Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Vazhi Bothai
Oru Vazhi Bothai
Oru Vazhi Bothai
Ebook82 pages33 minutes

Oru Vazhi Bothai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466688
Oru Vazhi Bothai

Read more from Rajendrakumar

Related to Oru Vazhi Bothai

Related ebooks

Related categories

Reviews for Oru Vazhi Bothai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Vazhi Bothai - Rajendrakumar

    9

    1

    என்னை அடையாளம் கண்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.

    வாசல் போர்டை படித்துவிட்டு வந்து சுப்ரமணியம் என்றால் உங்களுக்கு பாஸ் மார்க் கிடையாது. என் பெயர் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. காரணம் நான் உயிருடனில்லை. நான் இறந்து சரியாக ஏழு வருஷம் ஆறுமாதம் இரண்டு நாள் ஆறு மணி ஆகிறது.

    இப்போது நான் இறந்தவன் பேசுகிறேன்,

    இந்த உடம்புக்குச் சொந்தமானவன் நானல்ல. நீங்கள் கேட்கும் பேச்செல்லாம் சுப்ரமணியம் பேசியதல்ல.

    டாக்டர் ஆனந்த குமாரின் பேச்சு. ஆனந்த குமார்? யா! சாவதற்கு முன்பு என் பெயர் அது தான்.

    செத்தவனான பின்பும் நான் ஏன் அலைகிறேன்?

    ஏங்குகிறேன்?

    யாரைத் தேடுகிறேன்?

    மகளை! என் பிரியதர்சினியைத் தேடுகிறேன்.

    பிரியதர்சினி என் போன பிறவி மகள்- பிரியதர்சினி ஆனந்தகுமார்.

    உங்கள் மனைவி வரவில்லையா மிஸ்டர் சுப்ரமணியம்?

    கோயில் வாசலில் லாட்டரி சீட்டு விற்கும் சின்னப் பெண்ணைப் பார்க்கிறேன். நான் சாகும்போது -

    என் மகள் இந்த அளவுதான் இருந்தாள்

    யாரோ மறுபடியும் கேட்கிறார்கள். உங்க ஒய்ஃப் வரலையான்னு கேட்டேன் மிஸ்டர் சுப்ரமணியம்?

    வெறிச்சென்று பார்த்தேன், எந்த மனைவியை கேட்கிறான்?

    லக்ஷ்மி?

    தேவி?

    லக்ஷ்மியானால் கோயிலுக்குள்ளே போயிருக்கிறாள் இப்ப வருவாள்.

    ஆனால் தேவி? மிஸஸ் தேவி ஆனந்த குமார்?

    சென்னையில் இருப்பாள்? இருக்கிறாளா? அப்போதே ஹார்ட் பேஷன்ட்டாக இருந்தவள். ஒருவேளை –

    நினைக்காதே! நினைக்காதே’

    என்மகள் பிரியதர்சினியை அனாதையாக்கி மனதால் கூட நினைக்கக்கூடாது,

    "போகலாமா?"

    திரும்பிப் பார்த்தேன்.

    லக்ஷ்மி பூஜை தட்டுடன் நிற்பது தெரிந்தது. மெலிதாக சிரித்தாள்.

    நெற்றிக்கு இடவந்தவள் கையை விலக்கி விட்டு தாடியை வரட் வரட்டென்று சொரிந்துக் கொண்டேன்.

    ஆனாலும் நீங்க ரொம்பவும் மோசம்.

    கருமாரியம்மனை தரிசிக்க வரல்லே. அதுவா? வரமாட்டேன்.

    அது தெரிஞ்ச விஷயம்தானே? பரவாயில்லே, செண்பகத்தோட வீட்டுக்காரர் என்னைப் பற்றித் திரும்பத் திரும்பக் கேட்டாராம். ‘நான் வரல்லையா?’ன்னு. பதிலே பேசாம முகத்தைத் திருப்பிக்கிட்டீங்களாமே. உள்ளே வந்தப்ப சொன்னார். ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறீங்க? யாரையும் மதிக்காம யாரோடும் பழகாம-

    முகத்தைத் - திருப்பிக் கொண்டேன்.

    சரி, சரி. அதுக்காக கோவிச்சுக்க வேண்டாம். வாங்க போகலாம்.

    காரில் ஏறிக் கொண்டாள்.

    மவுனமாக நானும் ஏறிக்கொண்டு கியரை முடுக்கினேன். இக்னீஷியன் காயலை திருகித்திருகி உறும விட்டேன். காற்றில் பறப்பதுபோல காரை நகர்த்தினேன்.

    ஆயிரம் லட்சம் மலர்கள் ஒரே சமயம் மொட்டவிழ்த்தி நாசிக்கு சுகமாக வாசம் பரப்பின.

    தேவி!

    மெலிதான மூடுபனிக்கு அப்பால் கையைத் துழாவினேன்.

    உள்ளங்கையில் ஏற்பட்ட சிலிர்ப்பு நினைப்பூட்டியது –

    பிரியதர்சினியின் மெத்தென்ற கன்னத்தின் மென்மை.

    கான்ஃபரன்ஸ் முடிஞ்சதும் ஓடி வந்துரணும். ப்ராமிஸ்? கையை நீட்டினாள் தேவி

    தோளில் ஒரு கை பொதிந்ததும் சட்டென்று நினைவுக்குத் திரும்பினேன்.

    லக்ஷ்மி பின்ஸீட்டிலிருந்து தொட்டுக் கொண்டிருந்தாள்.

    வீட்டைத் தாண்டிப் போறீங்களே?

    உண்மை.

    மெலிதாக ரிவர்ஸ் வாங்கி பங்களா கேட்டைக் கடக்கும் போது கவனித்தேன். கூர்க்காவின் பார்வையில் ஆச்சரியமிருந்தது.

    போர்டிகோவில் நிறுத்தினேன்.

    இறங்குங்க.

    தயங்கினேன்.

    வேற எங்காவது போகப் போறீங்களா?

    இல்லை.

    பின்னே ஏன் இன்னும் காரிலேயே உர்கார்ந்திருக்கிங்க? இறங்குங்க.

    இறங்கினேன்.

    சாப்பாட்டு மேஜையில் –

    கொஞ்சம் பொரியல்?

    வேண்டாம்

    கேட்டேன். ஊறுகாய் போடு.

    சாம்பார் சாதத்துக்கே ஊறுகாயா? கூட்டு தொட்டுக்குங்க

    உம்

    இன்னொரு அப்பளம் போடவா?

    வேண்டாம் லக்ஷ்மி.

    என்ன எழுந்துட்டீங்க, ரசம் சாதம்கூட சாப்பிடாம?

    வேணாம் லக்ஷ்மி. எனக்கு பசிக்கல்லே.

    அதெப்படி பசிக்காம போகும்? காலையிலேகூட டிபன் சாப்பிடலே. கொஞ்சம்- விரல்களை மெலிதாக விலக்கி காட்டினாள். இவ்ளோவ். இவ்வளவேதான். சாப்பிடுங்க ப்ளீஸ். ரசம் வாசனையாயிருக்கு.

    கரைச்சு ஒரு கிளாஸிலே கொடுத்துடு. குடிக்கிறேன்.

    இப்ப எல்லாம் நீங்க ரொம்ப மாறிட்டீங்க.

    மெல்ல திரும்பிப் பார்த்தேன். மாற்றம் தெரியுதா தேவி? என்றேன் குழப்பாக-கலவரமாக.

    தேவி? விழித்தாள்.

    என்ன இது? எப்பவுமில்லாம இப்ப தேவி காதலின்னு நாடக பாணியிலே கூப்பிடறீங்க? ஏன் லக்ஷ்மிங்கிற பெயர் பிடிக்கலியா?

    பிடிச்சிருக்கு. ஆனா - தேவிக்கு பிரியாரிட்டி உண்டு.

    முகம் வாடினாள் லக்ஷ்மி.

    Enjoying the preview?
    Page 1 of 1