Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Murai Vanmurai
En Murai Vanmurai
En Murai Vanmurai
Ebook84 pages31 minutes

En Murai Vanmurai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார்.

பி எஸ் ஸி பட்டதாரி. தான் படித்த ஏ எம் ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப்பிரவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண்டுகள் உதவியாளராகப் பணி புரிந்தார். குரோம்பேட்டை எம் ஐடியில் ஒரு வருடம் அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு கட்டுமானக் கம்பெனியில் 20 வருடங்கள் பணி.

1963 ஆம் ஆண்டு பேராசிரியர் நாரண துரைக் கண்ணன் அவர்களால் ‘பிரசண்ட விகடன்‘ பத்திரிகையில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகம், பின்பு அமுதசுரபியிலும் குமுதத்திலும் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார்.

குமுதத்தில் 13 வருடங்கள் பணி செய்து சுமார் 4000 பேட்டிக் கட்டுரைகள், 700 சிறுகதைகள், 11 நாவல்கள் மற்றும் பொதுக்கட்டுரைகள், துணுக்குகள், மற்றும் ஜோக்குகள் எழுதினார்.

தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். நகைச்சுவையும் கிரைம் எழுத்தும் இவரின் சிறப்பம்சங்கள்.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580128504589
En Murai Vanmurai

Read more from Bhama Gopalan

Related to En Murai Vanmurai

Related ebooks

Related categories

Reviews for En Murai Vanmurai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Murai Vanmurai - Bhama Gopalan

    http://www.pustaka.co.in

    என் முறை வன்முறை

    En Murai Vanmurai

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    அமைதியான அழகான கிராமம் வில்லியனூர். சென்னையிலிருந்து சினிமாக்காரர்கள் வந்து பாழடிக்காத கிராமம். வாழைத் தோப்பும், சவுக்குத் தோப்பும், நீரோடைகளும், சிறு கோயிலும், காற்றோட்டமும் நிறைந்த கிராமம்.

    மன்னார்குடியிலிருந்து பத்து கிலோ மீட்டர். இப்போதெல்லாம் கலர் டி.வியும், கேபிள் டி.வி.யும் நாங்களும் உள்ளே நுழைந்து விடலாமா என்று கேட்டுக் கொண்டிருக்கின்றன.

    ஊரில் பெரிய மனிதர் பரசுராமன். பெரிய வீடு, தோப்பு. ஆனால் அவர் ஒரே மகன் ராஜா, ஆடிய ஆட்டத்தினால் சொத்துகள் குறைய ஆரம்பித்தன.

    கால்கட்டுப் போட்டால் வீட்டிலேயே இருப்பான் என்று தப்புக் கணக்குப் போட்டார் பரசு.

    வீட்டிலும் ஒருத்தி என்ற அளவிலே சுசீலா மாட்டிக் கொண்டாள். கல்யாணமாகிய ஓராண்டு முடிந்தவுடனே அவள் வாரிசு தந்துவிட்டாள்.

    ராஜாவிற்குப் பெரிய குறை. சிங்கக்குட்டி எதிர்பார்த்தான். ம்... பெண் குழந்தை.

    தாத்தா பரசுராமனும், பாட்டி பாக்கியமும் அக்குழந்தையை வளர்ப்பதில் ஆர்வமானார்கள்.

    ராஜாவிற்கு ஆத்திரம்.

    கிராமமே தலை வணங்கும் பங்களாவில் பணப்புழக்கம் குறையலாயிற்று.

    ஸ்திரமான சொத்துக்களும், தோப்பும், கரன்சி நோட்டுக்களாயின.

    மனைவி சுசீலா கெஞ்சினாள். பெற்றோர் அறிவுரை சொன்னார்கள்.

    பங்களாவில் நடு ஹாலிலேயே ராஜா குடிக்கத் தொடங்கினான். எதிர்த்துப் பேசுபவர்களை அடிக்க ஆரம்பித்தான்.

    பெற்ற பெண் குழந்தை காலைக் கட்டிக்கொள்ள வந்தால் எட்டி உதைத்தான்.

    ஏய் சுசீ, உன் கழுத்திலே தொங்குதே சங்கிலி எடுடி..

    கழற்றிக் கொடுத்தாள்.

    டேய் வேணாம். வீட்டுக்கு விளக்கு ஏற்ற வந்தவள் அவள். அவளை இப்படி... என்று ஆரம்பித்த அம்மாவைப் பளாரென்று அறைந்தான் ராஜா.

    ஸ்..... என் இஷ்டப்படிதான் நடப்பேன். போ அந்தண்டை.

    ஏய், உன் அப்பாவுக்கு கண் கோளாறு ஆயிடுச்சு. ஆபரேஷன் பண்ணனும். எனக்கும் பார்வை மங்கிகிட்டு வருது... அம்மா கதறினாள்.

    ச்சூ... வயசாயிடுச்சில்ல. இனிமே என்ன ஆபரேஷன் வேண்டி கிடக்கு... போய் ரேழியிலே படுங்க. மனுஷன் ஜாலியா இருக்கிறதுக்குப் பணமே போதல்லே வீட்டிலே. அதோ பார் சுசீலாவை. லொக் லொக்னு இருமிகிட்டு... சதா சீக்காளி...த்தூ...

    எரிதணலாய் சொற்களைத் துப்பிவிட்டு சாராயக் கடைக்குப் போனான் ராஜா.

    மாமியாரின் தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள் சுசீலா.

    கைகளால் காற்றைத் தடவியபடி பரசுராமன், நடுங்கிய குரலில், ஏண்டி, அவன்கிட்டே வாய் கொடுக்கிறே... என்றார்.

    தரையில் தலையணை கூட இல்லாமல் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது அந்த இரண்டு வயதுப் பெண் குழந்தை.

    வாய்யா மைனரு... சம பார்ட்டி இப்ப நம்மகிட்ட மாட்டியிருக்கு... என்றபடி வரவேற்றான் ராஜாளி. சாராயக் கடை முதலாளி. 'போடா, உள்ளாற போய் விளையாடு,' என்று தன் மகனை விரட்டினான் ராஜாளி.

    பணம் பணம் பணம் என்பதே மூச்சு.

    திருட்டு, பொய், கொலை, பொய்சாட்சி, ஏமாற்று வேலை - எதற்கும் ஆள் வைத்திருக்கும் 'மாஸ்டர்!' போலீஸ் கமிஷனர் வரைக்கும் அதீத நட்பு உண்டு. எந்தக் கேஸிலும் அவன் நேரடியாக மாட்டியதாக வரலாறே கிடையாது.

    இதோ இப்போது ராஜாவைப் பயன்படுத்தி ஒரு சேட்ஜியை வசப்படுத்தத் திட்டம்.

    ராஜாவுக்குத்தான் கொஞ்சம் ஆங்கிலம், மிகக் கொஞ்சம் இந்தி தெரியும்.

    தஞ்சாவூர் ஓட்டலில் தங்கியிருக்கும் சேட்ஜியிடம் பேசிவிட்டு வரவேண்டும். இரண்டு நாளில் சில லட்சங்கள் வர வாய்ப்புண்டு.

    ராஜாளி, மைனர் ராஜாவிடம் நைஸாகப் பேசி, சாராயம் ஊற்றிக் கொடுத்தான்.

    "தோ பார் ராஜாளி, நீ சொல்றயேன்னு போய்ட்டு வர்றேன்.... பேச்சு மட்டும்தான்... பண விவகாரம்

    Enjoying the preview?
    Page 1 of 1