Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Uyir Kavithaiyadi Nee
En Uyir Kavithaiyadi Nee
En Uyir Kavithaiyadi Nee
Ebook372 pages2 hours

En Uyir Kavithaiyadi Nee

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபு என்பவன் அழகானவன், திறமைசாலி, இவன் கிராமத்து பெண்ணான கவிதாவை மணம் முடிக்கிறான். கவிதா தாழ்வுமனப்பான்மை கொண்டவள். இவளின் தாழ்வுமனப்பான்மையினால் இவர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை என்ன? பிரபுவின் இலட்சிய கனவை கவிதா நிறைவேற்றினாளா? என்பதை வாசித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580147807474
En Uyir Kavithaiyadi Nee

Read more from A. Rajeshwari

Related to En Uyir Kavithaiyadi Nee

Related ebooks

Reviews for En Uyir Kavithaiyadi Nee

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Uyir Kavithaiyadi Nee - A. Rajeshwari

    https://www.pustaka.co.in

    என் உயிர்க் கவிதையடி நீ

    En Uyir Kavithaiyadi Nee

    Author:

    அ. ராஜேஸ்வரி

    A. Rajeshwari

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-rajeshwari

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    1

    கல்யாணமா...? அப்பா! வேண்டாம்ப்பா என்றாள்.

    என்னப்பா... இப்படிச் சொல்றீங்க? நான்லாம் மாட்டேன்... எனக்குப் பயமா இருக்குப்பா... வேண்டாம் என்றாள் காவியா.

    ஏ... எதுக்கு காரணத்தச் சொல்லும்மா என்றார் அப்பா ரகுராம்.

    அதெல்லாம் சொல்லத் தெரியாதுப்பா. வேண்டாம் வேண்டாம்... அவ்வளவுதான் சொல்லிட்டேன் என்று தேம்பித் தேம்பி அழுதாள்.

    தாத்தா... வந்தார், என்ன...? என்ன? எதுக்கு அழுவுறாள்? என்றார்.

    தாத்தா, காவியா... எதுக்கு இவ்வளவு அழுகை? என்று அழுத்தமாகக் கேட்டார். பதில் இல்லை.

    என்னம்மா... சொல்லு. தாத்தா கேக்குறேன்ல்ல? என்றார்.

    காவியா விம்மியவாறு வீட்டிற்குள் சென்று விட்டாள்.

    ஏம்ப்பா ரகு என்னத்துக்கு இப்படி விம்மி அழுதுட்டுப் போறா காவியா? என்றார் தாத்தா.

    அப்பா... ஒண்ணுமில்ல. பெரியசாமி இருக்கார்ல... அவரோட கடைசிப் பையனுக்கு நம்ம காவியாவைக் கேட்டு வந்தாங்க என்றார்.

    அவுங்க... பெரிய எடமாச்சே. அவுங்க எப்பிடி நம்ம வீட்டுக்கு? என்று தாத்தா இழுத்தார்.

    பெருமாள் கோவில்ல போன வாரம் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்துச்சில்ல. அப்ப நம்ம காவியா பிள்ளைங்களோட நின்னுகிட்டு இருந்திருக்கா. அந்தப் பையன் எதேச்சையா பாத்துருக்கு அப்புறமா அவுங்க வீட்ல போயிச் சொல்லி அவுங்களும் விசாரிச்சு வந்துட்டாங்க. அதுக்குத்தான் இந்த அழுகை என்றார்.

    எந்தப் பையன்டா...? அவருக்கு நாலைஞ்சு பையன்களாச்சே... எந்தப் பையனாம்?" என்றார்.

    நாலைஞ்சு இல்ல... ரெண்டு தாம்ப்பா என்றார்.

    மீண்டும், எல்லாப் பையன் பொண்ணுகளுக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டாரே என்றார் தாத்தா.

    இல்லப்பா... இன்னும் ஒரு பையன் இருக்கான். அவனுக்குதான் கேட்டு வந்தாங்க என்றார்.

    அந்தப் பையனுக்கு... நம்ம காவியாவை ரொம்பப் பிடிச்சுப் போச்சாம் என்றார்.

    தாத்தா, பையன் எப்படி ரகு...? என்றார்.

    அப்பா... பையன் நல்ல தங்கமான குணம்தான். நல்ல படிப்பு... ஒரு கம்பெனியில் நல்ல வேலை. கை நிறையச் சம்பளம். சொந்த ஊர்... தஞ்சாவூர்ப் பக்கம்... ரெண்டு தெரு தள்ளித்தான் இருக்காங்கப்பா. பையன் செக்கச் செவேல்ன்னு செம கலரு... பாத்துக்கிட்டே இருக்கலாம் போங்க. அப்படி ஒரு கலர் என்றார்.

    ஆனால், நம்ம காவியாதான் மாட்டேன்னு அழுகிறாளே என்றார் தாத்தா.

    என்னப்பா சொல்றீங்க? அவளைப் போலவே நீங்களும் சொல்லுறீங்கப்பா... நம்ம... காவியா தான் சின்னப் பொண்ணு... பக்குவமில்லாம சொல்லிக்கிட்டு இருக்கா... நீங்களும் அவளோட பக்கம் சேந்துட்டு பேசுறீங்களே... கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கப்பா. இப்ப மாப்பிள்ளை கிடைக்கிறதே கஷ்டம். அது உங்களுக்கே நல்லாத் தெரியும். இப்பப் பாருங்க. காவியாவுக்கு யோகம்ன்னுதான் சொல்லணும் என்றார் ரகு.

    பையனப் பார்த்தா... ராஜ குமாரனாட்டம் இருக்கான். அந்தப் பையனுக்கும் நிறைய பொண்ணுக பாத்திருக்காங்க, பிடிக்கலையாம்.

    நம்ம... பொண்ணையும்... அந்தப் பையனையும் நினைச்சுக்கூடப் பாக்க முடியாது... சொல்லுங்கப்பா என்றார்.

    உன் தலைவிதிய மாத்த முடியாதுன்னா ஒண்ணும் பண்ண முடியாது.

    பாத்தீல்ல... ரெண்டு மாப்பிளை வந்து உன்னைப் பாத்தாங்கள்ள... என்ன சொல்லிட்டுப் போனாங்க.

    நல்லா... பஜ்ஜியும் சொஜ்ஜியும் வெட்டிட்டு... என்னடி? அத நான் பெத்த மகள... நானே என் வாயால சொல்ல மாட்டேன்... என்ன சொன்னாங்கன்னுதான் உனக்கே தெரியுமே என்றாள் அம்மா.

    இத்தனைக்கும்... அப்படி ஒண்ணும் பெரிய படிப்போ... இல்ல... பெரிய வேலையோ கிடையாது... பாத்துக்கடி... நான்... இனிமே இதப்பத்தி ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன். விட்டுர்றேன்டி. போதுமா என்றாள்.

    எந்திரிடி... முகத்த அலம்பிட்டு... சாப்பிடு சாப்டுட்டு... அடுத்த வேலையக் கவனி என்று சொல்லிவிட்டு கூடையை எடுத்துக் கொண்டு கோயிலுக்குக் கிளம்பிப் போய் விட்டாள் அம்மா.

    காவியா... இந்து வீட்டிற்குப் போனாள்.

    ஓ... காவியா... வாடி... பிளஸ் டூல... ரிசல்ட் வந்தாச்சு. புவனா மட்டும் தான்... கோட்டு... மத்த எல்லாரும்... பாஸ்டி.

    நீதான்... எல்லாத்தோட மார்க் அதிகமாம். சொல்லிக்கிட்டாங்க.

    எங்கண்ணன் சந்தோஷ்? என்றாள்.

    காவியா, ஒ... நீ என்னடி காலேஜ் படிக்கப் போறையா இந்து... என்றாள்.

    ம்ம்... அப்பா... அப்ளிக்கேஷன்ல்லாம் வாங்கிட்டார். இனிமேதான் ரெடி பண்ணனும்... என்றாள் இந்து.

    இந்து, அது சரி... நீ? என்றாள்.

    இல்லடி இந்து... இவ்வளவு தான்... என்னைக் கல்யாணம் பண்ணிக் குடுக்க... மாப்பிள பாத்துட்டு இருக்காங்க என்றாள்.

    ஏய்... நீ... படிக்கலாமேடி... கொஞ்ச நாள் பொறுத்துப் பண்ணிக்கிறேன்னு சொல்லிப் பாக்கலாம்டி என்றாள் இந்து.

    ஏ... இந்து... அதெல்லாம் வேலைக்கு ஆவாதுடி. விடு... விதி என்றாள் காவியா.

    ***

    "டேய் கவுந்துட்டா... கவுந்துட்ட... இனிமே உன் தலை எழுத்து. அவ்வளவுதான். உன்னோட ஸ்டேட்டஸ நீயே புரிஞ்சுக்கல..." என்று கிளம்பினான்.

    பை...டா... மாப்ள... ஆல் தி பெஸ்ட்.

    இஃப்யூ வான்ட் எனி ஹெல்ப்... ஒரு கால் குடுடா மாப்ள என்றான் பரத்.

    வேகமாக... வீட்டிற்குப் போனான். மௌனமாக தன் ரூமில் நெட்டில்... இன்வால்வாகிப் போனான்.

    என்னம்மா சித்ரா! பையன் வெளிய போனான். கம்முன்னு... கம்ப்யூட்டர்ல உக்காந்துட்டான். என்ன...? இன்னைக்கு லீவா" என்றார் அப்பா பெரியசாமி.

    ஆமாங்க... என்னமோ... ஆபீசுக்கு லீவுதான்னு நினைக்கிறேன். ஊமையாட்டம்... போனான். வந்தான். ஏதாச்சும் சொன்னாத்தான தெரியும் என்றாள் மனைவி சித்ரா.

    நீதான் கேக்குறது என்றார்.

    சரி... இருங்க... கேக்கலாம். ஏன்... நீங்க அந்த வேலையச் செய்யுறது என்றாள்.

    கேளு... கேளு... நீயே... என்று கிளம்பிப் போய் விட்டார் அப்பா பெரியசாமி.

    பிரபு குடை இருக்கா... பாருங்க! உங்க பக்கத்துல... கபோட்டுல என்றாள் அண்ணி... அகிலா.

    எதுக்கு அண்ணி குடை? என்றான்.

    மழை வர்றாப்பில இருக்கு. கிஷோர... ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரணுமில்லையா...? என்றாள்.

    இருங்க... நான் போயிக் கூட்டிட்டு வர்றேன். நீங்க... போக வேண்டாம் என்று கிளம்பினான் பிரபு.

    அப்ப சுருக்க... கிளம்பணும். இல்லாட்டி காத்துக்கிட்டு இருப்பான். ஆளக் காணலையின்னா அழுதே தீத்துடுவான். அப்புறம். ஓயமாட்டான், என்றாள் அண்ணி.

    ஓகே! ஓகே! அண்ணி! இப்போ... ஃபைவ் மினிட்ஸ்ல... கிளம்பிப் போயிடுவேன் என்றான்.

    ஹை! சித்தப்பா என்று... தாவிக் குதித்தான்.

    சித்தப்பா... ஐஸ்க்ரீம் வேணும் என்றான்.

    எதுக்குடா? என்றான்.

    எதுக்கா... திங்கத்தான் என்றான் சற்று கடுப்பாக.

    டேய்! எதுக்கு இவ்வளவு கோபம்? என்றான்.

    பின்ன... என்ன... சித்தப்பா. ஐஸ்கிரீம்ன்னாலே யாருமே வாங்கித் தரமாட்டேங்குறீங்களே என்றான்.

    டேய்! கிஷோர்! சித்தப்பா! வாங்கித் தரமாட்டேன்னா சொன்னேன்.

    அப்ப வாங்கிக் குடுங்க...! என்றான்.

    இப்ப... வேண்டாம்டா...

    ஏன்? சித்தப்பா... ம்...ம்... என்று கண்களைக் கசக்கினான்... கிஷோர்.

    மழை வர்ற மாதிரி இருக்குல்ல. இந்தா... இந்தா பாரு... ரெண்டு தூத்தல் கூட போட்டிருச்சு. சளி பிடிச்சுக்கும்டா. நாளைக்கு வெயில் அடிக்கும்போது சித்தப்பா... வாங்கித் தரேன். சரியா? என்றான் பிரபு.

    முகத்தை அஷ்ட கோணலாகத் தூக்கிக் கொண்டு ம்ம்... என்றான்.

    சித்தப்பா!

    என்ன...? என்னடா... கிஷோர்... இரு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட்ரலாம்... என்று இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டனர்.

    ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டு நின்றான். பைக்கைப் பார்க் பண்ணிவிட்டு... வந்தான்... பிரபு.

    என்ன... வா... போலாம்... ஏன்டா வெளியவே நிக்கிற என்றான்?

    கொஞ்சம் கிட்டவந்து குனிங்களேன் என்றான்.

    காதருகில் வந்து, அம்மாட்ட சொல்லாதீங்க சித்தப்பா. அம்மா... திட்டுவாங்க... அம்மா... அப்பாட்ட சொல்லி... அப்பா திட்டுவார் என்று குசு... குசுப்பாகச் சொன்னான்.

    ஓ... சரி... நான் சொல்ல மாட்டேன். இருவரும்... வலது கையால் தட்டிப் பெருவிரலை உயர்த்தி டண்... என்றனர். அவனும் சித்தப்பா குனிங்க என்றான்.

    எதுக்குடா...?

    அட... குனிங்க சித்தப்பா என்றான். முத்தம் வைத்தான்.

    தானும்... கிஷோருக்கு முத்தம் வைத்தான். இருவரும் எதுவும் நடக்காதது போல உள்ளே சென்றனர். ஆனாலும் இருவரும் ஊமையாகச் சிரித்துக் கொண்டனர்.

    2

    ஏ! காவியா! நீ இப்பிடிப் போடி! நான் சித்தி வீட்டுக்குப் போயிட்டு... வரணும் என்று காவியாவும்... இந்துவும் பிரிந்தனர்.

    காவியா! தாவணியை எடுத்துச் சுற்றி இருக்கி... சொருகிக் கொண்டு சைக்கிளில் கிளம்பி வந்தாள்.

    பைக்... ஒன்று அந்த சைக்கிளை... முந்தவும் விடாமல்... பிந்தவும் விடாமல்... போய்க் கொண்டிருந்தது. இவளுக்கு எரிச்சலாகவே இருந்தது.

    எவன்... இவன்? சரியான பொறுக்கிப்பய புள்ளையா இருப்பாம் போல... என்று அடுத்த ரோட்டில் இருந்த பாதையில் சைக்கிளைத் திருப்பி வேகமாக மிதித்தாள். அந்த பைக்... சடன் பிரேக் அடித்து முன்னால் வந்து நின்றது.

    ஏ! யாரு? நீங்க? அந்தப் பக்கம்... தான் வம்புன்னா இந்தப் பக்கமுமா... அதுலயும் எவ்வளவு தைரியமிருந்தா... தனியா வர பொண்ணுக்கு முன்னால் சடன்... சடன் பிரேக் அடிச்சு நிப்பீங்க? கத... கந்தலாயிரும். வழிய விடுங்க... சார்... என்றாள். கடுப்பாக.

    அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

    ப்ளீஸ்! வழிய விடுங்க... கத்திக் கூச்சல் போட்டேன்னு வைங்க. அசிங்கமாயிடும் என்றாள்.

    உங்க... பேரென்ன மேடம்?

    அதெல்லாம்... சொல்லணுமின்னு அவசியமில்லைங்க என்று... பைக்கின் ஓரத்தில் இருந்த இடைவெளியில் சைக்கிளை வேகமாக ஓட்டிக் கொண்டு மூச்சிறைக்க வீடுவந்து சேர்ந்தாள்...

    எவன்... இவன்... இங்க... இருக்குற கடுப்புல. இவன் வேற... இந்த லட்சணத்துல பேரென்னவாம்.

    ச்சீ... எங்கிருந்தோ புறப்பட்டு வந்திருக்கு இந்த இம்சை என்று மனதுக்குள் திட்டித் தீர்த்தாள்.

    ஏ... காவியா... அடுப்புல கொழம்பு... இருக்குடி... கிண்டி விட்டுப் பாத்துக்க... இந்தக் கடை வரைக்கும் போயிட்டு வர்றேன் என்றாள் அம்மா.

    ம்ம்... சரிம்மா.

    அம்மா, ஏ... மறந்துடாதடீ... அடிப் புடிச்சுக்கும் என்று திரும்பவும் சொன்னாள்.

    ஏ... காவியா.. நம்மகூடப் படிச்சாளே சத்தியா ஆமாம். என்ன?... சொல்லு இந்து" என்றாள்.

    அவ ஊர்ல இருந்து வந்திருக்காளாம். வாயேன் பாத்துட்டு வரலாம்... என்றாள் இந்து.

    சரி... சீக்கிரமா... வந்துரணும்... ரொம்ப லேட் பண்ணக் கூடாது என்றாள் காவியா.

    இந்துவும்... காவியாவும்... சத்தியாவைப் பார்க்கப் போனார்கள்... பேசிக் கொண்டிருந்துவிட்டு, ஏ... இந்து லேட்டாயிருச்சு. அம்மா... தேடுவாங்க என்று கிளம்பி வேகமாக சைக்கிளில் வந்து கொண்டிருந்தாள் காவியா."

    முன்னால் அதே நம்பர் பைக் போய்க் கொண்டிருந்தது.

    ரொம்ப ராங்கி புடிச்ச ஆளா இருக்கும் போல என்று... சைக்கிளை வேகமாக மிதித்தாள்.

    ஹலோ! கொஞ்சம்... நில்லுங்க! என்றான்.

    காதில் வாங்காமல் வந்து கொண்டிருந்தாள். வேகமாக பைக்கில் வந்து சைக்கிளின் முன்னால் பிரேக் அடித்தான்.

    ஏம்மா! பொண்ணே! நில்லுன்னா நிக்க மாட்டீங்களோ... என்ன கடிச்சா தின்னுடப் போறேன்.

    உங்க பேரென்னன்னு கேட்டேன் என்றான்.

    உங்கள்ட்ட கொஞ்சம் பேசணும். நில்லுங்க என்று பைக்கை ஓரங்கட்டி விட்டு வந்தான்.

    சரி... இன்னைக்கு இவன் கையில வகையா மாட்டியாச்சு... ஏடாகூடமா ஏதாவது நடந்துட்டா... அவளுக்குப் பயம் வாட்டியது.

    குனிந்தாள். இன்னைக்கு போடுற போட்டுல... இனிமே எம் பக்கமே வரக்கூடாது... படவா என்று காலில் இருந்ததை கழட்டினாள்.

    ஏ... பிஞ்சுடும்! பிஞ்சுடும்! ஜாக்கிரதை! என்று சைக்கிளை எட்டிப் பெடலை போட்டாள்.

    ஏ... நான் தான்ம்மா... ஏ பொண்ணே ஹூம்... திரும்பியே பார்க்கவில்லை. புள்ளியாய்க் காற்றில் மறைந்து போனாள். சிரிப்பாக வந்தது அவனுக்கு.

    அவளின் கருவிழிக் கண்கள் காவியம் பேசியது... அவளின் செவ்விதழ்கள் மதுரைக் கண்ணகியின் காவியம் பேசியது. அவளின் சுருண்ட நீளக் கூந்தல் ஆகாயத்தின் மேகங்களுடன் போட்டி போட்டது. காலின் சலங்கை இனிய சங்கீதமிசைத்தது. முத்துப் போன்ற பற்கள். கோபத்தில் கடிபடும்போது கூட அழகாக இருந்தது. மொத்தத்தில் அந்தப் பூங்கொடியை தன் மனதுக்குள் சிறைப்படுத்திக் கொண்டான்.

    அவளின் சுருண்ட கேசம் காற்றில் நெற்றியில் புரள்வது. அடிக்கடி அவன் கண்களில் வந்து போனது. மனதுக்குள்... ஒரு இனிய சங்கீதம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருந்தது.

    ஏ... காவியா என்றாள்.

    மெல்லத் திரும்பினாள். இந்து பின்னால் சைக்கிளிலிருந்து இறங்கினாள்.

    ஏய்... என்னடி அப்பவே கிளம்பின... இன்னும் இங்கேயேதான் போயிட்டு இருக்கே? என்றாள்.

    ஆமாம்... சைக்கிள்ல... செயின் கழண்டுகிச்சு. அதான் என்று சமாளித்தாள். பை... கிளம்புறேன் என்றாள்.

    ஓ... காவியா! காவியா! ஃபண்ட்டாஸ்டிக் நேம்... அதுதான் அவள் கண்கள் காவியம் பேசியதோ?" என்று... பின்னால் பைக்கில் வந்தவன் தெரிந்து கொண்டான்.

    ஏ... இந்து... என்னம்மா இந்தப் பக்கம்?

    பிரண்ட பாக்கப் போனோம்... நானும் காவியாவும். அவ நேரமாச்சுன்னா முன்னாடியே கிளம்பி வந்துட்டா... ஏன்டி... இன்னுமா இங்க இருக்கண்ணு கேட்டேன். சைக்கிள் செயின் கழண்டுக்கிச்சு... அதான்டி லேட்ண்ணா.

    ஓ! நீங்க... எப்ப அண்ணா வந்தீங்க? என்றாள் இந்து.

    நான் வந்து ஒரு வாரம் ஆச்சு இந்து... வா. வீட்டுக்கு என்றான்.

    நேரமாச்சு இன்னொரு நாள் வர்றேன் என்றாள்.

    வீட்டிற்கு முன்னால் நிறைய செருப்புகள் கிடந்தது. வீட்டிற்குள் நிறைய பேச்சுக் குரல்கள் கேட்டது.

    வா... வாம்மா என்று கை பிடித்து அமர்த்தினாள். யாரென்று புரியவில்லை.

    ஏய் காவியா... அவுங்க தான். அவரோட அம்மா... இது அவுங்க அப்பா... இது அவரோட அண்ணன் இது பெரிய அக்கா... இது சின்னக்கா என்றாள் அம்மா.

    இது யார்... யார் அவள்... ஒன்றுமே புரியாமல் பேந்தப் பேந்த விழித்தாள்.

    ஏய் கவி... எங்க போன... லீவு தான... போ... போயி முகத்தக் கழுவி... எல்லாம் பண்ணிட்டு சீக்கிரமா வாடி என்றாள் அம்மா.

    போச்சுடா... எலிக்குப் பயந்து ஓடி வந்தவன் புலிக் குகைக்குள்ள மாட்டின கதையா இருக்கே என்று நினைத்தாள்.

    ஏ... அவளைச் சீக்கிரமா ரெடி பண்ணி அனுப்பு என்றாள் அம்மா.

    அக்கா! எப்ப வந்த? ஏன்க்கா! சின்னக்காவும்... வந்திருக்காளா? என்றாள் பரிதாபமாக.

    இல்ல... காவியா... நான் மட்டும்தான் வந்தேன். பக்கத்துல இருக்கேன். கமலியக்கா தூரமில்ல இருக்கா. அதான் அவசரமா வர முடியலை என்றாள்.

    ஏன்க்கா... இதெல்லாம் என்ன? யாருக்கு... இவங்கள்ளாம் எதுக்கு வந்திருக்காங்க. அம்மா சொல்லுறது ஒண்ணுமே புரியலையேக்கா என்றாள் காவியா.

    ஏய்! காவியா! உன்ன பொண்ணு பாக்க வந்திருக்காங்கடி என்றாள் மீனா அக்கா.

    மனதில் இடி இறங்கியது போல இருந்தது அவளுக்கு.

    வா... சீக்கிரமா ரெடியாகணும் என்றாள் அக்காள்.

    கசாப்புக்கடை ஆடு போல... பேசாமல் போய் உட்கார்ந்தாள். அக்காவும் ஒரு பியூட்டி பார்லர்... குயினும் பிய்த்து... மொய்த்து... உன்னை அழகு படுத்துகிறேன் பேர் வழி என்று ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

    திருவிழாவில் வாத்தியக்காரர்கள் அமர்ந்தது போல அருகருகில் அமர்ந்திருந்தனர்.

    காபி டம்ளர்களுடன்... எல்லோர் முன்னிலும் தரிசனம் காட்டினாள். அடுத்து... எல்லோருக்கும் வினியோகம் பண்ணிக் கொண்டு வருகையில் இவ்வளவு நேரம் ஏந்திய கைகளிலிருந்து வித்தியாசமாக ஒரு சிவந்த கை நீண்டது... ஏறிட்டாள்.

    ரோஜாவாய்ச் சிரித்தான். கூனிக் குருகிப் போனாள். வேகமாக உள்ளே ஓடி வந்தாள்... கடைசியில் அப்பா... அம்மா... தாத்தாவே ஜெயித்தனர். கடைசி வரை. ஏ... கவிதா... உனக்குப் பிடிச்சிருக்காடி? என்று யாருமே ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. பெண்கள் இன்னும் சாப்பிட்டு வீசி எறியப்படும் இலைகளாகவேதான் இருக்கிறார்கள் என்று மனம் வலித்தது அவளுக்கு.

    காவியாவுக்கு... நெக்லசும்... ஒரு செயினும் போட்டு... பட்டுப் புடவை வைத்து... நிச்சயதார்த்தம் பண்ணினார்கள். கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    அடுத்த வாரத்துலேயே கல்யாணமும்... அடுத்து எல்லாமே நடந்து முடிந்தது.

    முதலிரவில்...

    சாரி... தெரியாது... நீங்கதான்னு... என்று குனிந்தவாறே பேசினாள்.

    ஏய்! காவியா அதான் எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சது... தெரியுமா? என்றான்.

    ‘ஆமாம். புடிச்சது... புடிக்காதது... யார் வந்து இவர்ட்ட கேட்டாங்களாம்?’ என்று தனக்குள் பேசிக் கொண்டாள்.

    காவியா! வா அவள் கைபிடித்து இழுத்துத் தன் மார்பில் அணைத்தான்.

    மெல்ல... எழுந்து... அருகில் இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள். கொதிகலனாகக் கொதித்தது மனம்.

    என்னைப் பிடிச்சிருக்கா காவியா...?

    ம்ம்க்கும்... ஒரு பிள்ளைப் பெத்த பிறகு கேட்டுருக்கலாம். மகராசன்... மனம் இறங்கி கேட்டுட்டார் என்று நினைத்தாள்.

    ஏ! காவியா! என்னம்மா... பதிலே பேச மாட்டேங்குற ஏம்மா... என்னைப் பிடிக்கலைய்யா? என்றான்.

    ம்ம்... பிடிக்கலதான். ஆனா இனி ஆகுறது ஒண்ணுமில்லையே என்று நினைத்தாள்.

    அவள் கைகளைப் பிடித்து இழுத்து தன்னுடன் மறுபடியும், அணைத்துக் கொண்டான்.

    போச்சு... போச்சு... வசமா... மாட்டிக்கிட்டேன் என்று மனதில் புலம்பித் தீர்த்தாள்.

    காவியா! இதுக்குத்தான் உங்கிட்ட பேசணும்ன்னு எத்தனை தடவை ட்ரை பண்ணினேன் தெரியுமா?

    உன்னோட ஒப்பீனியன் கேக்கணும்ன்னு தான். நான் உன்னைப் பாக்குறதுக்கு வந்தேன். நீ தான் ஒரு தடவை கூட... பேசமாட்டேன்னுட்ட காவியா என்று அவள் முகத்தை ஏந்தி தன் முகத்தருகில் வைத்து இணைந்து கொண்டான்.

    ஏ பிடிச்சிருக்கா... அப்பத்தான். நாம மேல பேசணும். இல்ல... இத்தோட... என்று அவளைப் பார்த்தான்.

    அவள்... போச்சுடா... கிணறு வெட்ட பூதங் கிளம்பின கதையாயிடக் கூடாது என்று சுதாரித்துக் கொண்டாள்.

    ஐய்யோ! அதெல்லாம் ஒண்ணுமில்லங்க! உங்கள எனக்குப் பிடிச்சிருக்கு என்றாள்.

    கசாப்புக்கடை ஆடு ஐய்யோ... என்னை வெட்டப் போறானே காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்தவா முடியும்... கத்தினாலும் காப்பாத்தத்தான் யாரு வருவாங்க? என்று அவள் மனம் அழுதது.

    அவன் அன்பு பேசினான்... காதல் பேசினான். அவன் கைகள் அவள் விரல்களைப் பற்றி இழுத்தன. பூமாலை போல... அவன் நெஞ்சத்தின் மஞ்சத்தில் சரிந்தாள். அதை... இயற்கையும் மேளங்கொட்டி ரசித்தது.

    தினம் தினம்... இரவுகள் வந்தது. தினம் தினம் உறவுகள் தொடர்ந்தது.

    ஏ! பிரபு! கண்கலங்காமப் பாத்துக்கணும். என்னம்மா... கவிதா... ஒருத்தர்க்கொருத்தர் விட்டுக்குடுத்து... குடும்பம் நடத்தணும். அசலூரு. அவசரம் ஆத்திரம்ண்ணா ஒரு போன் போடு ஓடி வந்துருவோம். ஆபீஸ்... ஆபீஸ்ன்னு கெடையா கிடைக்காத பிரபு அம்மா அடுக்கினாள். அட்வைசை.

    காவியா தலையைக் கவிழ்ந்தவாறு உட்கார்ந்திருந்தாள்.

    என்னடி காவியா... அவுங்க சொன்னதெல்லாம் கேட்டதா? என்றாள் அம்மா.

    பாத்து... பக்குவமா... அவர் மனசு அறிஞ்சு நடந்துக்கணும். சர்ரு... புர்ருண்ணு... சண்டக் கோழியாட்டம் சீரிக்கிட்டு நிக்கக்கூடாது. ஏதாச்சும் சொன்னா... சரின்னு கேக்கணும். முக்கியமா அதத் தெரிஞ்சுக்கோ. உன்னோட வீராப்ப... அந்த நேரத்துல காட்டிக்கிட்டு நிக்கக் கூடாது.

    குடும்ப கௌரவம்... ரொம்ப முக்கியம்... மனசுல எதையாவது வச்சுக்கிட்டு உருமிக்கிட்டு இருக்காத. மாப்பிள... மனசு கோணாம நடந்துக்கணும். அக்காள்லாம் எப்பிடி இருக்காங்க... பாத்துக்கோ என்றாள் அம்மா.

    உனக்கு யோகம்டி... அதான் இப்பிடி ஒரு மாப்பிள கெடைச்சிருக்காரு. என்றாள் அக்காள்.

    இதுவரை விடாமல் சேமித்த மூச்சை நீண்ட பெருமூச்சாக வெளியே அனுப்பினாள்.

    ஏண்டி! இப்ப எதுக்குடி? சும்மா! மண்டய மண்டய ஆட்டுற? என்றாள் அம்மா.

    ஓ... எல்லாத்தையும்... சொல்லி முடிச்சாச்சா? என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

    அனைவரும் ஆசீர்வதித்தனர். இருவரையும் தனிக் குடித்தனம்... வைத்தார்... அத்தை.

    இரவுகளும் உறவுகளும் நீண்டது. அவள் மனம் குறுகலாகவே இருந்தது. அழுதது.

    3

    எதுக்குப்பா... இந்த தனிக்குடித்தனம்? என்றான் பிரபு.

    டேய் பிரபு! இது ஒண்ணும் தப்பில்லப்பா... சும்மா... தனியா ஒரு வீடு... படுக்க எடுக்க சௌகரியமா இருக்கும். உன்னை என்ன அங்கயே வா... சமைச்சு சாப்டுட்டு இருக்கணுங்குறேன்.

    "அலுப்பா இருக்குற நேரம்... நாங்க ரெண்டு நாளைக்கு விருந்தாடியா வந்துக்கலாம். நீங்க வரலாம். பொறுப்பு வரும். குடும்பம்ன்னா... என்னெல்லாம் இருக்கு. இது சாதாரண விஷயமில்லை. பொறுப்புகள் எவ்வளவு இருக்குன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்காகத்தான் வேற...

    Enjoying the preview?
    Page 1 of 1