Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arul Vaakku
Arul Vaakku
Arul Vaakku
Ebook111 pages41 minutes

Arul Vaakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு மனைவி ஆசையுடன் மேசைமீது வைத்த ஆவி பறக்கும் தேநீரை, இரு பிஸ்கெட்டுகளுடன் நிதானமாக, ருசித்துச் சாப்பிட இன்ஸ்பெக்டர் இருதயராஜ், லத்தியை மேசைமீது வைத்து தொப்பியைக் கழற்றுகிறார். கோப்பையில் தேநீர் எடுத்து உதட்டில் வைக்கும் பொழுது டெலிபோன் மணி அடிக்கிறது. எடுக்கிறார். செவியருகில் வைக்கிறார். குரலில் கடுமையுடன், “எந்த ஏரியா?” கேட்கிறார். “மைலாப்பூர் கபாலி தியேட்டர் அருகே...” டொக்.

அவசரமாகத் தேநீர்க் கோப்பையை மேசைமீது வைக்கிறார். தேநீர் தளும்பி, சாஸரில் விழுகிறது. லத்தியையும், தொப்பியையும் எடுத்துக் கொள்கிறார். மோட்டார் பைக் சாவியை மனைவி தர, கிளம்பி விடுகிறார். 'ம்... அவ்வளவுதானா என்று தேநீரும், பிஸ்கெட்டுகளும் பேசிக் கொள்கின்றன!’

மனைவி யந்திரத்தனமாக தேநீர் கோப்பையும், பிஸ்கெட்டுகளையும் எடுக்கிறார்! அவருக்கு அது தினமும் நடக்கும் சமாசாரம்.

ஆனால் படிக்கும் வாசகனுக்கு?

'என்ன ஆச்சு? கபாலி தியேட்டர் அருகே கொலையா, தீ விபத்தா, ரவுடிகளின் அட்டகாசமா, பெண்கள் சமாசாரமா?’

மேலே தொடர்ந்து படித்து, கதையின் இறுதியில்

இப்படி திக் திக் என்று வாசகன் மனதில் உணர்ச்சிகளை ஏற்படுத்தும் சிறுகதைகளை எழுதிப்பார்க்க ஆசைப்பட்டேன் விளைவு இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள்!

- பாமா கோபாலன்

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580128505288
Arul Vaakku

Read more from Bhama Gopalan

Related to Arul Vaakku

Related ebooks

Related categories

Reviews for Arul Vaakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arul Vaakku - Bhama Gopalan

    http://www.pustaka.co.in

    அருள் வாக்கு

    Arul Vaakku

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அந்த ஒரு நாளுக்காக...

    உதவாக்கரையாக ஒரு பிள்ளை

    ஆறாவது மாடியில்...

    போதை மர்மம்

    விட மாட்டேன், உன்னை...

    தபாலில் வந்த விரல்கள்

    ஒத்திகைக்கு... வந்தவள்...

    அந்த விஷயம்

    ஒரு மண்டையோடு வாயைத் திறந்து கொண்டிருக்கிறது

    அருள் வாக்கு

    நிஜம் நிழலாகிறது

    கலைக்கிறேன் பாரடி!

    பாசக் குரல்

    பாமா கோபாலன்

    பாமா கோபாலன், 1943-ம் ஆண்டு பிப்ரவரியில் பிறந்தார். அசல் பெயர் கோபாலன், தந்தை வழிப்பாட்டியின் பெயர் சத்தியபாமா எனவே வீட்டின் பெயர் பாமா. ஆகவே பாமா கோபாலன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.

    1963-ஆம் வருடம் பிரசண்ட விகடனில் பேராசிரியர் நாரண துரைக் கண்ணன் இவரது முதல் கதையைப் பிரசுரித்தார்.

    குமுதத்தில் ஆசிரியர் கடிதத்தில் அறிமுகமாகி, நகைச்சுவை தகவல் துணுக்குகள், சிறு கட்டுரைகள் என தொடங்கி 1969-ல் முதல் சிறுகதை இலக்கைத் தொட்டது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி.

    தி.நகர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் படிப்புடன் ஆன்மீகமும். தெய்வீகமும் கற்று மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் பட்டம் என்று கல்வி பாட்டுக்கு ஒரு பக்கம் தொடர்ந்தாலும் பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதுவதும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

    தான் படித்த கல்லூரியில் மூன்று வருடங்கள் பணி. குரோம்பேட்டை எம்.ஐ.டி.-யில் அக்கவுன்ட்ஸ் பிரிவில் ஒரு வருடம் வேலை, பிறகு எழும்பூரில் ஒரு கட்டுமானக் கம்பெனியில் பல வருடங்கள் கணக்கர்.

    எனினும் எது வரினும் எழுத்தாளர். சிறுகதைகளும் நாவல்களும் வந்துகொண்டே இருந்தன. எழுத்தையே சுவாசமாகக் கொண்ட வேதா, இவர் கைப்பிடித்து வேதாகோபாலனானது 1980-ம் ஆண்டு.

    1985 ஆம் வருடத்திலிருந்து பத்திரிகை, பத்திரிகை, பத்திரிகை தான். சில காலம் அமுதசுரபியிலும் குங்குமத்திலும் பணி. குமுதத்தில் 13 ஆண்டுகள் பணி. எஸ். ஏ.பி. மற்றும் சுஜாதாவிடம் பணிபுரிந்ததெல்லாம் பொற்காலம். குமுதம் பக்தி ஸ்பெஷலிலும் பணியாற்றியிருக்கிறார். 5000-க்கும் மேற்பட்ட பேட்டிகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 750-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்து நாவல்கள் என இவருக்கு மனநிறைவை தந்தவை.

    104 பிரபலங்கள் குமுதம் சிறப்பாசிரியர்களாகப் பணி புரிந்தனர். அவர்களில் 49 பேருக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தது பெருமிதம் அளித்தது என்கிறார் இவர்.

    *****

    முன்னுரை

    அன்பு மனைவி ஆசையுடன் மேசைமீது வைத்த ஆவி பறக்கும் தேநீரை, இரு பிஸ்கெட்டுகளுடன் நிதானமாக, ருசித்துச் சாப்பிட இன்ஸ்பெக்டர் இருதயராஜ், லத்தியை மேசைமீது வைத்து தொப்பியைக் கழற்றுகிறார். கோப்பையில் தேநீர் எடுத்து உதட்டில் வைக்கும் பொழுது

    டெலிபோன் மணி அடிக்கிறது. எடுக்கிறார். செவியருகில் வைக்கிறார். குரலில் கடுமையுடன், எந்த ஏரியா? கேட்கிறார்.

    மைலாப்பூர் கபாலி தியேட்டர் அருகே... டொக்.

    அவசரமாகத் தேநீர்க் கோப்பையை மேசைமீது வைக்கிறார். தேநீர் தளும்பி, சாஸரில் விழுகிறது. லத்தியையும், தொப்பியையும் எடுத்துக் கொள்கிறார். மோட்டார் பைக் சாவியை மனைவி தர, கிளம்பி விடுகிறார். 'ம்... அவ்வளவுதானா என்று தேநீரும், பிஸ்கெட்டுகளும் பேசிக் கொள்கின்றன!’

    மனைவி யந்திரத்தனமாக தேநீர் கோப்பையும், பிஸ்கெட்டுகளையும் எடுக்கிறார்! அவருக்கு அது தினமும் நடக்கும் சமாசாரம்.

    ஆனால் படிக்கும் வாசகனுக்கு?

    'என்ன ஆச்சு? கபாலி தியேட்டர் அருகே கொலையா, தீ விபத்தா, ரவுடிகளின் அட்டகாசமா, பெண்கள் சமாசாரமா?’

    மேலே தொடர்ந்து படித்து, கதையின் இறுதியில்

    இப்படி திக் திக் என்று வாசகன் மனதில் உணர்ச்சிகளை ஏற்படுத்தும் சிறுகதைகளை எழுதிப்பார்க்க ஆசைப்பட்டேன் விளைவு இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள்!

    - பாமா கோபாலன்

    *****

    வாழ்த்துரை

    பாமா கோபாலன், வேதா கோபாலன் என்ற இலக்கிய இணையரை எனக்கப் பல்லாண்டுகளாகத் தெரியும். அதாவது அவர்கள் இருவரும் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதற்கும் முன்பிருந்தே என்று நினைக்கிறேன். எழுத்தின் மேல் கொண்ட காதல் அவர்களைக் காதலர்களாக்கியது.

    அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் படத்தைப் போட்டு அவர்கள் திருமண விவரத்தைக் குமுதத்தில் போட்டார்கள். குமுதம் என்கிற பெரிய பத்திரிகை, அவர்கள் படத்தை வெளியிட்டிருக்கிறது. நல்ல லட்சணமான ஜோடி திருஷ்டிப்படாமல் இருக்க வேண்டும்! என்று என் அம்மா குமுதம் நடுப்பக்கத்தைப் பார்த்து ஆசீர்வதித்தார்.

    திருஷ்டிப்படவில்லை. ஆனால் பலரின் திருஷ்டி அவர்களின் எழுத்தின் மேல்பட்டது. நிறைய ரசிகர்கள் அவர்களுக்கு உருவானார்கள்.

    இருவருமே எதை எழுதினாலும் ஜனரஞ்சகமாக எழுதக் கூடியவர்கள். ஜனரஞ்சகம் என்பது பாவமல்ல. புரியாமல் எழுதினால் தான் இலக்கியம் என்றொரு கருத்து இப்போது உருவாகி வருகிறது. எழுதியவருக்கே புரியவில்லை என்றால் அது உன்னத இலக்கியம் என்ற அந்தஸ்தைப் பெறும் போல் தோன்றுகிறது!

    எல்லோருக்கும் புரிகிறமாதிரியும், எல்லோரையும் கவர்கிற மாதிரியும் எழுதும் ஆற்றல் அமைவது ஒரு பெரிய வரம். எழுத்தாளர் சுஜாதாவுக்குக் கிட்டிய மாதிரி அந்த வரம் இந்த இருவருக்கும் கூடக் கிட்டியிருக்கிறது.

    நேர்காணல் என்பது எழுத்தில் ஒருவகை கதை கட்டுரை கவிதை எழுதுகிறவர்கள் எல்லாம் நேர்காணல் கண்டு எழுதிவிட முடியாது. தன்னை அடக்கிக் கொண்டு அடுத்தவர்களின் சாதனையைப் பெருந்தன்மையோடு பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் அதில் உண்டு.

    இன்றைய பத்திரிகை உலகில் தமிழின் நேர்காணல் துறையில் கொடிகட்டிப் பறக்கும் மிகச் சிலரில் இவர்கள் இருவரும் உண்டு. எந்தத் துறை சார்ந்தவர்களையும் பேட்டிகாணும் சாமர்த்தியமும் இவர்களிடம் உண்டு. பேட்டி காண்பதற்கு முன், காணப்படும் பிரமுகர் பற்றிய விவரங்களையும் அவரது துறை தொடர்பான செய்திகளையும் சேகரித்துக் கொண்டு அவரை

    Enjoying the preview?
    Page 1 of 1