Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hindu Matha Thathuvangalum Vilakkangalum
Hindu Matha Thathuvangalum Vilakkangalum
Hindu Matha Thathuvangalum Vilakkangalum
Ebook148 pages50 minutes

Hindu Matha Thathuvangalum Vilakkangalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆலய வழிபாடு கோயில் விழாக்கள் பூஜைகள் - விரதங்கள் திருமண வைபவமும் தத்துவப் பின்னணியும் பண்டிகைகள் - நோன்புகள் இருநூறு புண்ணியத் தலங்களுக்கு செல்வதற்குரிய பயண வழிகாட்டி ஆகியவற்றுடன் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக விளக்கிக்கூறும் நூல். அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை பற்றி இளைய சமூதாயம் முதல் பெரியோர் வரை தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் மற்றும் இந்த நூலின் சிறப்பான அம்சம், பாரதம் முழுவதும் பரவியுள்ள பண்புகளையும், கலாச்சாரங்களையும் இந்துமதம் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று விளக்குவதே ஆகும்.

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580127507063
Hindu Matha Thathuvangalum Vilakkangalum

Read more from Lakshmi Subramaniam

Related to Hindu Matha Thathuvangalum Vilakkangalum

Related ebooks

Reviews for Hindu Matha Thathuvangalum Vilakkangalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hindu Matha Thathuvangalum Vilakkangalum - Lakshmi Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இந்து மத தத்துவங்களும் விளக்கங்களும்

    Hindu Matha Thathuvangalum Vilakkangalum

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. பண்டிகைகளும் விரதங்களும் காட்டும் தத்துவம் என்ன?

    2. ஆலய வழிபாடும் சமூகத்தின் மேம்பாடும்

    3. குடும்ப நன்மைக்காகப் பூஜையும் விரதங்களும்

    4. திருமணச் சடங்குகளும் சம்பிரதாயங்களும்

    5. திருமணச் சடங்குகளும் சம்பிரதாயங்களின் தத்துவமும்

    6. பாரத மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் பண்டிகைகள்

    7. பாரதம் முழுவதும் பண்டிகைகள்

    8. விரதங்களும் நோன்புகளும்

    9. புண்ணிய பாரதத்தின் புனிதப் பயணத்துக்குரிய தலங்கள்

    இந்நூலில்...

    ஆலய வழிபாடு

    கோயில் விழாக்கள்

    பூஜைகள் - விரதங்கள்

    திருமண வைபவமும் தத்துவப் பின்னணியும்

    பண்டிகைகள் - நோன்புகள்

    இருநூறு புண்ணியத் தலங்களுக்கு

    செல்வதற்குரிய பயண வழிகாட்டி

    ஆகியவற்றுடன் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக விளக்கிக்கூறும் நூல். அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை பற்றி இளைய சமூதாயம் முதல் பெரியோர் வரை தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களுடன்...

    முன்னுரை

    தமிழ் மக்களுக்கு முதன் முறையாக, எளிய நடையில் இந்துமதம் போற்றும் தத்துவங்களை அறிமுகம் செய்த பெருமை ‘ஞானபூமி' மாத இதழுக்கு உரியது. அந்த இதழில் கௌரவ இணை ஆசிரியராகப் பணி புரிந்தபோது, சுமார் இருநூறு ஆசாரியர்களைப் பாரதம் முழுவதும் தரிசித்து, அவர்களது அறிவுரைகளையும் ஆசிகளையும் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவர்கள் அளித்த ஞான விளக்கங்களையும் வழிகாட்டிய நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு, நான் இந்து மதத்தின் பெருமையை விளக்கும் விதமாகத் தமிழில் பல நூல்களையும் தொகுத்திருக்கிறேன்.

    ஆயினும் இன்றைய இளைய தலைமுறையினர் பெரும்பாலும் ஆங்கிலக்கல்வி முறையையே பின்பற்றிப் படிக்கிறார்கள். வேலை அல்லது மேற்படிப்புப் படிக்கும் இளைய தலைமுறையினருக்கு நமது மதத்தின் அடிப்படையையும் அம்சங்களையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலும், படித்துத் தெளிவு பெற வழிகாட்டும் நூல்கள் கிடைப்பதில்லை. ஆகையால் இத்தகைய ஒரு நூல் தொகுக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்பட்டது. நான் வெளிநாடுகளில் பயணம் செய்தபோதும், இளைய தலைமுறையினர் பலரும், வெளிநாட்டினரும் கூட, இந்தப் பணியை மேற்கொள்ளத் தூண்டினார்கள். அதன் அடிப்படையிலேயே இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

    சநாதனதர்மம் என்று போற்றப்படும் இந்து மதம் இன்று உலகெங்கும் பரவியுள்ளது. அதை ஒரு விஞ்ஞானபூர்வமான, தத்துவ அடிப்படை கொண்ட, தர்க்க ரீதியான (Scientific, Rational And Logical) அமைப்பாக, புரிந்துகொள்ள அவர்கள் பலரும் விரும்புகிறார்கள். அவ்வாறு விளக்குவதே இந்த நூலின் நோக்கமாகும்.

    இந்த நூலின் சிறப்பான அம்சம், பாரதம் முழுவதும் பரவியுள்ள பண்புகளையும், கலாச்சாரங்களையும் இந்துமதம் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று விளக்குவதே ஆகும்.

    அதனால் பல்வேறு மாநிலத்தவர், ஜாதிப்பிரிவினர் பின்பற்றும் திருமணச்சம்பிரதாயங்கள், கொண்டாடும் பண்டிகைகள், மேற்கொள்ளும் விரதங்கள், நோன்புகள், ஆலயவிழாக்கள் ஆகிய பலவும், இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவும் பாரதநாட்டு மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கும் அடிப்படையில் அமைந்தவை என்பதைப் புரிந்து கொண்டால், இந்திய மக்களிடையே அது ஆற்றிவரும் அரிய தொண்டினை உணர்ந்து கொள்ளலாம்.

    மேலும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர், வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியக் குடும்பத்தினர் ஆகியோர், பாரதநாட்டிற்கு வரும்போது புகழ்பெற்ற, போற்றுதற்குரிய, புனிதத்தலங்களுக்குச் சென்று நீராடவும், ஆலயதரிசனம் பெறவும், பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக உதவ, இந்த நூலின் அனுபந்தத்தில் அத்தகைய ஆலயங்கள் உள்ள இடமும், செல்வதற்குரிய ரயில், விமான நிலைய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

    பாரதம் முழுவதும் உள்ள இந்துக்கள், வெளிநாடுகளில் குடியேறி உள்ள இந்துக்கள், நமது மதத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் வெளிநாட்டு அன்பர்கள் ஆகிய அனைவரும் இந்த அரிய நூலைப் படித்துப் பயன் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    எம் 89/2, பெசன்ட்நகர்,

    சென்னை. 90

    1

    பண்டிகைகளும் விரதங்களும் காட்டும் தத்துவம் என்ன?

    ஒரு குழந்தையை உற்சாகப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுவையான தின்பண்டங்களை வாங்கிக் கொடுக்கவேண்டும். புதிய உடைகளை அணிந்து கொண்டு ஆடிப் பாடி மகிழ வாய்ப்புக் கொடுக்க வேண்டும். இனிமையாகப் பொழுதுபோக்க, கதையும் நாடகமும் நடனமும் பார்க்க வேண்டும்.

    அப்படியெல்லாம் மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்க வாய்ப்பும் கிடைக்க வேண்டும் அல்லவா? அத்துடன் பெற்றோரும் மற்ற உறவினர்களும் வந்து கூட இருந்து உற்சாகப்படுத்த சந்தர்ப்பம் கிடைப்பது மிகவும் அவசியம் அல்லவா? இதற்காக ஏற்பட்டவைதாம் பண்டிகைகள்.

    பண்டிகை என்பது வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் கொஞ்சம் மனத்தையும் பக்குவம் செய்ய வேண்டும். அந்த நாளில் சுவையான விருந்துக்கு முன்னால் கொஞ்சம் விரதமும் சேர வேண்டும். உடம்புக்கு மருந்தாகக் கொஞ்சம் - உள்ளத்துக்கு மருந்தாகக் கொஞ்சம் - இப்படிப் பூஜையும் செய்ய வேண்டும். குழந்தைகள் பெரியோர்களையும் பெற்றோரையும் வணங்குவதைப்போல, நாமும் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிப் பூஜை செய்து வணங்க வேண்டும். ஆக மனத்துக்கு மருந்து - வயிற்றுக்கும் விருந்து! இதுதான் நமது பண்டிகைகள் நமக்குத்தரும் வாய்ப்பு.

    பெற்றோருக்குப் பணிவிடை செய்யும் கடமையை நினைவுபடுத்திக்கொள்ள ஸ்ரீராமநவமி; வாழ்க்கையில் உறுதியுடன் கடமையைச் செய்ய நம்மைத் தயார் செய்து கொள்ள, கீதோபதேசம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்த நாளாக ஒரு ஜயந்தி; கல்வியும் செல்வமும் சக்தியும் நமக்குக் கிடைத்து வாழக்கையில் உழைத்து வெற்றி பெற முனைவதற்கு நவராத்திரி வழிபாடு; இயற்கை நமக்கு அளித்த செல்வத்தை ஏற்று நன்றி சொல்ல ஒரு சங்கராந்தி- இவை எல்லாமே விக்கினம் ஏதும் இன்றி நடைபெற ஒரு மனதாக நாம் வேண்டிக்கொள்ள ஒரு விநாயக சதூர்த்தி - இப்படி ஆண்டு முழுவதும் பரவிக் கிடக்கும் பண்டிகைகள் நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. அவை எல்லாமே தீமைகள் அழியவும், நன்மைகள் சிறந்து ஓங்கவும் வகை செய்பவைதாம்; இருள் நீங்கி ஒளி பிறக்க வாய்ப்பு அளிப்பவைதாம். இதை ஒரே நாளில், ஒரே இரவில் நாம் உணர்ந்து மகிழும் பண்டிகை - மிக முக்கியமான பண்டிகை தீபாவளி! தீபாவளியன்று நீராடுவது நமது உள்ளத்தையும் உடலையும் தூய்மைப்படுத்துகிறது. அதனாலேயே அதைக் கங்காஸ்நானம் என்று சிறப்பாக வருணிக்கிறோம்.

    குழந்தைகள் தினமும் பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் படிக்கின்றன. வீட்டில் தாய்மார்கள் சமையலிலும், உழைப்பிலும் நேரத்தைச் செலவிடுகிறார்கள். குடும்பத்தை நடத்த, பணம் சம்பாதிப்பதற்காக நாம் தொடர்ந்து வேலைக்குப் போய் உழைக்கிறோம். நம் எல்லோருக்குமே இதிலிருந்து சற்றுவிலகி, ஓய்வெடுத்து, இனிமையாகப் பொழுதுபோக்க ஒரு சந்தர்ப்பம் தேவை. பண வசதி உள்ளவர்கள் உல்லாசப் பயணம் போகலாம். செல்வந்தர்கள் வீட்டிலேயே பிரமாதமாக விருந்து வைத்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசுகள் வழங்கலாம். குடும்பத்திலேயே கலியாணம் நடந்தால், குழந்தை பிறந்தால் கொண்டாடி மகிழலாம். இப்படி எல்லாம் மனமாறுதலுக்காக ஒவ்வொருவரும் ஒரு சந்தர்ப்பத்தை நாடுகிறார்கள்.

    ஆனால் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு, நாடுமுழுவதும், ஏழை முதல் செல்வந்தர் வரையில், ஒரே சமயத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1