Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravu Kolla Oruthi
Uravu Kolla Oruthi
Uravu Kolla Oruthi
Ebook80 pages28 minutes

Uravu Kolla Oruthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466688
Uravu Kolla Oruthi

Read more from Rajendrakumar

Related to Uravu Kolla Oruthi

Related ebooks

Related categories

Reviews for Uravu Kolla Oruthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravu Kolla Oruthi - Rajendrakumar

    10

    1

    "பெயர்?"

    எதிரே அமர்ந்திருந்த பெண்ணை ஆராய்ந்தார் ராஜ பாண்டியன்.

    பெயரைக் கேட்டேன்.

    சொன்னேனே சார்.

    நான் கவனிக்கவில்லை: மறுபடியும் சொல்.

    ராஜஸ்ரீ.

    அவர் சந்தேகமாக உற்றுப் பார்த்ததும் - சிரித்தாள்.

    நீங்கள் நினைக்கிற ராஜஸ்ரீக்கு நிச்சயம் இந்த வயசு இருக்காது. இருக்கவும் முடியாது.

    மேஜர்?

    அடுத்த வருஷம். ஆனால் மேஜருக்கான சகல உரிமைகளும் எனக்கு மூன்று வருஷத்துக்கு முந்தியே வந்து விட்டது.

    புரியல்லே.

    என்னைப் பெற்றவங்க போயிட்டாங்க. அப்ப. கிராஜுவிடி, இன்ஷ்யூரன்ஸ், தஞ்சாவூரிலிருக்கிற கொஞ்சம் நிலம் எல்லாம் வச்சு ஹாஸ்டல்லே பாதுகாப்பாக இருந்து பட்டப் படிப்பு முடிச்சேன். அதனால் நான் சகல உரிமைகளும் வரப் பெற்றவள். எந்தத் தீர்மானத்துக்கும் யாரையும் அனுமதி கேட்க வேண்டிய நிலையில் இல்லாதவள்.

    எல்லா சுதந்திரம்?

    எல்லாத்திலேயும் சுதந்திரம் உண்டு.

    காதல்?

    இந்த வேலைக்கு இந்தக் கேள்வி தேவையா? ஐ மீன் இந்த இன்டர்வியூவில்?

    தனிப்பட்ட உன் வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். வேலை அப்படிப்பட்டது. கேட்டார். இப்ப சொல், உனக்கு காதலனிருக்கிறானா?

    இருக்கிறது என்றாள் அஃறிணையில். பெயர் பிரபாகர். நல்ல கவர்ச்சியுள்ள ஆண்பிள்ளை. விளையாடி இருக்கிறான் ஒரு எல்லைக் கோட்டோடு.

    அதைச் சொல்லவில்லை. இது கொஞ்சம் ஆபத்தால வேலை. துணிச்சல் கொஞ்சம் அதிகம் தேவை.

    ஆபத்தைப் பற்றிய கவலை இல்லை. ஆபத்து எதிலும் உண்டு. யூ ஸி கைகளை விரித்து அசைத்துப் பேசினாள். சாலையோரமாகப் போகும்போது மின்சார கம்பியை மிதித்து உடல் கருகிச் சாகலாம். ரோட்டைக் கடக்கும்போது லாரி மோதி உருத் தெரியாத வகையில் நசுங்கிச் சாகலாம். அல்லது பாதாளச் சாக்கடையில் விழும் முழுகி நாற நாறச் சாகலாம்.

    கையமர்த்தினார். சாவை சாதாரணமாக ஏற்பது மிகப் பெரிய ஆபத்துக்கு அஞ்சாத உன்னை எனக்குப் பிடிக்கிறது.

    அப்போ வேலை கிடைக்குமென்று நம்பலாமா?

    கிடைத்து விட்டதாகவே நினைக்கலாம்.

    "வேலை வாங்கிட்டியா? பிரபாகர் கேட்டான். யூகாட் இட்?"

    நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து, சொடுக்குப் போட்டாள். இப்படி... இப்படி... வாங்கிட்டேன்.

    உன் பாஸுக்கு என்ன வயசு?

    நிச்சயம் உனக்கு வில்லன் ஆகிற வயசை எப்பவோ தாண்டிட்டார்.

    என்ன என்ன வேலை செய்யணும்னார்?

    சொல்லட்டுமா? என்று அவள் ஆரம்பித்ததுமே –

    கையமர்த்தித் தடுத்தான். கிண்டல் இல்லாம சீரியஸாகப் பதிலைச் சொல்லு.

    ரொம்ப சிம்பிள் ஜாப். அவர் ஆளைக் காட்டுவார். நான் அவனைக் கொலை செய்துட்டு வந்துரணும்.

    மை காட் கொலையா?

    கொல்லப் போகிறது நான். நீ ஏன் அலர்றே?

    யாரைக் கொல்லப் போகிறே?

    அதை இன்னமும் சொல்லல்லே, சொல்ல முடியாது. நீயாகவுமிருக்கலாம்.

    பயப்படுவேன்னு எதிர்பார்க்கிறாயா?

    நீயா? யமனையேப் பலகாரம் பண்றவனாச்சே! அதெல்லாம் சும்மா சொன்னேன். வேலை இன்னதுன்னு நாளைக்குத்தான்.

    நாளைக்கா? என்றான் முறைப்பாக.

    நாளைக்கென்ன? என் நாய் - கன் பிறந்த நாளா?

    இடைவெளி விடாதே. நாயகன்னு சொல்லு! அழுத்தமாகச் சொன்னான். நாளைக்கு நீ வரே.

    வர்றேன் அவளும் அழுத்திச் சொன்னாள். என் பாஸோடு.

    பாஸ் வேணாம். என் பாஸந்தி நீ போதும்.

    நத்திங் டூயிங். அவர் உன்னைப் பார்க்கணுமாம்.

    அவர் ஏன் என்னைப் பார்க்கணுமாம்.

    ஒருவேளை ஜோடிப் பொருத்தம் பார்ப்பாரோ என்னமோ? பாஸ் மார்க் வாங்குவாயா?

    அவன் அடிக்க வரவே விலகிக் கொண்டாள். அவன் என்ன என்னை அவர்."

    சரி. அவர் என்ன என்னைப் பொருத்தம் பார்க்கிறது? நம்ம பொருத்தம் ஸ்வர்க்கத்தில் நிர்ணயிக்கப்பட்டது.

    சொர்க்கமில்லே. ஸ்வாகத் ஹோட்டல்ல. தின்னுட்டு பில் தர பணமில்லாம தவிச்சப்ப ‘வே’ ன்னு முழிச்சிகிட்டிருந்தே. நான் போனால் போகுதுன்னு பணம் கொடுத்தால் அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டே. உதற உதற விலக மாட்டேங்கறே.

    முறைத்தவாறு இருந்தவன் எழுந்தான். நான் போறேன் போ.

    த்ரீ டைமன்ஷன் படத்துக்கு டிக்கெட் வாங்கினது அப்போ வீண்தானா?

    சரி போகுது போ. ரொம்ப கெஞ்சறே. வந்து தொலையறேன்.

    சீ. சாத்தான்- குட்டிச் சாத்தான் - மை டியர் குட்டிச் சாத்தான்.

    செல்லமாக அவன் முன்னுச்சி மயிரைக்

    Enjoying the preview?
    Page 1 of 1