Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மன்றம் வந்த தென்றல்!
மன்றம் வந்த தென்றல்!
மன்றம் வந்த தென்றல்!
Ebook105 pages37 minutes

மன்றம் வந்த தென்றல்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த கிப்ட் ஷாப்பில் அதிக கூட்டமில்லை. கலைப் பொருட்கள் வரிசையாக அணிவகுத்து நிற்க, ஒவ்வொன்றாய் பார்வையிட்டபடி நடந்தான் தயா.
 அவனுடைய ப்ரெண்ட் சிவாவின் பர்த்டே. நல்லதாக ஒரு கிப்ட் பிரசன்ட் பண்ண வேண்டும். என்ன வாங்கலாம். அவன் கண்கள் அலைபாய... முன் நெற்றியில் விழும் கற்றை முடியை லாவகமாக ஒதுக்கியபடி வெள்ளை நிற சுடிதாரில் வலம் வருபவளை பார்க்கிறான்.
 பார்ப்பதற்கு அழகாகவே தெரிகிறாள், நடையில் தெரியும் கம்பீரம், இவள் சற்று துணிச்சலானவள் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
 கையில் பளிங்கினால் ஆன தாஜ்மஹால் பளபளக்கிறது. அவனை பார்க்காமல் தாண்டி செல்கிறாள்.
 பில் போடும் கவுண்டர் முன் நிற்பவளை பின்தொடர்கிறான்.
 "இதை கிப்ட் பேக் பண்ணிடுங்க..."
 கம்ப்யூட்டரை தட்டியவன், "நைன் ஹண்டரட் மேடம்..."
 ஹாண்ட் பேக்கை திறந்தவள் கண்ணில் குழப்பம்... கையை விட்டு துலாவியவள்...
 "ஸாரி... பர்சை எடுத்து வைக்க மறந்துட்டேன். காஷ், கிரடிட் கார்டு எல்லாமே அதில்தான் இருக்கு. இதை பாக் பண்ணி வைங்க. திரும்ப ஈவ்னிங் வந்து வாங்கிக்கிறேன்."
 அவள் கண்களில் ஏமாற்றம் தெரிவதை பார்க்கிறான்.
 "இல்லை மேடம். அப்படியெல்லாம் ரிசர்வ் பண்ண முடியாது. வேறு யாராவது கஸ்டமர் விருப்பப்பட்டா கொடுத்துடுவோம். நீங்க சீக்கிரம் வந்து வாங்கிட்டு போறதுதான் நல்லது. திரும்பவும் ஹாண்ட்- பேக்கை துழாவியவள், இப்போதைக்கு த்ரி ஹண்ட்ரட் இருக்கு. அட்வான்ஸா வச்சுகிறீங்களா...இவள் கெஞ்சுவதை பொறுக்க முடியாதவனாய், "எக்ஸ்யூஸ்மி... நான் உங்களை கவனிச்சுட்டு இருக்கேன். இந்த கிப்ட் உங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். விருப்பப்பட்டு செலக்ட் பண்ணியிருக்கீங்க..."
 "ஒண்ணும் பிரச்சினையில்லை, அதற்கான பணத்தை என் க்ரெடிட் கார்டில் தரேன். நீங்க அப்புறம் என் அக்கெவுண்ட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க..."
 அப்போதுதான் அவளை கவனிக்கிறான்.
 "நீங்க எதுக்கு... எனக்காக..."
 "அப்படியில்லை... இந்த தாஜ்மஹால் சிலை தத்ரூபமாக ரொம்பவே அழகாக இருக்கு. முக்கியமானவங்களுக்கு கொடுக்கத்தான் வாங்கியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். நீங்க திரும்பி வர்றதுக்குள் விலை போயிட்டா... சங்கடமாக இருக்கும் அதனால்தான்..."
 அழகாக சிரித்தபடி சொல்பவனை ஆழமாக பார்க்கிறாள்.
 "இவன் உதவியை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா..."
 "என்ன யோசிக்கிறீங்க... சார் நீங்க பில் பண்ணுங்க..."
 அவளை கேட்காமலேயே க்ரெடிட் கார்டை நீட்டுகிறான்.
 கிப்ட் பார்சலுடன் வெளியே வருகிறார்கள்.
 "ரொம்ப தாங்க்ஸ். உங்க அக்கௌண்ட் நம்பர் கொடுங்க... நெட்டில் டிரான்ஸ்பர் பண்றேன்..."
 "இது பெரிய விஷயமில்லை. நாளைக்கு திரும்ப மீட் பண்ணும்போது நேரில் கொடுங்க வாங்கிக்கிறேன்..."
 "திரும்ப மீட் பண்ணணுமா... எதுக்கு?" புருவத்தை உயர்த்தி பார்க்கிறாள் பாரதி.
 "என்ன இப்படி கேட்டுட்டீங்க... முதன்முதலாக அறிமுகம் ஆகியிருக்கோம். உங்க பேர் என்னன்னு தெரியாது. என்னைப் பத்தி சொல்லணும். இன்னும் நமக்குள் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கே...என்ன மிஸ்டர்... முன்பின் அறிமுகம் இல்லாதவங்ககிட்டே உதவியை எதிர்பார்க்கக் கூடாதுன்னு புரிய வச்சுட்டீங்க... இந்தாங்க இந்த கிப்ட் எனக்கு வேண்டாம். நீங்களே வச்சுக்குங்க..."
 "எல்லாம் இந்த சித்ராவால் வந்தது... அவள் லவ்வருக்கு ப்ரெசண்ட் பண்ண என்னை வாங்கிட்டு வரச் சொன்னா... சை... என் நேரம் பர்சை மறந்து வச்சுட்டு, தேவையில்லாதவங்களோடு பேச வேண்டியிருக்கு..."
 எரிச்சலுடன் அலுத்து கொள்பவளை சிரிப்பு மாறாமல் பார்க்கிறான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798201971212
மன்றம் வந்த தென்றல்!

Read more from Parimala Rajendran

Related to மன்றம் வந்த தென்றல்!

Related ebooks

Related categories

Reviews for மன்றம் வந்த தென்றல்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மன்றம் வந்த தென்றல்! - Parimala Rajendran

    1

    மகாலிங்கம் சுவாமி அறைக்குள் நுழைந்தார். சுவாமி படங்களுக்கு மலர்கள் சாத்தப்பட்டு, விளக்கேற்றுவதற்கு தயாராக எண்ணெய், திரி போடப்பட்டு அந்த இடமே படு சுத்தமாக காட்சியளித்தது. எல்லாம் பாரதியின் கைவண்ணம். எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி தெரியும். பிள்ளையார் முன்னிருந்த லட்சுமி விளக்கை ஏற்றியவர் இருகரம் கூப்பி விநாயகரை கும்பிட்டார்.

    அப்பனே விநாயகா... என் பாரதியை நல்லபடியாக வாழ வை. தாயில்லாத என் மகள், எனக்கு தாயாக இருந்து என்னை பாதுகாக்கிறாள். அவள் நல்ல மனதுக்கு ஏற்றவளாக காலமெல்லாம் அவளை கண்கலங்காமல் காப்பாற்றுபவனாக ஒரு நல்லவனை அவளுக்கு கணவனாக தாப்பா... மனமுருகி வேண்டுகிறார்.

    அப்பா சாமி கும்பிட்டாச்சா...

    புதிதாக பறித்த ரோஜாவை போல, முகம் பிரகாசிக்க நிற்கும் பாரதியை பாசம் மேலிட பார்க்கிறார் மகாலிங்கம்.

    என் செல்ல மகளுக்காகத்தான் எந்நேரமும் அந்த கடவுளை தொந்தரவு பண்ணிட்டு இருக்கேன்.

    ஏன்ப்பா, உங்க மகளுக்கு என்ன குறை, அம்மாவை உரிச்சு வச்சது போல, அதே அழகோடு மகாலட்சுமி மாதிரி இருக்கேன்னு நீங்க சொல்வீங்க... அதனால பார்க்க ஓரளவு அழகாக இருக்கேன்னு தெரியுது, அப்புறம் அப்பாவோட உழைப்பிலும், அக்கறையிலும் படிச்சு பி.இ. டிகிரி வாங்கியிருக்கேன். ஒரு நல்ல நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கேன். இதுக்கு அப்புறமும் சாமிக்கிட்டே எனக்காக என்னப்பா வேண்டிக்கப் போறீங்க...

    சிரித்தபடி மகளின் கைப்பிடித்து அழைத்து வந்து சோபாவில் தன்னருகில் உட்கார வைக்கிறார் மகாலிங்கம்.

    ஒரு தகப்பனுக்கான கடமை இதோடு முடியலைமா. உனக்கு நல்ல வரன் பார்க்கணும். அவன் கையில் உன்னை ஒப்படைக்கணும். அப்புறம் பேரனோ, பேத்தியோ பார்த்துட்டு ஆசைத் தீர கொஞ்சிட்டு, அந்த ஆண்டவன் கூப்பிடும்போது திருப்தியாக கிளம்பணும்.

    பாரதியின் முகம் வெட்கத்தில் சிவக்கிறது.

    ஏன்ப்பா அவசரப்படறீங்க... இன்னும் கொஞ்சநாள் போகட்டும்பா. அதுவுமில்லாமல் என்னை கட்டிக்கிறவர், என்னோடு என் அப்பாவையும் பாதுகாப்பவராக இருக்கணும். இதுக்கு சம்மதிக்கிறவர்தான் என் கழுத்தில் தாலி கட்ட முடியும்.

    உனக்கு அப்பா மேலே பாசமிருக்கலாம். ஆனால் இந்த காலத்தில் இப்படியெல்லாம் நிபந்தனை கூடாதும்மா... என் மகள் நல்லாயிருந்தா எனக்கு போதும்.

    அப்படியெல்லாம் விட முடியாதுப்பா. அப்படின்னா நான் கல்யாணமே வேண்டாம்னு இருந்துடுவேன்.

    தயவுசெய்து அப்படி சொல்லாதே பாரதி. இந்த அப்பாவோட ஆசை என்ன தெரியுமா, சொல்லட்டுமா...

    எதுவாக இருந்தாலும் சொல்லுங்கப்பா... இந்த பாரதி கட்டாயம் நிறைவேற்றி வைப்பா...

    பெரிசா எதுவும் இல்லைம்மா. எல்லாம் உன்னால் நிறைவேற்ற கூடியதுதான்.

    நீ பிறந்து மூணு மாசத்தில் எனக்கு வேலை போயிடுச்சி. நான் வேலை பார்த்த பாக்டரியை இழுத்து மூடிட்டாங்க. கைக்குழந்தையை வச்சுட்டு நாட்களை எப்படி ஓட்டப் போறோம்னு தவிச்சு போனோம். வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டு மூலம் ஒரு லேபராக துபாய்க்கு போகும் வாய்ப்பு கிடைச்சுது. எப்படியோ கஷ்டப்பட்டு பணத்தை ஏற்பாடு பண்ணி கிளம்பினேன்.

    உன் பிஞ்சு பாதத்தையும், பிஞ்சு கால்களையும், பஞ்சு போன்ற உன் உடலையும் தொட்டு, தூக்கி நெஞ்சோடு அணைத்து கலங்கினேன். அந்த ஸ்பரிசம் இன்றும் என் மனதில் பசுமை மாறாமல் இருக்கு பாரதி.

    குழந்தையில் உன் வளர்ச்சி எதையுமே பார்க்க கொடுத்து வைக்காத பாவியாகிப் போனேன். இந்த காலம் மாதிரி வாட்ஸ்-அப், ஸ்கைப்னு விஞ்ஞானம் வளரலை. மாசம் ஒரு முறை போனில் பேசுவோம்.

    நீ குப்புற விழுகிறதாக சொல்வா... அப்புறம் தளிர்நடை போடறதாக... அம்மா... அப்பான்னு மழலையில் பேசுறதாக... இப்படி ஒவ்வொன்றையும் காதால் கேட்டு சந்தோஷப்படுவேன்.

    எத்தனையோ கஷ்டமான வேலைகள், பணத்தை சேர்த்துக்கிட்டு உன்கிட்டேயும், அம்மாகிட்டேயும் ஓடி வரணுங்கிற வெறி உழைச்சேன். காலங்கள் அதுக்கு மேல் ஓடியது.

    உனக்கு பத்து வயது ஆவதற்குள் இரண்டு முறை மட்டுமே பத்து நாள் லீவில் வந்து உன்னை ஆசைத்தீர கொஞ்சிட்டு போனேன்.

    உனக்கு பத்து வயது, இடியாக செய்தி வந்தது. உன் அம்மா இந்த உலகத்தை விட்டுப் போன செய்தி... பத்து வயதுவரை அவள் கைப்பிடித்து நடந்த உன்னை, நான் என் இரு கைகளாலும் தாங்கிக்கிட்டேன். சகலமும் நீதான்னு வாழ்ந்தேன்.

    அப்பா பழைய நினைவுகளை சொல்ல பாரதியின் கண்கள் கலங்குகிறது.

    சரிப்பா... இப்ப உங்க ஆசை என்னன்னு சொல்லுங்கப்பா...

    நான் தவறவிட்ட தருணங்களை உன் மூலமாக பார்க்கணும் பாரதி. ஆமாம் பாரதி உன் குழந்தையை நான் மடியில் வச்சு கொஞ்சணும், அது தவழ்றதை, நடைப் பழகறதை மழலையில் பேசறதையெல்லாம் பக்கத்தில் இருந்து ரசிக்கணும். இளம்பஞ்சு போன்ற அந்த மேனியை மார்போடு சேர்த்து மனசார தழுவணும். அதுக்காகவாவது நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும். இந்த அப்பாவின் ஆசையை நிறைவேத்துவியா பாரதி.

    மனதில் சொல்லமுடியாத துயரம் அடைக்க, பாவம் அப்பா, எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காதவர். எனக்காகவே வாழ்கிறவர். இவருடைய இந்த ஆசை நியாயமானது... ஒரு மகளாக நான் இந்த சந்தோஷத்தை அவருக்கு தரவேண்டும்.

    சரிப்பா... உங்களுக்காகவே நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு, உங்க பேரனை உங்க கையில் தரேன் போதுமா...

    முதுமையை தாண்டி, மனதில் உற்சாகம் திரும்ப, ஒரு இளைஞனாக எழுந்து நின்று கைதட்டி சிரிக்கிறார் மகாலிங்கம்.

    வசதியானவர்கள் வசிக்கும் அந்த வி.ஐ.பி. தெருவில் பங்களா போன்ற தோற்றத்துடன் பெரிய பெரி வீடுகள் வரிசையாக இருக்க...

    டாக்டர் நிரஞ்சன், இருதய

    Enjoying the preview?
    Page 1 of 1