Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தொடுவானம்
தொடுவானம்
தொடுவானம்
Ebook99 pages34 minutes

தொடுவானம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டவுன் பஸ்ஸை விட்டு உதிர்ந்த போதுதான் நினைத்தாள் சாதனா. ஆபீஸை விட்டு நேராக வீடு திரும்பியிருக்க வேண்டும். புதிதாகக் கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் போயிருக்கும் ஆபீஸ் கொலீக் ரேணுகாவைப் பார்ப்பதற்காக கணேஷ்நகர் வரை போயிருக்கக்கூடாது. இந்த ப்ரொக்ராமை ஞாயிற்றுக்கிழமை போல ஏதாவது லீவு நாளில் வைத்திருக்கலாம்.
 நேரம் சூரியனுக்கு எதிராக முழுதாக கறுப்புக் கொடி காட்டியிருந்தது. பிரகாசமில்லாத கார்ப்பரேஷன் விளக்குகளுக்கு கீழே நடைபாதையோரமாக வேகவேகமாய் நடந்தாள் சாதனா. அந்தத் திருப்பத்தில் இருக்கிற டீ ஸ்டாலை நினைத்தபோது லேசாக பதட்டப்பட்டாள்.
 அந்த டீ ஸ்டாலில் வெளிப்பக்க பெஞ்ச்சை இருபத்திநாலு மணி நேரமும் குத்தகைக்கு எடுத்திருக்கிற நாலைந்து முரட்டு ஆசாமிகள்! இவள் டீ ஸ்டாலைக் கடந்துபோகிற பெரும்பாலான சமயங்களில் கொச்சையாக - அருவறுப்பாக ஏதாவது பேசுவார்கள்.
 ஜன நடமாட்டம் இருக்கிற பகல் நேரத்திலேயே அப்படிப் பேசுவார்கள். இப்பொழுது ராத்திரி நேரம். அதுவும் தனியாக...
 'படபட'க்கிற இதயத்தோடு நடந்து கொண்டிருந்தாள் சாதனா. மனசு யோசித்துக் கொண்டே வந்தது.
 தூரம் அதிகமானாலும் பரவாயில்லை. இனிமேல் ரோட்டைத் தவிர்த்து - அடுத்த வீதியை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். பல தடவை இதே மாதிரி நினைப்பாள். ஆனால் ஸ்டாப்பிங்கில் இறங்கினதும் - அவர்கள் என்ன செய்து விடுவார்கள் - என்கிற குருட்டு தைரியம் வந்துவிடும்.
 சொற்ப தூரத்தில் டீ ஸ்டாலில் தூசி படிந்த முன்புற விளக்கு வெளிச்சம் மங்கலாய்த் தெரிந்தது.
 அந்த டீ ஸ்டால் திருப்பத்தைக் கடந்து மூன்று நிமிடம் நடந்தால் வீடு வந்துவிடும். நடந்தாள்டீ ஸ்டாலை நெருங்கும்போதே - எக்களிப்புச் சிரிப்போடும், - கட்டைக் குரல் சம்பாஷணைகளோடும் அவர்கள் கண்ணில் பரிச்சயமானாள்.
 கண்டுகொள்ளாமல் நடந்தாள். 'மெல்ல நட! மெல்ல நட! மேனி என்னாகும்?' ஸ்வரம் தப்பிய பாட்டு, காதை வந்து தேய்க்கும் என்று நினைத்தவளுக்குத் திகைப்பாய் இருந்தது.
 கரண்ட் கட் ஆன மாதிரி அவர்களின் பேச்சு சப்தங்கள் ஊமையாகிப் போனது. ஒரு சின்ன கமென்ட் கூட எழவில்லை.
 ஆச்சர்யப்பட்டபடியே டீ ஸ்டால் திருப்பத்தை 'விடுவிடு'வென்று கடந்தாள். நிம்மதிப் பெருமூச்சோடு மார்பில் கை வைத்து நடந்தாள்.
 பத்து மணிக்கே தூங்கிப் போய் விட்டிருந்த அந்தத் தெருவில் அரை நிமிஷம் நடந்திருப்பாள்.
 பின்னால் அந்தக் காலடியோசை கேட்டது.
 திரும்பிப் பார்த்தவளை பயம் 'சரக்'கென்று கவ்வியது.
 முழங்காலுக்கு மேல் லுங்கியை உயர்த்திக் கட்டியிருந்த டீக்கடை தடியன்களில் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தார்கள்.
 சாதனா நடையின் வேகத்தை அதிகரித்தாள். அவர்களும் அதிகரித்தார்கள். அந்த நிமிஷம் முடிவதற்குள் - அந்த இரண்டு பேர்களின் நிழல் சாதனா மேல் விழுந்தது. இதயம் 'திக் திக்' என்று திக்கியது.
 'வீடு இன்னும் கொஞ்சம் தூரம்தான்.'
 நினைக்க நினைக்கவே அந்த இரண்டு பேரும் சாதனாவை ஓவர் டேக் செய்து - குறுக்கே நின்றார்கள்.
 கோணல் மாணலாக பல் வரிசை நிக்கோடின் கறையோடு தெரிய - இளித்தார்கள்.
 "எ... என்ன வேணும் உங்களுக்கு?" - சாதனா பின்வாங்கினாள்.
 ஒருவன் இன்னும் அதிகமாக இளித்தான்.
 "ஏதாவது வேணும்னா சொன்னா அதைத் தர்றதுக்கு தயாரா இருக்கியா?"அவன் கேட்டபோது சாராய நெடி 'குப்'பென்று அவள் நாசியைக் குளிப்பாட்டியது. முகத்தைச் சுளித்தபடியே விலக எத்தனித்தாள்.
 தடுப்பு வேலி போட்ட மாதிரி அவன் கை அவள் விலக நினைத்த பக்கம் நீண்டு நின்றது.
 "கொ... கொஞ்சம் வழியை விடறியா?"
 "நாங்க எந்தப் பக்கம் உனக்கு வழி விட்டிருக்கோமோ அந்தப் பக்கமா நடந்து.
 வா. "
 "ஏண்டா தூரப் பார்வையைவிட கிட்ட பார்வைக்கு அம்மினி நல்லா இருக்கா... இல்லையா?"
 "குழந்தையைப் பயப்படுத்தாம கூட்டிட்டுப் போகணும்னு நான் நினைக்கிறேன். கண்டதெல்லாம் சொல்லி நீ பயப்படுத்திடுவே போலிருக்கே!"
 "இனிமே நான் ஒண்ணும் சொல்லலை" ஒருவன் போலியாய் பயம் காட்டினான்.
 "பாப்பா... போலாமா?"
 "மரியாதையா வழி விடறீங்களா இல்லையா?" - சாதனா கத்தினாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224838172
தொடுவானம்

Read more from Rajeshkumar

Related to தொடுவானம்

Related ebooks

Related categories

Reviews for தொடுவானம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தொடுவானம் - Rajeshkumar

    1

    எப்போதும் போலக் காலை நாலரை மணிக்கு படுக்கையைப் புறக்கணித்தார். திரிலோக் செளத்ரி. நேர இருக்கிற விபரீதங்கள் தெரியாமல் முகத்தை உள்ளங்கையால் அழுத்தமாக வழித்து விட்டுக் கொண்டு பாத்ரூமை நோக்கி மெல்ல நடந்து போனார்.

    ஏறக்குறைய ஆறடி உயரம் இருந்த திரிலோக் செளத்ரி ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் பிறந்தவர். கோல்ட் மெடலிஸ்ட் பட்டம் கைக்கு வந்ததும் ஸ்பேஸ் ரிஸர்ச் சென்ட்டரில் அப்பாயின்மெண்ட் ஆர்டர் வாங்கினார். சாதாரண டெக்னிக்கல் அஸிஸ்டென்ட்டாக நுழைந்தவர் தங்கமான தன் மூளையைப் படிப்படியாக ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்டுக்குக் காட்ட ஆரம்பித்தார். மேலதிகாரிகள் வியந்து வியந்து மாய்ந்து போய் அவர்க்கு ஒவ்வொரு பதவியாய் உயர்த்திக்கொண்டே வந்தார்கள். இன்றைய ‘நரைமுடி’ திரிலோக் சௌத்ரி சீஃப் சயன்டிஸ்ட். அழகான பங்களா ஒன்றில் ஒண்டிக்கட்டை வாசம்.

    இருட்டிலேயே மெல்ல நடந்து போய் பாத்ரூம் கதவைத் திறந்து - சுவரில் இருந்த ஸ்விட்சைத் தட்டியதும்தான் உணர்ந்தார். ‘கரண்ட் கட்.’

    ‘மினி ஜெனரேட்டர் என்ன ஆயிற்று? கரண்ட் ஃபெயிலியர் ஆனது கூடத் தெரியாமல் கூர்க்கா வாசலில் தூங்குகிறானா?’ லேசாய்க் கோபப்பட்டு -

    படுக்கையறைக்குத் திரும்பி வந்து டார்ச் லைட்டை உயிர்ப்பித்தார். பாத்ரூம் பளிங்குகளிடையே வெளிச்சத்தை நகர்த்தி - டூத் பேஸ்ட்டையும் ப்ரஷ்ஷையும் தேடிப் பிடித்தார். பதினைந்து நிமிடங்கள் கரைந்திருந்தபோது வெள்ளை நிற பனியனிலும் - சார்ட்ஸிலும் தயாரானார்.

    தினசரி காலை எதிர் பங்களா ஜட்ஜ் மோகன சுந்தரத்துடன் ஒரு நீளமான ஜாகிங் உண்டு.

    டார்ச் லைட்டுடன் டிராயிங் ஹாலைக் கடந்தபோது ஜில்லிப்பை முதுகில் சுமந்து வந்த அந்த அதிகாலைக் காற்று திரிலோக் செளத்ரியின் உடம்பை சிலிர்ப்பாய் தடவி விட்டது. வெளியே வந்தார்.

    அந்தப் பகுதி முழுவதுமாக இருட்டில் சிக்கியிருந்தது.

    யோசித்தபடி நடந்தவருக்கு காலடியோசை கேட்க - சட்டென்று நிமிர்ந்தார். பத்தடி தொலைவில் இன்னொரு டார்ச் - அசைந்து அசைந்து அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    டார்ச்சுக்கும் பின்னே கறுப்பாய் அவுட் லைன் மட்டும் தெரிய ஒரு குள்ள உருவம் -

    திரிலோக் சௌத்ரி தன் கையிலிருந்த டார்ச்சின் வெளிச்சக் கோணத்தை மாற்றி பார்வையை உன்னிப்பாக்கினார். நெருங்கியபோது -

    அந்த மங்கோலிய முகம் தெரிந்தது.

    குட்மார்னிங் சாப்!

    கூர்க்கா.

    என்ன கரண்ட் இல்லையா?

    திடீர்ன்னு ஆஃப் ஆய்டுச்சு சாப்.

    இப்பதான் ஃபெயிலியர் ஆச்சா?

    இல்லை, ரொம்ப நேரமாச்சு, சாப்..., ஒரு மூணு மணி போல இருக்கும்.

    மினி ஜெனரேட்டரைப் போட வேண்டியதுதானே?

    "போட்டுப் பார்த்தேன். அது வேலை செய்யலை சாப்! ஏதோ ரிப்பேர்.’’

    வயர் கனெக்ஷன்களைப் பார்த்தியா? ஏதாவது டிஸ்கனெக்ட் ஆயிருக்கப்போகுது.

    "டார்ச் அடிச்சு செக் பண்ணிப் பார்த்தேன். அப்படி எதுவும் தெரியலே சாப்!’’

    ஆறுமணியானதும் ரிஸர்ச் சென்டருக்கு போன் பண்ணி எலக்ட்ரிகல் டிபார்ட்மென்ட்ல சொல்லிடு. எலக்ட்ரீஷியன் யாரையாவது அனுப்புவாங்க.

    கூர்க்கா தலையசைத்துக் கொண்டே காம்ப்பவுண்ட் கதவைத் திறந்து விட்டான்.

    செளத்ரி மிச்சமிருந்த அசதியைக் கையைக் காலை உதறி விரட்டிக்கொண்டே - பிரிஸ்க்காக எதிர் பங்களாவைத் தொட்டபோது -

    டீ சர்ட்டில் தொப்பை பிதுங்கத் தெரிந்த மோகனசுந்தரம் எதிரே குட்மார்னிங் சொல்லியபடியே வந்து சேர்ந்தார்.

    என்ன செளத்ரி ஸார்! இருபத்தியொண்ணாம் நூற்றாண்டைத் தொட்டாச்சு. இந்தக் கரண்ட் கட்டைத் தவிர்க்க எதையும் கண்டுபிடிக்க மாட்டீங்களா?

    உங்க பேரனோட ஜெனரேஷன் தலை தூக்கற வரைக்கும் இந்த அசௌகரியங்களெல்லாம் இருக்கும்.

    அதுக்கப்புறம்?

    அவங்கவங்க வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை அவங்கவங்களே தயாரிச்சிக்கிற நிலைமை வரும்.

    இப்ப மட்டும் என்ன ஜெனரேட்டர்ஸ் இல்லையா?

    ஜெனரேட்டர் எல்லோரும் வச்சுக்க முடியாதே! அதுக்கொரு ப்ரைம் மூவர் வேணும். ப்ரைம் மூவர் இயக்கப்படறதுக்கு தனி சோர்ஸ் வேணும்.

    நீங்க சொல்ற சிஸ்டத்துல இந்த டிஃபிகல்டீஸ் எதுவும் இருக்காதா?

    எஸ். சூரியனை அக்கு வேறா ஆணி வேறா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கோம். ஸோலார் பவரை முழுமையா பயன்படுத்தற நாள் வர்றபோது - கரண்ட்டெல்லாம் தண்ணிப்பட்ட பாடாயிடும். வருங்கால சயன்டிஸ்ட்கள் நிச்சயமா இதை ஒரு ஃபைனல் ஸ்டேஜுக்குக் கொண்டு வந்துடுவாங்க.

    "இப்பவே ஸோலார் பவர்ல இயங்கற கால்குலேட்டர்ஸ், ஸ்டவ்ஸ் நிறைய இருக்கே...’’

    இது ஆரம்பம்...

    பேசிக் கொண்டே காலை நேரத் தெருக்களில் மெதுவாக ஓடினார்கள். இருட்டான பங்களாக்களுக்கிடையே இரண்டு மூன்று வீதிகளைக் கடந்தபோது - தூரத்தில் தெரிந்த ஜனக்கும்பலைக் கண்ணில் வாங்கினார்கள்.

    அங்கே என்ன கூட்டம்?

    அதுவும் இந்தக் காலை நேரத்துல.

    மின்சாரம் அந்த ஏரியா முழுவதும் காணாமல் போயிருந்ததால் டார்ச்லைட்கள் சகிதமாக ஜனக்கூட்டம் அந்த இடத்தை மொய்த்திருந்தது.

    அந்த இடத்துல ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் இருந்த மாதிரி ஞாபகம்.

    ஒரு நிமிஷ ஓட்டத்தில் அந்த இடத்தை அடைந்தார்கள். கூட்டத்தின் விளிம்பில் இருந்த ஒரு ஆசாமியின் தோளைத் தட்டிக் கேட்டார் திரிலோக் செளத்ரி.

    "என்னப்பா, என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு கூட்டம்...’’

    "ட்ரான்ஸ்ஃபார்மர் வெடிச்சிருக்குப் போலிருக்கு. சரியான

    Enjoying the preview?
    Page 1 of 1