Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varamaattiyaa Mummy
Varamaattiyaa Mummy
Varamaattiyaa Mummy
Ebook81 pages1 hour

Varamaattiyaa Mummy

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466497
Varamaattiyaa Mummy

Read more from Rajendrakumar

Related to Varamaattiyaa Mummy

Related ebooks

Related categories

Reviews for Varamaattiyaa Mummy

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varamaattiyaa Mummy - Rajendrakumar

    22

    1

    காற்றைக் கிழித்துப் பறந்து கொண்டிருந்தது ரயில்.

    சக்கரங்களின் வேகத்துக்குக் கற்கள் காற்றில் பறந்து சக்கரத்தில் சிதறின.

    பிஸ்டன் சக்கரங்களை ஒரே சமயத்தில் இயக்க, அபரிமித ஆவி அவ்வப்போது கோபமாய் வெளியேறிப் போக-

    ரயில் ஓடிக் கொண்டிருந்தது வேகமாக.

    ஓட்டுநர் ஸ்தானத்திலிருந்த ஜார்ஜ் சற்றே எட்டினாற் போல தொலைவில் கூர்ந்துப் பார்த்தான்.

    கைகாட்டி மரம் துவண்டிருப்பது சிறு புள்ளியாகத் தெரிந்தது.

    விஸிலை அலற விட்டான்.

    தடதடவென்ற ஓசையுடன் வேகம் குறையாமல் ஓடிக் கொண்டிருந்தது ரயில்.

    கை காட்டி மரத்தைப் பார்த்தவாறு இருந்தவன் ப்ரேக்கைச் சுழற்ற ஆரம்பித்து, ரயிலை நிறுத்த முயலும் முன்-

    மந்திரத்தால் இயங்குவது போல கைகாட்டி மரம் வானம் நோக்கித் தூக்கிக்கொண்டதும்

    மீண்டும் உற்சாகத்துக்கு மாறி ப்ரேக்கை விடுவிக்க ரயிலுக்கு பழைய வேகம் வந்தது.

    அடுத்த நான்கு ஸ்டேஷன்களில் நிறுத்துவதற்கில்லை. ஆகவே வேகம் குறைக்கவேண்டிய அவசியமில்லை.

    கரியை அள்ளிப் போடு என்று கிண்டலாக இவர் சொல்ல, உதவியாளர் சிறுவன் டீஸல் வண்டியிலா? என்றான் சிரிப்புடன்

    வயசென்னடா உனக்கு?

    பதினேழு முடிந்து பதினெட்டு ஆரம்பம்.

    எத்தனை வருஷமாக? என்று கேட்டுக் கண்ணடித்தான். இதுவரை எத்தனை பெண்களை... என்று கேட்டு-

    அவன் நோ சார்! நான் நல்ல பையன் என்றதும், கேள்வியை மாற்றிக் கொண்டான்.

    அந்தமாதிரி ஆட்களிடம் தான் போவாயா? எத்தனை தடவை டாக்டரிடம் திட்டு வாங்கினாய்?

    உங்களைத் திருத்த முடியாது சார்

    பின்னே எப்படிதான்... கண்ணடித்துக் கேட்டான்.

    எப்படி சும்மா வைத்திருக்கிறாயாம்?

    கொஞ்சம் கோபமாகவே சொன்னான் பையன். மனைவியில்லாமல் நீங்க எப்படி...? அப்படித்தான் சட்டென்று முகம் மாறினான் ஜார்ஜ். மனைவி!

    கேரலீனா! ஏழு வயதுப் பையனுக்கு தாய் என்று நம்பத் தயங்க வைக்கும் அழகி.

    சும்மாயிருக்கும் நேரத்தை விட, சிரிக்கும் போதுதான் அவள் மேலும் அழகாக இருப்பாள்.

    2

    கேரலீனா சிரித்துக் கொண்டிருந்தாள்.

    ஆலை வாசலில் அந்தப் பக்க சின்ன கேட்டில் ஆண் காவலாளிகள் தடவிப் பார்த்து வெளியே அனுப்ப-

    இந்தப் பக்கம் பெண்களை ஒரு பெண் (தோற்றத்தில் மெலிதான ஆண் தன்மையிருந்தது) சிப்பந்தி தடவிப் பார்த்து அனுப்ப-

    கேரலீனா சிரித்தாள்.

    கண்ட இடத்தில் தொடுகிறீர்கள் மேடம். என் உடம்பில் சில இடங்களைத் தொட ஆண்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு

    அப்ப நாளையிலிருந்து அந்தப் பக்கமாகப் போ. என்று அந்த மேடம் இவளை போகச் சொல்லி விட்டு உட்காருமிடத்தில் வெடுக்கென்று கிள்ளி சுவாரஸ்யமாக அலற விட்டாள்.

    வெளியேறி வந்த கும்பலில் இளம் பையன் ஒருவன் இவள் மார்புகளின் கன பரிமாணங்களையே உற்றுப் பார்த்தான்,

    ஏய். என்ன பார்க்குறே?

    உம்? இளித்தான்.

    உன் பிரா சைஸ் என்னன்னு பார்த்தேன்

    ஏன்? வாங்கித் தரப் போறியா? சிரிப்புடன் அவன் தலையில் குட்டினாள்.

    சிறுவனே தப்பும்மா. உன்னைப்போல ஒரு ஆண் பிள்ளைக்கு நான் அம்மா.

    மைகாட்! இருவது வயது பையனா?

    ஏன், ஏழுவயசுப் பையன் என்றால், ஆண் பிள்ளையில்லையா? ஜாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. இந்த மாதிரி கணக்கெடுக்கிற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதே. என்று சொல்லும் போதே-

    ஆலையின் மெயின் கேட் திறக்க-

    அந்த மாருதி கார் ஓடிச்சென்று வெளியேறி வந்து நின்றது.

    எட்டிப் பார்த்தவன், சின்ன எஜமானன் சார்லி.

    சுட்டுவிரலை நெளித்து இவளைக் கூப்பிட்டான்.

    நெருங்கி வந்து நின்றாள்.

    உனக்குத்தான் ஓவர்டைம் சொல்லியிருந்ததே, எங்கே போகிறாய்?

    களைத்துப் போய் விட்டேன், சின்ன எஜமானே! போய் குளித்து, வேறு உடை உடுத்தி சர்ச்சுக்கு வேறு போகணும்"

    ஏன்? இன்றைக்கு சர்ச்சில் என்ன விசேஷம்?

    "மனசுக்கு ஆறுதல் தேட

    Enjoying the preview?
    Page 1 of 1