Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gowri Kalyanam Vaibogame
Gowri Kalyanam Vaibogame
Gowri Kalyanam Vaibogame
Ebook195 pages1 hour

Gowri Kalyanam Vaibogame

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1902-ம் ஆண்டில் துவங்கி 1998ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த மூன்று தலைமுறைக் குடும்பங்களின் பழக்க வழக்கங்கள், ஆசார நம்பிக்கைகள், காலத்தின் சுழற்சியில் எவ்வித மாற்றங்களுக்கு உள்ளாகின்றன என்பதை என்னுடைய 'பாலங்கள்' புதினத்தில் விரிவாக எழுதியிருந்தேன். 'பாலங்கள்' புத்தகம் வெளியான பிறகு அதற்குக் கிடைத்த வரவேற்பு எனக்குப் பெரும் நிறைவைத் தந்தது என்றால், அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு கடிதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ‘நாங்கள் இந்த மண்ணில் குடியேறிப் பல வருஷங்கள் ஆகிவிட்ட நிலையில், எங்கள் ஒரே பிள்ளைக்கு உபநயனம் செய்ய ஆசைப்பட்டோம். எங்கே போய், யாரைப் பார்த்து இதைச் செய்வது என்று புரியாமல் நின்றபோது, உங்கள் 'பாலங்கள்' புத்தகம் எங்களுக்குக் கைகொடுத்தது. அதில் விவரித்திருந்த வகையில் சின்ன வைபவமாக எங்கள் பிள்ளைக்குப் பூணூல் அணிவிக்கும் சடங்கை நடத்தி விட்டோம். உங்களுக்கு எங்கள் நன்றி' என்று ஆத்மார்த்த சந்தோஷத்தோடு அமெரிக்க வாசகி எழுதியிருந்த கடிதம், முதலில் எனக்குத் திகைப்பைத் தந்தாலும், பிறகு அது குறித்துத் தீவிரமாய் சிந்திக்கவும் வைத்தது.

மின்சாரம் இல்லாத நாட்களில் பாட்டி வாழ்ந்த வாழ்க்கை முறை எப்படியிருந்தது; சடங்குகள் எவ்வாறு நடந்தன; காலப்போக்கில் அவை என்னென்ன மாற்றங்களுக்கு உள்ளாயின - என்று எனக்குள் ஜனித்த ஆர்வம் தான் 'பாலங்கள்' நாவலை எழுத உந்துசக்தியாய் இருந்தது. 'பாலங்கள்' நாவலாக எழுதப்பட்டபோதும், அதில் கதை என்று ஒரு சீரான நூல் கிடையாது; குறிப்பிட்ட சமூகத்தின் நூற்றாண்டுகால மாற்றங்களை உள்ளது உள்ளபடி கூறும் பதிவுகளின் தொகுப்பு!

50 வருஷங்களில் உலகம் அடையாளம் புரியாத அளவுக்கு ரொம்பவும்தான் வித்தியாசமாகிவிட்டது! கிராமங்களே ஒரு உலகமாய் இருந்தது மாறி, இன்று அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட அந்தக் காட்சியை, அமெரிக்க மக்கள் கண்ட அதே வினாடியில் உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனங்களும் பார்த்து அதிரும் அளவுக்கு உலகம் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாய் ரொம்பவும் சுருங்கி விட்டது! முன்பு மக்களுக்கு நிறைய நேரம் இருந்தது; உறவுகளோடு மனம்விட்டுப் பேச முடிந்தது. நான்கு நாட்கள் நடந்த திருமணங்களில், 13 நாட்களுக்கு நீண்ட துக்க சடங்குகளில், நிதானமாய் பங்கேற்கவும், இன்னும் பல காரியங்களில் ஆற அமர ஈடுபடுத்திக் கொள்ளவும் அவகாசம் இருந்தது. ஆனால் இன்று? கூட்டுக் குடும்பங்கள் மறைந்து, வீட்டு அலுவலக வேலைகளும், டி.வி. இன்டர்நெட்டும் நம் சிந்தனையை ஆக்ரமித்துவிட்டதில், மேலே குறிப்பிட்ட காரியங்களை நின்று நிதானமாய் செய்ய நம்மில் பலருக்கும் அவகாசம் இல்லை; அதிசயமாய் நேரம் கிட்டி, விருப்பம் இருந்தாலும், பழக்க வழக்கங்களில் பழையன கழிந்து, புதியன புகுந்துவிட்டதில், பாரம்பரிய விஷயங்களை நமது மூத்தோர் செய்த வகையில் செய்யும் வழிமுறைகள் தெரியவுமில்லை - என்பது தான் பல குடும்பங்களில் காணப்படும் பிரத்யட்ச நிலை!

என்னுள் தோன்றிய ஆர்வம், ஏன், அதைக் கவலை என்றுகூடச் சொல்லலாம். திருமதி அலமேலு கிருஷ்ணன் அவர்களுக்கும் எழுந்ததுதான் 'கௌரி கல்யாணம் வைபோகமே' என்ற அற்புதமான நூல் பிறக்கக் காரணம். திருமதி அலமேலு - என் சொந்த சித்தப்பாவின் மனைவி. குடும்பத்தில் அனைவருக்குமே அலமேலு மன்னி! 40 வருஷங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த அனைத்துக் கல்யாணங்களிலும் அலமேலு மன்னியிடம் தான் விசேஷ பொறுப்பான 'பணநிர்வாகம்’ ஒப்படைக்கப்படும். பணப்பெட்டி, நோட்டு சகிதம் திருமண வீட்டின் ஒரு அறையில் உட்கார்ந்தாரென்றால், ஒரு பைசா விவகாரம்கூட அவரைத் தாண்டித்தான் போகவேண்டும். சாப்பாடு, பந்தல், ஜோடனை, மேளக்காரர், வைதீகச் சடங்குகளில் துவங்கி, ஆசீர்வாத பண விவரம் வரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கண்காணித்து, நோட்டில் பதிவு செய்து, கணக்குவழக்கை உரியவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் நகருவார். அவ்வளவு சிரத்தை, கச்சிதம், கறார்!

அண்மையில் அலமேலு மன்னியைச் சந்தித்தபோது அவர் எழுதி வைத்திருந்த இந்தப் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியைக் காண நேர்ந்தது. “‘நம்ப கல்யாண முறைகள் எல்லாம் ரொம்ப மாறிண்டு வர்றது... எங்க குழந்தைகளுக்குப் பல விவரங்கள் தெரியாமப் போயிடுமோன்னு கவலையா இருக்கு'ன்னு எல்லாரும் சொன்னதால, எனக்குத் தெரிஞ்சவரைக்கும் எழுதி வெச்சிருக்கேன்...” என்று சொன்னவரிடமிருந்து அதை வாங்கி வந்து படித்தேன். பிரமித்தேன். 40 வருடங்களுக்கு முன் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விலாவாரியாகத் திருமணங்கள் நடத்தப்பட்டதையும், சில ஆயிரம் ரூபாய்களில் ஒரு பெரிய சடங்கை விதரணையாய் நடத்தி முடிக்க முடிந்ததையும் இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், என் பிரமிப்பு கூடிப்போனது. கால அவகாசமும் செலவுகளும் மாறி விட்டபோதும், அது இந்தத்

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580101805095
Gowri Kalyanam Vaibogame

Read more from Sivasankari

Related to Gowri Kalyanam Vaibogame

Related ebooks

Reviews for Gowri Kalyanam Vaibogame

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gowri Kalyanam Vaibogame - Sivasankari

    http://www.pustaka.co.in

    கௌரி கல்யாணம் வைபோகமே

    Gowri Kalyanam Vaibogame

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கௌரி கல்யாணம் வைபோகமே

    நிச்சயதார்த்தம்

    ஏற்பாடுகள்

    யாத்ராதானம்

    கல்யாணம்

    சம்பந்தி வருகை

    ஜானவாசம்

    நிச்சயதாம்பூலம்

    கல்யாண நாள்

    விரதம்

    காசியாத்திரை

    ஊஞ்சல்

    கன்யாதானம்

    மாங்கல்யதாரணம்

    கிருஹப்பிரவேசம்

    நலங்கு

    வரவேற்பு

    சாந்தி முகூர்த்தம்

    பாலிகை கரைத்தல்

    கட்டுசாதக் கூடை

    சாப்பாடு விவரங்கள்

    பெண்ணுக்குக் கொடுக்கும் பாத்திரப் பட்டியல்

    பொருட்களின் விலைப் பட்டியல்

    இதர செலவுகள்

    கல்யாணப் பாடல்கள்

    நலங்குப் பாட்டுகள்

    சம்பந்திப் பாட்டு

    கல்யாணப் பாட்டு

    கும்மிப் பாட்டுகள்

    கள்ளப்பாட்டு கும்மி

    நளதமயந்தி தூது

    சுமங்கலிப் பிரார்த்தனையும் சமாராதனையும்

    ஸ்ரீவெங்கடாசலபதி சமாராதனை

    பாலங்கள்

    எழுதியவர்: அலமேலு கிருஷ்ணன்

    தொகுப்பு: சிவசங்கரி

    முன்னுரை

    1902-ம் ஆண்டில் துவங்கி 1998ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த மூன்று தலைமுறைக் குடும்பங்களின் பழக்க வழக்கங்கள், ஆசார நம்பிக்கைகள், காலத்தின் சுழற்சியில் எவ்வித மாற்றங்களுக்கு உள்ளாகின்றன என்பதை என்னுடைய 'பாலங்கள்' புதினத்தில் விரிவாக எழுதியிருந்தேன். 'பாலங்கள்' புத்தகம் வெளியான பிறகு அதற்குக் கிடைத்த வரவேற்பு எனக்குப் பெரும் நிறைவைத் தந்தது என்றால், அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு கடிதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ‘நாங்கள் இந்த மண்ணில் குடியேறிப் பல வருஷங்கள் ஆகிவிட்ட நிலையில், எங்கள் ஒரே பிள்ளைக்கு உபநயனம் செய்ய ஆசைப்பட்டோம். எங்கே போய், யாரைப் பார்த்து இதைச் செய்வது என்று புரியாமல் நின்றபோது, உங்கள் 'பாலங்கள்' புத்தகம் எங்களுக்குக் கைகொடுத்தது. அதில் விவரித்திருந்த வகையில் சின்ன வைபவமாக எங்கள் பிள்ளைக்குப் பூணூல் அணிவிக்கும் சடங்கை நடத்தி விட்டோம். உங்களுக்கு எங்கள் நன்றி' என்று ஆத்மார்த்த சந்தோஷத்தோடு அமெரிக்க வாசகி எழுதியிருந்த கடிதம், முதலில் எனக்குத் திகைப்பைத் தந்தாலும், பிறகு அது குறித்துத் தீவிரமாய் சிந்திக்கவும் வைத்தது.

    மின்சாரம் இல்லாத நாட்களில் பாட்டி வாழ்ந்த வாழ்க்கை முறை எப்படியிருந்தது; சடங்குகள் எவ்வாறு நடந்தன; காலப்போக்கில் அவை என்னென்ன மாற்றங்களுக்கு உள்ளாயின - என்று எனக்குள் ஜனித்த ஆர்வம் தான் 'பாலங்கள்' நாவலை எழுத உந்துசக்தியாய் இருந்தது. 'பாலங்கள்' நாவலாக எழுதப்பட்டபோதும், அதில் கதை என்று ஒரு சீரான நூல் கிடையாது; குறிப்பிட்ட சமூகத்தின் நூற்றாண்டுகால மாற்றங்களை உள்ளது உள்ளபடி கூறும் பதிவுகளின் தொகுப்பு!

    50 வருஷங்களில் உலகம் அடையாளம் புரியாத அளவுக்கு ரொம்பவும்தான் வித்தியாசமாகிவிட்டது! கிராமங்களே ஒரு உலகமாய் இருந்தது மாறி, இன்று அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட அந்தக் காட்சியை, அமெரிக்க மக்கள் கண்ட அதே வினாடியில் உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனங்களும் பார்த்து அதிரும் அளவுக்கு உலகம் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாய் ரொம்பவும் சுருங்கி விட்டது! முன்பு மக்களுக்கு நிறைய நேரம் இருந்தது; உறவுகளோடு மனம்விட்டுப் பேச முடிந்தது. நான்கு நாட்கள் நடந்த திருமணங்களில், 13 நாட்களுக்கு நீண்ட துக்க சடங்குகளில், நிதானமாய் பங்கேற்கவும், இன்னும் பல காரியங்களில் ஆற அமர ஈடுபடுத்திக் கொள்ளவும் அவகாசம் இருந்தது. ஆனால் இன்று? கூட்டுக் குடும்பங்கள் மறைந்து, வீட்டு அலுவலக வேலைகளும், டி.வி. இன்டர்நெட்டும் நம் சிந்தனையை ஆக்ரமித்துவிட்டதில், மேலே குறிப்பிட்ட காரியங்களை நின்று நிதானமாய் செய்ய நம்மில் பலருக்கும் அவகாசம் இல்லை; அதிசயமாய் நேரம் கிட்டி, விருப்பம் இருந்தாலும், பழக்க வழக்கங்களில் பழையன கழிந்து, புதியன புகுந்துவிட்டதில், பாரம்பரிய விஷயங்களை நமது மூத்தோர் செய்த வகையில் செய்யும் வழிமுறைகள் தெரியவுமில்லை - என்பது தான் பல குடும்பங்களில் காணப்படும் பிரத்யட்ச நிலை!

    என்னுள் தோன்றிய ஆர்வம், ஏன், அதைக் கவலை என்றுகூடச் சொல்லலாம். திருமதி அலமேலு கிருஷ்ணன் அவர்களுக்கும் எழுந்ததுதான் 'கௌரி கல்யாணம் வைபோகமே' என்ற அற்புதமான நூல் பிறக்கக் காரணம். திருமதி அலமேலு - என் சொந்த சித்தப்பாவின் மனைவி. குடும்பத்தில் அனைவருக்குமே அலமேலு மன்னி! 40 வருஷங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த அனைத்துக் கல்யாணங்களிலும் அலமேலு மன்னியிடம் தான் விசேஷ பொறுப்பான 'பணநிர்வாகம்’ ஒப்படைக்கப்படும். பணப்பெட்டி, நோட்டு சகிதம் திருமண வீட்டின் ஒரு அறையில் உட்கார்ந்தாரென்றால், ஒரு பைசா விவகாரம்கூட அவரைத் தாண்டித்தான் போகவேண்டும். சாப்பாடு, பந்தல், ஜோடனை, மேளக்காரர், வைதீகச் சடங்குகளில் துவங்கி, ஆசீர்வாத பண விவரம் வரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கண்காணித்து, நோட்டில் பதிவு செய்து, கணக்குவழக்கை உரியவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் நகருவார். அவ்வளவு சிரத்தை, கச்சிதம், கறார்!

    அண்மையில் அலமேலு மன்னியைச் சந்தித்தபோது அவர் எழுதி வைத்திருந்த இந்தப் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியைக் காண நேர்ந்தது. ‘நம்ப கல்யாண முறைகள் எல்லாம் ரொம்ப மாறிண்டு வர்றது... எங்க குழந்தைகளுக்குப் பல விவரங்கள் தெரியாமப் போயிடுமோன்னு கவலையா இருக்கு'ன்னு எல்லாரும் சொன்னதால, எனக்குத் தெரிஞ்சவரைக்கும் எழுதி வெச்சிருக்கேன்... என்று சொன்னவரிடமிருந்து அதை வாங்கி வந்து படித்தேன். பிரமித்தேன். 40 வருடங்களுக்கு முன் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விலாவாரியாகத் திருமணங்கள் நடத்தப்பட்டதையும், சில ஆயிரம் ரூபாய்களில் ஒரு பெரிய சடங்கை விதரணையாய் நடத்தி முடிக்க முடிந்ததையும் இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், என் பிரமிப்பு கூடிப்போனது. கால அவகாசமும் செலவுகளும் மாறி விட்டபோதும், அது இந்தத் தலைமுறைக்கு மிக உபயோகமான ஆவணம்.

    ஒருகாலத்தில் திருமணங்களில் தரப்படும் சீர் வரிசைகளோடு மீனாட்சி அம்மாள் எழுதிய 'சமைத்துப் பார்' புத்தகத்தின் பிரதிகளும் கட்டாயம் இருக்கும். என்னையும் சேர்த்து எண்ணிலடங்கா பெண்கள் சமைக்கக் கற்றுக் கொண்டதே 'சமைத்துப்பார்' மூலம்தான்! அன்று 'சமைத்துப்பார்' புத்தகம் உதவிய மாதிரி, இன்று மறைந்து வரும் பூர்வ பழக்கங்கள், சடங்குகளை நாம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள 'கௌரி கல்யாணம் வைபோகமே' உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. காண்ட்ராக்ட் ஏஜண்டுகளிடம் சகல பொறுப்புகளையும் தந்துவிட்டு அக்கடா என்று எல்லோரும் இருக்கும் இந்நாட்களில், இப்புத்தகத்தில் காணப்படும் விதமாய் திருமணங்கள் செய்வது சாத்தியமா என்ற கேள்வி எழலாம்... நான் மறுக்கவில்லை. என்றாலும், நம் குடும்பத்துப் பழக்க வழக்கங்கள் எப்படியிருந்தன என்பதை நமக்கு, முக்கியமாய் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில், இது புத்தகம் அல்ல; ஒரு கையேடு; ஒரு வழிகாட்டி!

    சிவசங்கரி

    *****

    முகவுரை

    கல்யாணம் என்பது மிகப் புனிதமான, தெய்வத்தின் அருள் பெற்று, பெரியவர்களது ஆசீர்வாதத்துடன் நடக்கும் ஒரு சந்தோஷமான, பவித்ரமான விஷயம். உலகத்தில் எந்த மதத்தவர்களும், தங்களது ஆசாரம், சம்பிரதாயப்படிதான் கல்யாணத்தை நடத்துகிறார்கள். பதிவுத் திருமணத்தையும் கூட சாட்சியுடன் தான் நடத்த முடியும். பாரததேசத்தில் அக்னிசாட்சியுடன் நடத்தப்படும் கல்யாணங்களே அதிகம். வடமாநிலங்களை விடத் தென்னிந்தியாவில் இது கூடுதலாகக் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழர்கள் நடத்தும் கல்யாணங்களில், சாதிமத பேதங்களின் காரணமாகச் சில மாறுதல்கள் இருக்குமென்றாலும், மொத்தத்தில் ஒற்றுமைகள் நிறைய உண்டு.

    ஒரு தமிழ் பிராம்மண ஸ்மார்த்த (ஐயர்) குடும்பத்தில் நடத்தப்படும் கல்யாணத்தைப் பற்றிய விவரங்களை எழுதவேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும், அத்துடன் என் பெரிய நாத்தனார் சொல்லி நடந்த கல்யாணங்கள் பலவற்றில் நானும் பங்கெடுத்தபோது கிடைத்த அனுபவக் குறிப்புகளும்தான் இப்புத்தகத்தை எழுத ஒரு தைரியத்தைக் கொடுத்தன. என் நன்றி கலந்த நமஸ்காரத்தை என் நாத்தனாருக்குச் செய்து, இப்புத்தகத்தை அவருக்கு ஸமர்ப்பிக்கிறேன்.

    குடும்பங்களில், இம்மாதிரி கல்யாணங்கள் நடக்கும் போது இப்புத்தகம் உபயோகப்படும் என்ற நம்பிக்கையை என் உறவினர்கள், சினேகிதர்கள் எல்லோரும் எனக்களித்து ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    - அலமேலு கிருஷ்ணன்

    *****

    கௌரி கல்யாணம் வைபோகமே

    கல்யாணம் செய்வதற்கான முதல் விஷயம், ஜாதகத்தில் நம்பிக்கை இருப்பின், அவை பொருந்துகின்றனவா என்று பார்ப்பதில் துவங்குகிறது.

    பெண்ணின் தகப்பனார் அல்லது பெரியவர்கள், பிள்ளையின் தகப்பனாருக்கோ அல்லது பெரியவர்களுக்கோ, பெண்ணின் ஜாதகம், குடும்பத்தைப் பற்றிய விவரங்கள், பெண்ணின் நிறம், உயரம், படிப்பு போன்ற குறிப்புகளை எழுத வேண்டும்.

    பதிலுக்கு, பிள்ளையின் தகப்பனார், பிள்ளை ஜாதகத்துடன் அவனது படிப்பு, வேலை, மற்ற குடும்ப விவரங்களைப் பெண் வீட்டாருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இரு தரப்பினருக்கும் ஜாதகம் பொருந்தி வந்தவுடன், பெண்ணின் தகப்பனார் அல்லது அவளது குடும்பத்திலுள்ள பெரியவர்கள், பிள்ளையின் தகப்பனாரைச் சந்தித்து, லௌகீக விஷயங்களை அதாவது நகை, பாத்திரம், சீர்வரிசை, பிள்ளைக்குச் செய்ய வேண்டியவை, கல்யாணம் நடைபெற வேண்டிய இடம், முறை ஆகியவற்றை மனம்விட்டுப் பேசி விட்டால், பின்னால் மனத்தாங்கல் வராமலிருக்கும்.

    இருவரின் புகைப்படங்களை இரு வீட்டாரும் பார்த்து, இரு தரப்பு விவரங்களைத் தெரிந்து கொண்டு, ஓரளவுக்குத் திருப்தியடைந்த பின், பிள்ளையைப் பற்றி அவன் வேலை செய்யுமிடத்தில் விசாரித்து, பெண் வீட்டாரில் எவரேனும் சென்று பிள்ளையை நேரில் சந்தித்து வருவதைப் போல, பிள்ளை வீட்டாரும் பெண்ணை முதலில் பார்த்து வந்துவிடலாம். இதன் பிறகே சம்பந்தப்பட்ட பெண்ணும் பிள்ளையும் நேரடியாகச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும். அப்போதுதான் மனமொத்த சந்தோஷமான கல்யாணம் நிச்சயமாகும்.

    இப்படியொரு மகிழ்ச்சியான கல்யாணத்தை நடத்த வேண்டிய பொறுப்பை இருதரப்பினரும் உணர்ந்து நடத்துவது அவசியம்.

    பெண்பார்க்கும் படலம் முடிந்து, பெண்ணுக்கும் பிள்ளைக்கும் ஒருவரையொருவர் பிடித்துவிட்டதென்றால், வெற்றிலை பாக்கு மாற்றி, கல்யாணத்தை நிச்சயம் செய்து கொள்ள வேண்டும்.

    இரு தரப்பினரும், இக்கல்யாணத்தை ஏற்றுக் கொண்டு, தங்கள் சம்மதத்தை ஊர்ஜிதப்படுத்தும் நிச்சயதார்த்தச் சடங்கு மிக முக்கியமானது.

    *****

    நிச்சயதார்த்தம்

    பிள்ளை வீட்டார் செய்ய வேண்டியவை

    பிள்ளை வீட்டார்

    Enjoying the preview?
    Page 1 of 1