Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marupadiyum Maranam
Marupadiyum Maranam
Marupadiyum Maranam
Ebook151 pages59 minutes

Marupadiyum Maranam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466817
Marupadiyum Maranam

Read more from Rajendrakumar

Related to Marupadiyum Maranam

Related ebooks

Related categories

Reviews for Marupadiyum Maranam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marupadiyum Maranam - Rajendrakumar

    1

    படீரென்று வெடித்து வரும் சூரியக் கதிர்களைப் போல அந்தப் பயங்கரம் கோவாவை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    அது தெரியாமல் –

    ஆண்டினோ சர்ச்சின் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார் மிஸஸ் டிசௌசா.

    சற்றே பருத்த சரீரம். கோவானியர்களுக்கேயுரித்தான தொளதொளா கவுன். (இடுப்பில் கட்டிய வாரினால் அவர் உருவம் ஒன்றும் ஒல்லியாகவில்லை.)

    இடுப்பிலிருந்த அபரிமிதமான வளைவு எப்போதோ மறைந்து போயிருந்தது.

    நாற்பதைக் கடந்துவிட்ட உடம்பு. மோவாயில் டபுள்சின் சதை தொங்கி, முகத்தில் லேசான சுருக்கம் படரத் துவங்கிவிட்டிருந்தது.

    அவசரத்திலிருந்தார்.

    மரீயா வருகிறாள்... சென்னையிலிருந்து பம்பாய் பிளைட்டுக்குப் போய் கோவா வருகிறாள்.

    லஞ்சுக்கு இல்லையானாலும் டின்னருக்கு வந்து விடுவாள்.

    அவளுக்காக விசேஷச் சமையல் செய்ய வேண்டும்.

    மார்க்கெட்டுக்குப் போய் புதியதான வஞ்சிரம் மீனும். இறாலும் வாங்க வேண்டும். அவளுக்குப் பிடிக்கும்.

    ‘ஸீஃபூட் சாப்பிடணும்னா, மம்மீ உடனே உன்னைத் தேடி கோவா வந்துடுவேன்!’ என்பாள் அடிக்கடி.

    கடைசிப் படியிறங்கும்போது எதிரே தார்ப்பாய்ச்சு கட்டிய புடைவையும், தலையில் கூடையுமாகப் போன பெண்ணைக் கூப்பிட்டாள்.

    அகோ...

    நின்று திரும்பினாள் அம்மாள்.

    காய்கே? ஸாங்? என்றாள்-கொங்கணியில்.

    (கொங்கணி பாஷை எனக்கு வரும். மாட்டர் ஆஃப் பாக்ட்-இந்தத் தமிழ் எழுத்தாளனின் தாய்மொழியே கொங்கணிதான்.

    இந்தத் தொடர்கதையில் வரும் சிலரைத், தீவிர மற்றவர்கள் கொங்கணியில் தான் பேசுகிறார்கள்.:

    அவர்கள் பேசுவதை அப்படியே எழுத நான் தயார்.

    ஆனால் -

    தலையைப் பிய்த்துக் கொள்ளாமல் படிக்க நீங்கள் தயாரா?

    எதற்கு அந்த வம்பெல்லாம்? பேசாமல். தமிமிலேயே எழுதி விடுகிறேன். இடையிடையே வரும் புரியாத கொங்கணியைக் கொண்டு அவர்கள் பேசுவது அந்த பாஷை என்று உணர்க!)

    அவர் பதிலுக்காகக் காத்திருந்து சலித்துப் போன அந்த மீன்காரி சலிப்புடன். கசலா? என்று கேட்டதும் தான், கேட்டார்:

    மார்க்கெட்டில் என்ன மீன் வந்திருக்கிறது?,

    பாங்கடே அஸா... என்றாள். (அயிலை மீன் மட்டும் இருக்கிறதாம்.)

    ஜாய்கே... என்று அவளை அனுப்பிவிட்டு, பொடி நடையாக மார்க்கெட் நோக்கி அவரே போனார்.

    போகும் வழியில் –

    துணிக்கடையிலிருந்து வெளிப்பட்ட பாகீரதியைப் பார்த்ததும் தமிழில் பேச ஆசைப்பட்டார்.

    என்ன காயத்ரீ...?

    பாகீரதி... என் பொண்ணு பெயர் தான் காயத்ரீ.

    ஓ! ஆமா... ஆமா. வீட்லே - என்ன டிபன் ஹுக்குமா?

    ‘ஹுக்குமா அல்ல-உப்புமா’ என்று சொல்ல ஆசைப்பட்ட பாகீரதியம்மா. ‘அது வீண்வேலை’ என்று தெரிந்ததும் - தலையை மட்டும் ஆட்டிவிட்டு உள்ளே போனாள்.

    மிஸஸ் டிசௌசா விதவை, இனிய பதினேழு வயது மரீயாவுக்கு அம்மா.

    கணவனில்லாததற்காகப் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர். காரணம், அவர் கணவனான, பெஞ்சமின் டிசௌசா மீன் வியாபாரத்தில் - சேர்த்து வைத்த வெள்ளையும்-கறுப்புமான நிறைய பணம்.

    கடற்கரையைப் பார்த்தவாறு இருக்கும் பங்களா. அந்த நாளிலேயே பதினேழாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியது.

    இப்போது நட்சத்திர ஓட்டல் கட்டும் ஆசையுள்ள பம்பாய்க்காரர். இரண்டு லட்சத்தில் ஆரம்பித்து இப்போது பன்னிரண்டு லட்சம் வரை வந்துவிட்டார்.

    சல்ரே பாக்... என்று துரத்திவிட்டார்.

    ‘எதற்குப் பணம்’ என்கிறார். இருப்பதோ ஒரே பெண். அதையும் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

    விடுமுறை அல்லது ஸ்டிரைக் வந்தால் உடனே புறப்பட்டு கோவா வருவாள்... அட்டகாசமாகப் பத்து நாளிருந்து பதினோராவது நாள் குதித்துக் கொண்டே போவாள்.

    இப்போதும் வருகிறாள்.

    அம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இரவு சந்திக்கப்போகும் பயங்கர அதிர்ச்சியை உணராமலே -

    மார்க்கெட்டுக்குப் போய் நிறைய சண்டை போட்டு பிளாஸ்டிக் பக்கெட்டில் பாதிவரை மீன் வாங்கி வந்தாள்.

    டபோலீன் விமான தளம் நோக்கிப் போகும் சாலையில் காற்றைக் கிழித்துப் பறந்து கொண்டிருந்தது

    அந்த மோட்டார் பைக்.

    ஓட்டியவன் ஜோசப் மாக்னீஃபிக். (அவன் சரிதம் சுருக்கமாக...)

    கோவா பிரெஞ்சுக்காரர்களிடமிருந்த போது. இவன் மூதாதையர் பாரிஸிலிருந்து இங்கே வந்து பழைய கோவாவில் தங்கி- இவன் பாட்டனார் காலத்தில் ப்ளேக் நோய்க்குப் பயந்து பஞ்சீமுக்கு மாறியவர்கள்.

    இவன் பிறக்கும்போது பஞ்சீம் பொனாஜியாகி வளர்ச்சி பெற்ற நகரமாகி விட்டிருந்தது.

    இவன் அப்பா கோவா விடுதலைப் போரில் கலந்து. போர்ச்சுக்கீசிய அரசுக்குப் பயந்து பெல்காம் காடுகளில் ஒளிந்திருந்ததாகக் கேள்வி.

    இப்போது தனது அடுத்த தலைமுறையை உருவாக்கத் தயாராகியிருக்கிறான்.

    காதலிக்கிறான்.

    டிஜிடல் வாட்சைப் பார்த்துப் பதறி வண்டியின் ஓட்டத்தை மேலும் துரிதப்படுத்தினான்.

    சுற்றிக் கண்ணுக்கெட்டுமளவுக்குத் தெரிந்த பசுமை அழகை ரசிக்கும் நிலையில் அவன் இல்லை.

    அவனது இனிய இதயத்தை ஏந்திய ஏரோப்பிளேன் இந்நேரம் பஞ்சுப் பொதி போன்ற மேகக் குவியலைக் கிழித்து தரை நோக்கி இறங்க ஆரம்பித்து இருக்கும்...

    அது தரையைத் தொடு முன்-

    இவன் டபோலீன் ஏர்போர்ட்டிலிருக்க வேண்டும்... இருந்தேயாக வேண்டும்! இல்லாவிட்டால் காதலி மரீயா டிசௌசா கத்துவாள். பேசவோ, தொடவோ அனுமதிக்காமல் அடம்பிடிப்பாள்.

    வம்பு!

    நான்கு மணி சுமாருக்கு யாரோ கதவைத் தட்டியது போலிருக்க -

    கதவைத் திறந்த பாகீரதி மாமிக்கு வியப்பு வந்தது.

    அவள் மகள் காயத்ரீ அவசரமாகப் பக்கத்து வீட்டில் நுழைவது தெரிந்ததும் வியந்தாள்.

    அடீ காயத்ரீ! அங்கே எங்கேடீ போறே? மகள் வருகிற சந்தோஷத்துல கண்டதை சமைச்சுக்கிட்டிருப்பா, வாடி!

    பதிலே இல்லாமல் போகவே, இவளே-பச்சை மீன் வாசனைக்கு மூக்கைப் பொத்திக்கொண்டு போனாள்.

    மிஸஸ் டிசௌசா! காயத்ரீ வந்தாளா?

    இல்லையே!

    நான் பார்த்தேனே... இங்கேதானே நுழைஞ்சா... என்றவளுக்கு நினைப்பு சுரீரென்றது. காயத்ரீ எப்படி இங்கு வரமுடியும்?

    ‘நேற்று பிளேனில் தானே பெங்களூர் புறப்பட்டுப் போனாள்! அதெப்படி இன்றைக்கு இவ்வளவு சாதாரணமாகப் பக்கத்து வீட்டுக்குள் போகமுடியும்?’

    நான் கனவிலிருக்கிறேன்.

    மிஸஸ் டிசௌசாவிடம் சொல்லாமலே திரும்பினாள்.

    பெட்ரோலை நிரப்பிவிட வண்டியை ஒப்படைத்துவிட்ட ‘ஜோ’ அண்ணாந்து பார்த்தான். மேகங்கள் கலைந்தும் சேர்ந்தும் மின்னலைப் பிரகாசித்துக்கொண்டிருந்தன. இடிகள் உருண்டு புரண்டு மறைந்து அட்டகாசமாக்கிக் கொண்டிருந்தன.

    நான் அண்ணாந்து பார்க்கும் இதே மேகங்களை அவள் விமான முட்டை ஜன்னல் வழியாகக் குனிந்து பார்க்கிறாள்!’

    நினைத்துக் கொண்டவனுக்குச் சிரிப்பு வந்தது.

    மழை வரும் போலிருக்கிறது. எனக்கு மட்டும் தான் ஹெல்மட்டும், ஜெர்கின்ஸும் இருக்கிறது.

    அவள்?

    நனையப் போகிறாள். சிரித்துக் கொண்டவன் வண்டியைப் பிடுங்கிக்கொண்டு ஏர்போர்ட் வாசலில் நின்றான். உள்ளே போய்க் காத்திருந்தான்.

    இந்தியா டூரிஸம் மேஜை பெண் சோம்பலாக சூயிங்கத்தை மென்றாள்.

    விமானத்திலிருந்து இறங்கி வரும் கும்பலில் அவள் தனியாகத் தெரிந்தாள்.

    நடந்து வரும் பெண்ணா? பறந்து வரும் தேவதையா? என்பதே தெரியாத அளவு கவர்ச்சியாக வந்து கொண்டிருந்தாள்.

    கையசைத்துக் கத்தினான் : மரீயா!

    அவள் பார்த்த பார்வையில் குபீர் உற்சாகம் வந்தது.

    ஓடிவந்து பெட்டியை வைத்து அவன் கழுத்தில் தொங்கினாள்.

    அவனும் இறுக அணைத்து உயர்த்த அவள் கால்கள் அந்தரத்தில் தொங்கின.

    அவள் உதட்டைக் கவ்விக்கொண்டு பின் அவளை நழுவ விட்டுக் கேட்டான்: லக்கேஜ்?

    இந்த சின்னப் பெட்டிதான். எனக்குத் தெரியும் மோட்டார் பைக்தான் கொண்டு வருவாயென்று...

    பெட்டியைப் பக்கத்து உறையில் செருகினாள்.

    இதிலிருக்கும் நெருக்கம் காரில் வராது... உட்கார்!

    உட்கார்ந்து அவனை வயிற்றில் வளைத்துக் கொண்டாள். வண்டி சரே’ லென நகர்ந்தது. அவள் சிரித்தாள். வீட்டில் காத்திருக்கும் பயங்கரம் தெரியாமலே நிறையச் சிரித்தாள்.

    பயிற்றில் இதது. அதரியாட்

    2

    பஞ்சிமைத் தொட்டு சட்டசபை கட்டடத்துக்கு முன்னால் வரும்போது மரீயா சொன்னாள்: நிறுத்தாமல் நேரே போ!

    எங்கே? என்று கேட்ட அவன் -

    மங்கேஷ் கோயிலுக்கு என்றதும். வியப்புடன் திரும்பிப் பார்த்தான்.

    ஐ பெக்யூ பாடர்ன்?

    மங்கேஷ் கோயிலுக்குப் போ என்றேன்...

    "கிருஸ்துவ

    Enjoying the preview?
    Page 1 of 1