Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dheetchanya
Dheetchanya
Dheetchanya
Ebook333 pages2 hours

Dheetchanya

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"மன மாற்றத்திற்காக ஒரு பயணத்தை மேற்கொள்ளும் தீட்சண்யா. அவளது பயணத்திற்குத் துணையாக அரவிந்தன், நரேந்திரன், திவ்யா. வாழ்க்கையைப் பற்றிய புரிதலுடன் அரணாக வந்தவனைப் புரிந்து கொண்டு இணையாக ஏற்றுக்கொள்ளும் தீட்சண்யா...."

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580142707016
Dheetchanya

Read more from Chitra.G

Related to Dheetchanya

Related ebooks

Reviews for Dheetchanya

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dheetchanya - Chitra.G

    https://www.pustaka.co.in

    தீட்சண்யா

    Dheetchanya

    Author:

    சித்ரா.ஜி

    Chitra.G

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chitra-g

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 1

    வெளிர் வானம். வேகமாக நகரும் பஞ்சு பொதி மேகங்கள். வீடு தேடி செல்லும் பறவைகள். நெல்வயல்கள், தூரத்திற்கு ஒன்றாக வீடு, தென்னை மரங்கள், ஆங்காங்கே மாமரங்கள், மாடு, ஆடு, அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும் கோழிகள். அனைத்தும் கண்ணின் மணிக்குள் பதிவாகின. ஆனால் மனதிற்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

    எங்கள் கிராமத்து வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தேன். என்ன நடக்கின்றது என்னைச் சுற்றி... ஒன்றும் புரியவில்லை.

    மும்பையில் படிப்பை முடித்து வீடு வந்த அன்று ஆவலுடன் வரவேற்று அணைத்துக் கொண்ட அம்மா, பாசத்துடன் பார்த்த தாத்தா பாட்டியின் விழிகள் எல்லாவற்றிலும் ஒரு அலைப்புறுதல். ஏதோ இயல்பை தொலைத்த ஒரு பாவனை. எத்தனை முயன்றும் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.

    ஏனென்று யோசித்துக்கொண்டே இருந்த என்னை திரும்பி பார்க்க வைத்தது அம்மாவின் அழைப்பு.

    தீட்சண்யா!

    அழைத்த விதம் சற்று வேகமாகவும், அழுத்தமாகவும் இருந்தது. இங்கு வந்த, இந்த ஒரு மாதத்தில் இவ்வாறான அவரின் அழைப்புகள் அதிகமாக இருந்தன.

    என்னுடைய விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், இல்லையென்றால் அவரின் விருப்பத்திற்கு நான் உடன் படாத போது. இரண்டிற்கும் வித்தியாசமில்லை என்றாலும், சூழ்நிலைகள் பொறுத்து இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றுதான் காரணமாக இருக்கும் அவரின் அழுத்தமான அழைப்பிற்கு...

    அவரின் அழைப்பிற்கு பதில் கூறாமல், வெறுமென அவரை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

    அப்போ நான் சொல்வதை நீ கேட்பதில்லை, இல்லையா?

    இதைப்போல எத்தனையோ முறை கேட்டுவிட்டதால், எதுவும் பேசாமல், அம்மா சொல்வதை காதில் நிரப்பிக் கொண்டிருந்தேன்.

    தீட்சண்யா! இப்பொழுது இன்னும் சற்று வேகத்தில் வந்தது அழைப்பு.

    வாட் மா? சலிப்பு வந்தது என் வார்த்தைகளில்...

    முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லு

    வாட் டு சே?

    நீ அங்க போகவேண்டாம்.

    வொய்?

    அது அத்தனை பாதுகாப்பில்லாத இடம் அதுவும் தனியாகப் போகிறேன் என்று சொல்வது

    அம்மாவின் வார்த்தைகள் வித்தியாசமாக இருந்தது..

    எதற்கும், யாருக்கும் பயப்படாதே, தைரியமாக இரு என்று நொடிக்கு நொடி சொல்லிக் கொடுத்தவள். இன்று உதிர்க்கும் வார்த்தைகளை நம்பமுடியாத தன்மையுடன் கண்களை விரித்துப் பார்த்தேன் இவ்வார்த்தைகள் உன்னிடம் இருந்தா! என்று...

    என் பார்வையின் அர்த்தம் புரிந்தவளாக, பாப்பு சொல்வதைக் கேளு என்றாள்.

    லிசெனிங் மா...

    நீ எங்கேயும் போக வேண்டாம், என்னுடனே இரு

    வேர், ஹியர்... நாட் அட் ஆல் பாசிபிள்

    முதலில் இந்த இங்கிலிஷ்ல பேசுவதை நிறுத்து, எங்க வேணுமோ அங்க பேசிக் கொள்ளலாம் சற்று எரிச்சலுடன் வந்தது போல இருந்தது அம்மாவின் வார்த்தைகள்.

    இதற்கு மேல் தாங்க முடியவில்லை எனக்கு...

    விவரம் தெரிந்த வயதில் இருந்து ஆங்கிலத்தில் பேசு, பேசு என்று கற்றுக் கொடுத்துவிட்டு, இருந்த சூழ்நிலைகளும், வளர்ந்த ஊர்களும் அதைத்தானே கற்று கொடுத்தது. இன்று திடீரென்று பேசவேண்டாம் என்றால்... உள்ளுக்குள் சுரு சுருவென ஏறியது.

    ஓகே ம்மா... நான் பேசவில்லை, நீங்கள் இப்படி மாறியதற்கான காரணத்தை மட்டும் சொல்லுங்கள் உங்களை யார் என்ன சொன்னார்கள், என்ன நடந்தது?"

    நானும் அம்மாவின் பாவனைகளில் மாற்றம் தெரிந்ததில் இருந்து இந்தக் கேள்வியை பலமுறை கேட்டுவிட்டேன் ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை.

    எப்பொழுதும் போல் அமைதியாக இருந்தவர் மீண்டும் சொன்னார் நீ அங்கெல்லாம் செல்லவேண்டாம், ஏதாவது ஆகிவிட்டால்!

    என்ன ஆகும்? என்றேன் நான்.

    பேசாமலே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    நான் முடிவு செய்தால் மாற்ற மாட்டேன் என்று உனக்கு தெரியும் இல்லையா? கண்டிப்பாக நான் அங்கு போகத்தான் போகிறேன். ரஞ்சிதாவிற்கு போன் செய்யவேண்டும்

    அதற்கும் இங்கு வழியில்லை. சாதாரணமாக போன் செய்யவேண்டும் என்றாலோ, இன்டர்நெட் வேண்டும் என்றாலோ எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வீட்டின் மேலேயும், கீழேயும் போக வேண்டியிருக்கிற ஒரு ஊரில் எத்தனை நாட்கள் என்னால் தாக்குப் பிடிக்கமுடியும்.

    கிடைப்பது வரை போதும், நானும் தாத்தாவும், பாட்டியும் உனக்கு திருமணத்திற்கு பார்க்கலாம் என்று இருக்கிறோம்.

    வாட்? என்னை அறியாமல் கத்திவிட்டேன்.

    இட்ஸ் ஹைலி ரிடிகுலஸ்... என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், தேர் இஸ் எ லிமிட் போர் எவ்ரிதிங் மீண்டும் கத்தலாக வந்தன எனது வார்த்தைகள்.

    நீ என்ன சொன்னாலும் நாங்கள் சொல்வதுதான் முடிவு, அதற்கு தயாராக இரு சொல்லிவிட்டு நகரத் தொடங்கினார்.

    அம்மா, ஒரு நிமிஷம் என்று நான் அழைத்ததும் நின்றவரின் அருகில் சென்றேன்.

    என்னாச்சு உனக்கு, நீ ஏன் இப்படி மாறிவிட்டாய்? தாத்தா, பாட்டி ஏதாவது சொன்னார்களா?

    ஐயோ இல்லை பாப்பு அவசரமாக வந்தது அவரின் வார்த்தைகள்.

    அப்புறம் ஏன்? எனக்கு வேறு யாரோ ஒருவரை பார்ப்பதுபோல இருக்கிறது.

    ஒரு ஆறுமாத கிராமத்து வாழ்க்கை உன்னை முற்றிலும் மாற்றிவிட்டதா?

    வழக்கம்போல் ஒன்றும் பேசாமல் நகர்ந்தவரைப் பார்த்து ஆயாசமாக இருந்தது எனக்கு...

    அப்படியே நகர்ந்து, மீண்டும் நான் நின்ற இடத்தில் நின்று கொண்டேன். வானம் இப்பொழுது வெறிச்சோடி இருந்தது எனது மனதைப் போல.

    ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது. அப்பாவின் மறைவினாலா? அவரின் மறைவு ஒன்றே இவர்களின் புரியாத மாற்றத்திற்குக் காரணமா?

    அப்பா, வாட் எ லவ்லி பெர்சன் யூ ஆர், ஏம்பா! எங்களை விட்டுப் போனீங்க, நீங்க போனவுடன் எல்லாம் போச்சுப்பா. அம்மா. எப்படி இருந்தாங்க ஏம்பா இப்படி மாறிட்டாங்க? எங்கோ இருந்த அப்பாவிற்கு கேள்வியாக வரைந்தேன் என் மனதில் உள்ளதை...

    காற்றடித்துக் கொண்டிருந்தது. காற்றின் வேகத்தால் அலையலையாய் ஓடிய நெற்பயிர்களின் மீது கவனம் சென்றது. அலையும் பயிர்களைப்போல நானும், வளைந்து கொண்டும் நிமிர்ந்து கொண்டுமிருக்கின்றேன். ஒன்றும் புரிபடவில்லை.

    ஒருவரின் மரணம் வாழ்க்கையின் அனைத்து பாதைகளையும், சம்பந்தப்பட்டவர்களையும் மாற்றிவிடுமா? எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

    அப்பா, சரவணன் ரெவென்யூ ஆபீசர். இருக்கின்ற வேலையில் அத்தனை தில்லுமுல்லுகள் இருந்தாலும் தன் நேர்மையை பறை சாற்றியவர். அதனால் எப்பொழுது பணி மாறுதல் வரும் என்று தெரியாத அளவிற்கு வாழ்க்கை.

    அளவற்ற வசதி, தாத்தா, பாட்டிக்கு ஒரே பையன். படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் அதிகம் படித்து மத்திய அரசு பணிக்கு வந்தவர். பெற்றவர்களை ஒன்றுவிட்ட தங்கையின் பொறுப்பில் விட்டுவிட்டு, பண்ணையில் வேலை செய்பவர்களை காவலுக்கு வைத்துவிட்டு மாதம் ஒருமுறை மட்டும் வந்து பார்த்துவிட்டு செல்வார்.

    மகனின் எண்ணமே தங்களின் வாழ்வாக எண்ணியவர்களுக்கு அவரைத் தடுக்கும் எண்ணமே இல்லை அவர் செய்யும் எந்த செயலிலும். சந்தோசமாகத்தான் இருந்தார்கள்.

    மகன் விருப்பத்திற்கு, நன்கு படித்த பெண்ணாக அவர் இருக்கும் வேலைக்கு தகுந்த, பலருடன் இயல்பாக பேசிப் பழகும் பெண்ணாக இருந்த சாரதாவை பார்த்து, பார்த்து மணம் முடித்து வைத்தனர்.

    பட்டிணத்திலேயே வளர்ந்த சாரதா., கிராமத்திற்கு வந்து தடுமாறிய பொழுதெல்லாம், மருமகளும், குழந்தையும் அங்கேயே இருக்கட்டும், நீ மாத்திரம் வந்து பார்த்து விட்டுப் போ, அவர்களைப் பார்க்க வேண்டும் என்றால் நாங்கள் வந்துவிட்டு செல்கிறோம் என்கிற அளவில் புரிதல் உள்ளவர்கள். சொன்னதைப்போலவே அப்பாவிற்கு எங்கு மாற்றல் கிடைத்தாலும் அங்கு செட்டில் ஆகிறவரை கூடவே இருப்பார்கள். மீண்டும் கிராமத்திற்கு சென்றுவிட்டு எங்களைப் பார்க்கவேண்டும் என்று தோன்றினால் கிளம்பி வந்துவிடுவார்கள்.

    வாழ்க்கையில் கிடைத்த அனைத்தும் நல்லவையாக இருந்ததால் விரைவில், வாழ்க்கை முடிந்துவிட்டதா அவருக்கு. ஒரு நாள் பணிக்கு சென்றவர் திரும்பவில்லை, விபத்து ஒரே வார்த்தையில் முடிந்துவிட்டது அனைத்தும். எங்களைவிட்டு வரமுடியாத தூரத்திற்குச் சென்றுவிட்டார்.

    எல்லோரிடமும் அன்பாக பேசுவார், அந்த குணத்தால் நண்பர்களும் அதிகம்.

    மும்பையில் அவர் பணியில் இருந்த பொழுதுதான், நான் B.Arch சேர்ந்தேன். முடிவதற்குள் பெங்களூருவிற்கு மாறுதல் வந்துவிட்டது.

    கடைசி ஆறுமாதங்கள் ஹாஸ்டலில் இருந்து முடித்துவிட்டு வருவதற்குள் அவரின் மரணச்செய்தி வந்துவிட்டது.

    ஊருக்கு அருகில் இருப்பதால், தாத்தா, பாட்டி வந்து போவதற்கு, தங்குவதற்கு வசதியாக தனி வீடு வாங்கினார்.

    பெற்றவர்களின் பெயரில் எழுதுகிறேன் என்று சொன்னவரை, சாரதா பெயருக்கு எழுது அவளுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியவர்கள் தாத்தாவும் பாட்டியும்.

    அவரின் மறைவிற்குப் பிறகு, நீ படிப்பை முடித்தவுடன் வேலை பார்ப்பதற்கு வசதியாக இருக்கும் நாம் பெங்களூருவிலேயே இருந்துவிடலாம் என்று கூறிய அம்மா, நான் படிப்பை முடித்துக் கொண்டு வருவதற்கு முன்பே அந்த வீட்டை விற்றுவிட்டு தாத்தா, பாட்டியுடன் வந்துவிட்டார்.

    எப்பொழுது ஊருக்கு வந்தாலும் இரண்டு நாட்களுக்குமேல் தங்காத அவர் இனி வாழ்நாள் முழுவதும் இங்கிருக்கப் போகிறாரா? ஏன் இந்த மாற்றம்?

    மும்பையில் இருந்து வந்து ஒரு மாதம் கூட கழியவில்லை, அத்தனை பிடித்தமில்லாது போயிற்று எனக்கு இந்த கிராமம். அந்த ஊரின் பரபரப்பும், இந்த ஊரின் அளவற்ற அமைதியும் இருவேறு துருவங்களாகத் தெரிந்தன. இனி எப்பொழுதும் இந்த இடம்தான் நமக்கு என்று அம்மா ஏன் முடிவெடுத்தாள்.

    அம்மா... எத்தனை அழகானவள். அப்பாவிற்கு எங்கு மாறுதல் கிடைத்தாலும், சிறிது நாட்கள் பழகிய பிறகு, இந்த வார்த்தைகள் கண்டிப்பாக சொல்லப்படும். அவர்களின் நட்பு வட்டாரத்திலும், அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும்.

    தென்னிந்திய பெண்களுக்குரிய அழகு உங்களிடம் குவிந்திருக்கின்றது மிசஸ் சரவணன் இவ்வார்த்தைகளைக் கேட்டு அப்பாவும் அம்மாவும் ஒருவருக்கொருவர் பார்த்து புன்னகைப்பர்.

    மாதத்திற்கொருமுறை கிட்டி பார்ட்டி, தோழிகள் வட்டம், பிறந்தநாள் பார்ட்டி, என்று ஓயாமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த அம்மா, இன்று அமைதியாகிவிட்டாள்.

    மாமனார், மாமியாரின் வார்த்தைகள் வேதமாகிவிட்டன.

    எங்களுக்கு ஒரே பிள்ளை நீதான் தீட்சண்யா, இவ்வுலகத்தில் இருக்கும் அனைத்தும் உனக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்று கண்ணில் பட்ட வகுப்புகளுக்கு அனைத்திற்கும் அனுப்பியவள்.

    ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை, எல்லா இடங்களிலும் உன் பங்கு இருக்க வேண்டும் என்று சொல்லி, சொல்லி உரமேற்றியவளின் எண்ணங்களில்தான் எத்தனை மாற்றம்.

    காரணத்தைக் கண்டுபிடிக்கும் முன், இந்த அதிர்ச்சியிலிருந்து நான் வெளிவரவேண்டும். அப்பாவின் மரணம், அம்மாவின் மாற்றம், கிராமத்து சூழல் அனைத்தும் மிரட்டியது என்னை. என்ன செய்வது? என்ன செய்வது? என்ற யோசனை என்னை உறங்கவிடாமல் விரட்டியது. எங்காவது தொலை தூரத்தில் இருக்கும் தோழிகளின் வீட்டிற்கு சென்று வருவோமா? மருண்டு கிடக்கும் மனதிற்கு மாற்றம் கிடைக்குமா? எங்கு செல்வது. படிப்பு முடிந்தவுடன் அனைவருமே அழைப்பு விடுத்திருந்தனர்.

    எங்கு செல்லலாம், அனைவரின் ஊர்களையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்தினேன்.

    கூட படித்தவர்களில் சில பேர் வட இந்தியா, சில பேர் அதற்கும் மேல் ஹிமாச்சலபிரதேசம், சில பேர் மட்டும் தென்னிந்தியா, அதுவும் அவர்களின் பெற்றோர் மத்திய அரசுப் பணியில் இருந்தவர்கள் இல்லையென்றால் இவர்கள் ஏன் தங்களின் சொந்த மாநிலத்தைவிட்டு வெளியில் வரப் போகிறார்கள்.

    கேட்டால் மொழிப்பிரச்னை என்று ஆயிரத்தெட்டு காரணம் வரும். வேறெங்கு செல்வது. ரஞ்சிதா அமுஜோசிங், மணிப்பூர். அங்கு செல்லலாமா? சரி வருமா?

    தீபாவளி, விநாயகர் சதுர்த்தி என்று பண்டிகை வரும் சமயங்களில் அனைவரும் அவரவர்கள் ஊருக்கு சென்றுவிடுவார்கள், ஹாஸ்டலையும் ஒரு வாரத்திற்கு மூடிவிடுவார்கள். அப்பொழுதெல்லாம், எங்களின் வீட்டிற்குதான் அவளை அழைத்து வந்திருக்கிறேன். வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு செல்பவள் அவள்.

    அதிகமாக யாரிடமும் பேச மாட்டாள், அவள் உண்டு அவள் படிப்பு உண்டு. அவளின் உருவம், ஆங்கில உச்சரிப்பு இங்கிருக்கிறவர்களுக்கெல்லாம் வித்தியாசமாக இருக்கும். சின்ன உருவம், சிவந்த நிறம், இமைகளைக் கீறிவிட்டதைப் போல இருக்கும் சிறிய விழிகள். நடை உடை பாவனை அனைத்திலும் வித்தியாசம்.

    படாடோபமாக இல்லாமல் அமைதியாக இருந்தவளுக்கு வேகமாக இயங்கும் மும்பையையும் பிடிக்கவில்லை, அங்கிருப்பவர்களுக்கு இவளின் நிதானமும் ஒத்துவரவில்லை.

    அப்பாவின் மாறுதலுக்குப் பின் கடைசி ஆறுமாதங்கள்தான் ஹாஸ்டலில் தங்க வேண்டிய அவசியம் இருந்தது. அவளுடன் யாரும் அறையை பகிர்ந்து கொள்ள விரும்பாததால் தனியாக தங்கி இருந்தவளின் அறையில்தான் தங்கும் பாக்கியம் கிடைத்தது. அப்படித்தான் சொல்ல வேண்டும் அந்த நிகழ்வை.

    எப்பொழுதாவது மற்ற தோழிகளின் அறைக்கு சென்றிருக்கிறேன், அனைத்து மாணவிகளின் அறைக்குள்ளும் நுழைந்து பார்த்தால், குவியல், குவியல்களாக துணி மூட்டைகள், பஜாரில் ரோடில் விற்பவர்கள் போட்டிருப்பார்களே அதுபோல இருக்கும்.

    வெளியில் சுற்றிய நேரம் போக, அறைக்குள் நடப்பதற்கு கால் தடுக்கினால், இல்லை துவைக்க விரும்பினால் அந்த குவியல்கள் காணாமல் போகும்.

    இப்பொழுது நிரந்தரமாக ஆறுமாதத்திற்கு என்று அவளின் அறைக்கு சென்ற எனக்கு ஆச்சரியம், இத்தனை நேர்த்தியாக அறையை வைத்திருக்க முடியுமா? அங்கிருந்த அனைத்துப் பொருட்களும் ஒரு ஒழுங்கிலேயே அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

    அந்தந்தப் பொருள், அதனதன் இடத்தில். படுக்கைவிரிப்புகள் அழகாக அயன் செய்து வைத்ததைப்போல, அதற்குமேல் கொசுவலை, வித்தியாசமான அமைப்பில், சினிமாக்களில் வரும் அலங்கார படுக்கை அறையில் இருப்பதைப்போல அதையும் சீராக மடக்கி வைத்திருந்தாள். மூன்று புறமும் மூடிய நிலையில், ஒரு புறம் மட்டும் திறந்து படுக்கைக்குள் சென்றுவிடலாம், அறைக்குள் ஒரு சிறிய அறைபோல இருந்தது அவளின் படுக்கையின் அமைப்பு.

    ஓரளவுக்கே அறையை நேர்த்தியாக வைத்திருக்கும் எனக்கும், அவளுக்கும் எத்தனை வேறுபாடுகள். வீட்டில் அம்மாவோ, வேலை ஆட்களோ செய்வார்கள். அவளுடன் இருந்த காலங்களில் நிறைய கற்றுக் கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.

    வீட்டிற்கு வந்தது ஓரிரண்டு சமயங்கள் என்றாலும் அவள் ஊருக்கு செல்வது நல்லதா? எப்பொழுதும் அவள் ஊரைப் பற்றி அவள் சொன்னதில்லை.

    அங்கு செல்வது பாதுகாப்பில்லை என்று அம்மா ஏன் சொல்கிறாள். யார் என்ன சொல்லி இருப்பார்கள், அவளுக்கு எப்படித் தெரியும் அந்த ஊர் பாதுகாப்பில்லை என்று, எப்பொழுதாவது பேப்பரில் வரும் குண்டு வெடிப்பு செய்திகளைப் பார்த்து பயந்து சொல்லி இருப்பாளோ? கேள்விகளாக வந்தது மனதில்...

    அப்பாவின் மறைவிற்குப் பின் எப்பொழுதும் வெறும் கேள்விகள்தான் நிறைந்திருக்கிறது மனதில்.

    ஆனால் இங்கிருப்பதும் மூச்சு முட்டுவதைப்போல இருக்கிறது, குறைந்தது பத்து நாட்களேனும் வெளியில் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து அம்மாவிடம் சொன்னதில் இருந்து ஆரம்பித்ததுதான், இந்த அழுத்தமான பெயர் உச்சரிப்பு.

    எப்படியாவது பேசி வெளியில் சென்றுவிடவேண்டும் என்று எண்ணிக் கொண்டே மாடி அறையில் இருந்து கீழிறங்கினேன்.

    என்னம்மா சொல்கிறாள்? தாத்தாவின் குரல்.

    பிடிவாதமாக இருக்கிறாள் மாமா

    ஏம்மா, நாங்க சொல்லவா! இது பாட்டியின் குரல்.

    இல்லை அத்தை, அவள் அப்பா இருந்தவரை எதற்கும் மறுப்பு சொன்னதில்லை, இப்போ இதுபோல சொல்வது அவளால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏதோ கட்டுப் படுத்துவதைப்போல உணர்கிறாள்.

    அவள் சொல்லுவதும் சரிதானே அம்மா. திடீரென்று அதையும், இதையும் செய்யாதே என்றால் எப்படி முடியும். பலவருடப் பழக்கம் ஒரு நாளில் மாறாது.

    அவளுக்கே புரியவேண்டும், நாம் சொல்லிக் கொடுத்தால் சரி வராது.

    காலமும், நேரமும் கற்றுக் கொடுக்கும். சரி போகட்டும் விடு என்றார் தாத்தா.

    ஓடிப்போய் தாத்தாவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது எனக்கு.

    இருந்தாலும் நிதானமாக இறங்கிச் சென்றேன். நான் வருவதை முதலில் பார்த்தவர் பாட்டிதான், வாடி பாப்பு, இப்படி பிடிவாதம் பிடிக்கிறியே, உனக்கு என்ன வேண்டும் என்று சொல்லு இங்கேயே செய்து கொள்ளலாம் மனசு கேட்காமல், தாத்தாவின் வார்த்தைகளையும் மீறி சொல்லிக்கொண்டிருந்தாள் பாட்டி.

    சும்மா இருக்கமாட்டே, அவள் விருப்பப்படி செய்யட்டும் என அதட்டிய தாத்தா, பாப்பா இன்னும் ஒரு வாரம் கழித்து வரேன்னு உன் தோழிக்கு ஒரு போன் போடும்மா என்றார்.

    ப்பா... என்ன ஒரு விடுதலை. சந்தோசம் குமிழியிட்டது மனதில்.. சரி தாத்தா என்று வேகமாக ஓடினேன் அவளை அழைப்பதற்கு.

    நேற்றில் இருந்து ஒரே பரபரப்பு மனதில், இன்று ஒருநாள்தான் வீட்டில் இருக்கவேண்டும். நாளை இந்த நேரத்தில் வீட்டில் இருந்து சென்னைக்குப் பயணம், அங்கிருந்து இரவு ரயில் கொல்கத்தாவின் ஹவுரா நகரத்திற்கு...

    தாத்தா தோழிக்கு போன் போடு என்று சொன்னவுடன், அவளைத் தொடர்பு கொண்ட பொழுது எத்தனை சந்தோசம் அவளுக்கு...

    ரியல்லி, ஆர் யூ கமிங் ஹியர்... வெல்கம்... வெல்கம்!

    வென் ஆர் யூ கமிங்.

    நாட் எட் பிளான்ட்

    ஓகே... ஓகே... ஜஸ்ட் இன்போர்ம் மீ அபௌட் யுவர் பிளான் டீடைல், ஐ வில் கம் அண்ட் பிக் அப் யூ இன் தி ஏர்போர்ட்.

    அவள் சொல்லிய தகவலை தாத்தாவிடம் அறிவித்த பொழுது, மனது முழுவதும் சிறகடிப்பதைப் போல உணர்ந்தேன்.

    வருங்காலத்தின் நிகழ்வுகளை எதிர்கொள்ள, என்னைத் தயார் படுத்திக் கொள்ள இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டே ஆகவேண்டும் என்று மனம் முடிவு செய்திருந்தது.

    அன்றிலிருந்து பயணத்திற்கு வேண்டிய அனைத்தையும் தயார் செய்யத் துவங்கினேன், அமைதியாக வீட்டில் இருந்த மூவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    பயணத்திற்கான டிக்கெட் மட்டும் தான் பார்த்துக் கொள்வதாக அம்மா சொன்னார். அப்பாவின் பணி மாற்றத்தின் பொழுது பயணத் திட்டம் தயாரிப்பது எப்பொழுதும் அம்மாதான்.

    ரயில் பயணமா, விமானப் பயணமா, எந்த ரயில் எத்தனை மணிக்கு அனைத்திலும் அவரின் கைவண்ணம்தான் இருக்கும், அவரின் பயணத் திட்டம் அத்தனை நேர்த்தியாக இருக்கும். எங்கும் தடங்கல் வராது யோசித்து செயல்படுவார், குறிப்பிட்ட நேரத்திற்கு எங்கள் இருவரையும் தயார்படுத்தி அழைத்து செல்வதுவரை அவரேதான் செய்வார்.

    அதனால் அவர் பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை இருந்தது.

    எப்படி செல்ல விரும்புகிறாய் என்று நடுவில் ஒருமுறை கேட்டார்,

    கொல்கத்தா வரை ரயில் அதற்குப் பின்பு விமானப் பயணம். செல்வதே ரிலாக்ஸ் செய்யத்தானே அவசரமாக ஏரோப்ளேனில் சென்று என்ன செய்யப்போகிறேன், குரலில் கொஞ்சம் விரக்தியும், சோகமும் எட்டிப்பார்த்தது. ரஞ்சிதாவும் அப்படித்தான் சொன்னாள் என்றேன்.

    உன் விருப்பம் என்று சொல்லிவிட்டு சென்றவர்...

    நாளை கிளம்ப வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்னார்.

    நம் ஊரில் இருந்து சென்னை, சென்னை எக்மோரில் இருந்து இரவு திருச்சிராப்பள்ளி - ஹவுரா எக்ஸ்பிரஸ். கொல்கத்தாவில் இருந்து மணிப்பூர் மாநிலத்திற்கு விமானப் பயணம். மிகப் பெரிய பயணத்தின் ஆரம்பம், அதுவும் தனியாக எத்தனை சாதனை! மனம் ஆர்ப்பரித்தது...

    மனதின் சந்தோசம் என் செயல்களில் பிரதிபலித்திருக்க வேண்டும்,

    Enjoying the preview?
    Page 1 of 1