Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhiyora Kaadhal
Vizhiyora Kaadhal
Vizhiyora Kaadhal
Ebook353 pages1 hour

Vizhiyora Kaadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணவனால் கைவிடப்பட்ட வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து உழைத்து வாழ்கின்ற தாயால் வளர்க்கப்பட்ட ஊர்மியின் மனதில் தன் தாய் பட்ட வேதனைகளும் வலிகளும் ரணமாய் பதிந்து வளர்கிறாள்° தன் தாயின் இறப்புக்கு பின் உறவுகளை வெறுத்து கல்லூரியில் படித்த அசோக் தன் மீது வைத்திருக்கும் காதலை அறிந்து அதிர்ச்சி அடைச்சியடைகிறாள்.திருமண உறவுகளை வெறுக்கும் ஊர்மிளாவும் திருமணத்தில் இணைகிறார்களா? அவர்களது வாழ்க்கை பயணம் எவ்வாறு இருக்கும்? ஊர்மிளாவின் மனதில் பதிந்த காயங்கள் மறைந்தனவா? என்பதை கதையாசிரியர் நயம்பட தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

Languageதமிழ்
Release dateDec 11, 2021
ISBN6580147807470
Vizhiyora Kaadhal

Read more from A. Rajeshwari

Related to Vizhiyora Kaadhal

Related ebooks

Reviews for Vizhiyora Kaadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhiyora Kaadhal - A. Rajeshwari

    https://www.pustaka.co.in

    விழியோரக் காதல்

    Vizhiyora Kaadhal

    Author:

    அ. ராஜேஸ்வரி

    A. Rajeshwari

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-vijayalakshmi-ramesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    நேரம் போனதே தெரியவில்லை. வேலைப்பளு.

    மணி பனிரெண்டரை. இரு கைகளையும் மேலே தூக்கிப் பின்னி சோம்பல் முறித்து நீண்ட கொட்டாவியை விட்டான் அசோக்.

    மெல்ல எழுந்து சன்னலின் திரைச் சீலையை விலக்கி ஆர்வமாகப் பார்த்தான். வெய்யிலில் கண்களே பூத்துப் போனது.

    பசி வயிற்றைக் கிள்ளியது. ‘பனிரெண்டு மணிக்கெல்லாம் டேபிளில் சாப்பாட்டுக் கேரியர் நின்று கொண்டிருக்கும், இன்று என்ன இன்னும் காணவில்லை?’

    மொபட்டில், ஒரு கூடைக்குள் இரண்டு கேரியர்களுடன் ஒரு பெண் ரவிவர்மாவின் ஓவியமாய்ப் பளிச்சிட்டாள்.

    பியூன் ரூமுக்குப் போனாள். வந்து விட்டாள். காலிங்பெல் சத்தம் வந்தது.

    எஸ் கம்மின்.

    சாரி சார், லேட்டாயிடுச்சு முகம் பார்க்குமுன், மேஜையில் கேரியரை வைத்தது. மின்னலாய் மறைந்து போனது ரவிவர்மாவின் ஓவியம்.

    கண்கள் பார்க்கத் துடித்தது.

    மறுபடியும் சன்னல் ஸ்கிரீனைத் தள்ளி விட்டுவிட்டு வாசலையே கண்கள் மொய்த்துக் கொண்டிருந்தது.

    வேகமாகப் படிக்கட்டிலிருந்து இறங்கிப் பறந்து போனது அந்தப் பட்டாம்பூச்சி. மின்னலாய் மொபட்டில் பறந்து காணாமல் போனது. முகம் காண முடியவில்லை.

    யார் இவள்?

    ப்யூன் சுந்தரை அழைத்தான்.

    ஹலோ சுந்தர் கொஞ்சம் வந்துட்டுப் போங்க.

    என்னா சார்?

    ஏன் இன்னைக்கு சாப்பாடு வரல?

    இப்பதான் வந்துச்சே சார்.

    ஆமாய்யா. ஒரு அம்மாதானய்யா கொண்டு வருவார்.

    இது யாருய்யா புதுசா இருக்கு?

    இது அவுங்க பொண்ணு சார். நான் ஆஃப் டே லீவு சார். அதான் இந்தப் பொண்ணு என்னத் தேடிட்டு அதுவே கொண்டு வந்து குடுத்திருக்கு சார்.

    இல்லாங்காட்டி என் ரூமுல வச்சிடும். நான்தான் எல்லா ரூமுக்கும் கேரியர் கொண்டுபோய்க் குடுப்பேன் சார்.

    கேட்டதுக்குப் பதில் சொல்லலையே?

    அவுங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை சார். ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க.

    பாவம் சார் இந்தப் பொண்ணு அல்லாடுது.

    சார், சாப்டுட்டு கேரியர அங்கேயே வச்சிருங்க சார். நான் வந்து எடுத்துட்டுப் போயிர்றேன் சார்.

    நீ சொன்ன மெஸ்ஸிலிருந்து தான் சாப்பாடு வருதா, இல்லை வேற மெஸ்ஸிலிருந்து வருதா?

    "மெஸ்ஸ மூடிட்டாங்க சார். இப்ப வீட்லதான் ஒரு பதினைஞ்சு கேரியருக்கு சமைக்கிறாங்க.

    ஏன் சார் சாப்பாடு நல்லா இல்லையா?

    சாப்பாடு எல்லாம் பிரமாதமாத்தானப்பா இருக்கு. ஆள் வேற மாதிரியிருக்கேன்னு கேட்டேன்.

    இப்ப இந்தப் பொண்ணுதான். ஒரு அம்மாவைத் துணைக்கு வச்சிக்கிட்டு சமைச்சுக் கொடுக்குது சார்.

    அடப் பாவமே?

    அந்த அம்மாவுக்கு என்ன ஒடம்புக்கு?

    ஹார்ட் ப்ராப்ளம் சார்.

    சாப்பாடு வராதுன்னா நீ முன்பாகவே விசாரித்துச் சொல்லிடு தெரியுதா?

    வயிற்றைக் கிள்ளிய பசி பறந்தோடிப் போனது. நீண்ட பின்னலும் பாவாடையும் இழுத்துச் சொருகிய தாவணியும், சந்தன நிறமும் அவன் கண் முன்னே வந்து போய்க் கொண்டிருந்தது.

    மணி இரண்டடித்துவிட்டது.

    கேரியரைத் திறந்தான், தக்காளி ரசம், வத்தல் குழம்பு, சாம்பார், உருளை வதக்கல், பீன்ஸ் உசிலி, அப்பளம் மணம் நாசியைத் துளைத்தது.

    அவளின் முதுகு பின்புறம் பார்த்ததால், முகத்தைப் பார்க்க ஏங்கியது மனது.

    சாதத்தை அள்ளிப் போட்டு வத்தல் குழம்பை ஊற்றிப் பிசைந்து வாயில் போட்டான்.

    நாக்கில் ருசி ருத்ர தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அப்பப்பா ருசியோ ருசிதான். கைக்குத் தங்கக் காப்பே போடலாம்.

    தக்காளி ரசமும், உசிலியும் உருளை வதக்கலும் வாய்க்குள் சுண்டி இழுத்து அசை போட வைத்தது.

    டேய் அசோக் சாப்பிட்டாயா?

    நீ சாப்பிட்டாயாடா விஷ்வா?

    ம்ம்...

    இன்றைக்கு லஞ்ச் சூப்பரா இருந்துச்சுடா.

    ஆமாம், ரொம்ப டேஸ்ட்டா இருந்ததுடா.

    இன்னைக்குக் கொஞ்சம் சேஞ்சாகத்தான் டேஸ்ட் இருந்தது.

    யார் சமைத்தாங்களோ?

    ஒரு பொண்ணு வந்ததேயடா.

    யாரது?

    முன்னால கேரியர் கொண்டு வருமே அந்தம்மாவோட பொண்ணாம். அந்தம்மாவுக்கு ஒடம்பு சரியில்லையாம். அதுதான் இது வருதாம்.

    யார் சொன்னா?

    ப்யூன் சுந்தர்தான் சொன்னான்.

    சுந்தர், அந்த அம்மா வீடு எங்க இருக்கு?

    என்னோட வீட்டுக்குப் பக்கத்துலதான் சார். நான் குடியிருக்கிற தெருவுலயேதான் சார். ரொம்ப நாளா இருக்காங்க சார்.

    ஏதாவது உதவி வேணும்னா கேக்கச் சொல்லு. இத்தனை நாள் அந்த அம்மா கையால சாப்பிட்டிருக்கோம்.

    சுந்தர் அந்த அம்மாவுக்கு உடம்பு எப்படி இருக்குன்னு வந்து சொல்லு. டிஸ்சார்ஜ் ஆயிட்டாங்களா என்னாங்குறதையும் வந்து சொல்லுப்பா.

    டேய், அசோக்.... ரொம்ப முடியலைன்னா, எந்த ஹாஸ்பிட்டல்னு கேட்டுட்டு ஒரு நடை போய்ப் பார்த்துட்டு வரலாமா?

    ஓ எஸ், போகலாம்.

    டேய், விஷ்வா, அந்தப் பொண்ணு சின்னப் பொண்ணாத்தான் தெரிகிறாளாடா?

    "படிக்கிற பொண்ணோ என்னவோ? பாவம்டா. அப்படிப் படிக்கிற பொண்ணுன்னா, படிப்பைக் கெடுத்துட்டு வந்து சாப்பாடெல்லாம் கொண்டுவர வேண்டாம்.

    யாராவது சமைத்துக் கொடுப்பார்கள் என்றால் நாம் ஏதாவது ஒரு காரில் போய் எடுத்து வந்து விடலாம். அவங்க வீட்டுக்கும் ஹெல்ப் பண்ணலாம். தெரியுதா?"

    குட் ஐடியாடா, அசோக்.

    அசோக், உங்கம்மா எப்படிடா இருக்காங்க?

    இன்னும் நடமாட முடியவில்லை. வீல் சேரில்தான் இருக்காங்க. ட்ரீட்மெண்ட் கண்டினியூ ஆயிட்டுதான் இருக்கு.

    பிசியோ தெரபிக்குப் போயிட்டுதான் இருக்காங்க. இங்க அழைச்சிட்டு வரலாமேடா.

    நான் கல்யாணம் பண்ணிக் கொண்ட பிறகுதான் வருவாங்களாம்.

    ஏனாம்?

    நான் ஆபீசுக்குப் போய் விடுவேனாம். என்னை யாரடா பார்த்துக் கொள்வார்கள் என்கிறார்கள்.

    அங்க வந்து தனிமையில் இருக்கிறதைவிட, என் பூர்வீக வீட்டிலேயே இருந்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறார்கள்."

    "அவுங்க சொல்றதும் சரிதானே? அண்ணாவிடம் போக அவர்களுக்கு மனசில்லை.

    அண்ணிக்குக் கோபம் அதிகம். அண்ணி... ரிச் ஃபேமிலி. எப்போதும் லக்ஸ்சூரியசாகவே இருக்கணும் என்று ஆசைப்படுவார்கள்.

    "சரி விடு, நீ சீக்கிரமா கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு கூட்டி வரப்பார். அவ்வளவு தானேடா.

    அம்மா ரொம்பவும் கம்பல் பண்ணினாங்க. சரி என்று சொல்லிவிட்டேன்."

    அம்மா நேத்துகூட போன் பண்ணி ரெண்டு ஜாதகம் வந்திருக்கிறது என்றார்கள். நீயே பார்த்துக் கொள்ளம்மா என்று சொல்லிவிட்டேன்.

    சார், இந்த ஃபைல்கள் எல்லாம் நீங்க சைன் பண்ணணும்

    இந்த லெட்டர இம்மீடியட்டா கார்த்திக் ப்ராடக்ட்ஸுக்கு அனுப்பணும்.

    நீங்க ஒங்க சீட்டுக்குப் போங்க. ஃபைல் வரும்.

    உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது. வாய் குழறியது. எப்படா இந்தாள்கிட்ட இருந்து சைன் வாங்கிட்டுப் போவோம் என்று மனம் தவியாய்த் தவித்தது.

    இதை மோகன் சார் வாங்கிட்டு வந்திருக்கலாம். ஏனோ அவர் அப்படிப் பயந்து நடுங்குகிறார்.

    இந்தாளைக் கண்டால் ஆணும் பெண்ணும் ஏன் நடுங்கித் தொலைக்கிறார்களோ?

    பதினைந்து பெண்களில் இப்போது இருப்பது மூன்றே, பேர் தான்.

    ஃபைல், விவகாரமென்று வந்துவிட்டால் ஷாலினிதான் பலியாவாள். எல்லோரும் கழண்டு விடுவார்கள்.

    ஃபைல்கள் தேங்கிப் போனால் பாட்டு வாங்குவதும் ஷாலினிதான்.

    "சுந்தர் மூலமாகப் ஃபைல்கள் சைன் வாங்க அனுப்பினாலும் சில ஃபைல்களுக்கு அந்த ஸ்டாப்புகள்தான் நேரே போக வேண்டும்.

    ஷாலினி ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தாள்.

    எப்படா இந்தக் கம்பெனியிலிருந்து வேறு கம்பெனிக்குப் போவோம் என்று குட்டி தேவதையிலிருந்து குலதெய்வம் வரை பிரார்த்தனை பண்ணிக்கொண்டிருந்தாள்.

    சுந்தர் கொஞ்சம் இங்க வாங்களேன்.

    என்னம்மா?

    எம்.டி.கிட்ட ஃபைலும் ஒரு லெட்டரும் இருக்கு. அதுல அவர் சைன் பண்ணினதும் வாங்கிட்டு வந்து கொடுக்கிறீர்களா?

    "ம்ம்...' வேலையில் எப்போதும் சின்சியராக இருக்கவேண்டும். லேட்டாக வந்தால் கதை கந்தலாகிவிடும். அவ்வளவு கோபம் இருந்தாலும் இறக்கத்திலும் கொடையிலும் அவன் கர்ணன்தான்.

    தீபாவளிக்கும் பொங்கலுக்கும் போனஸ் கொடுக்கத் தவறமாட்டான்.

    தனக்கு வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொண்டு மீதியை எல்லாம் தொழிலாளர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும், மீதியை அனாதை விடுதிகள், முதியோர் இல்லம் என்று வஞ்சகமே இல்லாமல் கொடுத்துவிடுவான். அந்தக் கரம் சிவந்த கொடை வள்ளல்.

    இவனுடைய கட்டுப்பாடும், கோபமுமே தொழிலாளர்களைப் பாதித்தது.

    ஹலோ, பார்த்தி, அசோக் பேசறேன்டா.

    சொல்லுடா.

    நான் ஒரு ப்ராஜெக்ட் கேட்டிருந்தேனேடா?

    சாரி, எதுடா?

    அதான்டா, தைமால் கம்பெனியில கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?

    ஓ அதுவா... சாரிடா மறந்தே போய்ட்டேன்டா.

    கண்டிப்பா உனக்கு அந்தப் ப்ராஜெக்ட் கிடைக்கும். ஐ வில் ட்ரை. டோன்ட் ஒர்ரிடா.

    தேங்க்யூடா.

    எப்பக் கெடைக்கும்ன்னு சொல்ல முடியுமாடா?

    ஒன் மனதக்குள்ள கெடைக்கும்.

    சரி சொல்லு, பேசி ரொம்ப நாளாகிவிட்டது. கம்பெனி எப்படிப் போயிட்டு இருக்கு.

    நல்லாவே போகுது.

    இன்னும் அந்த மேன்ஷன்ல தான் இருக்கியா?

    ஆமாம் அதுலதான் குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

    வேற நல்ல வீடா மாத்துடா?

    மொதல்ல ஆபீசுக்கு, ஒன் பில்டிங் பார்க்கணும். அப்புறம்தான் வீட்டைப்பற்றி யோசிக்கணும்.

    குட். ஓகே டூயிட்.

    ஆபீசுக்கு ஒரு நாள் வாயேன்.

    எனக்கு ரொம்ப டைட். இப்பத்தான் அப்ராட் போயிட்டு வந்தேன்.

    பார்க்கலாம். லீஷரா இருக்கும்போது வரேன்.

    போன் பண்ணிட்டு வாடா பார்த்தி.

    ஓகே... ஓகே...

    சுந்தர் நெஞ்சம் தடதடக்கக் காலிங் பெல்லை அழுத்தினான்.

    எஸ், கம் இன்.

    என்னப்பா மணி அஞ்சாகிட்டதாக்கும். வீட்டிற்குப் போக வேண்டுமாக்கும்.

    இல்ல சார் வந்து... ஃபைல்...

    "ம்ம் ரெடி எடுத்துட்டுப் போ. அந்த லெட்டரை ஜெராக்ஸ் எடுத்து உடனே கொரியர்ல அனுப்பிவிடுங்கள். தெரியுதா?

    அப்புறம் ஏதாவது அது சொட்டை, இது சொட்டை என்று நொண்டிச்சாக்கெல்லாம் சொல்லாதீங்க."

    இல்ல சார்.

    மேடத்த நான் இப்பவே ஜெராக்ஸ் எடுக்கச் சொல்லி, வாங்கிட்டுப்போய் கொரியர் பண்ணிடுறேன் சார்.

    ஓகே டூயிட்.

    ஏசியை ஆஃப் பண்ணிட்டு, பிரன்ஞ் விண்டோ டோரைத் திறந்தான்.

    மாலை வெய்யில் தங்கத்தை உருக்கி ஊற்றினாற்போலத் தகதகத்து அடுக்கு மாடிகளை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. சாரி, மலையரசிபோல அடுக்கு மாடிக் கட்டடத்தை முத்தமிட்டது.

    மாலைச் சூரியன் அசோக மரத்தின் அடர்ந்த இலைகளுக்குள் லேசாக எட்டிப் பார்த்து மாலையின் வணக்கத்தைத் தெரிவித்தது.

    மெரினாவின் குளிர்ந்த காற்று அவனை வருடிச்சென்றது.

    அசோக் சேரை சன்னலருகில் இழுத்துப் போட்டு மோடாவில் கால் பதித்துக் குளிர்ந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்தான்.

    சார் காபி.

    வச்சிட்டுப் போப்பா.

    கோட்டைக் கழற்றி ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, ஷுவையும் கழற்றி வைத்துவிட்டு, பேஸ் வாஷ் பண்ணி ஃப்ரஷ் பண்ணிக்கொண்டு மீண்டும் சேரில் உட்கார்ந்து கொண்டு காபியைப் பருகினான்.

    மனதில் அம்மா வந்து போய்க் கொண்டிருந்தாள். வீல் சேரில் அவள் வலம் வந்து கொண்டிருப்பது மனதை வலித்தது.

    கோடிகளில் டர்ன் ஓவர். அந்த ஆஸ்திக்காகத்தானே இந்த உழைப்பு, வியர்வை எல்லாம். இருந்தும் என்ன பயன்? என் அம்மா சந்தோஷமாக ஓடி ஆடி மகிழ முடியவில்லையே. கடவுளுக்கு ஏன் என் மீது இவ்வளவு கோபம்... அம்மாவின் நினைவுகள் வருத்தியது.

    போன் ஒலித்தது.

    சார். வணக்கம் சார். நான் புரோக்கர் குமார் பேசறேன்.

    ம்ம்... என்ன? சொல்லுங்க குமார்?

    சார் நீங்க கேட்டபடியே ஒரு பெரிய பில்டிங் வெலைக்கு வருது. அதுக்குப் பக்கத்துலேயே ஒரு அஞ்சு கிரவுண்டும் வருது.

    "சரி, எல்லாத்தையும் பேசுங்க. பத்திரமெல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு பாருங்க.

    "நாளைக்கு வாங்க, மார்னிங் லெவனோக் கிளாக்குக்கு என் லாயர்கிட்ட பேசுங்க.

    ஒரிஜினலெல்லாம் பாருங்க. லாயர் ஓகே சொன்னாருன்னா மேல பார்க்கலாம்.

    தேங்க்யூ சார்...

    நாளைக்குப் பாக்கறேன் சார்.

    ஹலோ கார்த்திக்.

    குட் ஈவினிங் சார், சொல்லுங்க.

    நாளைக்கு பில்டிங் விஷயமா புரோக்கர் குமார் வருவார். நான் வெளியே போயிட்டாலும் நீங்க ப்ரசீட் பண்ணுங்க.

    ஓகே சார்.

    நெட்டில் ஷேர் மார்க்கெட் நிலவரம் பற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    ஒரு சில கம்பெனிகளின் ஷேர்கள் அதிகமாகப் போயிருந்தது. ஒரு சில குட்டிக் கம்பெனிகளின் ஷேர்கள் ரொம்பவும் குறைந்திருந்தது.

    தன் கம்பெனி ஷேர்களைப்பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான.

    காலிங் பெல் சத்தம் வந்தது.

    எஸ், கம்மின்.

    என்ன சுந்தர். இன்னும் வீட்டுக்குப் போகல்லையா?

    கணேஷ் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று போயிட்டான். அதனால் நான் இன்னும் போகல்லை.

    ரூமை நானே பூட்டிக்கிறேன். நீ கிளம்பு. நைட் ஷிப்ட் யார் பார்த்துக்கிறது.

    கணேஷ் வராட்டி நான்தான் சார் இருப்பேன்.

    பீ கேர்ஃபுல். டே ஷிப்டும் பார்த்திருக்காய். நைட் ஷிப்டும் பார்க்கப் போறாய். நான் போகும்போது கீயைக் கொடுத்துவிட்டுப் போறேன். நீ மற்ற ரூம்களை எல்லாம் லாக் பண்ணிட்டு உன் ரூமுக்குப் போ.

    ஓகே சார்.

    தேங்க் யூ.

    கேட் வாட்ச்மேன் சங்கரன், கேட்டைப் பூட்டிவிட்டு, அந்த நியான் விளக்குப் பிரகாசத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பெயர் பலகையின் அருகில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறிய அறையின் அருகில் சேரில் வாட்ச்மேன் உடுப்பில் அமர்ந்து பூமித்தாயை முத்தமிட்டு வானத்து விண்மீன்களை எண்ணி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

    2

    ஊர்மிளா, அன்று வந்த கொரியரைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தாள்.

    முகமெல்லாம் பூரிப்பு. நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டு, விளக்கேற்றி சுவாமியின் முன் வைத்து வணங்கினாள்.

    என்னம்மா ஊர்மிளா, என்ன லெட்டர். ரொம்ப சந்தோஷமா இருக்கே? ஏதாவது பரீட்சையில பாஸ் கீஸ் ஆயிருக்கையா?

    'ஆமாம் என் வாழ்க்கையின் முதல் பரீட்சையில் பாசாகி இருக்கேன்' என்று நினைத்துக் கொண்டாள் ஆனந்தக் கண்ணீருடன்.

    அம்மா! எனக்குக் காலேஜ்ல லெக்சரர் வேலை கெடைச்சிருக்கும்மா...

    அப்படியா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குமா. சரியான நேரத்துல கடவுள் உனக்குக் கண் திறந்திருக்கிறார் என்றாள் சரசம்மா.

    மொதல்ல சாப்பாட்டை எடுத்துக் கொண்டுபோய் அம்மாட்ட குடுத்துட்டு, இந்த நல்ல சேதிய அவர்களிடம் சொல்லம்மா.

    அக்கா, ரொம்பவும் சந்தோஷப்படுவாங்க.

    இனி நீயும் கஷ்டப்பட வேண்டாம். உன் அம்மாவையும் கவனித்துக் கொள்வாய்.

    ஊர்மிளா... சாப்பாட்டுக் கடையை மூடிட வேண்டியது தானம்மா

    "அதையும் சேர்த்து நடத்த முடியுமா என்று முயற்சித்துப் பார்த்துவிட்டுத்தான் நான் முடிவெடுக்கணும்.

    எனக்கு ஈவினிங் காலேஜில்தான் வேலை. சி.ஏ. பரீட்சை ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கேன். அது வந்த பிறகு தானம்மா நான் முடிவு செய்ய வேண்டும்.

    அதுவுஞ் சரிதானம்மா.

    "சாப்பாடெல்லாம் அம்மாவுக்குக் கட்டி வச்சிட்டேம்மா. நீ எடுத்துக் கொண்டுபோய்க் கொடுத்துட்டு இந்த நல்ல சேதியச் சொல்லு.

    அம்மாவுக்கு சாப்பாட்டை நல்லா மசிச்சுக் கொடம்மா. உப்பு கம்மியாகத்தான் போட்டிருக்கேன். தேவைப்பட்டால் கொஞ்சமாகச் சேர்த்துக் கொள்ளம்மா.

    ஆடி மாதக் காற்றுபோல அடித்து, வெய்யிலையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.

    மொபட்டை எடுத்து வெளியில் வைத்தாள். சாப்பாட்டுக் கூடையையும் பாக்சில் திணித்துக் கொண்டாள்.

    ஸ்கார்ப்பைத் தலையில் கட்டிக்கொண்டு, மொபட்டை ஸ்டார்ட் பண்ணினாள்..

    சந்தோஷத்தில் அந்த அனல் காற்று தென்றலைப்போலக் குளிர்ந்திருந்தது.

    'எத்தனை கஷ்டங்களை அனுபவித்த அம்மா, நாம் வணங்கிய, கண்ணன் நம்மைக் கைவிடவில்லை. தக்க நேரத்தில் பாரதப் பாஞ்சாலிக்கு துகில் கொடுத்து உதவிய கண்ணன்போல, நமக்கும் இந்த இக்கட்டான நெருக்கடியில் உதவி இருக்கிறான்' என்று அவள் மனமெல்லாம் பூவாய்ப் பூத்து மலர்ந்து மணத்தது.

    ஜி.ஹெச் முன்னால் வண்டியைப் பார்க் பண்ணிவிட்டு சாப்பாட்டை உள்ளே எடுத்துக்கொண்டு அம்மாவை ஆவலாகப் பார்க்கச் சென்றாள்.

    உலர்ந்த உதடும், சோர்ந்த முகமும், வட்டக் குங்குமமும், அங்கங்கே ஓரிரு நரை கேசங்களுடைய நீளக் கூந்தலை அள்ளிக் கொண்டை இட்டுக்கொண்டு இருந்தாள்.

    அம்மா

    என்னடா, என்னடா ஊர்மி. முத்துப் பல் வரிசை தெரியச் சிரித்து அம்மாவை அள்ளி முத்தமிட்டாள்.

    என்னடா ஊர்மி, இன்றைக்கு என்ன இவ்வளவு சந்தோஷம். ஏதாவது ஸ்பெஷலா?

    கண்களின் நீருடன், அம்மா... எனக்குக் காலேஜ்ல வேலை கிடைச்சிருக்கம்மா.

    "அப்படியா? இங்க பக்கத்துல வாடா ஊர்மி, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா.

    ஆனால் நீ வேலைக்குப் போவதைப் பார்க்கும்போது இந்தச் சின்ன வயசுல நீ போய்க் கஷ்டப்படணுமான்னு எனக்குத் தோணுது. மனசு கஷ்டமா இருக்குடா..."

    ஏனம்மா, ஊர்மிளா. இன்னுங்கொஞ்சம் படிச்ச பிறகு வேலைக்குப் போகலாமே.

    இல்லைம்மா?

    எனக்கு ஈவினிங் காலேஜ்ஜிலதாம்மா வேலை கிடைத்திருக்குது. காலையில் வீட்டிலேதானேம்மா இருப்பேன். கரசில் படித்துக் கொள்வேம்மா?

    அப்ப இரவு பகலாக உழைக்கப் புறப்பட்டுவிட்டயாக்கும். அம்மாவால் இனி உழைக்க முடியாது என்று முடிவெடுத்துவிட்டாய். அப்படித்தானே...

    "அம்மா, நான் என்றுமே அப்படி நினைக்க மாட்டேன். வசந்தியின் மகளாக வளர்ந்தேம்மா. இனி ஊர்மிளாவின் அம்மாவாக நீ அறியப்பட வேண்டாமா?

    இவ்வளவு நாள் நெருப்பில் வெந்து கஷ்டப்பட்டு என்னை வளர்த்துவிட்டாய். இனி உன் பிள்ளையால் சுகப்பட வேண்டாமா?

    மரம் வளர்த்தவன், அந்த நிழலில் சுகப்பட வேண்டாமா?

    அடி என் கண்ணே?

    தன்னுடன் முடிகோதி, முதுகு தடவி, இறுக்கி அணைத்து முத்தமிட்டாள்.

    எப்படியடா இப்படிப் பேசக் கற்றுக் கொண்டாய்? ஊர்மி சாப்பிட்டாயா?

    ம்ம் சாப்பிட்டேனம்மா. அம்மா, பேசிக்கொண்டே இருக்கிறேன் பார். அம்மா முதலில் சாப்பிடு. மாத்திரையைப் போட்டுவிட்டுப் பிறகு பேசலாம்மா.

    இளைத்துத் துரும்பாகிப் போனது என் பிள்ளை. நானும் ஆஸ்பத்திரியில் வந்து படுத்துவிட்டேன். ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறாயம்மா

    உனக்கு, என் கையால் சோறூட்டி எத்தனை நாளாகிறது

    "வாம்மா ஊர்மி, முதலில் உனக்கு சோறூட்டிவிட்டப் பிறகு நான் சாப்பிடுகிறேன்.

    வாடா, வாடா என் செல்லமே. அருகில் அணைத்து உட்கார வைத்தாள்.

    ரசம் சாதமும், கத்திரிக்காய் வதக்கலும் அள்ளி அள்ளி ஊட்டினாள்.

    மண்ணையுண்ட கண்ணன் யசோதை அடிக்கக் கை ஓங்கியபோது உலகமே உருண்டையாக வாய்க்குள் உருண்டு கொண்டிருந்ததாம்.

    அது போல உருண்டை உருண்டையாக சாப்பாட்டு உருண்டை உருண்டு வாய்க்குள் போய்க் கொண்டிருந்தது. அவள் ஊட்டியதிலிருந்து, குழந்தை சாப்பிடாமல் பசியோடு வந்திருக்கிறாளோ என்று மனம் வெம்பியது.

    அம்மா, போதும்.

    இது ஒரு உருண்டைதானடா. அம்மா நான் ஊட்டுகிறேன் சாப்பிடு.

    வேண்டாமடா, நீ மாத்திரையை எடு நான் சாப்பிட்டுக் கொள்கிறேன்.

    அம்மாவின் சார்ட்டின், ரிப்போர்ட்களைப் பார்த்தாள். அதே நிலையில்

    Enjoying the preview?
    Page 1 of 1