Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bairavan Azhaikkiren
Bairavan Azhaikkiren
Bairavan Azhaikkiren
Ebook100 pages36 minutes

Bairavan Azhaikkiren

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466497
Bairavan Azhaikkiren

Read more from Rajendrakumar

Related to Bairavan Azhaikkiren

Related ebooks

Related categories

Reviews for Bairavan Azhaikkiren

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bairavan Azhaikkiren - Rajendrakumar

    12

    1

    மோனாபின்ஸா கிரகம்:

    அவர் ஒரு விஞ்ஞானி - புரொபசர் பைரவன் மிகவும் பிஸியாக இருக்கிறார். வசந்த மண்டபமும் நீராழி மண்டபமும் கட்டி முடித்துவிட்டால் இந்த உல்லாச கிரகம் அநேகமாய் தயாரான மாதிரிதான். ரொம்ம்ம்ம்பவும் சிரமப்பட்டு ராஜராஜசோழ காலத்துச் சுவடிகளைத் தேடி எடுத்து வந்திருக்கிறேன். இதிலுள்ள வர்ணனைகளை கம்ப்யூட்டரில் ஃபீட் பண்ணு. சில மணி நேரத்துக்குள் மண்டபங்களின் பிளான் தயாராகி விட வேண்டும். - பேசிக் கொண்டிருந்தவரின் கண்ணில்பட்டான் அவன்.

    பாதாள அறைப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தான்.

    நிறுத்துங்கள்! - அலறினார்.

    அவனை உடனே நிறுத்துங்கள். அவன் பாதாளக் குகைப் பக்கமாகப் போகக் கூடாது. அந்த வாசலை மிதித்தால்... நான்கு பேர் அந்த ஆளை நோக்கி ஒட... இவரது உதவியாளர் கேட்டார்: மிதித்தால்...?

    புரொபசர் பைரவனின் முகம் இறுகியது. மூச்சுத் திணறினார்: மரணம்... உடனே மரணம் சம்பவிக்கும்.

    அடையாளம் தெரிகிறதா பாருங்கள். இதுதான் சென்னை நகரம். வளர்ச்சி பெற்ற நகரம். நிஜமாகவே கட்டடங்கள் வானைத் தொட முயன்று தோற்று நிற்கின்றன.

    பெரிய கட்டடம் ஒன்றின் ஆயிரத்தெழுநூறாவது மாடியில் இருந்த ஒருவர் இருந்தாற்போலிருந்து அதிர்ந்தார். யாரங்கே? அந்த பால்கனி கதவை உடனே சாத்து. பிளேன் வருகிற நேரம். சத்தம் காதைப் பிளக்கும்.

    அவசரமாக மூடப்பட்ட பால்கனிக் கண்ணாடிக் கதவுக்கு மிகச் சமீபமாகப் பறந்து போயிற்று ஒரு ஜெட் விமானம். அதனுள்ளே அமர்ந்து ஜன்னல் வழியே பார்த்த ஓர் அம்மையார் சட்டெனத் திரும்பி அருகிலிருந்த கணவர் மீது எரிந்து விழுந்தாள். பொறுப்பேயில்லாத என் கணவரே! வரும்போது கம்ப்யூட்டர் அறை விளக்கை அமர்த்தவில்லையா? இதோ எரிகிறதே! என்று சுட்டிக்காட்டினாள்.

    எதுவும் பேசாத அந்தக் கணவர் தலைகுனிந்தார்.

    பிளேன்கள் இறங்கிப் பறக்கவில்லை. கட்டடங்கள்தான் அந்த அளவு உயரமாக வளர்ந்துவிட்டிருக்கின்றன. காரணம், ஜன நெருக்கடி.

    பல்கிப்பெருகிவிட்ட ஜனத்தொகைக்குப் பரப்பளவில் தங்க இடமில்லை. அதனால்தான் தங்குமிடங்கள் உயர உயர வளர்ந்துகொண்டே போகின்றன.

    என்ன அது? - பிளேனிலிருந்து பார்த்த ஒருவர் கேட்டார். பெரிய பெரிய கட்டடங்களுக்கு நடுவில் ஒரு சின்னக் கட்டடம், திருஷ்டிப் பரிகாரமா?

    அதைப் பழிக்காதே! - அடுத்த ஆள் சொன்னார்: பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இந்தச் சென்னையிலேயே மிக உயரமான எல்.ஐ.ஸி. கட்டடம். நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.

    ஒரு கட்டடத்தின் பேஸ்மென்ட் குளுமைச் சாதன அறையில் சிவப்பும் பச்சையும் மஞ்சளுமாகக் கண் சிமிட்டும் கம்ப்யூட்டர்களின் நடுவே சின்னச் சின்ன திரைகள் சூழலின் நடுவில் சுழல்நாற்காலியில் அமர்ந்து சாண்ட்விச் தின்றுகொண்டிருந்த இளம் அதிகாரி கவனித்தான்.

    கம்ப்யூட்டரின் சிவப்பு விளக்கு எரிந்து எரிந்து அணைகிறது. மீதமிருந்த சாண்ட்விச் துண்டை அப்படியே வாயில் திணித்துக்கொண்டு ஒரு பித்தானைத் தட்டிவிடவே, சின்னத் திரையில் ‘1276-வது மாடி 200-வது போர்ஷன்’ என்று வந்தது.

    டி.வி. போன்ற கம்ப்யூட்டரின் விசையைத் திருகத் திருக... திரையில் வந்த பெரியவரின் முகத்தில் கவலையை விடச் சிடுசிடுப்பே அதிகமிருந்தது. இவன் பேசு முன், என் மகள் லீனாவை இருபது நிமிடங்கள், பதினாறு விநாடிகளாகக் காணவில்லை. கண்டுபிடிக்கவும்.

    மூன்று நிமிடங்களில் சொல்கிறேன் ஐயா! - விசையை மூடிய கையோடு நாற்காலியை உந்தித் தள்ளி இன்னொரு கம்ப்யூட்டரின் அருகே போய் பஞ்ச் கார்டு ஒன்றில் ‘லீனாவைக் கண்டுபிடி’ என்ற தகவலைத் துளைத்துச் செருகினான். கம்ப்யூட்டர் உருளைகள் உருண்டன. பின்வாங்கின. பஞ்ச் கார்டை வெளியே தள்ளியது. அதை உருவி எடுத்துப் பார்த்தவாறு நாற்காலியோடு நகர்ந்து வந்து குறிப்பிட்ட நம்பருக்கான விசையைத் தட்டித் திருப்பத் திருப்ப... காட்சி வந்தது சுவாரஸ்யமாக.

    ஓர் இளைஞனும் அந்தப் பெண்ணும் தன்னை மறந்த நிலையில் இருந்தார்கள். ரசித்தான். பட்டென்று காட்சியை மாற்றி, பெரியவருக்கான எண்ணைத் தட்டித் திருகினான்.

    திரையில் தோன்றியதும், கண்டுபிடித்து விட்டீர்களா? என்றார் அவர் அவசரமாக.

    எண்ணூற்றுப்பத்தாம் மாடியில் ஓர் இளைஞனுடனிருக்கிறாள்.

    அவர்களை என் திரைக்குக் கொண்டு வா! என்றார் கோபமாக.

    மன்னிக்கவும். மற்றவர்களின் அந்தரங்கங்களை உங்கள் திறையில் காட்ட அனுமதியில்லை.

    கோபமாக எழுந்த பெரியவர் கேட்டார்: மூன்று நிமிடங்களில் சொல்கிறேன் என்றாய். ஆறு விநாடிகள் அதிகமாகி விட்டது. எனக்குக் காரணம் தேவை. விளக்கம் வேண்டும்.

    நான் பார்த்த காட்சி அப்படி. கொஞ்சம் என்னை மறந்து போனேன். மன்னிக்கவும்.

    அவர் நகர்ந்ததும், பட்டென்று அணைத்து, அவசரமாகத் திருப்பினான். பெண்ணே, புறப்படு. உன் அப்பா வந்து கொண்டிருக்கிறார்.

    அவள் அலறினாள்; இளைஞன் திட்டினான்.

    சிரித்தவாறு சானல் ஸ்விட்சைத் திருகி அமர்த்தினான் அதிகாரி.

    ஒவ்வொரு கட்டடத்தின் கீழ்த்தளத்தில் கம்ப்யூட்டர் அறை, போலீஸ் ஸ்டேஷன், தீயணைப்புப் படை, பள்ளிக்கூடம், கல்லூரி... ஒரு சின்ன கோர்ட்டும் சிறைச்சாலையும்கூட இருந்தன.

    ஒவ்வொரு கட்டடமும் ஒரு தனி டவுனாக இயங்கின. செயல்பட்டன.

    அவசரமாக பிளாட்டுக்குள் வந்து கதவைச் சாத்திக்கொண்ட அந்தப் பெண் வியர்த்து இருந்தாள். மம்மீ! லிஃப்ட்டுக்குப் போகிற வழியில் பார்த்தேன். ஒரு ஆள்... அடையாளம் புரியாத ஆள் நடமாடிக் கொண்டிருக்கிறான், ‘யார் நீ? என்று கேட்டதற்கு என்னைத் துரத்தினான்.

    துரத்தினான்? அம்மா ‘திக்’கென்று விழித்தாள்: உன் காதலனா? சரியாகப் பார்த்தாயா?

    காதலன் துரத்த மாட்டான்; பாய்வான்.

    பதறிப்போய் கம்ப்யூட்டரைத் திருகினாள் அம்மா. வந்த

    Enjoying the preview?
    Page 1 of 1