Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aduthathu Enna?
Aduthathu Enna?
Aduthathu Enna?
Ebook77 pages27 minutes

Aduthathu Enna?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விளம்பரம் முக்கியமானதாக தற்போது கருதப்படுகிறது. நடிகை சாருமதி திறந்து வைத்த பீரோவில் இருந்த, அந்தப் பிணம் யார்? நகைகள் மீது மோகம் கொண்ட அமுல் தேசாய் என்ன செய்தான்? நடந்த கொலையை இன்ஸ்பெக்டர் குமரேசனனுடன் அடுத்தது என்ன என்று நாம் தேடுவோம்...

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580127507067
Aduthathu Enna?

Read more from Lakshmi Subramaniam

Related to Aduthathu Enna?

Related ebooks

Reviews for Aduthathu Enna?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aduthathu Enna? - Lakshmi Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அடுத்தது என்ன?

    Aduthathu Enna?

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இரவு பத்து மணி

    2. சாருமதியின் கோபம்!

    3. இது என்ன புதிர்?

    4. அந்த வாலிபன்...?

    5. தாஸின் வீட்டில்...

    6. பிளாஸ்டிக் உறை

    7. வாலிபனின் உடல்

    8. சங்கரின் புகைப்படம்

    9. சாருமதியின் வீட்டில்

    10. மீண்டும் ஒரு கொலை

    11. கொலையாளி யார்?

    12. சாருமதியின் மூர்ச்சை

    13. தாஸின் பங்கு?

    14. குற்றவாளி பிடிபட்டான்

    15. தேசாயின் வீட்டில்!

    1. இரவு பத்து மணி

    பிரபல இரும்பு பீரோ விற்பனையாளர்களான தேசாய் நிறுவனம் கடற்கரை ஓட்டலில் விருந்து நடத்துகிறது. நகரத்தின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் எல்லோரும் அங்கங்கே தென்படுகிறார்கள். கையில் தட்டும், ஸ்பூனில் எடுத்த உணவுமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த ‘லேட்டஸ்ட் மாட’லைப் பார்த்தீங்களா நீங்க? இந்தப் பீரோவுக்கு இரண்டு ஜோடிக் கதவுகள். இரண்டு வெவ்வேறு சாவிகள். இன்னொரு வேடிக்கை, காற்றுக்கூட வெளியே வர முடியாது.

    ஈஸ் இட்? அவசியமானா தண்ணீர்கூடக் கொட்டி வச்சுக்கலாம்னு சொல்லுங்க.

    ஹஹ்ஹா! தண்ணீர் என்னய்யா? ஐஸ் துண்டே வச்சுக்கலாம். ஐஸ் தண்ணீரா மாறுமே தவிர வெளியே வராது!

    பரிகாசமும் சிரிப்புமாகப் பேச்சுக்கள் வாய்க்கு வாய் பந்தாடிய வண்ணம் இருந்தன. சட்டென்று ஒருவர் கண்ணால் ஜாடை காட்டினார்.

    யார் தெரியுமா, அங்கே போகிறது?

    தெரியாமல் என்ன? நடிகை சாருமதிதானே? ஆமா... அவர்கள் இங்கே?...

    நாளைக்கு எக்ஸிபிஷன்லே இந்த மாடல் பீரோவை அவங்கதான் முதன்முதல்லே திறந்து வைக்கப் போறாங்க. இன்னிக்கு பேப்பர்லே விளம்பரம் பார்க்கலே?

    நல்ல பப்ளிசிடி ஸ்டண்ட் போங்க.

    என்ன ஸ்டண்ட்? புளிச்சுப்போன விஷயம்... இப்படித் திறந்து வைக்கிறதும், பக்கத்திலே நின்னு போட்டோ எடுத்துகிறதும்தான் இப்ப வழக்கமாப் போயிட்டுதே?

    பின்னே என்ன பண்ணனும்கிறீங்க? இதுக்காக உயிரையா விட முடியும்?

    விட்டாலும் பரவாயில்லைன்னேன். அது மெய்யாவே ஒரு ஸ்டண்ட். ஊரே அசந்து போயிடும். செய்தி, நெருப்பு மாதிரி புடிச்சுக்கும்.

    போங்க ஸார்! உங்க கிண்டலுக்கு ஒரு அளவே கிடையாதுங்கறேன்.

    பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. ஜுக் பாக்ஸில் பலருக்கும் பிடித்தமான இசைத் தட்டுக்கள் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தன. சட்டென்று இசைத் தட்டு நின்றது. ஒலி பெருக்கியில் அறிவிப்பு கேட்டது.

    ஒரு வேண்டுகோள்... தேசாய் கம்பெனி மானேஜர் மிஸ்டர் தாஸ் டெலிபோன் அறைக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

    ஒரு கணம் எல்லோருடைய பார்வையும் சுற்று முற்றும் திரும்பியது. யாரும் அசையவில்லை. மிஸ்டர் தாஸ் அங்கே இல்லையோ? ஒரு நிமிஷம் ஊர்ந்தது... நாகரிக உடை அணிந்த ஒருவர் டெலிபோன் அறையை நோக்கி மெதுவாகப் போவது தெரிந்தது.

    இசைத் தட்டு தொடங்கிவிட்டது. மறுபடி பேச்சும், உணவு அருந்துதலும், சிரிப்புமாக ஆரம்பித்தன.

    நீரும் ஒரு ‘போன்’ காலுக்கு வீட்டில் சொல்லி விட்டு வந்திருக்கிறது தானே? மனைவி பேசி இருப்பாள். இப்போ எல்லோருடைய முன்னாலேயும் நீரும் அந்த மாதிரி போயிருக்கலாமே?

    செய்திருக்கலாம். ஆனால், போனில் கூப்பிடமாட்டாள்.

    ஏன்.

    அவளே என்னோடு இங்கே வந்திருக்கிறாளே!

    ஹோஹோ என்று சிலர் சிரித்தார்கள். அப்போது ‘போனில்’ பேசிவிட்டு அந்த மனிதர், அவர்களைக் கடந்து அவசரமாக வெளியே போய்க்கொண்டிருந்தார்.

    ***

    கண்காட்சி மைதானம். தேசாய் நிறுவனம் அமைத்திருந்த ஸ்டாலைச் சுற்றிப்

    Enjoying the preview?
    Page 1 of 1