Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Thogai En Tholil
Un Thogai En Tholil
Un Thogai En Tholil
Ebook287 pages1 hour

Un Thogai En Tholil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உறவு சங்கிலிகளின் கணுக்கள் நெகிழும் ஆனால் அறுந்துபோவதில்லை. ஒரு திருமணத்தில் பிரிந்த உறவுகள், மற்றொரு மணத்தில் இணையும் கதை ...

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580142707018
Un Thogai En Tholil

Read more from Chitra.G

Related to Un Thogai En Tholil

Related ebooks

Reviews for Un Thogai En Tholil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Thogai En Tholil - Chitra.G

    https://www.pustaka.co.in

    உன் தோகை என் தோளில்

    Un Thogai En Tholil

    Author:

    சித்ரா.ஜி

    Chitra.G

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chitra-g

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1.

    ஒரு மழை நாளின் இளங்காலையில், எழும் பொழுதே ஒரு உற்சாக மன நிறைவுடன் எழுந்தாள் தர்ஷினி என்று அழைக்கப்படும் பிரியதர்ஷினி.

    மழைக்குப் பிறகான நாள் எத்தனை இனிமை நிறைந்தது.

    வெயிலின் தாக்கத்தால் சோம்பலில், சுறுசுறுப்பு இல்லாமல் இருந்த உடலும் மனமும் உற்சாகம் கொள்வது புதிதாகப் பிறந்தது போல இருந்தது.

    மிதமான குளிருடன் இணைந்த காற்று வீசியது.

    சுற்றிலும் உள்ள மரம் செடி கொடிகள் குளித்ததைப்போல் பளீரிட்டு, தங்களின் புகை படிந்த இலைகளில் இருந்து காணாமல் போன பச்சையை திரும்பப் பெற்று பச்சைக் குழந்தையாய் காட்சி அளிப்பது மனதை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்வதாக இருந்தது.

    அதிலும் மிகப்பெரிய பயணத்தின் பலனுடன், ஈட்டிய வெற்றியில் மனம் மகிழ்ந்து இருக்கும் நிலையில் இந்தக் காலை புதியதுதான் தர்ஷினிக்கு.

    பல வருடங்களுக்குப் பிறகு அந்த ஏகாந்த மன நிலையில் தன் அறையின் ஜன்னலுக்கு அருகில் வந்தவள், வீட்டைச் சுற்றி இருக்கும் தோட்டத்தில் மலர்ந்திருந்த மலர்களையும், அதன் பல வண்ணங்களையும் ரசித்தாள்.

    அப்பாவிடம் சொல்லி அவள் வைத்ததுதான், எடுத்துக் கொண்ட லட்சியத்தின் காரணத்தால் சிறிது காலம் கவனிக்காமல் இருந்தவளின் கண்ணிற்கு, இலட்சியத்தை அடைந்தவுடன் அவள் ஆரம்பித்த விஷயங்கள் நினைவுக்கு வரலாயின.

    பெரிய ஆசைகளுக்கு முன்னால் சின்னச்சின்ன ஆசைகள் மறைவது இயல்புதானே, மலைகளுக்குப் பின்னால் குன்றுகள் மறைந்துதானே போகும்.

    அதுவும் அவளின் ஆசை, கனவு எல்லாம் மிகச்சிறந்த IAS (INDIAN ADMINISTRATIVE SERVICE), அதிகாரி ஆகிவிட வேண்டும், அதுவும் தனது மாநிலத்திலேயே பணி புரியவேண்டும் என்பது. அவள் விரும்பிய தமிழ்நாடு CADRE கிடைக்க வேண்டுமானால் தேசிய அளவில் குறிப்பிட்ட இடம் பெற்றால்தான் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் எத்தனை விதி முறைகள், எல்லாவற்றையும் தாண்டி அவள் படித்த இடத்திலேயே கிடைத்து இருப்பது இன்னும் கூடுதல் சந்தோசத்தைக் கொடுத்தது.

    இன்று அவளின் கனவு நிறைவேறிய நாள். படிப்பு, தேர்வு, பயிற்சிகள் எத்தனை! எத்தனை! நேற்றுதான் அனைத்துப் பயிற்சிகளையும் முடித்து அவள் அப்பா தாசில்தாரராக இருக்கும் மாவட்டத்தின் சப் கலெக்டர் ஆக பணி நியமனம் பெற்று வீடு திரும்பினாள். இதுவும் பயிற்சிக்கான காலம்தான் என்றாலும் நேரடியாக மக்களுடன் தொடர்பில் இருக்கலாம்.அவர்களைப் பற்றி, அவளுக்கான பொறுப்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கான காலகட்டம்.

    அடைந்த வெற்றி இனி வரும் காலத்தின் அடிப்படை என்றாலும், இது இல்லாமல் முடியாது என்று நினைத்தவளாய் , இன்னொரு ஜன்னலின் அருகே வந்து நின்றவள், வீட்டின் முகப்பில் நின்று கொண்டு அப்பாவும், கணேசன் அண்ணாவும் ஏதோ வேலை செய்வதைப் பார்த்தவளுக்கு, என்ன இது! இரண்டு பேரும் காலையில் ஆரம்பித்துவிட்டார்கள் என எண்ணியவாறே,

    தன் அறையைவிட்டு ஹாலைக் கடந்து வெளியில் வந்தாள்.

    குட் மார்னிங் பா

    குட் மார்னிங் டா.... தர்ஷி… நன்றாக தூங்கினாயா?

    எஸ் பா… பல வருடங்களுக்குப் பிறகு.... சொல்லிய மகளைப் பார்த்து புன்னகைத்தவர், இது ஆரம்பம்தானே, இன்னும் எவ்வளவோ காத்திருக்கிறது என்றவரைப் பார்த்தவள் அது நாளை மறுநாள் தானே… இன்று முழுவதும் நமக்காக என்றவள்

    கணேசண்ணா! என்ன செய்கிறீர்கள் என்று அவன் கையில் இருந்ததை எட்டிப் பார்த்தாள்.

    பிரியதர்ஷினி IAS. என்று அவள் பெயர் தாங்கிய பலகை. அப்பா! என்ன இது, இன்னும் வேலையில் சேரவில்லை, அதற்குள் ஏன்?

    அதனால் என்னம்மா..! நீ என்று ட்ரைனிங்ல சேர்ந்தாயோ, அன்றிலிருந்து நீ IAS தான்.

    ஓகே ப்பா, என்றவள் கணேசனிடம், அண்ணா, எங்க பிள்ளைகளைக் காணோம், பள்ளிக்குத் தயார் ஆகிறார்களா? அண்ணி என்ன செய்கிறார்கள் இன்னும் அவர்களை எல்லாம் பார்க்கவில்லை என்றாள்.

    ஆமாம் பாப்பா, அவர்களுக்கும் ஸ்கூல் திறந்துவிட்டது இல்லையா? அண்ணி அவர்களை தயார் செய்து கொண்டு இருக்கிறாள். சின்னவன் ரொம்ப குறும்பு, அவன் பின்னால் செல்வதற்கே அவளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. பெரியவன் பிரச்னையில்லை, அவனை சமாளித்துக் கொள்ள முடிகிறது என்றவன் ‘பாலகிருஷ்ணன் தாசில்தார்’ என்கிற பெயர் பலகைக்குக் மேல், அவளின் பெயரை வைத்து சரி பார்க்கத் தொடங்கினான்.

    அண்ணா…என்ன செய்யுறீங்க, அப்பா பெயருக்குக் கீழே வையுங்கள் என்று பதறினாள்.

    இடைமறித்த பாலா தர்ஷி, உனக்கு அப்பாவா இருந்தாலும், உன்னுடைய படிப்பு, அதற்கென்று இருக்கும் மரியாதை அதற்கு நாம் கொடுக்க வேண்டும்.

    மீண்டும் ‘அப்பா!’ என்றவளை திரும்பி பார்த்தவரிடம் எதுவும் சொல்லத் தோன்றாமல் மௌனமாகினாள்.

    வேலை முடிந்தவுடன் கணேசன் அவன் வீட்டிற்கு செல்ல, இவர்கள் இருவரும் வீட்டினுள் நுழைந்தனர். காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டும் என்று நினைத்த வேலை முடிந்த திருப்தியில் இருந்த பாலா, தர்ஷி உன்னோட கல்லூரிக்கு எத்தனை மணிக்குப் போக வேண்டும் என்றார்.

    அவள் IAS தேர்வில் வெற்றி பெற்று பேப்பரில் செய்தி வந்த நாள் முதல் படித்த பள்ளி, கல்லூரியில் இருந்து அழைப்புகள், அவளின் வெற்றி அனைத்து மாணவர்களுக்கும் ஒரு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும் என நினைத்து அழைத்திருந்தார்கள். பயிற்சி காலம் முடிந்த பிறகு வருகிறேன் என்று சொல்லி இருந்தாள், எப்படி சரியாக அவள் வரும் நாளை கணித்து அழைத்திருந்தார்கள் என்பது புரியாத புதிராக இருந்தது.

    எப்படியும் நாளை மறுநாள் பணியில் சேர இருப்பதால் போய்விட்டு வந்துவிடுவோம், இல்லையென்றால் அதற்கென தனி நேரத்தை ஒதுக்க வேண்டும். புதிய பணி, வேலை சூழல், அனைத்தும் எப்படி இருக்கும் என்று அந்த இடத்திற்கு சென்றால்தான் தெரியும் என்பதால், அப்பா இப்படி ஒரு அழைப்பு வந்து இருக்கிறது, நீ இங்கு வந்த உடனே செல்ல வேண்டியிருக்கும், பயணக் களைப்பில்லாமல் போக முடியுமா? என்று கேட்டவுடன், அனைத்தையும் யோசித்து பார்த்து சரி என்று ஒப்புக் கொண்டாள்.

    மதியம் இரண்டு மணிக்குதாம்பா! பங்க்ஷன், ஒரு அரை மணி நேரம் முன்னால் சென்றால் போதும் என்றவளைப் பார்த்தவரின் கண்களில்தான் எத்தனைப் பெருமை. தன் கைகளில் சின்னஞ்சிறிய மலராக அவளை முதன் முதலில் ஏந்திய நாள் நினைவுக்கு வந்தது. மனைவி கருத்தரித்த நாள்முதல் பெண்மகவாக வேண்டும் என்று ஆழ்ந்த எதிர்பார்ப்புடன் இருந்தவர். தான் நினைத்த படியே பெண்ணாக பிறந்தவுடன் தனக்கே தனக்கு என்று வந்தவளை ஆராதித்து வளர்த்தார் என்றுதான் சொல்லவேண்டும். இன்று அந்த செல்ல மகள் தனக்கும் மேலதிகாரி, பெருமிதத்தில் நெஞ்சம் பொங்கியது.

    வாஞ்சையுடன் மகளைக் கண் கொட்டாமல் மகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தவரை ரசித்துக் கொண்டே தர்ஷினியின் அம்மா யசோதை,

    போதும், போதும் மகளை பார்த்து பூரித்தது, முகம் கழுவி வாங்க இருவரும் காபி குடிக்கலாம் என்றவாறே உணவு மேசையில் கப்களை வைத்து, அருகில் மற்றொரு தட்டில் சில பிஸ்கட்களையும் வைத்தார்.

    தயாராகி வந்தவர்கள் மேசையில் அமர்ந்ததும், காபி கொடுத்தவரிடம். ஏன் யசோ, என் மகளை நான் பார்க்கக் கூடாதா?

    யார் சொன்னது நன்றாகப் பாருங்கள் என்றவர், அது என்ன என் மகள்… நம் மகள் என்றவரின் குரல் தழுதழுத்தது, மனைவியின் குரலில் உடனே மாற்றத்தைக் கண்ட பாலா நிமிர்ந்து பார்த்தார்.

    அவரையே பார்த்துக் கொண்டிருந்த யசோதையின் கண்களில் கண்ணீர், நன்றி உணர்ச்சியுடன் கூடிய முகம் விகசித்த ஒரு பார்வை.

    பாலாவுக்கா தெரியாது, அவர் மனைவியின் மனதில் ஓடும் எண்ணங்களை! அதனை அறிந்தவர் போல் உடனே அவரின் முகமும் மாறியது, யசோவைப் பார்த்தவரின் மனதில், அவள் இத்தனை வருடங்களாகியும் அதை மறக்கவில்லை போல, இன்னமும் பழையதை நினைத்து, அன்பால் தன் கூட வாழாமல் நன்றியுணர்ச்சியுடன் தான் வாழ்கிறாளா, என்று மனம் சுணங்கியது.

    கணவரின் அமைதியும், அவரின் முக மாறுதலையும் கண்ட யசோதையும், ஏதோ தவறு செய்தவள் போல, இல்லை... இல்லை... என்பதாக தலையாட்டினாள், நீங்கள் நினைப்பதைப்போல இல்லை என்றவராக தலையாட்டியதும்தான் இயல்பு நிலைக்கு வந்தார் பாலா.

    பேசிக் கொண்டிருந்த பெற்றவர்களின் திடீர் மௌனம் தர்ஷினிக்கு எதையோ உணர்த்த, காபி கப்பில் இருந்து தலையை நிமிர்த்தியவள், தாயின் கலங்கிய கண்களைப் பார்த்தாள், உடனே தந்தையையும் பார்த்தவள், அம்மா உங்கள் இருவருக்கும் பல முறை சொல்லியாயிற்று என்ன இது, சிறு பிள்ளைகள் போல எப்பொழுதும் அதையே நினைத்துக் கொண்டு என்று சொல்லியவள் எழுந்து வந்து தாயின் கழுத்தை இறுக்கிக்கொண்டு பின்புறமிருந்து தாயின் மீது சாய்ந்து கொண்டாள்.

    மகளின் பரிவான அணைப்பு, யசோதைக்கு அந்த நிமிடத்தில் தேவையான ஒன்றாக இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே, இன்னும் ஒரு ஆள் நம் கலகலப்பில் குறைகிறதே, ஏன் என்ஜினீயர் சார், இன்னும் எழுந்திருக்கவில்லையா? என்று இறுகி இருந்த சூழ்நிலையை மாற்றினார் பாலா.

    அப்பா, நான் அப்பவே எழுந்தாச்சு என்று கூறியவாறே உணவு மேசைக்கு அருகில் வந்த செழியன் ஒரு நாற்காலியை இழுத்து அமர்ந்தான்.

    கலெக்டர் மேடம் என்ன சொல்றாங்க என்றவாறு அக்காவை வம்புக்கு இழுத்தவன், தனக்கான காபியை எடுத்துக் கொண்டான்.

    ம்ம்... அவங்க தம்பிக்கு இரண்டு அடி கொடுக்கணும் என்று நினைக்கறாங்க என்றவள், செழியா! பாலாம்மாவுக்கு போன் செய்யலாமா? அப்பா, பாலாம்மாவும் , பாலாப்பாவும் எழுந்திருப்பார்களா, தொந்தரவு ஆகுமா இப்போ அழைத்தால் என்று சிறு பிள்ளையாய் தந்தையின் அனுமதியைக் கேட்டாள்... தன் தாத்தா, பாட்டியுடன் பேசுவதற்கு.

    பாலகிருஷ்ணனின் தாய், தந்தை தங்களை அவரின் அப்பா, அம்மாவாக அடையாளம் காட்டியே அழைத்துக் கொள்வார்கள். ஊரில் அவர்களை அழைப்பவர்களும் அப்படியேக் கூப்பிட அதைப் பார்த்தும், கேட்டும் வளர்ந்த பேரப் பிள்ளைகள் இருவரும் தாத்தா, பாட்டி என்று அழைப்பதை விடுத்து அவர்கள் போலவே அழைக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் மாற்றி சொல்லிக் கொடுத்த யசோதை சலித்துதான் போனார். அவர்கள் மாறினால்தானே பிறகு அதுவே நிலைத்துவிட்டது.

    தர்ஷினி, அவர்கள் உன்னோட அழைப்பிற்கு காத்திருப்பார்கள், நேற்று நீ வீடு வந்து சேர்வதற்குள் பலமுறை போன் வந்தது, நான்தான் இரவு வெகு நேரமாகிவிட்டது, காலையில் எழுந்தவுடன் அழைக்கச் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன், கூப்பிடுங்கள் என்றார் யசோதை தன்னை அதற்குள் நிலைபடுத்திக் கொண்டவராய்..

    நான் ஏன் இவ்வளவு அவசரமாக கூப்பிடுகிறேன் தெரியுமா? என்ற தர்ஷினியை பார்த்த பாலாவும், யசோதையும், வேண்டாம் தர்ஷினி வந்தவுடன் உன் வேலையை ஆரம்பிக்காதே, பாலாம்மாவிடம் எங்களால் பேச்சு கேட்கமுடியாது என்றனர் ஒருமித்தக் குரலில்.

    ம்ம்ம் அந்த பயமிருக்கட்டும், இருந்தாலும் சொல்லுவேன் என்றவளை பதற்றத்துடன் பார்த்தவாறே அமர்ந்திருந்தனர் பெற்றவர்கள்.

    போன் செய்த செழியன், அழைப்பு சென்று கொண்டிருக்கும் பொழுதே, நான் எப்பொழுதும் பேசுகிறேன், இந்தா இன்று நீ முதலில் பேசு, நீதான் VIP என்று அக்காவிடம் போனைக் கொடுத்தான்.

    பாலாம்மா! எப்படி இருக்கிறீங்க

    ம்ம், நான் பத்திரமா வந்துட்டேன். நல்லா இருக்கேன்

    இன்று இல்லை, அடுத்தவாரம் தான் சேரனும்.

    பாலாப்பா, எங்க

    இத்தனைக் காலையிலா... சரி...சரி… வந்தவுடன் சொல்லுங்கள் என்று அங்கிருந்து வந்த கேள்விகளுக்கு பதில் அளித்தவள்,

    ம்ம்... இங்கேதான் இருக்கிறாங்க என்று யசோதையிடம் போனைக் கொடுத்தாள்.

    அத்தை, தாயைத் தேடும் கன்றாக இருந்தது யசோதையின் அழைப்பு. சிறிது நேரம் பேசியவரை புதிதாகக் காண்பவர்கள், மாமியாரிடம் பேசும் மருமகளாக பார்க்க மாட்டார்கள். அத்தனை இணக்கம் இருக்கும் இருவருக்குள்ளும்.

    பேசி முடித்தவரைப் பார்த்த தர்ஷினி, பாலாப்பா ஏன் இத்தனை காலையில் வெளியில் செல்கிறார்கள் , நீங்கள் சொல்லுங்கள் அப்பா! என்று தன் புகார் அறிக்கையை இங்கு படித்தாள்.

    அக்கா, நீ உண்மையில் கலெக்டருக்கு படித்துவிட்டு வந்தாயா! ஒன்றாம் வகுப்பு மாதிரி இங்கும் அங்கும் மாற்றி மாற்றி வத்தி வைக்கும் வேலையை செய்கிறாய்.

    நான் ஒன்றாம் வகுப்புதான் படிக்கிறேன் அது இருக்கட்டும், ‘உன்னோட கேம்பஸ் இண்டர்வியூ தயாரிப்பு GATE exam preparation எல்லாம் எப்படிப் போகுது! என்று நீ சொல்லு’... என்றவளின் பேச்சில் உடனே சம நிலைக்கு வந்தார்கள் அனைவரும்.

    இண்டர்வியூக்கு நல்லா போகுது, எப்படியும் முதலில் வரும் கம்பெனியில் செலக்ட் ஆகிவிடுவேன். GATE வேண்டாம்க்கா, நான் CAT எழுதறேன்.... எனக்கு MBA தான் போகணும் என்றான்.

    நீதானே சொன்ன, என்ஜினியரிங்ல மேலே படிக்கிறேன் என்று? இப்போ என்ன? என்றாள்.

    இல்லைக்கா... ஒரு இரண்டு வருடம் வேலை பார்க்கிறேன், கூடவே CAT தயார் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நீயும், அப்பாவும் அரசாங்கத்திற்கு சேவை செய்யுங்கள். நான் கார்ப்பரேட்டுக்கு போறேன் என்று சீரியஸ் ஆக சொல்லியவன் அங்கிருந்து ஐயா வெளிநாடுகளுக்கு எல்லாம் பறந்து செல்வேன், என் சார்பில் நீங்களும் வரலாம் என்று விளையாட்டாகவும் சொல்லி முடித்தான்.

    அப்பாவும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள், சரி உன் இஷ்டம் என்றார்கள் ஒருமித்தக் குரலில்.

    என்ன அரசு தனிப் பெரும்பான்மையில் செயல் படுகிறது போல என்று சிரித்தவனுக்கு,

    ஆமாம்! அரசு என்றால் சும்மாவா! உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் அரசுப் பிரதிநிதிகள் நாங்கள் இல்லையாப்பா என்றாள் அப்பாவையும் துணைக்கு அழைத்து.

    ஆமாம் தர்ஷி, என்று தலையாட்டியவரைப் பார்த்த யசோதை, செழியா, எப்பொழுதும் அவள் சொல்வதற்கு தலையை ஆட்டுவது மட்டும்தான் உங்க அப்பாவுக்கு வேலை, உனக்கு கல்லூரிக்கு நேரம் ஆகிறது கிளம்பு

    தர்ஷிம்மா, நீயும் போய் ஓய்வெடு, பயணக் களைப்புடன் விழாவிற்கு போனால் நன்றாக இருக்காது என்று மகளையும் அனுப்பினார்.

    மக்கள் இருவரும் எழுந்து சென்றவுடன், மனைவியைப் பார்த்த பாலா, ‘ஏன்! யசோ நான் பிள்ளைகளுக்கு மட்டும்தான் தலையாட்டுகிறேனா?’

    பாவம்போல கேட்டவரின் அருகில் வந்த யசோதை, அவரின் தோளில் தட்டி, அது உங்களுக்குதான் தெரியும், எனக்கு தெரியாது சாமி என்றவர் புன்னகையுடன் நீங்களும் போய் தயாராகுங்கள், வேலை இருக்கிறது அலுவலகம் சென்றுவிட்டு மதியம் விழாவிற்கு வந்துவிடுகிறேன் என்று சொன்னீர்களே என்று மேலும் உத்தரவிட்டு தானும் உள்ளே சென்றார்.

    விரும்பி சேராமல், விதி வழி தன்னுடன் சேர்ந்த நாளில் இருந்து, தங்களின் குடும்பத்தை மட்டுமே உறவாக எண்ணி வாழ்பவளை கண்களால் பின் தொடர்ந்த பாலாவின் மனதில் அளவில்லா நிறைவே இருந்தது.

    அதே சமயத்தில் பெரிய பங்களாவும் இல்லாமல், சிறிதாகவும் இல்லாத அவ்வீட்டின் காம்பவுண்ட் உள்ளே அவுட் ஹவுஸ் போல் இருந்த மற்றொரு சிறிய வீட்டிற்குள் நுழைந்த கணேசனைப் பார்த்த அவனின் மனைவி மாலதி, என்னங்க தர்ஷினி பாப்பா எப்படி இருக்கு, கலெக்டர் படிப்பெல்லாம் முடித்துவிட்டு வந்திருக்காம், உங்ககிட்ட பேசிச்சா.. என்றவள் தலையில் தட்டிக் கொண்டே நான் ஒரு மட்டி, நீங்கதானே நேற்று இரவு அழைத்து வந்தீர்கள், உங்களிடம் பேசாமலா இருந்திருக்கும், என்னையும் பிள்ளைகளையும் கேட்டதா? நானும் இன்னும் பார்க்கவில்லை, எங்க இவர்களை அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. இரவு நீங்க வந்தபோதும் ஒன்றும் கேட்க முடியவில்லை என்று பட படவென்று பொரிந்தவளை பார்த்து சிரித்த கணேசன், பாப்பாவை என்னவென்று நினைத்தாய் அவங்க அப்பா, அம்மாவைப்போலதான் இருக்கும். உன்னை, பிள்ளைகளை எல்லோரையும் விசாரித்தது என்றான். அதுவும் உன்னைப்போலவே சொன்னது, இன்னும் அண்ணியை பார்க்கவில்லை என்று

    கணேசன், பாலகிருஷ்ணன் ஊரைச் சேர்ந்தவன்தான். அவனோட அப்பா, அம்மா, அவர்களின் தோட்டத்தில் வேலை

    Enjoying the preview?
    Page 1 of 1