Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalai, Malai, Kolai..!
Kalai, Malai, Kolai..!
Kalai, Malai, Kolai..!
Ebook104 pages36 minutes

Kalai, Malai, Kolai..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466671
Kalai, Malai, Kolai..!

Read more from Rajendrakumar

Related to Kalai, Malai, Kolai..!

Related ebooks

Related categories

Reviews for Kalai, Malai, Kolai..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalai, Malai, Kolai..! - Rajendrakumar

    9

    1

    பளீரென்று ஓசையின்றி புகும் சூரிய கதிர்களைப் போல ஆவேசமாக நகரத்துக்குள்ளே புகுந்து அந்த அமானுடம்-ஆவி.

    பூந்தமல்லி சாலையில் அமைந்தகரையை கடந்து புது ஆவடி சாலையில் உற்சாகமாக சீட்டியடித்தபடி போய்க் கொண்டிருந்தது இரண்டு மில் தொழிலாளர்களின் சைக்கிள் ஒலி!

    அந்த இருட்டு நேரத்தில் பளீர் விளக்கொளியில் தனிமையில் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் –

    சீட்டியடித்தான் ஒருவன். கிராக்கிப்பா என்றான்.

    அதை அதிகம் ரசிக்காத இன்னொருவன் சைக்கிளை மிதித்து கொஞ்ச தூரம் போனதும் திரும்பிப் பார்த்தான்.

    ஏய், வாயேண்டா. சிரமத்துடன் மிதித்த முதலாமவன் சைக்கிள் நகர மறுக்கும் காரணம் புரியாமல் விழித்தான். முழு பலத்தையும், பிரயோகித்து மிதித்தான்.

    சைக்கிளைப் பிடித்திருந்த யாரோ சட்டென்று விட்டு விட்டார்ப்போல சைக்கிள் சரேலென்று பாய்ந்ததும், திணறிப் போனான்.

    திரும்பிப் பார்த்தவாறு, அந்த முன் ஆளை நெருங்கும் போது -

    அந்தப் பெண் காற்றில் கலைவது போல - கரைவது போன்ற பிரமை ஏற்பட நடுங்கிப் போனான்.

    அவசரமாக மிதித்து தண்ணீர் டாங்க் அருகில் திரும்பி அவசரமாக மறைந்தான்,

    விடிய நேரம் இருந்ததினால் நடமாட்டமின்றி துடைத்து விட்டார் போல் இருந்தது அண்ணா சாலை. பயமின்றி காற்றாக பல்லவனை பறக்கவிட்ட டிரைவர், ஸ்பென்சரை, கடந்த போது- பக்கவாட்டு பின்னி சாலையில் இருந்து ஓடிவந்த அந்தப் பெண்ணைக் கண்டதும் பதறி முழு பலத்தையும் பிரயோகித்து பிரேக்கை அழுத்தினார். ஆனால் பயன் இன்றி, அவளை முட்டி மோதி சக்கரங்கள் ஏறி இறங்கிய பின்னர்தான், பஸ் நின்றது.

    அவசரமாக இறங்கிய டிரைவரும் பயணிகளும் பீதியுடன் ஆராய--

    விபத்து நடந்த தடயமே இல்லாமல் இருந்தது.

    விபத்தே நடக்கவில்லை என்பதை நம்பமுடியாமல் திணறி போனார்கள்.

    திடீர் என்று ஒரு பெண் ஓடி வந்ததை டிரைவர் நம்பினார்- சத்தியமாக நம்பினார்.

    அந்த அலறல்- இன்னமும் அவரிடம் படபடப்பை மீதம் வைத்து இருந்தது.

    மீண்டும் பஸ் கீழே ஆராய்ந்தார்.

    அட வண்டியை எடப்பா. ரெயில் போயிடும் என்ற பயணியின் குரலுக்கு மதிப்பளித்து மீண்டும் பஸ்சில் ஏறி வண்டியை நகர்த்தினார். குழப்பமாக,

    காலை வந்துகொண்டிருந்தது மெதுவாக. அவசரமில்லாமல் -

    சைதை மர்மலாங் பாலத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிய அந்த அம்பாசிடர்கார். முட்டுவதைப் போல ராஜ்பவனை நோக்கி பாய்ந்து சென்று, இடது பக்கம் கோபமாக திரும்பியதும் -

    தென்பட்டாள் அந்தப் பெண். விளக்கு ஒளியில் நின்று கட்டை விரலால் தோள் வழியாக பின்னோக்கிக் காட்டி லிப்ட் கேட்டாள்.

    காரோட்டி வந்தவர் வயதை மறந்து ஒரு வினாடி சபலத்துக்கு ஆளானார். அவளை கடந்து போனவர், காரை நிறுத்தி பின்னோக்கி வந்து -

    அவள் அருகே நிறுத்தினார். இமைக்காமல் பார்க்கும் அவள் பார்வையை அலட்சியப்படுத்தினார்.

    என்னம்மா தனியா நிக்கரே? கண்ணடித்தார் வர்றியா?

    அவள் காரை நெருங்க நெருங்க. அவருடைய முயற்சி இன்றியே கார் கதவு திறந்து கொள்ள -

    சுலபமாக ஏறி அமர்ந்தாள் அவள்.

    கதவு அவள் தொடமல் தானாக மூடிக் கொண்டதும்தான் அவருக்கு உரைத்தது.

    யார் நீ?,

    இமைக்காத விழிகளுடன் திரும்பிப் பார்த்தவள் திரும்பிக்கொண்டாள். நேரே போ

    நீ எங்கே போகணும்?

    பெசண்ட் நகர்.

    அடையாற்றில் விட்டு... றேன். வண்டி சத்யா ஸ்டியோ பக்கமாபோகுது.

    பெசண்ட் நகர் என்றாள் அழுத்தமாக.

    நீ போகிற இடத்துக்கெல்லாம் கொண்டுபோக முடியாது. அடையாறு வரைதான் லிப்ட் என்றவருக்கு அப்போதுதான் உரைத்தது.

    ஒரு பெண்ணின் குரலா அது?

    அடையாறு பஸ் ஸ்டாண்ட் அருகே காரை நிறுத்த முயன்ற அவர் முயற்சி தோற்றது. பிரேக் பிடிக்க மறுத்தது.

    அவர் கட்டுப்பாட்டையும் மீறி கார் பறந்தது.

    சரலென்று திரும்பி சாஸ்திரி நகர் செல்லும் சாலையில் பறந்து அவ்வை இல்லத்தை கடந்து திருப்பத்தில் -

    கோபமாக அரைவட்டம் போட்டு திரும்பி நின்றது.

    அவள் இறங்கிக்கொண்டாள். நீ போகலாம். நன்றி என்றாள் கரகரப்பு குரலில்.

    நன்றி... நன்றி... நன்றி... என்று எங்கோ எதிரொலிப்பது கேட்க, காரோட்டிக் கொண்டிருந்த அந்த வயோதிக வாலிபர் பயத்துடன் ஆக்சிலேட்டரை முடிந்த மட்டும் மிதிக்க, கார் காற்றாக பறந்து மறைந்தது.

    அந்த திருப்பத்தில் அவள் காத்திருந்தாள்.

    இல்லை

    அது" காத்திருந்தது.

    தட்... தட்... தட்... கான் வாஸ் பூட்ஸ் சீரான ஓசை எழுப்ப கைகளை முன்னோக்கி நீட்டியவாறு ஓடி வந்து கொண்டிருந்தாள் பிரியா.

    வயது?

    அந்த ஆராய்ச்சி அப்புறம். பெசண்ட் நகர் சாலையில் ஓடினாள்.

    சாலையின் இருபுறமும் எரிந்த விளக்கு ஒளியில் அவள் நிழல் பின்னே நீண்டு பிறகு குறைந்து வந்து விளக்கு கம்பத்துக்கு நேரே வந்ததும் காலடியில் தேங்கி, பின் முன்பக்கமாக நீண்டு கொண்டே போயிற்று.

    காலை உடற்பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.

    எதிரே இருட்டில் தெரிந்த வேளாங்கண்ணி மாதா கோயிலைக் கண்டதும் சிலுவை போட்டுக் கொண்டாள். பிரியா- ஓட்டத்தை நிறுத்தாமலே.

    பிறகு சாஸ்திரி நகர் பக்கமாக திரும்பி ஓடத் தொடங்கினாள்.

    அவளுக்கு பதினெட்டு வயது என்றாலே அடிக்க வருவீர்கள். ஆனால் உண்மையில் வயது இருப்பதை தொட்டு சில நாட்கள் தான் ஆகிறது. போன சனிக்கிழமைதான் ஒற்றை மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டி பிறந்த நாளை அட்டகாசமாகக் கொண்டாடினாள்.

    அப்போது நாசுக்கு புரியாத ஒரு மாமி வயதைக்

    Enjoying the preview?
    Page 1 of 1