Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aan Alumaiyil Pen Karppu
Aan Alumaiyil Pen Karppu
Aan Alumaiyil Pen Karppu
Ebook147 pages52 minutes

Aan Alumaiyil Pen Karppu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணி புரியும் இவர் முனைவர் பட்டம் பெற்றவர். இதுவரை 13 நூல்கள் மற்றும் மற்றும் 170 கட்டுரைகளை எழுதியுள்ளார். இலக்கண மொழி கல்வெட்டு வரலாறு, ஆண் ஆளுமையில் பெண் கற்பு, கவிதை முரண், தமிழ்ச் சமூகத்தில் கற்பும் கற்பிப்பும், புறநானூறு – பதிப்பு வரலாறு, சிறுபாணாற்றுப்படை – பதிப்பு வரலாறு, பொருநராற்றுப்படை – பதிப்பு வரலாறு போன்றவை இவரின் சில நூல்கள். இவர் 2007-ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் ‘செம்மொழி இளம் அறிஞர் விருது’ பெற்றுள்ளார். இவரின் ஆய்வுக் களம் இலக்கியம், இலக்கணம், சமூகவியல் போன்றவைகளாகும்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580122002586
Aan Alumaiyil Pen Karppu

Read more from A. Selvaraju

Related to Aan Alumaiyil Pen Karppu

Related ebooks

Reviews for Aan Alumaiyil Pen Karppu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aan Alumaiyil Pen Karppu - A. Selvaraju

    http://www.pustaka.co.in

    ஆண் ஆளுமையில் பெண் கற்பு

    Aan Alumaiyil Pen Karppu

    Author:

    அ. செல்வராசு

    A. Selvaraju

    For more books

    http://www.pustaka.co.in/home/author/a-selvaraju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முனைவர் கவிதா சுப்பிரமணியன்

    அறங்காவலர்

    கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை

    ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி

    புதுக்கோட்டை

    ***

    வாழ்த்துரை

    ஆண் ஆளுமையில் பெண் கற்பு என்ற தலைப்புடன் வெளிவரும் இந்நூல் சங்க இலக்கியத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து, ஐந்து கட்டுரைகளாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் சுட்டிக்காட்டும் கருத்துகள் போற்றத்தக்கன. முதல் கட்டுரையில் சங்கச் சமூகம் பெண்மைக்கு அளிக்கும் விளக்கம், பெண்டிரின் நிலை, செயற்பாடுகள், பொறுப்பு, கடமை, மதிப்பு, பெண்களுக்கு மட்டும் வற்புறுத்தப்பெற்று வரும் கற்பு அதற்கான காரணங்கள் ஆகியன சுட்டப்பெற்றுள்ளன. பெண் ஆடவனின் உரிமையாக, உடமையாகக் கருதப்பட்டமை எடுத்துக் கூறப்பெற்றுள்ளது.

    பெண் கற்புக்கு அரசியாகப் போற்றப்பெற்றதைக் குறிக்கும் சொற்றொடரான பெய்யெனப் பெய்யும் மழை இரண்டாம் கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்டுரை பெண்ணின் கற்பால் தலைவனும் சமுதாயத்தில் நன்மதிப்பு பெற்றான் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. அன்பு, மடம், மென்மை, இனிமை, அழகு ஆகியவற்றுடன் கற்பிற்கு முதலிடம் தருதல் பெண்மை என்பதால், பின்னர் இதுவே பெண்ணியக் கற்பை வற்புறுத்துவதற்கான அடித்தளமாக அமைந்துவிட்டதை இக்கட்டுரை கோடிட்டு விளக்கியுள்ளது. இதுமட்டுமின்றிச் சங்க இலக்கியத்தில் கற்பெனப்படுவது ஆடவர்க்கு ஒருவகையாகவும், பெண்டிர்க்கு ஒருவகையாகவும் உரைக்கப்பட்டிருந்தது என்பது இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்னும் பண்பின் அளவுகோல் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறாக இருந்தது. ஒருமை நெஞ்சம் கொண்ட ஆடவரும் பாத்தமை மேற்கொண்ட ஆடவரும் என இரு வகையினர் இக்காலத்திற்போல் சங்க காலத்திலும் இருந்தனர் என்பதை இக்கட்டுரை தெளிவு செய்திருக்கிறது.

    கணவனே கண்கண்ட தெய்வம் என்ற பிற்காலச் சமூக அமைப்பிற்கான வித்தும் அடித்தளமும் சங்கச் சமூகத்தில் காணப்படுகின்றன என்ற செய்தியை இந்நூல் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளது. பெண்ணை ஆளுபவனாக ஆண் இருப்பினும் அதில் பெண்ணுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்துள்ளான். பெண்டிர் மென்மையானவர் ஆடவரின் அன்பிற்குரியவர், பொறுமை நிறைந்தவர் எனும் கணிப்பில் அவரைப் பாதுகாத்ததைத் தனது பொறுப்பாகக், கடமையாகக் கருதி பெண்டிரைத் தம் ஆளுகைக்குட்படுத்தினர் என்பது சங்கச் சமூகப் பெண்டிர் நிலை உணர்த்தும் கருத்தாகும்.

    இந்நூல் சங்க கால சமுதாய வாழ்வினைப் பிற்காலத்தவர்க்கு உணர்த்த மேற்கொள்ளப்பட்ட ஒர் அரிய முயற்சியாக அமைந்திருக்கிறது. பெண்டிரின் கற்பு மற்றும் பெண்ணின் நிலை குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மிகுதியாக இல்லாத இச்சூழலில் வெளிவரும் பெண்கள் பற்றிய இவ்வாய்வு வெறும் பொழுதுபோக்காக மட்டும் அமையாது பெண்டிரின் ஒப்பற்ற நிலைகுறித்த உயர்ந்த சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது. பெண்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு இந்நூல் சிறந்த கருவியாக விளங்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இந்நூல் ஆசிரியர் எளிய நடையில் தந்துள்ள விளக்கங்கள் இந்நூலை எளிதாயப் புரிந்துகொள்வதற்கு உதவியாய் அமைகிறது.

    ஆசிரியரின் பணி சிறக்க எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    கவிதா சுப்பிரமணியன்

    புதுக்கோட்டை

    20-12-2003

    ***

    டாக்டர் ஒய். டென்னிசன்

    தலைவர்

    முதுகலைத் தமிழாய்வுத் துறை

    பிஷப் ஹீபர் கல்லூரி

    திருச்சிராப்பள்ளி - 620 017

    ***

    அணிந்துரை

    அ. செல்வராசு எம்முடைய மாணவர் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழர் ஆய்வுத் துறையில் அவர் முதுகலை மற்றும் எம் பில், ஆகிய வகுப்புகளில் பயின்ற போது வகுப்பில் முதல் நிலையிலேயே இருந்தவர். இன்று ஜெ.ஜெ, கலை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டையில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

    ஆண் ஆளுமையில் பெண் கற்பு என்ற தலைப்பில் செல்வராசு ஒரு நூலைக் கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய துணிவையும், தியாகத்தையும், நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். எழுதிச் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் எழுத்தாளர்களிடமிருந்து அகன்று பல வருடங்கள் ஆகிவிட்டன, எழுதுவதை ஒரு பொதுத் தொண்டாகக் கருதுபவர்கள் மட்டுமே புத்தகங்கள் எலுத முடியும்.

    ஆண் ஆளுமையில் பெண் கற்பு என்ற இந்த நூல் ஐந்து கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலை ஆக்கியிருப்பது சிறப்புக்குரியது.

    முல்லையும் கற்பும் மீள் வாசிப்பு என்ற கட்டுரையில் ஆணாதிக்கச் சமுதாயம் உருப்பெற்றது முல்லை நிலத்திலென்றும், பொருளாதாரச் சுரண்டலின் மூலம் பெண்ணை அடிமையாக்கியவர்கள் அவர்களை அடக்கி ஆள்வதற்காக அவர்கள் மிது கற்பித்துக் கட்டாயப்படுத்தப்பட்டதே கற்பு என்றும் விளக்குகிறது.

    பெய்யெனப் பெய்யும் மழை சங்க இலக்கிய வழிக் கருத்துருவாக்கம என்ற கட்டுரைத் தலைப்பு ஆசிரியர் விளக்கபுகும் செய்தியை அப்படியே விளக்கிவிட்டது எனலாம் பெண் மழை பெய்விக்கும் ஆற்றல் பெற்றவள் என்பது சங்க முல்லைப் பாடல்களில் இருந்து கருவாகி, கலித்தொகையில் அது கருத்தாக நிலைபெற்று வள்ளுவரால் கணவனைத் தொழுகின்ற பெண்ணின் கற்போடு இணைக்கப்பட்டுவிட்டது என்கிறார் ஆசிரியர்

    சங்க இலக்கியப் பெண் கவிஞர்களின் படைப்பாக்க ஆளுமை என்ற கட்டுரை பல கருத்துக்களைத் தெளிவாகக் கூறுகிறது. பெண்கள் தங்கள் காதலை வெளிப்படையாகக் கூறக் கூடாது என்ற தொல்காப்பிய மரபைச் சங்க கால ஆண்படைப்பாளர்கள் முழுமையாகப் பின்பற்ற பெண் படைப்பாளர்கள் அதனைத் துணிவோடு மீறியுள்ளனர். எனினும் பெண்ணினத்திற்கான ஆதரவுக்குரலை எழுப்பவில்லை. கைமை நோன்பிற்கு எதிராகச் சிலர் குரல் கொடுத்தும் அவர்கள் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை போன்ற கருத்துக்களைக் கூறலாம்.

    "ஆண் ஆளுமையில் பெண் கற்பு’ என்ற கட்டுரை திருமணமான ஒரு பெண்ணின் பாலியல் நடிவடிக்கைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்துவதற்காக ஆண்களால் வகுக்கப் பெற்றதே கற்புக் கோட்பாடு என்பதை மையமாக வலியுறுத்துகிறது. ஓர் ஆடவனின் மனைவி இன்னொரு ஆடவனுடன் பாலியல் தொடர்பு கொண்டால் சமூகம் அவ்வாடவனின் ஆண்மையில் சந்தேகம் கொள்ளும் அப்படியொரு மதிப்புக் குறைவை விரும்பாத ஆடவன் தன் மனைவியின் பாலியல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கற்பு கொள்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறான் என்று ஆசிரியர் ஊகம் செய்திருக்கிறார்.

    உற்று நோக்கலும் இலக்கண உருவாக்கமும என்ற கட்டுரை உற்று நோக்கலின் பயன்பாடுகளையும் விளைவுகளையும் பற்றிப் பேசுகின்றது. ஆடவர்களின் அதிகாரத்துடனான உற்று நோக்கல் பெண்களைப் பற்றிய வருணனைக்கு வழிவகுத்தது என்பது போன்ற கருத்துக்களை விளக்கிச் செல்கிறது.

    நூலாசிரியர் செல்வராசு இலக்கணப் பயிற்சியும் சங்க இலக்கிய ஈடுபாடும் உடையவர். சங்க இலக்கியம் தொடர்பான இந்த நூலை அடுத்து இன்னும் பல பயனுடைய நூல்களையும் தொடர்ந்து வெளியிட என்னுடைய வாழ்த்துக்களைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

    ஆண் ஆளுமையில் பெண் கற்பு என்ற இந்நூல் நல்ல தரமான நடையுடன் கருத்துக்களை எளிமையாக விளக்கிச் செல்கிறது. இலக்கிய ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இந்த நூல் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகின்றேன்.

    ஒய். டென்னிசன்

    திருச்சிராப்பள்ளி

    20-12-2003

    ***

    ஒரு நொடி…

    சங்க இலக்கியம் தமிழர்களின் வாழ்வியல் களஞ்சியம். சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வுகளைப் போன்றே, ஆய்வுக்குரிய பொருள்களும் அவற்றுள் மிகுந்துள்ளன. பெண், கற்பு, ஆளுமை எனும் பொருட் தளங்களை இந்நூல் கட்டுரைகளில் மீள்வாசிப்புச் செய்துள்ளேன்.

    மகளிர் தொடர்பான ஆய்வாக வெளிவரும் இந்நூலுக்கு வாழ்த்துரை வேண்டி அணுகியபோது பல்வேறு பொறுப்புகளுக்கிடையிலும் மகிழ்வோடு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தவர்

    Enjoying the preview?
    Page 1 of 1