Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatril Potta Kanakku
Kaatril Potta Kanakku
Kaatril Potta Kanakku
Ebook97 pages2 hours

Kaatril Potta Kanakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையில் எல்லோருக்கும் பிரச்னைகள் உண்டுதான். பலரால் நமக்கு ஏற்படும் தடைகளை உடைத்து எறியும்போது, பிரச்சனைகள் கிளை பரப்புகின்றன. சில பிரச்னைகளுக்கு நாமேதான் காரணம். நான், எனது என்ற எண்ணங்கள் நமக்குள் இருக்கும் ஈகோவைத் தூண்டி விடுகின்றன என்பது நிஜம். எனக்கு ஈகோவே கிடையாது என்று சொல்லும்போதே ஈகோ இருப்பது தெரிந்துவிடுகிறது.

நேர்மை, நியாயம், சத்தியம், புறங்கூறாமை, மூடி மறைத்தல், முரணாகப் பேசுதல் போன்ற குணங்களும், பொய் பேசுதல், பிறரிடம் காட்டிக் கொடுத்தல், வன்முறையைக் கையாளுதல் போன்ற எதிர்மறைச் செயல்களும் நம் குணத்தைத்தான் காட்டுகின்றன. தவறான விஷயங்களை நியாயப்படுத்துதல், மற்றவர்களைத் துன்புறச் செய்து அந்த விஷயங்களில் மனம் களிப்படைதல் போன்ற கெட்ட குணங்களும் நம் உள்ளத்தில் மறைந்து கிடக்கின்றன. வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் இவை மேலெழும்பி உணர்ச்சிகளைக் கொந்தளிக்க வைக்கின்றன.

ஒவ்வொரு நாளும் நம் மனதில் குருக்ஷேத்திரப் போர்தான். இப்படிப்பட்ட உணர்ச்சிக் குவியங்கள்தான் சிறுகதைகளில், கவிதைகளில், நூல்களில் பிரதிபலிக்கின்றன. அந்த பிரதிபலிப்பு பிம்பங்கள்தான், இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580128506790
Kaatril Potta Kanakku

Read more from Bhama Gopalan

Related to Kaatril Potta Kanakku

Related ebooks

Reviews for Kaatril Potta Kanakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaatril Potta Kanakku - Bhama Gopalan

    https://www.pustaka.co.in

    காற்றில் போட்ட கணக்கு

    சிறுகதைகள்

    Kaatril Potta Kanakku

    Sirukathaigal

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    வாழ்த்துரை

    மாறுவேடம்

    நாளை முதல்…

    என்ன வருத்தம்?

    காதலி வயசு

    காற்றில் போட்ட கணக்கு

    புலி நிதானமாய் வந்தது

    மைனரின் ஆவி

    பெண் நினைத்தால்....

    குத்(து)தாத விளக்கு

    வாரம் ஒரு கடிதம்

    அதற்குக் காரணம் வேறு...

    குறைகளைச் சொல்லலாமா?

    இதற்கு ஒரு அர்த்தம்

    முன்னுரை

    வாழ்க்கையில் எல்லோருக்கும் பிரச்னைகள் உண்டுதான். பலரால் நமக்கு ஏற்படும் தடைகளை உடைத்து எறியும்போது, பிரச்சனைகள் கிளை பரப்புகின்றன. சில பிரச்னைகளுக்கு நாமேதான் காரணம். நான், எனது என்ற எண்ணங்கள் நமக்குள் இருக்கும் ஈகோவைத் தூண்டி விடுகின்றன என்பது நிஜம். எனக்கு ஈகோவே கிடையாது என்று சொல்லும்போதே ஈகோ இருப்பது தெரிந்துவிடுகிறது.

    நேர்மை, நியாயம், சத்தியம், புறங்கூறாமை, மூடி மறைத்தல், முரணாகப் பேசுதல் போன்ற குணங்களும், பொய் பேசுதல், பிறரிடம் காட்டிக் கொடுத்தல், வன்முறையைக் கையாளுதல் போன்ற எதிர்மறைச் செயல்களும் நம் குணத்தைத்தான் காட்டுகின்றன. தவறான விஷயங்களை நியாயப்படுத்துதல், மற்றவர்களைத் துன்புறச் செய்து அந்த விஷயங்களில் மனம் களிப்படைதல் போன்ற கெட்ட குணங்களும் நம் உள்ளத்தில் மறைந்து கிடக்கின்றன. வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் இவை மேலெழும்பி உணர்ச்சிகளைக் கொந்தளிக்க வைக்கின்றன.

    ஒவ்வொரு நாளும் நம் மனதில் குருக்ஷேத்திரப் போர்தான். இப்படிப்பட்ட உணர்ச்சிக் குவியங்கள்தான் சிறுகதைகளில், கவிதைகளில், நூல்களில் பிரதிபலிக்கின்றன. அந்த பிரதிபலிப்பு பிம்பங்கள்தான், இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள்.

    வீடோ, தெருவோ, பள்ளிகளோ, கல்லூரிகளோ, சினிமா தியேட்டர்களோ, ஹோட்டல்களோ, வேலை செய்யும் இடங்களோ, மார்க்கெட்டோ… இப்படி எந்த இடத்திலும் பழகும்போதும் உரையாடும் மனிதர்களைப் பின்னணியாகக் கொண்ட இச்சிறுகதைகளின் தொகுப்பு ஒரு சாம்பிள்தான்

    இச்சிறுகதைகளைப் பிரசுரித்து உற்சாக ஊசி ஏற்றிய ஆனந்த விகடன், கல்கி, குமுதம், அமுத சுரபி, கலைமகள், வாரப் பத்திரிகைகளின் தீபாவளி மலர்கள், தினப் பத்திரிகையின் இணைப்பு இதழ்கள்-ஆகியவற்றின் ஆசிரியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    சுமார் 35 வருடங்களுக்கு முன்பு வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட இச்சிறுகதைகள், காலத்துக்கு ஏற்றபடி உணர்ச்சிகளின் வடிகால்களாக மாறி வந்துள்ளன என்பதை, தொகுப்பாகப் படிக்கும்போது, இப்போதுள்ள சூழ்நிலைகளில் வித்தியாசப்படுவதை உணர முடிகிறது.

    100 ஆண்டுகளைக் கண்ட முதல் தமிழ்ப் புத்தக நிறுவனம்- அல்லயன்ஸ் பப்ளிஷர்ஸ்-இத்தொகுப்பினைப் புத்தகமாகக் கொண்டுவருவது மிக்க மகிழ்ச்சி. இதயபூர்வமான

    நன்றி. தட்டிக் கொடுத்து, ஆதரவு தரும் திரு. ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு மேன்மேலும் புகழ்கிடைக்க இறைவனை மனதார வேண்டுகிறேன்.

    - பாமா கோபாலன்

    சென்னை - 600044

    வாழ்த்துரை

    இரட்டையர்கள் - கணவன் மனைவி இணையரைச் சொல்கிறேன். அவர்களை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். பல துறைகளில் சிறந்தவர்கள்.

    திருமதி வேதா கோபாலன் குறித்து நான் வாழ்க்கைக் குறிப்புகளைக் களஞ்சியம் போல் தயார் செய்து தர முடியும்.

    எனினும் என்னைவிடச் சிறந்த அறிஞர்கள் எழுதக்கூடும் என்பதால், அந்தப் பெருமையை மற்றவர்களிடம் தந்து விட்டேன்.

    சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற பல துறை வல்லவர்கள் அந்தக் கைங்கர்யத்தைச் செய்து விட்டுப் போகட்டும்

    திருமதி வேதா கோபாலன் எப்போது ஜோதிடக் கலை… கற்றுக் கொண்டார் என்பதை ஜோதிடம் சொல்ல முடியும்.

    வாழ்க பாமா, வேதா -

    விக்கிரமன்

    மாறுவேடம்

    ஊர் சுற்றிப்பார்க்கப் போன அந்த டூரிஸ்ட் பஸ் பயணிகளை இப்போது நோயாளியாக, அடிபட்டு கதறுபவர்களாக ஊர் மக்கள் சுற்றி நின்று, பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தனர்.

    எதிர்பாராத கோர விபத்து. மூடப்படாதிருந்த ‘லெவல்’ கிராஸிங் கேட்டில் நுழைந்து கடக்கும் சமயத்தில், பஸ்சில் ஏதோ கோளாறு ஆயிற்று பஸ் நகர முடியாமல் திணற, அப்போது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பிரேக் போட்டும் பஸ்சில் மோதி…

    ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து பேசி, விவாதித்து விசாரணை என்றெல்லாம் பேச்சு அடிபட்டு…

    சரி. ஸ்தலத்திலேயே இருபத்தி மூன்று பேர் மரணம். பஸ் பயணிகளில் அனேகமாய் எல்லோருமே அடிபட்டு சிதறியிருந்தனர். உயிர் பிழைத்தவர் இருபத்திரண்டுபேர்.

    முகத்திலும், கண்களிலும் நல்ல அடிபட்டு மயங்கி விழுந்தவன் ‘கைடு’ சுரேந்திரன்.

    திருச்சிதான் அருகே இருந்த பெரிய ஊர். ஆம்புலன்சும், டாக்டர்களும் உடனே வரவழைக்கப்பட்டனர். சில டாக்ஸிகளில் பயணிகள் ஆஸ்பத்திரிக்கு அவசரமாக ஏற்றி அனுப்பப்பட்டனர்.

    பஸ்ஸில் பயணம் செய்த பணக்காரர் ஒருவர், தனியார் நர்சிங் ஹோமில் சிலரை தன் செலவில் சேர்த்திருந்தார். அவர்களுள் சுரேந்திரன் ஒருவன்.

    முதலில் அவன் கண்களுக்கு ஆபரேஷன் தேவை இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஒன்றிரண்டு நாட்களில் நிலைமை மோசமாகி ஆபரேஷன் செய்தே ஆக வேண்டும் என்ற நிலை.

    இன்னும் இரண்டு மூன்று நாட்களில்

    Enjoying the preview?
    Page 1 of 1