை அழைத்துப்போய் அறிமுகப்படுத்தி இந்த புத்தகம் வெளிவர பெரிதும் உதவி செய்தார். அவருக்கும் என் நன்றிகள்.

    ஆரம்பம் முதலே இந்த தொகுப்பு வெளிவர, வழிகாட்டியாக திகழ்ந்து நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய திரு. திருச்சி சையது, திரு. செல்வன்ஜி

    ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

    இவர்களைத் தவிர மற்றொருவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவர் பத்திரிகையுலகில் 50 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக (தினத்தந்தி) இருந்ததோடல்லாமல், பல சிறந்த நாவல்களையும், உலக வரலாறு இருபதாம் நூற்றாண்டு வரலாறு போன்ற வரலாற்று ஆராய்ச்சி நூல்களையும் எழுதியவருமான மூத்த பத்திரிகையாளர் திரு. ஐ. சண்முகநாதன் (நாதன்). அவர் எனது கதைகளுக்கு அணிந்துரை எழுதியது நான் பெற்ற பேறு. அவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    மேற்கண்டவைகளில் என்னைப் பற்றியும், எனது கதைகளைப் பற்றியும் அதிகமாகவே எழுதிவிட்டேன். இனி அந்த கதைகள் எப்படியிருக்கின்றது என்பதை வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    திருச்சி – 17

    30-06-2021

    இப்படிக்கு

    ஜி. சேகர்

    6381148731

    1. தியாகி சேர்த்த சொத்து

    காலை மணி எட்டு. அமைச்சர் செல்லதுரை பட்டு வேஷ்டி சட்டையில், உடல் முழுவதும் மேல்நாட்டு ‘செண்ட்’ மணக்க மிகவும் கம்பீரமாக மாடிப்படியிலிருந்து கீழே இறங்கினார். கீழே இறங்கியவர், அந்த பிரம்மாண்ட ஹாலின் நடுவில் இருந்த ஒரு சோபாவில் அமர்ந்தபடி, தனது பி.ஏ.வான சிவாவைப் பார்த்து, ‘சிவா! இன்னைக்கு என்னென்ன ப்ரோகிராம்லாம் இருக்கு?’ என்று கேட்டார்.

    சிவா உடனே அவசர அவசரமாக தன் கையிலிருந்த ஃபைலை புரட்டியபடி, ‘இன்னைக்கு காலை 10 மணிக்கு ஒரு நகைக் கடை திறப்பு விழா இருக்கு சார். அப்புறம் 11 மணிக்கு கல்லூரி மாணவர்கள் ரத்ததான முகாம்ல கலந்துக்கிறீங்க. அதுக்கப்புறம்...’ என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே அமைச்சர் குறுக்கிட்டு, ‘சரி. சரி இது போதும். முதல்ல நகைக் கடை திறப்பு விழாவை முடிச்சிக்குவோம். அதுக்கப்புறம் மத்தத பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு, தனக்கு முன்பு மேஜையில் இருந்த அன்றைய செய்தித்தாள்களை புரட்ட ஆரம்பித்தார்.

    தமிழ், ஆங்கிலம் என்று ஏழெட்டு செய்தித் தாள்களுக்குமேல் இருந்த அந்த செய்தித்தாள்களையெல்லாம் ஒவ்வொன்றாக படித்துக்கொண்டே வந்தவர், ஒரு செய்தித்தாளில் வந்திருந்த அந்த செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    "விடுதலைப் பேராட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1