Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கனவோடு வாழ்ந்திடு!
கனவோடு வாழ்ந்திடு!
கனவோடு வாழ்ந்திடு!
Ebook118 pages44 minutes

கனவோடு வாழ்ந்திடு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில்லென்று மழை காற்று வீசியது. சிறு தூறலாக ஆரம்பித்த மழை, சடச்சடவென்று பெரும் மழையாக கொட்ட ஆரம்பிக்க,

சூடான டீ கப்புடன் பால்கனிக்கு வந்த சுதாகர், அங்கிருந்த மோடாவில் 'டீ' கப்பை வைத்து அருகில் இருந்த சேரை இழுத்து போட்டு உட்கார்ந்தான். சாரல் மழை லேசாக அவன் மீது விழ, மழையை ரசித்தவாறே டீயை ருசிக்க ஆரம்பித்தான். 

பாக்கெட்டிலிருந்த செல்ஃபோன், இசையுடன் அழைக்க, திரையில் அம்மா பவித்ரா சிரித்தபடி இருந்தாள். 

"அம்மா உனக்கு நூறு ஆயுசு. இப்பதான் உன்னை நினைச்சேன். எப்படிம்மா இருக்கே ..."

"நான் நல்லா இருக்கேன். அங்கே மழை பெய்யுதாப்பா..."

"ஆமாம்மா" 

"டீ கப்போடு மழையை ரசித்தபடி பால்கனியில் உட்கார்ந்திருப்பே கரெக்டா" 

சிரிப்புடன் கேட்டாள். 

"என்னை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கம்மா. புரிஞ்சுக்க வேண்டியவள் புரிஞ்சுக்காமலேயே போயிட்டா..."

குரலில் சிறு வருத்தம் எட்டி பார்த்தது. 

"வாழ்க்கை நாம நினைக்கிற மாதிரி அமைஞ்சுடறதில்லை சுதா. சில சமயம் கனவுகள் மட்டுமே சொந்தமாக, நிஜங்கள் வேறு மாதிரியாக இருக்கு. என்னப்பா பண்றது. எல்லாரையும் போலதான் உனக்கும் கல்யாணம் நடந்தது. ஆனால் கல்யாண வாழ்க்கை இப்படி மூணு வருஷத்தில் முடிவுக்கு வரும்னு நாம் நினைச்சுகூட பார்க்கலையே" 

"சரிம்மா... நடந்து முடிஞ்சதை பத்தி பேசி மூட்-அவுட் ஆக வேண்டாம். உனக்கு என்னைக்கு ரிடையர்மெண்ட்"

"இந்த மாசம் இருபதாம் தேதியோடு என் சர்வீஸ் முடியுதுப்பா..."

"சரிம்மா... நான் சொன்ன மாதிரி, இனி நீ அங்கே தனியா இருக்க வேண்டாம். என்னோடு வந்துடு." 

"ஆமாப்பா... கட்டாயம் வரேன், ஆளுக்கொரு இடத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நான் வந்தால், க்ருபாவை பார்த்துக்கவும் வசதியாக இருக்கும். அதுசரி க்ருபா எப்படி இருக்கான். ஒழுங்கா ஸ்கூல் போறானா…" 

"அவனால் எந்த பிரச்சனையும் இல்லம்மா. நல்லாவே இருக்கான். வந்து இரண்டு மாசத்துக்குள், நல்லாவே பழகிட்டான். அப்பா அப்பான்னு என்மேல் ரொம்பவே பாசமாக இருக்கான்" 

"கடவுள் நம்ம மூலமாக அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்திருக்காரு. நல்லா இருக்கட்டும். எங்கே அவன் போனில் இரண்டு வார்த்தை பேசறேன்."

"எதிர் ப்ளாட்டில் இருக்கும் சாந்தாவோடும், ரகுவோடும் விளையாடிட்டு இருக்கான். வீட்டில் இல்லை." 

"சரிப்பா... வச்சுடவா ரொம்ப நேரம் சாரல் மழையில் உட்கார்ந்திருக்காதே..." கரிசனத்தோடு சொல்ல,

"ஓ.கே. மா... பை"

மனம் பின்னோக்கி செல்கிறது. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 28, 2023
ISBN9798223657033
கனவோடு வாழ்ந்திடு!

Read more from Parimala Rajendran

Related to கனவோடு வாழ்ந்திடு!

Related ebooks

Reviews for கனவோடு வாழ்ந்திடு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கனவோடு வாழ்ந்திடு! - Parimala Rajendran

    1

    சில்லென்று மழை காற்று வீசியது. சிறு தூறலாக ஆரம்பித்த மழை, சடச்சடவென்று பெரும் மழையாக கொட்ட ஆரம்பிக்க,

    சூடான டீ கப்புடன் பால்கனிக்கு வந்த சுதாகர், அங்கிருந்த மோடாவில் ‘டீ’ கப்பை வைத்து அருகில் இருந்த சேரை இழுத்து போட்டு உட்கார்ந்தான். சாரல் மழை லேசாக அவன் மீது விழ, மழையை ரசித்தவாறே டீயை ருசிக்க ஆரம்பித்தான்.

    பாக்கெட்டிலிருந்த செல்ஃபோன், இசையுடன் அழைக்க, திரையில் அம்மா பவித்ரா சிரித்தபடி இருந்தாள்.

    அம்மா உனக்கு நூறு ஆயுசு. இப்பதான் உன்னை நினைச்சேன். எப்படிம்மா இருக்கே ...

    நான் நல்லா இருக்கேன். அங்கே மழை பெய்யுதாப்பா...

    ஆமாம்மா

    டீ கப்போடு மழையை ரசித்தபடி பால்கனியில் உட்கார்ந்திருப்பே கரெக்டா

    சிரிப்புடன் கேட்டாள்.

    என்னை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கம்மா. புரிஞ்சுக்க வேண்டியவள் புரிஞ்சுக்காமலேயே போயிட்டா...

    குரலில் சிறு வருத்தம் எட்டி பார்த்தது.

    வாழ்க்கை நாம நினைக்கிற மாதிரி அமைஞ்சுடறதில்லை சுதா. சில சமயம் கனவுகள் மட்டுமே சொந்தமாக, நிஜங்கள் வேறு மாதிரியாக இருக்கு. என்னப்பா பண்றது. எல்லாரையும் போலதான் உனக்கும் கல்யாணம் நடந்தது. ஆனால் கல்யாண வாழ்க்கை இப்படி மூணு வருஷத்தில் முடிவுக்கு வரும்னு நாம் நினைச்சுகூட பார்க்கலையே

    சரிம்மா... நடந்து முடிஞ்சதை பத்தி பேசி மூட்-அவுட் ஆக வேண்டாம். உனக்கு என்னைக்கு ரிடையர்மெண்ட்

    இந்த மாசம் இருபதாம் தேதியோடு என் சர்வீஸ் முடியுதுப்பா...

    சரிம்மா... நான் சொன்ன மாதிரி, இனி நீ அங்கே தனியா இருக்க வேண்டாம். என்னோடு வந்துடு.

    ஆமாப்பா... கட்டாயம் வரேன், ஆளுக்கொரு இடத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நான் வந்தால், க்ருபாவை பார்த்துக்கவும் வசதியாக இருக்கும். அதுசரி க்ருபா எப்படி இருக்கான். ஒழுங்கா ஸ்கூல் போறானா…

    அவனால் எந்த பிரச்சனையும் இல்லம்மா. நல்லாவே இருக்கான். வந்து இரண்டு மாசத்துக்குள், நல்லாவே பழகிட்டான். அப்பா அப்பான்னு என்மேல் ரொம்பவே பாசமாக இருக்கான்

    கடவுள் நம்ம மூலமாக அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்திருக்காரு. நல்லா இருக்கட்டும். எங்கே அவன் போனில் இரண்டு வார்த்தை பேசறேன்.

    எதிர் ப்ளாட்டில் இருக்கும் சாந்தாவோடும், ரகுவோடும் விளையாடிட்டு இருக்கான். வீட்டில் இல்லை.

    சரிப்பா... வச்சுடவா ரொம்ப நேரம் சாரல் மழையில் உட்கார்ந்திருக்காதே... கரிசனத்தோடு சொல்ல,

    ஓ.கே. மா... பை

    மனம் பின்னோக்கி செல்கிறது.

    ‘என்.கே.’ மார்பிள்ஸ் அந்த கட்டிடத்தின் முகப்பில் பெரிய அளவில் எழுதப்பட்ட போர்டு மாட்டப்பட்டிருக்கிறது. விலையும், தரமும் நன்றாக இருப்பதால், சிறிய கம்பெனியாக இருந்தாலும், சேலத்தில் நல்ல பெயருடன் விளங்கியது.

    நேரடியாக ராஜஸ்தானிலிருந்து கற்களை வரவழைத்து, லாபத்தை குறைத்து, தொழிலை நல்ல முறையில் நடத்திக் கொண்டிருந்தான் சுதாகர்.

    அப்பா, சிறிய அளவில் ஆரம்பிச்ச கம்பெனிதான்.அவர் போன பிறகு, அதை எடுத்து நடத்த ஆள் இல்லாமல் இடத்தை விற்கவும் மனசில்லாமல் மூடியாச்சு. இப்ப நீ படிச்ச படிப்புக்கு உரிய வேலை தேடாமல், கம்பெனியை நடத்த போறேன்னு சொல்றீயேப்பா இது சரியா வருமா நிறைய உழைக்க வேண்டியிருக்குமே

    ஆமாம்மா, நான் ஒரு இடத்துக்கு வேலை போறதைவிட, நான் நாலு பேருக்கு வேலை கொடுக்கும் இடத்தில் இருப்பது பெருமை தானே... என்னால் முடியும்மா... ‘பிஸினஸ்’ மேனேஜ்மெண்ட் படிச்சிருக்கேன். என் ப்ரெண்ட் பிரபாகரின் அப்பா, கோயம்புத்தூரில் பெரிய அளவில் க்ரானைட் பிஸினஸ் பண்றாரு. அவர் எனக்கு எல்லா உதவியும் செய்வாரு... எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ நிம்மதியா... உன் ஆபிஸ் வேலையை பாரு கவர்மெண்ட் ஆபிசில் ரிவின்யூ டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் அம்மாவிடம் சொன்னான் சுதாகர்.

    அதைப்போல் உழைப்பு, முயற்சி, தொழிலில் இருந்த ஆர்வம் எல்லாமுமாக சேர்ந்து, அவன் ஆரம்பித்த இரண்டு வருடத்திலேயே அவனுக்கு வருமானத்தை மட்டுமில்ல, நல்ல பெயரையும் தேடித் தந்தது. இருப்பத்தாறு வயதில் இளம் தொழிலதிபராக வலம் வந்தான்.

    அகல்யாவுக்கு டிரான்ஸ்பர் வந்து சென்னை செல்ல, ஒரு ‘குக்’ வைத்துக் கொண்டு அம்மா இல்லாத குறையை சமாளித்தான்.

    அது ஒரு மழை நாள். சிறு தூறலாக மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. ஆர்டருக்கு தகுந்தாற்போல, க்ரானைட் கற்கள் லாரியிலும், வண்டியிலும் ஏற்றி அனுப்பி கொண்டிருந்தான்.

    ஆபீஸ் ரூம் ஜன்னலின் திரையை விலக்கி வெளியே பார்த்தான் சுதாகர்.

    கட்டிடத்தின் முகப்பில் B.M.W. கார் வந்து நிற்க, அதிலிருந்து பணக்கார மிடுக்குடன் நடுத்தர வயது மனிதர் இறங்க, அவரை தொடர்ந்து இறங்கிய பெண்ணை பார்த்து உண்மையில் பிரமித்து போனான்.

    அப்படி ஒரு அழகு. வர்ணனைக்கு அப்பாற்பட்டவளாய் தெரிந்தாள். கழுத்திலும், காதிலும் வைரங்கள் டாலடித்தன. கட்டியிருந்த உயர்தர ஷீபான் சேலையை, கீழே நனையாமல் இருக்க கைகளால் முன்பக்கத்தை லேசாக தூக்கி பிடித்தபடி, காலில் போட்டிருந்த தங்க கொலுசுகள் சிணுங்க, மெல்ல நடந்து வந்தாள்.

    ‘சட்’டென்று வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் வெளியே இருக்கும் அட்டெண்ட்டர் தகவல் சொல்ல, உள்ளே வருபவர்களை வரவேற்றான்.

    நான் சகாதேவன். டெக்ஸ்டைல் மில் வச்சுருக்கேன். இது என் மகள் பவித்ரா... உங்க கம்பெனியில் ராஜஸ்தான் க்ரானைட்ஸ், நல்லதாக கிடைக்கும்னு சொன்னாங்க. நானும் கேள்விப்பட்டிருக்கேன். என் மகளுக்கு புதுவீடு கட்டிட்டு இருக்கேன். உங்ககிட்டே கற்கள் ஆர்டர் தரலாம்னு நினைக்கிறேன். அதான் நேரில் பார்த்து செலக்ட் செய்யலாம்னு என் மகளையும் அழைச்சுட்டு வந்தேன்.

    அவர் சொல்ல, அருகில் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல, செல்ஃபோனை பார்த்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

    தாராளமாக பார்க்கலாம். நம்ம கம்பெனியில் பர்ஸ்ட் குவாலிட்டி க்ரானைட் கற்கள்தான் இருக்கும். விலையும் அதிகமாக இருக்காது. நீங்க கல்லை செலக்ட் பண்ணுங்க. மானேஜர் விலை விபரம் எல்லாம் சொல்வாரு. எவ்வளவு ஸ்குயர்பீஸ் தேவைப்படும்னு சொன்னால், அதற்கு தகுந்தாற்போல, ஆர்டர் பண்ணலாம்.

    அதெல்லாம் எனக்கு தெரியாது. ‘கல்’ மட்டும் செலக்ட் பண்ணிட்டு போறேன். இஞ்சினியரும் என் செகரட்டரியும் வருவாங்க. அவங்க விபரம் சொல்லுவாங்க. சிரித்தபடி சொல்கிறார்.

    சரி, சார், உள்ளே ‘கோடவுனில்’ போய் பார்க்கிறீங்களா... பெரிய பீஸாக பார்த்தால் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்

    சுதாகர் சொல்ல,

    என்னம்மா சொல்ற... போய் பார்க்கலாமா

    மகளை பார்க்கிறார். "வேண்டாம்பா. நான் அப்பவே வரலைன்னு சொன்னேன். நீங்கதான் கேட்கலை. என்னால் இந்த ஈரத்தில் நடந்து வர முடியாது, நான் இங்கேயே

    Enjoying the preview?
    Page 1 of 1