Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்...
புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்...
புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்...
Ebook112 pages41 minutes

புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அல்லல்போம், வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்ததொல்லைபோம், போகாத்துயரம் போம்  நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுங்கால்." 

கண்மூடி, விநாயகர் துதிபாடலைப்பாடி, வணங்கி நின்றாள் தேவகி. 

உள்ளே கிச்சனில், பரபரப்பாக வேலையில் ஈடுபட்டிருந்தாள் சுமதி. இன்னும் சிறிது நேரத்தில் வருண் டிபன் சாப்பிட வந்துவிடுவான் அவனுக்கு மதிய லஞ்ச் எடுத்து வைக்கவேண்டும். ஒன்பது மணிவரை நேரம் போவதே தெரியாது.                                                                      

படிப்பு முடிந்து ஒரு வருடமாகதான் வேலைக்கு போய்கொண்டிருக்கிறான் ஐ.டி. கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் வேலை. 

வருண் பிறந்து, இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது, சாதாரண ஜூரம் என்று படுக்கையில் விழுந்த வருணின் அப்பா, இந்த உலகத்தைவிட்டு மறைய தவித்து நின்றாள் சுமதி. 

வருணின் அப்பாவோடு பிறந்த சகோதரி தேவகிதான் ஆதரவுக்கரம் நீட்டினாள். 

தேவகியின் கணவன் சிங்கப்பூரில் வேலை பார்த்து லட்சங்களில் சம்பாதிக்க, பூர்வீக சொத்து, தோட்டம் துறவு என சகல வசதிகளோடும் வாழ்ந்தாள் தேவகி. 

வானளவு செல்வத்தை தந்த வீட்டில் குழந்தை பாக்கியத்தை மட்டும் தரவில்லை. தம்பி இறந்தபின், அவன் மகன் வருனை தன் குழந்தையாக பாவித்து வளர்த்தாள். 

வருண் வந்த நேரம்... அவனையும் அழைத்துக்கொண்டு சிங்கப்பூரில் இருந்து வந்த கணவனுடன், மூன்று மாதம் கோவில், கோவிலாக சென்றாள். பலன், தேவகியின் வயிற்றில் கரு உருவானது. 

உலகத்தின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும், அனுபவித்தாள் தேவகி. 

வருண் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த நேரம்தான் பத்து வருடமாக தவமிருந்து கிடைக்காத பாக்கியம் கிடைத்ததாக நம்பினாள். 

ரோஜா நிறத்தில். அழகு பெட்டகமாய் தீபிகா பிறக்க, வாழ்க்கை சொர்க்கமாக தெரிந்தது. 

"அம்மா, டிபன் ரெடியா" 

வருண் கிச்சனில் எட்டி பார்க்க "இதோ முடிஞ்சுதுப்பா... நீ உட்கார் எடுத்துட்டு வர்றேன்" 

டேபிளில், இட்லி, தக்காளி சட்னி வைத்து பரிமாறியவள், "மதியம் லெமன் சாதம், உருளைகிழங்கு மசாலா செய்திருக்கேன் வருண்" 

"நீ எதுக்கும்மா சிரமப்படற... நான் அங்கே கேண்டினில் சாப்பிட்டுக்குவேன், நீ சொன்னால் கேட்க மாட்டே" 

"அப்படி இல்லை வருண், ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் சாப்பிடலாம். தினமும் சாப்பிட்டால் வயிற்றுக்கு ஆகாது. அதுவுமில்லாமல் இது எனக்கு பெரிய வேலை இல்லை. நீ சாப்பிடு" 

"அத்தை என்னம்மா செய்றாங்க"

சாப்பிட்டபடி கேட்க, 

"குளிச்சுட்டு... சாமி கும்பிடறாங்க... வருஷம் பத்துக்குமேல் ஆச்சு... இன்னும் தொலைஞ்சுபோன மகளை நினைச்சு... கண்ணீர் விடாத நாளில்லை... பாவம்பா... உன் அத்தை... தவமாய், தவமிருந்து பெத்த மகள், பத்துவயதில் திருவிழாவில் தொலைந்து போனாள்... இன்னைக்கு வரைக்கும் இருக்கும் இடம் தெரியலை. 

கடவுள் இப்படி கொடுப்பது போல் கொடுத்து பறிச்சுகிட்டாரே" 

வருத்தம் தெரிய சொன்னாள் சுமதி. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 28, 2023
ISBN9798223918127
புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்...

Read more from Parimala Rajendran

Related to புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்...

Related ebooks

Related categories

Reviews for புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்... - Parimala Rajendran

    1

    "அல்லல்போம், வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்ததொல்லைபோம், போகாத்துயரம் போம் நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுங்கால்."

    கண்மூடி, விநாயகர் துதிபாடலைப்பாடி, வணங்கி நின்றாள் தேவகி.

    உள்ளே கிச்சனில், பரபரப்பாக வேலையில் ஈடுபட்டிருந்தாள் சுமதி. இன்னும் சிறிது நேரத்தில் வருண் டிபன் சாப்பிட வந்துவிடுவான் அவனுக்கு மதிய லஞ்ச் எடுத்து வைக்கவேண்டும். ஒன்பது மணிவரை நேரம் போவதே தெரியாது.

    படிப்பு முடிந்து ஒரு வருடமாகதான் வேலைக்கு போய்கொண்டிருக்கிறான் ஐ.டி. கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் வேலை.

    வருண் பிறந்து, இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது, சாதாரண ஜூரம் என்று படுக்கையில் விழுந்த வருணின் அப்பா, இந்த உலகத்தைவிட்டு மறைய தவித்து நின்றாள் சுமதி.

    வருணின் அப்பாவோடு பிறந்த சகோதரி தேவகிதான் ஆதரவுக்கரம் நீட்டினாள்.

    தேவகியின் கணவன் சிங்கப்பூரில் வேலை பார்த்து லட்சங்களில் சம்பாதிக்க, பூர்வீக சொத்து, தோட்டம் துறவு என சகல வசதிகளோடும் வாழ்ந்தாள் தேவகி.

    வானளவு செல்வத்தை தந்த வீட்டில் குழந்தை பாக்கியத்தை மட்டும் தரவில்லை. தம்பி இறந்தபின், அவன் மகன் வருனை தன் குழந்தையாக பாவித்து வளர்த்தாள்.

    வருண் வந்த நேரம்... அவனையும் அழைத்துக்கொண்டு சிங்கப்பூரில் இருந்து வந்த கணவனுடன், மூன்று மாதம் கோவில், கோவிலாக சென்றாள். பலன், தேவகியின் வயிற்றில் கரு உருவானது.

    உலகத்தின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும், அனுபவித்தாள் தேவகி.

    வருண் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த நேரம்தான் பத்து வருடமாக தவமிருந்து கிடைக்காத பாக்கியம் கிடைத்ததாக நம்பினாள்.

    ரோஜா நிறத்தில். அழகு பெட்டகமாய் தீபிகா பிறக்க, வாழ்க்கை சொர்க்கமாக தெரிந்தது.

    அம்மா, டிபன் ரெடியா

    வருண் கிச்சனில் எட்டி பார்க்க இதோ முடிஞ்சுதுப்பா... நீ உட்கார் எடுத்துட்டு வர்றேன்

    டேபிளில், இட்லி, தக்காளி சட்னி வைத்து பரிமாறியவள், மதியம் லெமன் சாதம், உருளைகிழங்கு மசாலா செய்திருக்கேன் வருண்

    நீ எதுக்கும்மா சிரமப்படற... நான் அங்கே கேண்டினில் சாப்பிட்டுக்குவேன், நீ சொன்னால் கேட்க மாட்டே

    அப்படி இல்லை வருண், ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் சாப்பிடலாம். தினமும் சாப்பிட்டால் வயிற்றுக்கு ஆகாது. அதுவுமில்லாமல் இது எனக்கு பெரிய வேலை இல்லை. நீ சாப்பிடு

    அத்தை என்னம்மா செய்றாங்க

    சாப்பிட்டபடி கேட்க,

    "குளிச்சுட்டு... சாமி கும்பிடறாங்க... வருஷம் பத்துக்குமேல் ஆச்சு... இன்னும் தொலைஞ்சுபோன மகளை நினைச்சு... கண்ணீர் விடாத நாளில்லை... பாவம்பா... உன் அத்தை... தவமாய், தவமிருந்து பெத்த மகள், பத்துவயதில் திருவிழாவில் தொலைந்து போனாள்... இன்னைக்கு வரைக்கும் இருக்கும் இடம் தெரியலை.

    கடவுள் இப்படி கொடுப்பது போல் கொடுத்து பறிச்சுகிட்டாரே"

    வருத்தம் தெரிய சொன்னாள் சுமதி.

    2

    "ஆமாம்மா... எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... சோறு, தண்ணி இல்லாமல் எத்தனை நாள் தேடினோம்... தீபிகா எங்கே போனா... என்ன ஆனான்னு தெரியலை... அதோட கொடுமை, மகள் காணாமல் போனதில் ‘ஹார்ட்-அட்டாக்’ வந்து மாமா மரணமடைய, அத்தை நிலைகுலைந்து போயிட்டாங்க... பாவம்மா அத்தை... என்னை படிக்க வச்சு, ஆளாக்கியது அவங்கதான், அந்த நன்றியை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன்"

    நீ சொன்னது தான் சரி வருண்... வயசான காலத்தில் என்னை கவனிக்காட்டியும் பரவாயில்லை. ஆதரவில்லாமல் நின்ன, நமக்கு ஆதரவு தந்து, அவங்க குடும்பம் நிலைகுலைஞ்சு போனப்ப கூட, உன் படிப்புக்கு எந்த தடங்கலும் வராமல், உன்னை, படிக்க வச்சு ஆளாக்கிய அத்தையை நீ என்னைக்கும் மறக்கக்கூடாது. அவங்களுக்கு நன்றியோடு இருக்கணும். அவங்க மனசு வருத்தப்படும்படி நாம எந்த காலத்திலும் நடக்ககூடாது வருண்

    மனம் நெகிழ மகளிடம் சொன்னாள் சுமதி

    அத்தை நான் வேலைக்கு கிளம்பறேன்

    போயிட்டு வா கண்ணா

    சரி அத்தை… சாமி கும்பிட்டீங்க இல்லையா... சாப்பிடுங்க மணியாச்சு

    சரிப்பா... நீ பத்திரமா போயிட்டுவா

    அம்மாவிடம் சொல்லிக்கொண்டு வாசலுக்கு வந்தவன், பைக்கை ஸ்டார்ட் செய்கிறான். பஸ்-ஸ்டாப்பில் அவனுக்காக காத்திருந்தாள் உதயா.

    அவளருகில் பைக்கை ஸ்லோ பண்ண, பின் சீட்டில் ஏறி உட்கார, வண்டியை ஓட்டியபடி,

    உதயா இன்னைக்கு ரெட்-கலர் சுடிதாரில் ரொம்பவே அழகா தெரியற

    போதுமே... ரோட்டை பார்த்து பைக்கை ஓட்டுங்க... அப்புறம் அம்மா ஈவினிங் உங்களை வீட்டுக்கு வரச்சொன்னாங்க

    என்ன விஷயம் உதயா

    யாருக்கு தெரியும்... படிக்கிற காலத்திலிருந்தே, என் மகள் பின்னாடி சுத்திவர்றே… இப்ப வேலைக்கு போயும் ஒரு வருஷமாச்சு... சீக்கிரம் என் மகள் கழுத்தில் தாலி கட்டுன்னு சொல்லப் போறாங்களோ... என்னமோ

    அட கடவுளே... அப்படியெல்லாம் அவசரப்பட முடியாது உதயா அம்மா, அத்தைகிட்டே உன்னை பத்தி பேசணும். அதுக்கான நேரம் இன்னும் வரலை

    அடடடா.... பயந்துட்டீங்களா... அப்படியெல்லாம் இருக்காது நீங்க எப்ப சொல்றீங்களோ... அதுவரை நான் மட்டுமில்லை… அம்மாவும் பொறுமையா இருப்பாங்க

    தாங்க்ஸ் உதயா

    அவள் வேலை பார்க்கும் ஸ்கூல் வர, வண்டியை நிறுத்துகிறான்.

    சரி... ஓ.கே... உதயா… ஈவினிங் பார்ப்போம் வண்டியை கிளம்புகிறான்.

    மாலை நேரம் சுடச்சுட, வெங்காய பகோடாவும், கேசரியும் தட்டில் வைத்து கொடுக்கிறாள் சாந்தி.

    அதை வாங்கியவன், இன்னைக்கு என்ன அத்தை ஸ்பெஷல், ஸ்வீட், காரம்னு அசத்தறீங்க

    ஒன்றுமில்லை தம்பி... உங்களை பார்த்தும் நாளாச்சு… வீட்டுபக்கம் வர்றதில்லை... அதான் உதயாகிட்டே, ஈவினிங் கூட்டிட்டு வான்னு சொன்னேன்

    அவ்வளவு தானா

    "உங்ககிட்டே சொல்றதுக்கென்ன தம்பி எங்களுக்குன்னு யாருமில்லை நான் இவ அப்பாவை நம்பி, குடும்பத்தை பகைச்சுக்கிட்டு வந்தவ… அவர் இருந்தவரைக்கும் என்னை ரொம்ப நல்லாவே பார்த்துக்கிட்டாரு. உதயா பிறந்து பத்து வயது... ஆக்ஸிடென்டில் இறந்து போனாரு… என் குடும்பம் என்னை ஒத்துக்கலை. வாழ்ந்து காட்டணும்னு வைராக்கியமாக இருந்தேன்.

    எனக்கு தெரிஞ்ச தையல் வேலை எங்களுக்கு சோறு போட்டுச்சு.. இருக்கிற நகைகளை வித்து, தையல் கடை வச்சேன்… ஓரளவு வருமானம் வர.. மகனை படிக்க வச்சேன்.

    ஒரு நாள் உங்களை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து, அம்மா... இவர்

    Enjoying the preview?
    Page 1 of 1