Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mangalaa Suba Mangalaa
Mangalaa Suba Mangalaa
Mangalaa Suba Mangalaa
Ebook174 pages2 hours

Mangalaa Suba Mangalaa

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Pushpa Thangadurai, an exceptional Tamil novelist, Written over 1000+ Novels and 300+ Short Stories, Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
Mangalaa Suba Mangalaa

Read more from Pushpa Thangadurai

Related to Mangalaa Suba Mangalaa

Related ebooks

Related categories

Reviews for Mangalaa Suba Mangalaa

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mangalaa Suba Mangalaa - Pushpa Thangadurai

    35

    1

    ஆதிச்சநல்லூர் பரம்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நிறையப்பேர் மாட்டீர்கள். விஷயத்தைச் சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தப் பரம்பு இருக்கிறது, திருநெல்வேலியிலிருந்து, திருச்செந்தூர் போகும் சாலையில் 12-வது மைலில் இருக்கிறது. இதன் வடக்குப்புறத்தில் தாம்பிரவருணி நதி ஓடுகிறது. (பாதுகாக்கப்பட்ட இடம் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர் வைத்துள்ள போர்டை இன்றும் இங்கே சாலை ஓரத்தில் பார்க்கலாம்.)

    இந்த ஊர் ஒரு பெரிய ரிக்கார்டை ஏற்படுத்தி உள்ளது. உலகத்திலேயே மிக விஸ்தாரமான மயானம் இந்த ஆதிச்சநல்லூரில் தான் இருக்கிறது.

    மயானத்தின் விஸ்தீரணம் மொத்தம் நூற்றுப் பதினான்கு ஏக்கர்!

    இவ்வளவு விஸ்தீரணமுள்ள மயானம் உலகில் வேறு எங்கேயும் கிடையாது.

    இந்த மயானத்தில் என்ன விசேஷம்?

    சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் (சிலர் 4,000 ஆண்டுகள் என்கிறார்கள்) ஆயிரக்கணக்கான மனிதச் சடலங்களை இந்த மயானத்தில் புதைத்திருக்கிறார்கள்.

    மண் தாழிகளில் சடலங்களை வைத்து அவற்றை ஆறடி தூரங்களிலும் இரண்டடியிலிருந்து பன்னிரண்டடி ஆழம் வரையிலும் புதைத்து வைத்திருக்கிறார்கள். இந்தத் தாழிகளை முதுமக்கள் தாழி என்று அழைக்கிறார்கள்.

    சென்ற நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் சென்னை மாகாண தொல்பொருள் இலாகாவைச் சேர்ந்த ஏ. ரீ என்ற ஆங்கிலேயர் இந்தத் தாழிகள் சிலவற்றைத் தோண்டி எடுத்தார்.

    ஆவலோடு திறந்து பார்த்தார். உள்ளே எலும்புக் கூடுகள் இருந்தன. ஆனால் பொடிந்து போயிருந்தன.

    அவரது ஆராய்ச்சிக்கு மண்டை ஓடு முழுமையாகக் கிடைக்கவேண்டும். இதற்காக அவர் பல தாழிகளை வெட்டி எடுத்தார். கடைசியில் அவர் விரும்பியது கிடைத்து விட்டது. சில தாழிகளில் மண்டையோடுகள் முழுமையாகக் கிடைத்தன.

    இவை தவிர தாழிகளின் உள்ளே அந்நாளைய ஆபரணங்கள் பல கிடைத்தன. பொன்னால் செய்யப்பட்ட ‘‘பட்டம்’’ வெண்கலம், கிளிஞ்சல், எலும்பு இவைகளால் செய்யப்பட்ட வளையங்கள், கங்கணங்கள், பிராணி உருவங்கள் எல்லாம் உள்ளே இருந்தன.

    ஆராய்ச்சிக்காக ரீ எடுத்த பல மண்டை ஓடுகளில் இரண்டு ஓடுகள் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டன. பல நம் நாட்டு பொருட்காட்சி சாலைகளுக்குச் சென்றன. (சென்னைப் பொருட்காட்சி சாலையில் இவற்றை இன்றும் பார்க்கலாம்.)

    இங்கிலாந்திற்குப் போன இரண்டு மண்டை ஓடுகளை டாக்டர் ஜே. பீட்டி என்பவர் மான்செஸ்டரிலிருந்து லண்டனுக்கு கொண்டு போய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு விபத்து ஏற்பட்டது.

    விபத்தில் ஒரு ஓடு உடைந்து விட்டது. மற்றொன்று சுக்கு நூறாகிவிட்டது. சுக்கு நூறாகிவிட்ட ஓடு ஒரு பெண்ணின் தலை ஓடு!

    இதுவரை படித்தவுடன், நான் ஏதோ எக்ஸார்ஸிஸ்ட் கதை எழுதுகிறேன் என்று நினைத்து விடவேண்டாம்.

    கதையில் ஏதாவது ஒரு த்ரில் உண்டாக்க முடியுமா என்று பார்த்தேன். அவ்வளவுதான்!

    மண்டை ஓட்டின் கதையை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன்.

    2

    ‘‘காணோம்" தலைப்பின் கீழ் காலைப் பத்திரிகையில் அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்தவர்கள் திகைத்துப் போயிருப்பார்கள்.

    மங்கலா என்ற பெண் அரை போஸ்ட் கார்டு சைஸில் அவ்வளவு அழகாக இருந்தாள். கண்கள் இரண்டும் எமரால்ட்கள்! புருவம் மெல்லிசாய் நீண்டு கறும்கோடு பரவி, கன்னம் செக்கச் சிவந்து... போட்டோவிலேயே பளிச்சென்று அழகு சொட்டிக் கொண்டிருந்தது.

    மங்கலா என்ற 23 வயது பெண்ணை கடந்த 24-ந் தேதியிலிருந்து காணவில்லை. துப்புக் கொடுக்கிறவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.

    கீழே ஒரு முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.

    படத்தைப் பார்த்தவர்கள் நிச்சயமாக அந்தப் பெண்ணைப்பற்றி சிறிதாவது யோசித்திருப்பார்கள்.

    அவள் மறைந்த காரணம் எதுவாக இருக்கும்? கொலையா? கற்பழிப்பா? கடத்தலா? இவை அனைத்துமா?

    அடுத்த நாள் பத்திரிகையில் காரசாரமாய் ஒரு கடிதம் வந்தது.

    நாட்டில் கடத்தல்கள் அதிகமாகிவிட்டன. தினமும் ‘காணோம்’ என்ற தலைப்பில் பெண்களின் படங்கள் வெளியாகின்றன.

    போலீசார் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சாதாரண மனிதருக்குத் தெரிவது அவர்களுக்குத் தெரியாதா? நாடே சீரழிந்து வருகிறது

    என்று தேவகோட்டை ராமசாமி வெளுத்துக் கட்டி இருந்தார்.

    இன்ஸ்பெக்டர் சிங் (குற்ற ஆய்வு) இரண்டு நாள் செய்திகளையும் பேப்பரில் படித்திருந்தார்.

    ராமசாமியின் காரசாரத்தைப் படித்த போது புன்னகை வந்தது.

    ‘காணோம்’ என்று போடுகிற விளம்பரங்களில் முக்கால் வாசியும் திருட்டுக் காதலனுடன் ஓடுகிற கேஸ் "ஆசை முடிந்துவிட்டால் அம்மா திரும்பி வந்துவிடுவாள். இல்லா விட்டால் ஐயா திருப்பி அனுப்பிவிடுவார். இதைப் புரிந்து கொள்ளாமல் படிச்சவங்க எதை எதையாவது எழுதிடறாங்களே என்று நினைத்தார்.

    பத்து மணிக்கு அலுவலகத்திற்குப் போனார். பத்தாவது நிமிஷம்!

    டெலிபோன் அடித்தது.

    அசிஸ்டெண்ட் கமிஷனர் தான் கூப்பிட்டார்.

    சிங்! எக்ஸ்பிரஸ்லே வெளியாகியிருக்கிற லெட்டரைப் படிச்சீங்களா?

    படிச்சேன்.

    கமிஷனர் விசாரணை செய்யச் சொல்றார்.

    பெற்றோர்கள் கம்ப்ளெய்ன்ட் கொடுத்திருக்காங்களா?

    கொடுக்கலைன்னு தெரிஞ்சுது.

    "ஸார்! நான் சொல்றேன்னு நினைக்காதீங்க! அப்பா அம்மாக்களே கம்ப்ளெய்ண்ட் கொடுக்கலைனா நாம இந்தக் கேஸை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

    சிங்! நானே கமிஷனர்கிட்டே விவாதம் பண்ணிட்டேன். பேப்பர்லே போட்டிருக்கிற நியூஸ் பேரிலே விசாரிக்கச் சொல்றார். நீங்க போய் பர்ஸனலா அவங்க குடும்பத்திலே விசாரிச்சுடணும்.

    எஸ் சார், என்றார் சிங். போனைக் கீழே வைத்தார்.

    3

    நகரத்தின் விளிம்புகளில் நாகரீகமாக எழுந்து கொண்டிருந்த காலனிகளில் ஒன்று அது!

    போகும்போதே பெல்பாட்டம் பெண்கள் சைக்கிள் விட்டுப்போய்க் கொண்டிருந்தார்கள்.

    சைக்கிள் ஸீட்டில் அவர்களது பின்புறம் அழுந்தியிருந்த அழுத்தமும் அதன் பெருமிதமான தோற்றமும் பளிச்சென்று சிங்கின் கண்களை வெட்டின,

    பெடல் செய்யும்போது மிருதுவான பாண்ட் அவர்களது கொழுத்த தொடைப் பகுதிகளை மேலும் கீழுமாக மாறி மாறிக் காண்பித்தன.

    நாம் நினைத்தது சரிதான். இந்தப் பகுதியின் நாகரீகமே அலாதி! இங்கே ஒரு சாதாரணப் பெண்ணுக்குக்கூட என்னவெல்லாமோ நடைபெற வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தார்.

    ‘டி’ ப்ளாக்கின் இரண்டாவது மாடி ஃப்ளாட்டில் மங்கலாவின் குடும்பம் இருந்தது.

    அது ஒரு எம். ஐ. ஜி. ஃப்ளாட்.

    வாசல் முன்னால் நின்றுகொண்டு பஸ்ஸரை அழுத்தினார். கதவு திறந்தது.

    மங்கலாவின் தந்தை ராம்நாத் அவரை வரவேற்றார். இன்ஸ்பெக்டர் சிங் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    ராம்நாத்திற்குத் தொண்டை அடைத்துக் கொண்டிருந்தது. மெதுவாகப் பேசத் தொடங்கினார்.

    நான் ரயில்வே காட்டரிங்லே, வேலை பார்த்தேன். இன்ஸ்பெக்டராக ரிடையர் ஆனேன். மங்கலா என்னுடைய ஒரே பெண். அவளைப் பிள்ளையா வளர்த்துட்டு வந்தேன். நிறைய சுதந்திரம் கொடுத்தேன். நான் சொன்ன கோட்டை தாண்ட மாட்டாள்.

    சிங் விசாரணையை ஆரம்பித்தார்.

    உங்க பெண் எப்போ காணாமல் போனா?

    24-ந் தேதி காலையிலே வெளியே போனா! அப்புறம் திரும்பவே இல்லை.

    பதினைந்து நாளாயிடுத்து.

    ஆமாம்.

    மிஸ்டர் ராம்நாத்! நீங்க இந்த விஷயத்தை உடனே ஏன் போலீஸ்லே கம்ப்ளெய்ண்ட் பண்ணலை?

    அப்பவும் பண்ணல்லே! இப்பவும் பண்ண விரும்பல்லே!

    என்ன காரணம்?

    நீங்கள் வீடு தேடிவந்து கேட்டதனால் சொல்றேன். என் பெண் எங்களுக்கு ஒரு லெட்டர் எழுதி வச்சிருந்தா.

    எங்கே அது?

    ராம்நாத் கொண்டுவந்து காண்பித்தார்.

    அப்பாவுக்கு,

    வணக்கம், இதுவரை வாழ்க்கையில் தங்களுக்குத் தெரியாமல் எதுவும் செய்யவில்லை. இப்போது செய்ய நினைத்தேன் என்பதை நினைத்தாலே மனம் ரொம்பக் கசக்கிறது. இந்தக் கடிதத்தை எழுதவே துணிவு இல்லை. இருந்தாலும் உங்களுக்குக் கவலை ஏற்படக் கூடாது என்பதற்காக எழுதுகிறேன். திரும்பி வரும் போது எல்லாவற்றையும் விவரமாகக் கூறுகிறேன். சுருக்கமாக இப்போது தெரிவித்துக் கொள்கிறேன். நான் வரும்போது திருமணம் ஆனவளாக வந்து சேர்வேன். மூன்று நாட்களில் வந்து விடுவேன். அம்மாவை வருத்தப்படச் சொல்லாதீர்கள்!

    உங்கள் பிரியமுள்ள,

    மங்கலா.

    சிங் உதட்டைப் பிதுக்கினார்.

    உங்க பெண் நீங்க இட்ட கோட்டைத் தாண்டமாட்டான்னு இப்போத்தான் சொன்னீங்க! ஆனா அவ தாண்டியிருக்கிறா! தேர் இஸ் நோ கேஸ்! என்றார்.

    கேஸ் இருக்குன்னு நான் சொல்லல்லியே! காரமாகச் சொன்னார் ராம்நாத்.

    சிங் திரும்பினார். "நீங்க பாட்டுக்கு விளம்பரம் கொடுத்துடறீங்க. அதைப் பார்த்து நாலு பேர் லெட்டர் எழுதறாங்க...!

    சிங் விறுவிறு என்று நடந்தார். கதவு வரை போய்விட்டார்.

    இன்ஸ்பெக்டர் ஸார்! ராம்நாத் அழைத்தார்.

    ஒரே ஒரு ஸெகண்ட்.

    சிங் திரும்பிப் பார்த்தார்.

    நான் சொல்றதை தயவு செய்து கேளுங்க. விளம்பரம் கொடுத்ததற்குக் காரணம் இருக்கு. பெண் மூணு நாளிலே திரும்பி வரேன்னு சொன்னா. இதோடே அஞ்சு மூணு நாள் ஓடிடுத்து. திரும்பி வரவில்லை. அவளை நினைவுபடுத்தறதுக்காகத் தான் முக்கியமா இந்த விளம்பரம் கொடுத்தேன். அதோட எனக்கு இன்னொரு பயமும் இருந்தது. ஒரு வேளை இவளை யாராவது எங்கேயாவது கடத்திப் போய் வச்சிருந்தால்... அப்படி யாராவது துப்பு கொடுக்க மாட்டாங்களான்னு ஒரு ஆசை! அவ்வளவுதான் என்றார் ராம்நாத்.

    "இந்த மாதிரி

    Enjoying the preview?
    Page 1 of 1